Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க மாட்டேன் – சிவாஜிலிங்கம் அதிரடி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sv-720x450.jpg

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க மாட்டேன் – சிவாஜிலிங்கம் அதிரடி.

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் அவருடன் இணைந்து பயணிப்பதற்கு தாம் தயாராக இல்லை என மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபையின் இறுதி அமர்வு நேற்று(செவ்வாய்கிழமை) பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது தனது நிறைவுரையை ஆற்றும்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வெண்ணை திரண்டு வரும்போது தாழியை உடைப்பதற்கு நான் தயாராக இல்லை.

அண்மையில் பருத்துறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்கால அரசியலில் சிவாஜிலிங்கம் தன்னுடன் இணைந்து பயணிப்பார் என கூறியுள்ளார்.

இதே விடயத்தை நேரில் சந்திக்கும்போதும் கூட முதலமைச்சர் ஒருதடவை கூறினார். ஆனால் நான் அவருக்கு அப்போது கூறியதையே இப்போதும் கூறுகிறேன். தமிழ் மக்களுக்கு இப்போது தேவையானது அடுத்த முதலமைச்சரோ, மாகாணசபை உறுப்பினர்களோ,
நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்ல.

தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றே சமகால இன்றியமையாத தேவையாகும். அந்த தேவையை 2 அல்லது 3 வருடங்களுக்குள் பெற்றுக் கொடுக்காவிட்டால் இந்த இனம் இந்த நாட்டில் நிரந்தர அடிமைகளாக மாற்றப்படும்.

ஆகவே நிரந்தர தீர்வு ஒன்றினை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனும், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் இரட்டை குழல் துப்பாக்கி போல் இருக்கவேண்டும் என நான் முதலில் கூறியிருந்தேன்.

இப்போது கூறுகிறேன். தமிழ் மக்களுக்கு இரட்டை குழல் துப்பாக்கி போதுமானதல்ல. தமிழ் மக்களுக்கு இப்போது பல்குழல் பீரங்கி தேவையாக உள்ளது. அதற்காக நாங்கள் ஒற்றுமையை குலைக்காமல் ஒன்றாக இருக்கவேண்டும்.

ஆவே முதலமைச்சர் கூட்டமைப்பிலிருந்து விலகி தனியே பயணித்தால் முதலமைச்சருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை“ என தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/கூட்டமைப்பிலிருந்து-விக/

  • கருத்துக்கள உறவுகள்

திரு . விக்கினேசுவரனை வடமாகாண முலமைச்சர் ஆக்கியது தமிழரசுக் கட்சி. முதலமைச்சர் ஆக்கிவிட்டு அவர் முதுகின்மேல் ஏறி சவாரிசெய்ய முற்பட்டால் விக்கினேசுவரனல்ல எந்தத் தன்மானமுள்ள தமிழனும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டான். அவர் புதியகட்சி தொடங்கினால் என்ன, சுயேட்சையாகச் செயல்பட்டால் என்ன, கூட்டமைப்பிலிருந்து நீங்கிவிடுவேன் என்று சொன்னதாக இதுவரை செய்தியில்லை. அவரை பதவியிலிருந்து உதைத்து நீக்கிவிடும் முயற்சியில் மத்திய அரசுக்கு சார்பாகச் சிலர் செயற்படுவதை மக்கள் அறிவார்கள். Bildergebnis für %e0%ae%89%e0%ae%a4%e0%af%88

  • கருத்துக்கள உறவுகள்

37-F4-C45-B-8-E75-4-E20-BA44-DF0-DDEB4-A

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கம் தமிழ்நாட்டில் வைகோ போல். அங்கு ஒரு கட்சி வெல்லும்போல் தெரிந்தால் எதிர் கட்சியே காசுகுடுத்து அந்த கட்சி க்குள் வைகோவை  கொண்டு போய் விட்டு விடும் அவர் சேர்ந்த கட்சி படு தோல்வி அடையும் இல்லாட்டி கட்சி உடையும் அவ்வளவுக்கு சிங்கனின் ராசி இவருக்கும் சிவாஜிலிங்கத்துக்கும்  ஆதே ராசி உள்ளது பார்ப்பம் என்ன நடக்குது என்று .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.