Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கி தலமையிலான மாகாண அணி ஆட்டமிழப்பு – ஆளுநர் அணியின் துடுப்பாட்டம் ஆரம்பம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி தலமையிலான மாகாண அணி ஆட்டமிழப்பு – ஆளுநர் அணியின் துடுப்பாட்டம் ஆரம்பம்..

October 25, 2018

Goore3.jpg?resize=800%2C533

வடக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் நேற்று நள்ளிரவு முதல் முடிவடைந்த நிலையில் வடமாகாண ஆளுநர் நிர்வாக நடவடிக்கைகளை துரிதப்படுத்தி மக்களுக்கான அபிவிருத்திகளை செய்வது தொடர்பான விசேட கூட்டங்களை ஆளுநர் ரெஜினோல்ட் குரே தொடர்ச்சியாக கூட்டி வருகின்றார்

நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் அலுவலகத்துக்கு இன்று (25)பிற்பகல் ஒரு மணியளவில் விஜயம் செய்த ஆளுனர் வடமாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் செயலாளர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்து கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் முடிவடைந்த பணிகள் முடிவடையாத பணிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

வடமாகாணத்தில் சில பாடசாலைகளில் மாணவர்கள் குறைவாக இருக்கின்ற போதும் ஆசிரியர்கள் அதிகமாக இருக்கின்ற நிலை காணப்படுவதாகவும் இது நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை காண்பிப்பதாகவும் இந்த கூட்டத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாகவும் கஷ்டப் பிரதேசங்களில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான முன்னேற்பாடுகளை எதிர்வரும் வாரங்களில் ஏற்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்காக அனைத்து கல்விப் பணிப்பாளர்கள் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் செயலாளர் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

வடமாகாணத்தில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக வேண்டிய அனைத்தையும் செய்வதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அதற்கு மத்திய அரசின் உதவியை பெறுவதற்கு முயல்வதாகவும் எனவே இந்த நடவடிக்கைகளில் அதிகாரிகள் தமது முழு ஈடுபாட்டையும் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் குறுகிய காலத்தில் பாரிய வேலைகளைச் செய்யக் கூடிய வகையில் அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்குமாறு வலியுறுத்தினார். இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் பிரத்தியேக செயலாளர் ஜே எம் சோமஸ்ரீ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Goore2.jpg?resize=800%2C533 Goore4.jpg?resize=800%2C533Goorey1.jpg?resize=800%2C533

1 hour ago, கிருபன் said:

வடக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் நேற்று நள்ளிரவு முதல் முடிவடைந்த நிலையில் வடமாகாண ஆளுநர் நிர்வாக நடவடிக்கைகளை துரிதப்படுத்தி மக்களுக்கான அபிவிருத்திகளை செய்வது தொடர்பான விசேட கூட்டங்களை ஆளுநர் ரெஜினோல்ட் குரே தொடர்ச்சியாக கூட்டி வருகின்றார்

இதுவரையிலும் நம்ம முன்னாள் முதல்வர் இப்படியான கூட்டத்தை கூட்டியிருப்பாரா. முடிவடைந்த, நிலுவையில் உள்ள திட்டங்களை ஆராய்ந்திருப்பாரா. என்ன "கேள்வியும் நானே பதிலும் நானே"யில்தான் ரொம்ப பிசியா இருந்தார். 

ஒரு கொசுறு தகவல் / மாகாணசபையின் அமர்வுகளில் எத்தனையில் முன்னாள் முதல்வர் இருந்தார் என்ற புள்ளி விபரத்தை பார்த்தால் தலை இருப்பவர்களுக்கு தலை மட்டுமில்லை வடிவேலு போல உலகமே சுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பெரும்பான்மை.. மத்திய அரசுக்கு தேவையான ஆளுனரிடம் அதிகாரங்களை குவித்து வைத்து விட்டு.. முதலமைச்சர் இப்படிக் கூட்டங்களைக் கூட்டி தீர்மானங்களைப் போட்டு திட்டங்களை அமுல்படுத்தவில்லை என்று அப்பாவித்தனம் போல சிந்திக்க விளையும் அடப்பாவிகளை என்னென்பது..??!

முதலமைச்சர் தீட்டிய எத்தனையோ திட்டங்களை கிடப்பில் போட்டதுமன்றி.. ஒரு மாகாண சபையில் ஆட்சிக்காலம் முடியும் முன் தேர்தலை நடத்தும் அடிப்படை சனநாயக உரிமையைக் கூட மறுதலிக்கும்.. சிங்கள ஆளுநரிடமும்.. மத்திய அரசிடமும்.. எதை தான் தமிழர்கள் எதிர்பார்க்க முடியும் உருப்படியாக..!! ?

