Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ்தமிழர்அமைதி பேரணி அனுமதிமறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிவா சின்னப் போடி அவர்களே ,

நீங்கள் எழுதியதில் எனக்குத் தெளிவில்லாத விடயங்கள்,

3) ஒட்டுக் குழுக்களும் அடி வருடிகளும் செய்யும் பிரச்சாரத்திக்கு எதிராக ஏன் எம்மால் மாற்றுப் பிரச்சாரங்களைச் செய்ய முடியவில்லை? கருத்தியல் ரீதியாக இவற்றை எதிர்க் கொள்ளாத எமது தீக்கோழி மன நிலை இதற்குக் காரணம் இல்லையா?

4) புலத்தில் மக்களை அணிதிரட்டமால் அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்காமல் சினிமாவும் சின்னத் திரையும் காட்டிக் கொண்டிருந்தது யார் குற்றம்?

இனிச் சொல்லிப் பிரயோசனமில்லை, இனியாவது மக்களை அணிதிரட்டி எல்லோரையும் அரவணைத்துப் போராட வேணும்.

அவுஸ்திரேலியாவில தடை வராதற்கான காரணங்களில் ஒன்று எல்லோரையும் அரவணைத்து ஒன்று சேர்ந்து நிறுவனப் பட்டதே.

ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் ரகசியமாகவும் சிறிலங்கா தூதரக மட்டத்தினூடும் காத்திரமாகவும் செயற்பட்டு வருவது அவர்களின் பிரச்சார வெற்றிக்கு முக்கிய காரணம். புலம்பெயர் தமிழர்களுக்குள்ளேயே பதுங்கி இருக்கும் குள்ள நரிகளுக்கு எதிராக பப்ளிக் பிரச்சாரம் செய்து கட்டுப்படுத்த நேரம் செலவழிப்பதிலும் தமிழ் தேசியப் பற்றுதிமிக்கவர்களைக் கொண்ட ரகசியப் பணியாளர்கள் மூலம் அரச சார்பு தமிழர்களால் முன்னெடுக்கப்படும் ரகசிய பிரச்சாரங்கள் தொடர்பில் மக்களுக்கு முன் கூட்டி அறிவித்து அவர்களின் பிரச்சாரங்களின் பலாபலங்கள் மக்களை தாக்க முதல் மக்களை விழிப்புணர்வு படுத்தி போராட்டங்களை முன்னெடுத்தல்..! தமிழ் மக்களுக்கு என்று தனியான உளவுப்படை உருவாக வேண்டும். தமிழ் தேசிய உறுதியோடு அதைக் கட்டியெழுப்ப வேண்டும். அது பல மட்டங்களிலும் செல்வாக்குள்ளவர்களை உள்ளடக்கி இருக்க வேண்டும்..! அப்படி நடப்பின் மட்டுமே சிங்களவர்களினதும் அவர்களின் அருவடிகளினதும் செயற்பாடுகளை முங்கூட்டி அறியவும் காத்திரமான எதிர்நடவடிக்கைகளை எடுக்கவும் உதவும்..!

புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் இருக்கும் மேற்குலக அரசை சினமூட்டச் செய்யும் குழுக்களின் செயற்பாடுகளை நிறுத்த முனைதல். இதற்கு குறிப்பிட்ட நாடுகளில் உள்ள அரசுடனான பலமான ஒத்துழைப்பை வழங்குவதுடன் இக்குழுக்களின் பின்னணிகள் பற்றிய சரியான தரவுகளையும் ஆதாரங்களையும் வழங்கி புலிகளை சம்பந்தப்படுத்தும் பிரச்சாரங்களை முறியடித்தல்..!

கதிர்காமர் நகர்த்திய நகர்வுகளின் விளைவையே இன்று தரிசித்துக் கொண்டிருக்கின்றோம். மிக நீண்ட காலமாக திட்டமிடப்பட்ட ஒரு நகர்வே புலிகள் மீதான சர்வதேசத்தடை.

புலிகள் சிறீலங்காவுக்கு வெளியில் எந்த வன்முறைகளிலும் ஈடுபடவில்லை. இந்தியாவில் நடந்தது அரசியல் வன்முறை. அது பயங்கரவாதத் தாக்குதல் அல்ல..! விடுதலைப்புலிகள் சர்வதேச பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புகள் வைத்திருப்பதற்கு எந்த வலுவான ஆதாரமும் மேற்குலகிடம் இல்லை. ஆனால் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் செய்யும் வன்முறைகள் புலிகளுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்துகின்றன.! இதை சிறீலங்கா புலிகள் சர்வதேச வன்முறைக்குழுக்கள் என்று காட்ட முயற்சிக்கிறது. புலம்பெயர்ந்தவர்கள் சர்வதேச சட்டங்களை மீறி இடம்பெயர முனையும் போது சிறீலங்கா புலிகள் மனித ஆட்கடத்தல் செய்கின்றனர் என்று சந்திரிக்கா - கதிர்காமர் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தார். புலிகளுக்கும் சர்வதேச போதைப் பொருள் குழுக்களுக்கும் தொடர்புள்ளதாக புகலிடத்தில் இடம்பெயர்ந்து போதைப் பொருள் வர்த்தகம் செய்யும் தமிழர்களைக் காட்டி புலிகளுக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

சிறீலங்காவுக்கு பிரச்சார ஆதாரங்களை வழங்கியதில் புகலிடத்தமிழர்களுக்கு கணிசமான பங்கு உண்டு...! புலிகளை சர்வதேச பயங்கரவாதிகள் என்று அழைப்பது தவறு என்பதை எம்மால் நிறுவ முடியும் என்றால் இத்தடைகளுக்கு எதிராக நீதிமன்றங்களை அணுக முடியும். அமெரிக்காவில் தமிழர்கள் அப்படி செயற்பட்டத்தைக் காட்டலாம். அது தடையை நீக்குதோ இல்லையோ புலிகள் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்பதை நிறுவுவதோடு தமிழ் மக்கள் மீது அனுதாபத்தை மேற்குலக மக்கள் மத்தியில் விதைக்கும்..!

புகலிடத்தமிழர்கள் ஒன்றுபடுவது மட்டும் போதாது அவர்கள் தங்கள் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதுடன் அவர்களே தங்கள் சமூகங்களுக்குள் இருக்கும் தவறுகளைக் களையவும் தொடராமல் இருக்கவும் சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டங்களை மதிக்கவும் கற்றுக் கொண்டு செயற்பட வேண்டும். அது புலிகளுக்கும் நற்பெயரை ஈட்டித்தருவதோடு ஒட்டுக்குழுக்கள் மற்றும் சிறீலங்கா அரச புலனாய்வாளர்களின் புளுகுகளின் நம்பகத்தன்மையையும் கேள்விக் குறியாக்கும்..!

