Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு முன்வைத்துள்ள நிபந்தனைகள் தமிழர் நலன்களை அழிக்கும்: கஜேந்திரகுமார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு முன்வைத்துள்ள நிபந்தனைகள் தமிழர் நலன்களை அழிக்கும்: கஜேந்திரகுமார்

kajan-1-720x450.jpg

நாட்டின் பிரதமரை தெரிவு செய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் முன்வைத்துள்ள இரு நிபந்தனைகளும் தமிழ் மக்களின் நலன்களை அழிக்கும் நிபந்தனைகள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஏற்கனவே மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேனவினால் ஏமாற்றப்பட்ட பின்னரும், இன்றைய ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் உள்ளவர்களிடம் இருந்து கூட்டமைப்பு பெறப்போகும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது.

கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது இந்த விடயத்தில் இருவருடைய முகங்களைப் பார்த்து எடுக்கும் முடிவு அல்ல கொள்கை ரீதியிலேயே முடிவு எடுக்கப்பட வேண்டும்.

பிரதமரை தெரிவு செய்வதில் முக்கிய பாத்திரமாக விளங்கப் போகும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமது பேரம்பேசும் சக்தியை தவறான வழியில் பயன்படுத்துகின்றது.

யார் பிரதமர் என்பதை தீர்மானிப்பதற்கான ஆதரவினை வழங்குவதற்கு கூட்டமைப்பு முன்வைத்துள்ள ஒன்றையாட்சியை ஏற்றுக் கொண்டுள்ள அரசியல் அமைப்பு மற்றும் உள்ளக விசாரணையை வலியுறுத்தும் ஜெனீவா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற இரு நிபந்தனைகளும் தமிழ் மக்களின் நலன்களை முற்றுமுழுதாக இல்லாமல் செய்யும் நிபந்தனையாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

http://athavannews.com/கூட்டமைப்பு-முன்வைத்துள/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆளையால் மோதிக் கொண்டிராமல்..

சம்பந்தன் உட்பட எல்லா தமிழ் மக்கள் நலனில் உண்மையான அக்கறையுள்ள.. தமிழர் தரப்புகளும்.. ஒன்று கூடி.. ஒரு பொது நிலைப்பாட்டை சர்வதேசத்தின் முன் ஐ நாவின் முன் வையுங்கள்.

அதுதான் செய்ய வேண்டிய செயல் இப்போது.

தமிழர் தரப்புக்கள்.. ஒதுங்கி இருப்பதற்கும்.. அரசியல் கருத்தியல் ரீதியில்.. மோதுவதற்கும்.. உரிய தருணமல்ல... இது. 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, nedukkalapoovan said:

ஆளையால் மோதிக் கொண்டிராமல்..

சம்பந்தன் உட்பட எல்லா தமிழ் மக்கள் நலனில் உண்மையான அக்கறையுள்ள.. தமிழர் தரப்புகளும்.. ஒன்று கூடி.. ஒரு பொது நிலைப்பாட்டை சர்வதேசத்தின் முன் ஐ நாவின் முன் வையுங்கள்.

அதுதான் செய்ய வேண்டிய செயல் இப்போது.

தமிழர் தரப்புக்கள்.. ஒதுங்கி இருப்பதற்கும்.. அரசியல் கருத்தியல் ரீதியில்.. மோதுவதற்கும்.. உரிய தருணமல்ல... இது. 

தேசியத் தலைவர் பிரபாகரனால்... உருவாக்கப் பட்ட,   தமிழ் தேசிய  கூட்டமைப்மை  சிதைத்தது...
சம்பந்தனும், சுமந்திரனும் மட்டுமே...
அவர்கள்... இல்லாத,    தமிழ் தேசிய  கூட்டமைப்மை.... கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் விரும்புவார் என்றே நம்புகின்றேன்.  