வர வர எம்மவர்களுக்கு சிங்கள எஜமான விசுவாசம் மேலோங்கி விட்டது. அவன்.. எவ்வளவு அடிச்சாலும்.. தாங்கிக்குவினம்..!?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

எத்தனையோ இதை விட பெரிய கூட்டங்களை, சொறி சிங்களம் கூடியது தானே? robert blake இ வைத்து அணைத்து கட்சி கூட்டங்கள் கூடியது. இதை போட்டிக்காக பதிலாக கூறவில்லை.

ஒரேயொரு கேள்வி?

வடக்கு முதலைச்சர் நிதியம் என்னவாயிற்று?

விக்கியின் ஓர் யதார்த்தமான, தீர்க்கதரிசமான முயற்சி, நிதி அதிகாரங்களை ஆரவாரமில்லாமல் பகிரப்படுவதத்திற்கு, அதுவும் வேறுநாடுகளின் சாட்சியத்தோடு.

சொறி சிங்களம் என்ன செய்தது?               

6 hours ago, nedukkalapoovan said:

சிங்கள பெரும்பான்மை.. மத்திய அரசுக்கு தேவையான ஆளுனரிடம் அதிகாரங்களை குவித்து வைத்து விட்டு.. முதலமைச்சர் இப்படிக் கூட்டங்களைக் கூட்டி தீர்மானங்களைப் போட்டு திட்டங்களை அமுல்படுத்தவில்லை என்று அப்பாவித்தனம் போல சிந்திக்க விளையும் அடப்பாவிகளை என்னென்பது..??!

முதலமைச்சர் தீட்டிய எத்தனையோ திட்டங்களை கிடப்பில் போட்டதுமன்றி.. ஒரு மாகாண சபையில் ஆட்சிக்காலம் முடியும் முன் தேர்தலை நடத்தும் அடிப்படை சனநாயக உரிமையைக் கூட மறுதலிக்கும்.. சிங்கள ஆளுநரிடமும்.. மத்திய அரசிடமும்.. எதை தான் தமிழர்கள் எதிர்பார்க்க முடியும் உருப்படியாக..!! ?

வர வர எம்மவர்களுக்கு சிங்கள எஜமான விசுவாசம் மேலோங்கி விட்டது. அவன்.. எவ்வளவு அடிச்சாலும்.. தாங்கிக்குவினம்..!?

அதுசரி 

ஆடத் தெரியாவிட்டால் மேடை சரியில்லை 

கார் ஒட்டத் தெரியாவிட்டால் வீதி சரி இல்லை 

சமைக்க தெரியாவிட்டால் அடுப்பு சரியில்ல 

இப்படியே சப்புக்கொட்டிக்கொண்டு இருங்கள் மக்களுக்கு எல்லாம் தெரியும்.

5 hours ago, Kadancha said:

வடக்கு முதலைச்சர் நிதியம் என்னவாயிற்று?

என்ன செய்யிறது ஒரே cv க்கு இரு பதில்கள் 

ஆமா என்னதான் நடந்தது என்று தெரிந்தால் இங்கு பகிரவும். எனக்கு மட்டுமில்லை பலருக்கு பிரயோசனமான இருக்கும். அதைவிடுத்து கலிங்க நாட்டு மன்னன் (புறமுதுகிட்டு) ஏன் ஓடினான் என்றால் எனக்கு என்ன புரியும். ??

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:

சொறி சிங்களம் என்ன செய்தது?               

சொறியும்போது ஒரு ஆனந்த சுகம் ஏற்படும் ந்தச் சுகமே தனிதான். சொறிக்கு மருந்து தேடுவதைவிட்டுச் சொறியச் சொறிய, சொறி கூடுமே தவிரக் குறையாது. தற்போது சொறிலங்காவின் வடமாகாண ஆளுனருக்கு தமிழர்களைச் சொறிவதற்கு முழுமையான சந்தர்ப்பம் வந்துள்ளது. ஆளுனரின் காலம் முடியும்போது, அவரின் சொறிவினால் ஏற்பட்ட தாக்கத்தைத் தாங்கமுடியாது தவிக்கப்போவது,,,, இன்று ஆளுனருக்கு வக்காலத்து வாங்கும் தமிழர்களும் கூடவே என்பதை மறக்கக்கூடாது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.