இவை நடக்குமா.??! நடக்க வேண்டும்..! அதற்கான செயற்பாடுகள் அவசியம். வெறும் கூட்டம் கூச்சல் மட்டும் தமிழ் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களைத் தீர்த்துவிட முடியாது. பல முனைகளிலும் பல காத்திரமான நடவடிக்கைகள் குறித்தி சிந்திக்கவும் செய்ற்படவும் வேண்டும். அப்போதுதான் எமது பலத்தை மேற்குலகம் மதிப்பிடவும் மரியாதையளிக்கவும் முனையும்..! அதுதான் அவர்களின் செயற்பாடுகளில் மாற்றங்களைத் தரும். நாமே எம்மை பலவீனப்படுத்தும் காரியங்களைச் செய்து கொண்டு கூச்சல் போடுவதால் எந்தப் பலனையும் அவை தரப்போவதில்லை..! :icon_idea:

வேறு நண்பர்கள் இதே கருத்துக்களத்தில் ஒட்டிய செய்திகள், அறிவித்தல்கள் அவற்றின் முக்கியத்துவம் கருதி என்னால் மீண்டும் இங்கு பிரதி செய்யப்படுகின்றன!

81089816ui5.jpg

86822095pk9.jpg

68300096pf7.jpg

81089816ui5.jpg

19866923eo0.jpg

71542451wf8.jpg

81089816ui5.jpg

19866923eo0.jpg

71542451wf8.jpg

அன்புள்ள தாயக உறவுகளே!

இந்த நேரத்தில் இந்தக்களத்தில் வந்து யார் பிழை? யார் சரி? என்று விவாதிக்கவேண்டாம்.அதற்கு இது நேரமல்ல.

பிரெஞ்சுக் காவல்துறையினர் எங்களது செயற்பாட்டாளர்களை கைது செய்த நடவடிக்கையானது எமது விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானது-எமது அமைப்பை ஒழிப்பதற்கும் எமது செயற்பாடுகளை முற்றுமுழுதாக கட்டுப்;படுத்துவதற்கும் பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்து விட்டது. சிறீலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளை பிரான்ஸ் அரசாங்கம் ஆதரிக்கிறது என்று பலரும் கருகிறார்கள். தேசத் துரோகிகளும் சிறீலங்கா அரசும் இதை அப்படித்தான் சித்தரிக்க முயல்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தால் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்ட போது பல ஐரோப்பிய நாடுகளில் பொது இடங்களில் புலிக்கொடி வைத்திருப்பதற்கும் தேசியத் தலைவரது படத்தை வைத்திருப்பதற்கும் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரான்ஸ் அரசாங்கம் எங்களுடைய விடயத்தில் கண்டும் காணாமல் செயல்படுகின்ற நெகிழ்வுத் தன்மையான ஒரு போக்கையே கடைப்பிடித்து வந்தது.

சந்திரிகா தனது ஆட்சிக்காலத்தில் இங்கு வந்து பிரான்சின் அரசுத் தலைவர் ஜக் சிராக்கை சந்தித்து ரிரின் தொலைக்காட்சியையும் ஏனைய எமது உப அமைப்புக்களையும் தடைசெய்யும் படியும் எமக்கு எதிராக தனது அரசு நடத்தும் போருக்கு பொருளாதார மற்றும் ஆயுத உதவி வழங்கும்படியும் விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்க மறுத்துவிட்டார். பாரிசின் இதயம் என வர்ணிக்கப்படும் ஈபிள் கோபுரப் பகுதியில் நாங்கள் ‘சாவிலும் வாழ்வோம்’ நிகழ்வை நடத்தவும் அந்த இடத்தில் தமிழீழ தேசியக் கொடி ஏற்றவும் பிரான்ஸ் அரசாங்கம் அனுமதிஅளித்தது.

இந்த விடயங்கள் பிரான்ஸ் அரசின் வெளிநாட்டுக் கொள்கையுடன் சம்பந்தப்பட்டவையாக இருந்தன.

ஆனால் இப்போது அதிரடியாக எமது செயற்பாட்டாளர்களை பிரெஞ்சுக் காவல்துறையினர் கைது செய்ததற்குக் காரணம் பிரான்ஸ் அரசின் உள் நாட்டுக் கொள்கையாகும்.

அதாவது எதிர்வரும்; ஏப்ரல் 22 ம் திகதி பிரான்சின் அரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் வலதுசாரி கூட்டணி அரசுக்கு பிரான்சில் புலம்பெயர்ந்து வந்த வாழும் வெளிநாட்டு இளைஞர்கள் மத்தியில் பரவிவரும் வன்முறைக் கலாச்சாரம் தான் பிரதான சவாலாக உள்ளது. கடந்த வருடம் பாரிசின் புறநகர் பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட 2 ஆபிரிக்க இளைஞர்கள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பிரான்ஸ் முழுவதிலும் இடம்பெற்ற வாகன எரிப்பு மற்றும் கலவரங்களை அடக்குவதில் தற்போதைய அரசுத் தலைவர் வேட்பாளரும் அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவருமான நிக்கோலா சாக்கோசி கையாண்ட அணுகுமுறை பலத்த வாதப் பிரதிவாதங்களை தோற்றுவித்திருந்தது.

பல்லினக் கலாச்சாரம் பல்தேசவாதம் என்கிற கோட்பபாடகள் நடை முறைச் சாத்தியமற்றவை வெளிநாட்டு குடியேற்றக்காரர்கள் பிரெஞ்சு சமூகத்தடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கு தயாரில்லை. அவர்கள் தங்களது தனித்துவத்தை வெளிப்படுத்த முற்படுவதே பிரச்சனைக்கு காரணமாகின்றது என்ற எண்ணம் வலதுசாரிகளை ஆதரிக்கும் மக்களிடையே ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் நாங்கள் குட்டித் தமிழீழம் என்று சொல்கின்ற லா சப்பல் பகுதிக்கு அண்மையிலுள்ள ஐரோப்பாவின் வடக்குப்பகுதி நாடுகளை இணைக்கும் பிரதான தொடரூந்து நிலையமான ‘கார் து நோட்’ தொடரூந்து நிலையத்தில் ஆபிரிக்க வம்சாவழி இளைஞர்களுக்கும் காவல்துறையினருக்கம் இடையில் பாரிய மோதல் இடம்பெற்றது.இதில் 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்ததுடன் பல கடைகள் சேதமாக்கப்பட்டன.25க்கும் மேற்பட்ட கறுப்பின இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். பல மணி நேரம் அந்த தொடரூந்து நிலையம் மூடப்பட்டது. மாலையில் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும் நேரத்தில் ஏற்பட்ட இந்தக் கலவரத்தால் ஏறக்குறைய 50 ஆயிரத்தில் இருந்து 1 இலட்சம் வரையிலான பயணிகள் பாதிக்கப்பட்டார்கள். தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்ட பின்னர் நடந்த இந்தச் சம்பவம் அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.