சம்/சும்  கும்பல்   இதுவரை புடுங்கிய... சாணக்கிய அரசியல்  ஆணிகள் போதும் என்று நினைக்கின்றேன்.
பேசாமல்... அவர்கள் அரசியலிருந்து ஒதுங்கி விடுவதே... ஈழத்து தமிழர்களுக்கு நன்மை  கிடைக்கும்.

Edited by தமிழ் சிறி

1 hour ago, தமிழ் சிறி said:

தமிழ் தேசிய  கூட்டமைப்மை  சிதைத்தது...
சம்பந்தனும், சுமந்திரனும் மட்டுமே...
அவர்கள்... இல்லாத,    தமிழ் தேசிய  கூட்டமைப்மை.... கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் விரும்புவார் என்றே நம்புகின்றேன்.

தவறான கற்பனைகளில் வாழவேண்டாம் தமிழ்சிறீ!

சம்சும் கும்பல் மட்டுமல்ல வேறு யாருடனுமே மனப்பூர்வமாக இணைந்து செயற்படும் பக்குவம் இதுவரை கஜேந்திரகுமாருக்கு இல்லவே இல்லை. அது மிகக் குறுகிய காலத்திலும் ஏற்படப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, போல் said:

தவறான கற்பனைகளில் வாழவேண்டாம் தமிழ்சிறீ!

சம்சும் கும்பல் மட்டுமல்ல வேறு யாருடனுமே மனப்பூர்வமாக இணைந்து செயற்படும் பக்குவம் இதுவரை கஜேந்திரகுமாருக்கு இல்லவே இல்லை. அது மிகக் குறுகிய காலத்திலும் ஏற்படப்போவதில்லை.

தவறான... கற்பனை அல்ல போல்.
அவர்களின்... மன  ஓட்டத்தை, நான்... ஓரளவு ஊகித்த  முறையில்.... 
என்னுடைய மனதில், பட்டதை .. மட்டுமே, இங்கு பகிர்ந்து கொண்டேன்.
சிலவற்றை... வெளிப்படையாக சொல்ல முடியாது.

9 minutes ago, தமிழ் சிறி said:

சிலவற்றை... வெளிப்படையாக சொல்ல முடியாது.

நல்லது!
பொறுத்திருந்து பார்ப்போம்!

 

வல்லரசுகளின் தாளத்தில் கூட்டமைப்பு ஆடுகின்றது: கஜேந்திரகுமார்!

பிரதமர் விவகாரத்தில் வல்லரசு நாடுகளின் வழிநடத்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடகம் ஆடுகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன் மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பிரதமர் என்பதை ஏற்றுக் கொண்டே அவர் வீடு சென்று சந்தித்துள்ளார்.

தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பாதுகாத்துக் கொள்வதற்கும், உபகுழுக்களின் தலைவர் பதவியினை பாதுகாத்துக் கொள்வதற்கும், ஏனைய சலுகைகளை பாதுகாத்துக் கொள்வதற்காகவே அவசரமாக சம்பந்தன் மஹிந்தவைச் சந்தித்தார் என்று பரவலாக விமர்சிக்கப்படுகின்றது.

வல்லரசு நாடுகள் தமக்கு எச்சரிக்கை செய்துள்ள நிலையில்தான் தமது பிழையினைத் திருத்தி தமிழ் மக்களுக்கு காண்பிப்பதற்காகவே அவசரமான ஒரு அறிக்கையினை கூட்டமைப்பு வெளியிட்டிருந்தது.

மஹிந்த ராஜபக்ஷவை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தேடிச் சென்று சந்தித்து நிபந்தனைகளை முன்வைக்க, மஹிந்தவைப் பிரதமராக தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூட்டமைப்பு கூறியுள்ளது.

ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலேயே சந்தித்தோம் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் அறிக்கை விடுவது நாடகத்தின் ஒரு பகுதியே ஆகும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/வல்லரசுகளின்-தாளத்தில்-க/

Edited by போல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.