Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்ற மோதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

llllllllll-720x450.jpg

நாடாளுமன்ற மோதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு!

நாடாளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அத்துடன், கடந்த வௌ்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலின்போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் மருத்துவ அறிக்கைகளையும் பெற்றுக்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இதுவரையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவரின் மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த அணியினர், நேற்று முந்தினம் சபாநாயகரின் அக்ராசனத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பியதுடன், சபை அமர்விற்கும் இடமளிக்கவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ சபாநாயகரின் அக்ராசனத்தில் அமர்ந்திருந்தார்.

அத்துடன், சபாநாயகரின் பாதுகாப்புக்காக நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்த பொலிஸார் மீதும் அவர்கள், சபையில் இருந்த தளபாடங்கள் மற்றும் புத்தகங்களால் வீதி தாக்குதல்களை நடாத்தியிருந்தனர்.

இந்த தாக்குதல்களில், 16 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தனர். இதுதவிர, மஹிந்த தரப்பினர் மிளகாய்த்தூள் கலந்த நீர் பிரயோகங்களையும் மேற்கொண்டிருந்தனர்.

இந்த தாக்குதல்கள் காரணமாக பொலிஸார், மக்கள் விடுதலை முன்னணியின் விஜித ஹேரத் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மலிக் சமரவிக்கிரம மற்றும் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நாடாளுமன்ற-மோதல்-சம்பவம்/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

llllllllll-720x450.jpg

நாடாளுமன்ற மோதல் சம்பவம் 

இலங்கையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கி அமுல்படுத்தவேண்டிய காலத்தின் கட்டாயம். ?

அமுல்படுத்தினால் சிறுபான்மை இனங்களுக்கு சில உரிமைகள் கிடைத்துவிடுமே.... ☹️

சிங்களம் தலையைப் பிய்த்து யோசித்ததின் பலன்...... ?

அதுதான் நாடாளுமன்ற மோதல் சம்பவம்...... ?

 

நான்தான் மோதலை உருவாக்கினேன்.......... மைத்திரி ?

நான்தான் மோதலுக்கு ஆதரவு கொடுத்தேன்........ மகிந்தர் ?

நான்தான் இதற்கெல்லாம் ஐடியாவே கொடுத்தேன்........ ரணில் ?

 

எங்கள் பதவியைப் பறிக்காது விட்டால் எங்கள் ஆதரவு உங்களுக்கே........... எதிர்கட்சி. ?

 

  • கருத்துக்கள உறவுகள்

சட்டம் படித்த அரசியல்வாதிகள் எல்லாம் சும்'மா தானே திரியினம் ரெண்டு கேசு போட்டு விடுங்க .. கோர்ட்டுக்காவது போய்வரட்டும்  ☺️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.