இந்தக் காலகட்டத்தில் பிரான்சின் இனவாதக்கட்சித் தலைவரான ஜோன் மரி லூ பென் ‘இந்தியாவில் இருந்து சென்ற தமிழர்கள் இலங்கையில் தமிழ்நாடு கேட்பதைப் போல பாரிசையும் தங்களுக்கு பிரித்துத் தரும்படி கேட்பார்கள்.இவர்கள் பாரிசிலுள்ள தங்களது வணிக நிறுவனங்களக்கு தங்களது தாய் மொழியான தமிழ் மொழியில் பெயர் வைக்கலாம் அல்லது பிரெஞ்சு மொழியில் பெயர் வைக்கலாம். எதற்காக ஆங்கில மொழியில் பெயர் வைத்திருக்க்pறார்கள்? என்ற கேள்வியையும் எழுப்பியதோடு பிரெஞ்சு சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ இவர்கள் தயாரில்லை என்பதையை இது காட்டுகிறது. இவர்கள் விடயத்தில் பிரெஞ்சு அரசாங்கம் கவனமாக இருக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.(பிரெஞ்சுக்கா

ரர்களுக்கு ஆங்கிலேயர்களைப் பிடிக்காது .அவர்களுக்குள் 600-700 ஆண்டு காலத்துக்கு மேற்பட்ட விரோதம் உள்ளது.)

பிரான்சிலுள்ள இளைஞர் வன்முறைக் கும்பல்களில் அரேபிய மற்றும் ஆபிரிக்க இனத்தவர்களுக்கு அடுத்தபடியாக ஈழத் தமிழர்களே இருக்கிறார்கள்.பாரிஸ் 10 நிர்வாகப் பகுதி மற்றும் பாரிசின் புற நகர் பகுதிகளான லா கூர் நெவ், செல் போன்ற இடங்களில் வசிக்கும் மக்கள் இந்த தமிழ் வன்முறைக் குழுக்களால் கடும் அதிருப்திக்கு உள்ளாகி இருந்தார்கள்.

இந்த வன்முறைக் குழுக்கள் எல்லாம் விடுதலைப்புலிகளின் பினாமிக் குழுக்கள் என்று காட்டுவதற்கான தீவிர பிரச்சாரத்தில் பாரிசிலுள்ள சிறீலங்கா தூதரகமும் ஒட்டுக் குழுக்களின் செயற்பாட்டாளர்களும் ஈடுபட்டு வந்தனர்.லு பிகாரோ போன்ற வலதுசாரி பத்திரிகைகளை இவர்கள் அதற்குப் பயன் படுத்தினார்கள்.

தேர்தல் களத்தில் வெளிநாட்டு இளைஞர் குழுக்களின் வன்முறையை கட்டுப்படுத்துவது தொடர்பான ஒரு பிரச்சார நடவடிக்கையாகவே எமது தமிழ் தேசிய ஆதரவச் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்ட விடயத்தை பார்க்க வேண்டும்.

பாரிஸ் நகரத்தில் அதிகளவுக்கு வன்முறை மற்றும் குற்றச் செயல்களில் ஈடபடும் ஆரேபிய ஆபிரிக்க வம்சாவளி இளைஞர் குழுக்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் அது உடனடியாக பாரிய எதிர் விளைவுகளை எற்படுத்தும் என்பதால் எதைசெய்தாலும் எந்த அடக்குமுறையை பிரயோகித்தாலும் ஒன்றுபட்டு அதற்கு எதிராக போராடுவதற்கு பதிலாக பல குழுக்களாக பிரிந்த நின்று பேசிப் பேசியே காலத்தை கடத்தும் தமிழரின் பலவீனத்தை புரிந்து கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

நாம் நடத்தவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி தருவது போல தந்துவிட்டு பின்னர் பாதுகாப்பு காரணம் காட்டி அதை நிராகரித்தை உற்றுக் கவனித்தால் இதிலுள்ள அரசியல் புரியும்.

இப்போது நாங்கள் செய்ய வேண்டியது எல்லோரும் ஒரணியல் திரள்வதாகும்.குறுகிய சிந்தனையையும் அவர் வரக்கூடாது இவர் வரக் கூடாது.அவரை மட்டந்தட்டவேண்டும் -இவரை மட்டந்தட்ட வேண்டும், எதிர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு இவருக்கு தகுதியல்லை அவருக்கு தகுதியல்லை என்றெல்லாம் பாhக்காமல் நாங்கள் அனைவரும் எங்களால் முடிந்ததை உடனடியாக செய்ய வேண்டும்.

எங்களுடைய எதிர்ப்பை காட்டுவதற்கு அனைத்து ஜனநாயக வழிகளையும் பின்பற்ற வேண்டும்.

நாங்கள் ஒவ்வாருவரும் எங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு(பிரஞ்சு) எங்களுடன் வேலை செய்யும் பிரஞ்சு மக்களுக்கு எங்கள் தரப்பு நியாயத்தையும் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் எடுத்துச் சொல்வதற்கு யார் தடை விதிக்கமுடியும்? தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு அவற்றின் வேட்பாளர்களுக்கு இங்குள்ள ஊடகங்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் இலட்சக்கணக்கில் எமது கண்டனங்களை தெரிவிக்க வேண்டும்.இதை உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் ஒன்றுபட்டுச் செய்வோம்.

பிரான்சிலுள்ளவர்கள் நேரடியாகவும் வெளியில் உள்ளவர்கள் தங்கள் தங்கள் நாடுகளிலுள்ள பிரஞ்சுத் தூதரகங்களுக்கும் இந்த எதிர்பை தெரிவிப்பதன் மூலம் நாங்கள் அனைவரும் தேசியத் தலைவரின் பின்னால் அணிதிரண்டு நிற்கிறோம் என்பதை செயலில் காட்டிவிட்டுக் கதைப்போம்.

இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரான்ஸ் ஹிட்லரால் ஆக்கிரமிக்கப்பட்ட போது பிரானஸின் முன்னாள் அரசத்தலைவர் சாள்ஸ் து கோல் லண்டனில் இருந்த கொண்டு ஆயுதப் போராட்டத்துக்கு அணிதிரட்டவில்லையா? நிதிசேர்க்கவில்லையா அதுவும் பயங்கரவாதமா? பிரான்ஸ் அரசுக்கு எதிராக பஸ்ரிய் சிறையையும் கோட்டையை உடைத்தெறிந்து ஆயுதங்களை கைப்பற்றி போராடிய பிரஞ்சுப் புரட்சியாளர்கள் பயங்கரவாதிகளா?

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்தவம் என்ற பிரான்சின் உயர்ந்த அரசியல் இலக்கு வெறும் பேச்சளவில் தானே என்பதை நாங்கள் உரத்த குரலில் கேட்போம்?

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமையே பலம்

சிவா சின்னப்பொடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கருத்துக்கள் வரவேற்க்கப்படவேண்டிய விடயம், புலம்பெயர் தமிழரின் எதிர்ப்பை ககாட்டுமுகமாக பிரஞ்சில் தயாரிக்கப்பட்ட ஒருமனுவை, பிரஞ்சு அரசுக்கும் அது சம்பந்தப்பட்டவருக்கும் அனுப்பிபார்ப்போம், அதற்க்கு பிரஞ்சில் தேர்ச்சி பெற்ற ஒரு கள உறவின் உதவிதேவை, அது ஏப்படி அமையவேண்டும் என்Bஅது பற்றி இதில் ஆர்வம் உடையவர்கள் கருத்துக்கூறலாம், அல்லது அததை தமிழில் எழுதி பிரஞ்சில் மொழிமாற்றம் செய்யலாம். அதை யார் யாருக்கு அனுப்பினால் உச்சபயனை அடையலாம் என்று அதில் அனுபவம் உடையவர்கள், அவர்களது இணைய முகவரிகலை தந்து உதவலாம்,

பேச்சு பேச்சாக மட்டும் இராது செயலில் இறங்கும் நேரம் இது, யாழ்களத்தால் முடிந்த இந்த உடனடி முயற்சியை முதலில் செய்வோம், பரந்து பட்ட உலகத்தமிழர்களிடம் இருந்து இந்த மின்னஞ்சல் போவதால் இதன் பயனும் அதிகமாக இருக்கும்.

"எண்ணித்துணிக கருமm துந்த பின் எண்ணுவது இழுக்கு"

சிவா சின்னப் போடி அவர்களே ,

நீங்கள் எழுதியதில் எனக்குத் தெளிவில்லாத விடயங்கள்,

1) அரபிய கறுப்பு இனத்தவரின் வன்முறையைக் கட்டுப் படுத்த ஏன் ஈழத் தமிழர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்?

2)அரபிய கறுப்பு இனத்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் போராடுவார்கள் என்றால், ஈழத் தமிழர் மீது நடவடிக்கை எடுக்கக் காரணம் அவர்கள் போராட மாட்டர்கள் என்பதா?

3) ஒட்டுக் குழுக்களும் அடி வருடிகளும் செய்யும் பிரச்சாரத்திக்கு எதிராக ஏன் எம்மால் மாற்றுப் பிரச்சாரங்களைச் செய்ய முடியவில்லை? கருத்தியல் ரீதியாக இவற்றை எதிர்க் கொள்ளாத எமது தீக்கோழி மன நிலை இதற்குக் காரணம் இல்லையா?

4) புலத்தில் மக்களை அணிதிரட்டமால் அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்காமல் சினிமாவும் சின்னத் திரையும் காட்டிக் கொண்டிருந்தது யார் குற்றம்?

இனிச் சொல்லிப் பிரயோசனமில்லை, இனியாவது மக்களை அணிதிரட்டி எல்லோரையும் அரவணைத்துப் போராட வேணும்.

அவுஸ்திரேலியாவில தடை வராதற்கான காரணங்களில் ஒன்று எல்லோரையும் அரவணைத்து ஒன்று சேர்ந்து நிறுவனப் பட்டதே.

அன்புள்ள நாரதர் மற்றம் சித்தன் அகியோருக்கு….

ஆபிரிக்க மற்றும் அரேபிய வம்சாவழி இளைஞர்கள் என்றில்லாமல் அனைத்து வெளிநாட்டு குடியேற்றக்காரர்களுக்கும் எதிராக அவர்களது செயற்பாடுகளுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று காட்ட வேண்டும் என்பது தான் இவர்களது நோக்கம்.அதற்கு கிடைத்தவர்கள் நாங்கள். தமிழர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்கள் அதற்கான எதிர்வினையை காட்டுவதற்கு நாளெடுக்கும் என்பது அவர்களுக்கு தெரியும்.

தயவு செய்து யாரும் பக்கம் பக்கமாக விளக்கமும்; வரலாறும் எழுதி மின்ஞ்சல்கள் அனுப்;புவேண்டாம். ஆதனால் பிரயோசனம் இல்லை.

விடுதலைப்புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு அல்ல .

நாங்கள் எல்லோருமே புலிகள் தான்.

எங்கள் உறவுகளை காப்பதற்கு நாங்கள் பங்களிப்புச் செய்வது எந்த வகையில் குற்றமாகும்?

சிறீலங்கா அரச அதரவுச் யெற்பாட்டாளர்களின் பொய்க் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில்

பிரான்ஸ் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை தமிழர்களை ஒரு இனம் என்ற அடிப்படையில் அழித் தொழித்தவரும் சிறீலங்கா அரசை ஊக்கவித்து இலங்கையை இன்னொரு ருவண்டாவாக்க உதவப் போகிறது.

விடுதலை சமத்துவம் சகோதரத்தவம் என்ற பிரான்சின் உயரிய அரசியல் இலக்குகள்; இனஅழிப்புக்கு துணைபோவது ஏன்?

இந்த இலக்ககளை பிரன்ஸ் உண்மையிலேயே மதிக்கிறது என்றால் பாரிஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட எமது உறவுகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

என்று மிகச் சுருக்கமாக இடம்பெறவேண்டும்.

சிவா சின்னப்பொடி

நல்ல கருத்துக்கள் வரவேற்க்கப்படவேண்டிய விடயம், புலம்பெயர் தமிழரின் எதிர்ப்பை ககாட்டுமுகமாக பிரஞ்சில் தயாரிக்கப்பட்ட ஒருமனுவை, பிரஞ்சு அரசுக்கும் அது சம்பந்தப்பட்டவருக்கும் அனுப்பிபார்ப்போம், அதற்க்கு பிரஞ்சில் தேர்ச்சி பெற்ற ஒரு கள உறவின் உதவிதேவை, அது ஏப்படி அமையவேண்டும் என்Bஅது பற்றி இதில் ஆர்வம் உடையவர்கள் கருத்துக்கூறலாம், அல்லது அததை தமிழில் எழுதி பிரஞ்சில் மொழிமாற்றம் செய்யலாம். அதை யார் யாருக்கு அனுப்பினால் உச்சபயனை அடையலாம் என்று அதில் அனுபவம் உடையவர்கள், அவர்களது இணைய முகவரிகலை தந்து உதவலாம்,

பேச்சு பேச்சாக மட்டும் இராது செயலில் இறங்கும் நேரம் இது, யாழ்களத்தால் முடிந்த இந்த உடனடி முயற்சியை முதலில் செய்வோம், பரந்து பட்ட உலகத்தமிழர்களிடம் இருந்து இந்த மின்னஞ்சல் போவதால் இதன் பயனும் அதிகமாக இருக்கும்.

"எண்ணித்துணிக கருமm துந்த பின் எண்ணுவது இழுக்கு"

Dominique de VILLEPIN

Premier ministre

www.premier-ministre.gouv.fr

Philippe DOUSTE-BLAZY

Ministre des Affaires étrangères

www.diplomatie.gouv.fr/

François BAROIN

Ministre de l’Intérieur et de l’Aménagement du Territoire

www.interieur.gouv.fr

Pascal CLEMENT

Garde des Sceaux, ministre de la Justice

www.justice.gouv.fr/

ஒரு சன நாயக நாட்டில் தங்கள் அமைதியான எதிர்ப்பினை காட்டுவது என பொதுமக்கள் முடிவுகள் எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் அமைதியாக பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டுவார்கள் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றது

09.03.07 monday antru 14.00 to 17.00 varai kadayam emathu amaiti perani nadakum kadayam elaorum varunkale police ithai tadai siya vilai. thanks.nadakum idam (merto .trocadero )

சிவா சின்னப்போடி அவர்களே,

தெருவில் இறங்கிப் போராடினால் தான் நியாயம் கிடைக்கும்.தெருவில் இறங்கி பிரச்சு மக்கள் போராடியதே பிரன்ச்சுப் புரட்சி.அனுமதி இருக்கிறதோ இல்லையோ. நாம் பிரன்ச்சு மக்களை நோக்கியே எமது கேள்விகளை முன் வைக்க வேணும்.

1)சுதந்திரத்திற்க்கும் விடுதலைக்குமான பிரன்சுப் புரட்சி பயங்கரவாதமா?

2) விடுதலைகாகாப் போராடுவது பயங்கரவாதமா?

3) தமிழர்களான நாம் பிரன்ச்சு மக்களுக்கு எதிராக என்ன செய்தோம்?

4) எம்மைப் பயங்கரவாதிகள் என்பது நியாயமா?

5) பிரன்சு அரசே எமது சுதந்திரப் போராட்டத்தை அங்கீகரி.

6) பிரன்ச்சு மக்களே எமக்கு நியாயம் வழங்குங்கள்.

எல்லா அட்டைகளும் பிரன்ச்சு மொழியில் இருத்தல் அவசியம்.பத்திரிகையாளர்கள் ,மற்றும் இனப் பாகுபாட்டுக்கு எதிரானன பிரன்ச்சு அமைப்புக்கள் மனித உரிமை அமைப்புக்கள், சிறுபான்மையினரின் பாதுகாப்பை வலியுறுத்தும் அரசியற் கட்ச்சிகள் என்று அனைவரின் பங்களிப்பும் கோரிப் பெறப்பட வேண்டும்.

தமிழ் ஊடகங்கள் மக்களை அணிதிரட்டுவதில் தமது முழு கவனத்தையும் செலுத்த வேணும்.சின்னத்திரை, சினிமா நிகழ்வுகளை நிறுத்தி இந்தப் போராட்டத்தின் அவசியத்தை மக்கள் அனைவரும் உணரச் செய்ய வேண்டும்.

முன்னர் புலத்தில் இவ்வாறு எந்தப் போராட்டமும் நடை பெறாதா தனாலையே இப்படியான நிலை என்பது எனது கருத்து.மக்களை நோக்கிய அரசியல் இல்லாமல் மேற்குலக அரசுகளை நம்பிச் செயற்படும் அரசியல் பயன் பெறாது என்பது எனது தாழ்மையான கருத்து.

எதிர்கட்சி நேரடியாக கலந்துகொள்வதால் முடிந்தளவுக்கு ஆளும்கட்சி தடைசெய்யப்பார்க்கும்.காரணம்,

நெடுக்காலபோவானின் பல விடையங்கள் செயற்படுத்த வேண்டிய ஆலோசணகள்.

எமது போரட்ட நியாயங்கள் உலகத்திற்கு எடுபடாமையும், எதிரி குற்றவாளியாக இருந்தும் அவனுக்கு உலகம் சாதகமாக இருக்கிறது

என்றால் அதன் காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நிவர்த்தி செய்வதே புத்திசாலிகளின் செயல்...

எமக்குள் இருக்கும் குறைகள் முற்றாக நீக்கப்படவேண்டும்.

ஒவ்வொரு வெளினாட்டுக்காரனும் எமது போரட்ட நியாயங்கள் புரியப்படுத்த வேண்டும்....

எமது மக்களும் போரட்ட விளக்கங்கள் இருந்து மற்றவர்களுக்கு புரியும் படி விளக்கப்படுத்தும் அறிவு இருக்கவேண்டும்...

எமது மக்கள் கௌரகமாக அன்பாக அணுகப்படவேண்டும். அதன் மூலம் மேலும் எதிரியின் வலையில் எம் மக்கள் மாட்டுவது தடுக்கலாம்...

இந்த இணைப்பில் இருக்கும் பிரன்சுச் செய்திச் சேவையின் ஆவணத்தை பாக்கும் போது எழுந்த எண்ணங்கள்.

http://www.france24.com/france24Public/en/...rters-FRANCE-24

1) தெளிவாக இது முன்னரே திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கை.

2) இந்த நடவடிக்கைக்கு பிரன்ச்சு மக்களைத் தயார் படுத்த தெளிவாக எடுக்கப்பட்ட ஆவணம்.

3) சிறிலங்காத் தூதுவர் வெகுவாக இதைப் பயன் படுத்தி உள்ளார்.

4) இரகசியக் கமரா ஒளிப்பதிவு வேண்டுமென்றே டிடிசியை சிக்கலில் மாட்டவென்றே எடுக்கப்பட்டுள்ளது.

இதைப் பார்த்த பிறகும் இது ஒரு உள்ளூர் அரசியலுக்கான நடவடிக்கை என்று நம்ப முடியுமா?

குறிப்பிட்டபடி போராட்டம் நடக்குமா இல்லையா ?

[Monday April 09 2007 06:13:33 AM GMT] [யாழ் வாணன்]

பிரான்ஸில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்ட மையைக் கண்டித்து பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் இன்று அங்கு நடத்த விருந்த கண்டனக் கூட்டத்துக்கு அந்நாட்டு நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அங்கு அதிபர் தேர்தல் விரைவில் நடை பெறவிருக்கையில் இத்தகைய கூட்டத்துக்கு அனுமதி வழங்குவது பெரும் தொடர் கலவரங்கள் வெடிக்கக் காரணமாகிவிட லாம் என்ற காரணத்தைக்காட்டியே இந்த மறுப்பு நடவடிக்கை நியாயப்படுத்தப் பட்டிருக்கின்றது.

பிரான்ஸில் கடந்த முதலாம் திகதி அதிகாலை ஈழத் தமிழர்களின் பல வாழிடங்களைச் சுற்றிவளைத்த பிரான்ஸ் பொலி ஸார் அங்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணி யாளர்கள் 17 பேரை பயங்கரவாதச் செயல் களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந் தேகத்தில் கைது செய்தனர்.

தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டினர், அச்சுறுத்திப் பணம் சேர்த்தனர் போன்ற குற்றங்களை இவர் கள் புரிந்திருக்கலாம் என்ற அடிப்படை யில் விசாரணைகள் நடைபெறுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்து பாரிஸில் இன்று பெரும் கண்டக் கூட்டம் ஒன்றை நடத்துவதற்குத் தமிழர்கள் ஏற்பாடு செய்தனர். இலங்கை இந்திய வணிகர் சங்கம் ஒழுங்கு செய்த இக்கண்டன ஒன்று கூடலுக்கு இளையோர் அமைப்பு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு மற்றும் விளை யாட்டுக் கழகங்கள் உட்பட பல உள்ளூர் பொது அமைப்புகள் ஆதரவு வழங்கியிருந்தன.

இக்கண்டன ஒன்று கூடலில் குறைந்தது பத்தாயிரம் தமிழர்கள் ஒன்று திரள்வர் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த ஒன்று கூடலுக்கு அனுமதி வழங்க பாரிஸ் நிர்வாகம் மறுத்துவிட்டது என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன

நன்றி : Tamilwin.com

சோதனை மேல் சோதனை??

  • கருத்துக்கள உறவுகள்

தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டினர், அச்சுறுத்திப் பணம் சேர்த்தனர் போன்ற குற்றங்களை இவர்கள் புரிந்திருக்கலாம் என்ற அடிப்படை யில் விசாரணைகள் நடைபெறுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.

புலம்பெயர்ந்த நாடுகளில் நிதி திரட்டல் தமிழர்கள் மத்தியில் தான் நிகழ்கிறது. வெள்ளையர்கள் மத்தியில் அல்ல..! அப்படி இருக்க எப்படி நிதி அச்சுறுத்தி சேர்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு வெள்ளையர்களைப் போய் சேர்ந்தது..! எல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்களே தமிழர்களுக்கு எதிரா போடுற பெட்டிசனிலதான்..! அதுமட்டுமன்றி சில பணம் சேகரிப்பவர்களின் அணுகுமுறைகளும்..புலி வால் தோற்றங்களும்.. புலிகளுக்கு மட்டுமன்றி தமிழர்களுக்கே ஆபத்தாகி உள்ளது..!

சொல்லமில்ல சுயநலத்தமிழன் உள்ளவரைக்கும்.. புலம்பெயர்ந்தவர்களில் புல்லர்கள் இருக்கும் வரைக்கும்... அவர்கள் தங்களின் பிறவிக்குணத்தை மாற்றும் வரைக்கும்... வேதனை சோதனை என்று புலம்பிப் பிரயோசனம் இல்லை. தமிழர் தான் தமிழர்களுக்கு முதல் எதிரி. அந்த வகையில் நோக்கி புகலிடத்தில் சில காத்திரமான நடைமுறைகள் அவசியம். ரகசியச் செயற்பாடுகள் மூலம்.. இந்த புல்லுருவிகளை இனங்காண்பதோடு அவர்களை செயற்பாடுகளை நியூற்றலைஸ் (Neutralize) பண்ண காத்திரமான சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இன்றேல் இவற்றிற்கு முடிவு கட்ட முடியாது.

எதுஎப்படியோ உண்மையான தாயக உணர்வுள்ள மக்களின் பங்களிப்புக்களை இந்த வெள்ளையர்களின் நடவடிக்கைகள் தடுக்க முடியாது..! இரண்டும் கெட்டான் தமிழர்கள்.. கொடுத்திட்டு புறஞ்சொல்லும் தமிழர்களின் புல்லுருவித் தமிழர்கள் தமிழர்கள் மத்தியில் உண்டு என்பதை இந்த சம்பவம் தாராளமாக சொல்வதுடன் புலி ஆதரவு வேசத்தோடும் விசமிகள் உள்ளனர்..! இவர்களின் அனைத்து செயற்பாடுகளையும் ரகசியமாக கவனித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது வெள்ளையர்களுக்கு தவறான தகவல்கள் அளிக்கப்படுவதை குறைக்கலாம்.. அல்லது கட்டுப்படுத்தலாம்..!

மேலதிக தகவல்களை புலம் பகுதியில் உள்ள தலைப்பில் நோக்குங்கள்..! <_<

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர்ந்த நாடுகளில் நிதி திரட்டல் தமிழர்கள் மத்தியில் தான் நிகழ்கிறது. வெள்ளையர்கள் மத்தியில் அல்ல..! அப்படி இருக்க எப்படி நிதி அச்சுறுத்தி சேர்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு வெள்ளையர்களைப் போய் சேர்ந்தது..! எல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்களே தமிழர்களுக்கு எதிரா போடுற பெட்டிசனிலதான்..! அதுமட்டுமன்றி சில பணம் சேகரிப்பவர்களின் அணுகுமுறைகளும்..புலி வால் தோற்றங்களும்.. புலிகளுக்கு மட்டுமன்றி தமிழர்களுக்கே ஆபத்தாகி உள்ளது..!

சொல்லமில்ல சுயநலத்தமிழன் உள்ளவரைக்கும்.. புலம்பெயர்ந்தவர்களில் புல்லர்கள் இருக்கும் வரைக்கும்... அவர்கள் தங்களின் பிறவிக்குணத்தை மாற்றும் வரைக்கும்... வேதனை சோதனை என்று புலம்பிப் பிரயோசனம் இல்லை. தமிழர் தான் தமிழர்களுக்கு முதல் எதிரி. அந்த வகையில் நோக்கி புகலிடத்தில் சில காத்திரமான நடைமுறைகள் அவசியம். ரகசியச் செயற்பாடுகள் மூலம்.. இந்த புல்லுருவிகளை இனங்காண்பதோடு அவர்களை செயற்பாடுகளை நியூற்றலைஸ் (Neutralize) பண்ண காத்திரமான சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இன்றேல் இவற்றிற்கு முடிவு கட்ட முடியாது.

எதுஎப்படியோ உண்மையான தாயக உணர்வுள்ள மக்களின் பங்களிப்புக்களை இந்த வெள்ளையர்களின் நடவடிக்கைகள் தடுக்க முடியாது..! இரண்டும் கெட்டான் தமிழர்கள்.. கொடுத்திட்டு புறஞ்சொல்லும் தமிழர்களின் புல்லுருவித் தமிழர்கள் தமிழர்கள் மத்தியில் உண்டு என்பதை இந்த சம்பவம் தாராளமாக சொல்வதுடன் புலி ஆதரவு வேசத்தோடும் விசமிகள் உள்ளனர்..! இவர்களின் அனைத்து செயற்பாடுகளையும் ரகசியமாக கவனித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது வெள்ளையர்களுக்கு தவறான தகவல்கள் அளிக்கப்படுவதை குறைக்கலாம்.. அல்லது கட்டுப்படுத்தலாம்..!

மேலதிக தகவல்களை புலம் பகுதியில் உள்ள தலைப்பில் நோக்குங்கள்..! <_<

TRO விற்கு வெள்ளைகளும் பணம் கொடுக்கிறார்கள், வருட இறுதியில் வருமான வரிகாட்டி வருமானம் குறைந்தவர்கள் அந்த பணத்தை திருப்பியும் எடுக்கிறார்கள், TRO இங்கு பதிவு செய்யப்பட அமைப்பாக இருப்பதால் இங்கு பனம்சேர்க்க தடை இல்லை.

இது அரசியலுக்கா செய்யப்பட்ட விடயம் காட்டிக்கொடுக்கும் நாய்களை இதற்கு பயன்படுத்தி இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நமக்குள்ளே உள்ள தனிநபர் பிணக்குகளால்தால் குறித்த சிலபேர் தமிழ்த் தேசித்துக்கு வெளியே நின்று காட்டிக் கொடுப்புகளில் ஈடுபடுகின்றனர். ஆதரவளிக்கக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த உறவுகளுக்கு இந்த அதிகாரம் பெற்றவர்களின் தலைமைத்துவக் குறைபாடுகள் பற்றி எதுவும் தெரியாது. ஒரு சின்ன நட்புறவை ஏற்படுத்தி விலகிநிற்கும் பலபேரை அரவணைக்கும் போது எவ்வளவோ விடயங்களில் சீர்திருத்தம் ஏற்படவாய்ப்புண்டு. அதன் பிறகு இத்தகைய கைதுகள் பெரமளவில் குறைந்துவிடச் சாத்தியமுமுண்டு. பூனைக்கு மணிகட்டுவது யார் என்ற தோரணையில் நிலைமை தொடர்வதால் விரிசல்கள் பெரிதாகிக்கொண்டே போகின்றன. காட்டிக்கொடுப்புகளும் அதிகரிக்கின்றன. விழலுக்கிறைத்த நீராய் தமிழ் தேசியத்துக்கான புலம்பெயர் தமிழரின் முழுமையான ஆதரவு போய்விடாமலிருக்க யாராவது முன்வந்து எம்மிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும்பணியைச் செய்தால் கோடிபுண்ணியம் கிடைக்கும்.

இந்த இணைப்பில் இருக்கும் பிரன்சுச் செய்திச் சேவையின் ஆவணத்தை பாக்கும் போது எழுந்த எண்ணங்கள்.

http://www.france24.com/france24Public/en/...rters-FRANCE-24

1) தெளிவாக இது முன்னரே திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கை.

2) இந்த நடவடிக்கைக்கு பிரன்ச்சு மக்களைத் தயார் படுத்த தெளிவாக எடுக்கப்பட்ட ஆவணம்.

3) சிறிலங்காத் தூதுவர் வெகுவாக இதைப் பயன் படுத்தி உள்ளார்.

4) இரகசியக் கமரா ஒளிப்பதிவு வேண்டுமென்றே டிடிசியை சிக்கலில் மாட்டவென்றே எடுக்கப்பட்டுள்ளது.

இதைப் பார்த்த பிறகும் இது ஒரு உள்ளூர் அரசியலுக்கான நடவடிக்கை என்று நம்ப முடியுமா?

பிரெஞ்சு ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் தகவல்கள் அனைத்துமே விடுதலைப்புலிகள் ஒரு பயங்கரவாதக் குழுவினர் என்றும் தமிழ் மக்களில் ஒரு சிறு பகுதியினர் மட்டுமே அவர்களை ஆதரிக்கிறார்கள் என்றும் திட்டமிட்ட வகையில் வெளியிடப்படுகின்றன.அதாவது தமிழ் மக்கள் வேறு புலிகள் வேறு என்கின்ற கருத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது.

இதற்கான வேலையில் பாரிசிலுள்ள சிறீலங்கா தூதரகம் தீவிரமாக செயற்பட்டு வருகிறது.

இதற்கென மாதம் 2000 யூரோ சம்பளம் கொடுத்து 6 பேரை (4 தமிழர்கள் 2 சிங்களவர்கள்) பணிக்கு அமர்த்தியிருக்கிறது. இதை விட 65 பேருக்கு எங்களுக்கு எதிரான பரப்புரையை திட்டமிட்டு செய்வதற்கு மாதம் 600 யூரோ வழங்கப்படுகிறது.

எங்களுக்கு எதிரான சிறீலங்கா தூதரகத்தின் செயற்பாடுகளை பிரெஞ்சு சமூகத்திற்கு பிரெஞ்சு ஊடகங்கள் மூலமாக அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு எங்களது ஊடகங்களுக்கே இருந்தது.ஊடகம் என்ற ஆயுதத்தை வைத்துக்கொண்டு நாங்கள் அதை செய்திருக்க வேண்டும்.நாங்களோ கோடம்பாக்கத்துடனான உறவுகளை வலுப்படுத்துவதிலே தான் அக்கறையாக இருந்தோம்.பிரெஞ்சு ஊடகங்களுடன் தொடர்பு வைத்திருப்பதும் தகவல்களை தெரிவிப்பதும் எங்களுடைய வேலை அல்ல என்ற சிந்தனையே எங்களுடைய ஊடகங்களிடம் இருந்தது.பிரெஞ்சு ஊடகங்களுடன தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும் சிறீலங்கா அரசின் பரப்புரைக்கு எதிராக முறியடிப்பு பரப்புரைகளை ஊடகத் தளத்தில் இருந்து செய்ய வேண்டும் என்று சொன்வர்கள் சிந்தி

த்தவர்களுக்கு தகுதி கேட்டதும் அவர்களை திட்டமிட்டு ஓரங்கட்டி அவமதித்து அவர்களாக தங்களது பணிகளில் இருந்து விலகிச் சொல்லும்படியான சூழ்நிலையை உருவாக்கியதும் தானே நடந்தது.

இந்த நேரத்தில் கடந்தவைகளை பற்றி கதைப்பதும் குறை சொல்வதும் பிரயோசனமில்லை என்றாலும் எதிர்காலத்திலாவது நாங்கள் சரியாக செற்படுவதற்கு இவற்றை வெளிப்படுத்தி தவறுகளை திருத்துவதற்கு முயலவேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. கடந்தகாலத் தவறுகளில் இருந்து பாடங்களை கற்பதன் மூலம் தான் நிகழ்கால- எதிர்காலத் தவறுகளை தவிர்க்க முடியும்

நவம் நீங்கள் சொல்வது தான் அந்த ஆவணத்தைப் பார்த்ததும் எனக்கும் ஏற்பட்ட எண்ணம்.

சிறிலங்கா அரசு முன்னரைப் போல் அல்லாமல் இப்போது சர்வதேச ரீதியாக வெகுவாகத் திட்டமிட்டு இயங்குகிறது.அதற்கு ஈடு கொடுக்கும் வன்ணம் நாம் அனைவரையும் அரவணைத்து திறமையானவர்கள் ,பிரன்ச்சு மொழி பேசக்கூடியவர்கள் ,ஊடகங்களின் கேள்விகளுக்கு சமயோசிதமாக பதில் அழிக்கக் கூடியவர்கள், என்போரை முன் நிறுத்துதல் அவசியம்.

அவுஸ்திரேலியாவில் மாமனிதர் ஜெயக்குமார் கையாண்ட அன்பு அரவணைப்பு என்பதுவும் எல்லோரையும் சேர்த்து ஒருங்கமைத்தல் என்பதுவும்,கல்வியாளர்கள் புலமையாளர்கள் மற்ற நாட்டு மக்கள் , விடுதலைக்கு ஆதரவான பிரன்ச்சு மக்கள், அமைப்புக்கள் என்று பல தளங்களிலும் செயலாற்ற வேண்டும் .ஆளுமையும்,ஆர்வமும் உள்ளவர்கள் ,புலத்தில் நடைமுறைகள், பிரன்ச்சு மக்களின் கலாச்சாரம்,சிந்தனை போன்றவற்றை அறிந்தவர்கள் உள் வாங்க்கப்பட வேண்டும், பொறுப்புக்கள் திறமை, ஆர்வம் அடிப்படையில் முக்கியமாக புலத்தில் இளஞர்களிடம் வழங்கப்பட வேண்டும்.

இவற்றை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு முன் நோக்கி ஒற்றுமையாக பிழைகளைத் திருத்தி நகருவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த ஒரு பின்னடைவுக்கும் பரிகாரம் உண்டு.

அணுகுண்டு தேடி ஈராக்குக்குள் போன அமெரிக்க இன்று அங்கொ நிலைத்து நிண்டு எண்ணை தோண்ட வேறு காரனம் கண்டுபிடிக்க வில்லையா?

நாங்கள் விடுதலைப் புலிகளை மனதார நேசித்தாலும் சிங்கள நண்பர்களுடன் பேசும் போது எல்லாம் திரஸ்தவாதிப் பிரசனய என்றோ எனக்கு தனிநாட்டில் நம்பிக்கை இல்லை என்றோ கழுவுற மீனில் நழுவுற தண்ணியாக இருப்பது (! :icon_idea:) ஏன்?

இதெல்லாம் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு சைக்கோலஜி தான்! மக்களுக்கு தமிழீழம் தேவைப்படுகுது புலி அதை எடுத்துத் தரவேண்டும். ஆனால் அவர்கள் வெள்ளைக்கு நிண்டுகொண்டே எல்லாம் நடக்கவேண்டும். இது பொதுசன மனநிலை. இந்த ரீதியில் இந்தப் பிரச்சனை ஆராயப்பட்டு மக்கள் காசுகொடுத்து விட்டு மனதார ஆதரித்துக்கொண்டு வெளியில் சொல்லப் பயப்படுவது ஏன்? காசைக் கொடுத்துவிட்டு பின் தங்களுக்குள் கதைக்கும் போது (காசுகொடுக்க ஆருக்குத் தான் விருப்பம்) விசனப் படுவது போல நடிப்பது ஏன்? புலிகளை ஆதரித்தாலும் கமராவுக்கு முன் சொல்ல உளவியல் ரீதியான தயக்கம் என்ன ? என்றரீதியில் உளவியில் ரீதியாக விளக்கங்கள் கொடுக்கப்படல் வேண்டும்.

எதிரி அதைத் தான் செய்கிறான்.

கனடாவில், மக்கள் புலிகளுக்குப் பயந்து தான் காசுகொடுக்கிறார்கள் என்று உளவியல் ரீதியாக (!) கண்டுபிடித்துவிட்டார்களாம் என்று பிரசாரம் நடக்கிறது.

எந்த ஒரு பின்னடைவுக்கும் பரிகாரம் உண்டு. விரைந்து செய்வோம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.