Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதன் முதலாய் அம்மாவுக்கு...

Featured Replies

முதன் முதலாய் அம்மாவுக்கு...

ஆயிரந்தான் கவிசொன்னேன்

அழகழகாப் பொய் சொன்னேன்

பெத்தவளே ஒம்பெரு(மை)ம

ஒத்தவரி சொல்லலையே!

காத்தெல்லாம் மகன்பாட்டு

காயிதத்தில் அவன் எழுத்து

ஊரெல்லாம் மகன் பேச்சு

ஒங்கீர்த்தி எழுதலையே!

எழுதவோ படிக்கவோ

ஏலாத தாய்பத்தி

எழுதிஎன்ன லாபமின்னு

எழுதாமாப் போனேனோ?

பொன்னையாத் தேவன் பெத்த

பொன்னே! குலமகளே!

என்னைப் புறந்தள்ள

இடுப்புல்வலி பொறுத்தவளே!

வைரமுத்து பிறப்பான்னு

வயித்தில்நீ சுமந்ததில்ல

வயித்தில்நீ சுமந்த ஒண்ணு

வைரமுத்து ஆயிருச்சு

கண்ணுகாது மூக்கோட

கறுப்பா ஒருபிண்டம்

இடப்பக்கம் கெடக்கையில

என்னென்ன நெனச்சிருப்ப?

கத்தி எடுப்பவனோ?

களவாணப் பிறந்தவனோ?

தரணிஆள வந்திருக்கும்

தாசில்தார் இவந்தானோ?

இந்த வெவரங்க

ஏதொண்ணும் அறியாம

நெஞ்சூட்டி வளத்தஒன்ன

நெனச்சா அழுகவரும்

கதகதன்னு களி(க்) கிண்டி

களிக்குள்ள குழிவெட்டி

கருப்பட்டி நல்லெண்ண

கலந்து தருவாயே

தொண்டையில் அதுஎறங்கும்

சொகமான எளஞ்சூடு

மண்டையில இன்னும்

மசமன்னு நிக்கிதம்மா

கொத்தமல்லி வறுத்துவச்சுக்

குறுமொளகா ரெண்டுவச்சு

சீரகமும் சிறுமொளகும்

சேத்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ

கொழகொழன்னு வழிக்கையிலே

அம்மி மணக்கும்

அடுத்ததெரு மணமணக்கும்

திக்திக்கச் சமச்சாலும்

திட்டிக்கிட்டே சமச்சாலும்

கத்திரிக்கா நெய்வடியும்

கருவாடு தேனொழுகும்

கோழிக் கொழம்புமேல

குட்டிக்குட்டியா மெதக்கும்

தேங்காச் சில்லுக்கு

தேகமெல்லாம் எச்சிஊறும்

வறுமையில நாமபட்ட

வலிதாங்க மாட்டாம(ப்)

பேனா எடுத்தேன்

பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!

பாசமுள்ள வேளையில

காசுபணம் கூடலையே!

காசுவந்த வேளையிலே

பாசம்வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு

கதியத்து நிக்கையிலே

பெத்தஅப்பன் சென்னைவந்து

சொத்தெழுதிப் போனபின்னே

அஞ்சாறு வருசம்உன்

ஆசமொகம் பாக்காமப்

பிள்ளைமனம் பித்தாச்சே

பெத்தமனம் கல்லாச்சே

படிப்புப் படிச்சுக்கிட்டே

பணம் அனுப்பி வச்சமகன்

கைவிட மாட்டான்னு

கடைசியில நம்பலையே!

பாசம் கண்ணீரு

பழையகதை எல்லாமே

வெறிச்சோடி போன

வேதாந்த மாயிருச்சே!

வைகையில ஊர்முழுக

வல்லூறும் சேர்ந்தழுக

கைப்பிடியாக் கூட்டிவந்து

கரைசேத்து விட்டவளே!

எனக்கொண்ணு ஆனதுன்னா

ஒனக்குவேற பிள்ளையுண்டு

ஒனக்கேதும் ஆனதுன்னா

எனக்குவேற தாயிருக்கா?

- கவிப்பேரரசு வைரமுத்து.

தொகுப்பு : கொஞ்சம் தேநீர் நிறைய வானம்

அழகிய கவிதை, இணைப்பிற்கு நன்றி!

உண்மையில் பெற்ற தாயின் அருமை, அருகில் தாய் நம்முடன் இருக்கும்போது நமக்கு விளங்குவதில்லை, சுயநலமற்ற தாயின் சேவையை விட ஒரு சிறந்த சேவையை நாம் எவ்வளவு காசு கொடுத்தும் பெறமுடியாது, தாய் தரும் சுகத்தை விஞ்சிய சுகம் வேறு ஒன்று உலகில் இல்லை....

ஆனால், கவிஞர் கூறுவதைப் போல நானும் எனது தாயிற்காக ஒரு கவிதையை இதுவரை காலமும் படைக்காததையிட்டு வெட்கப்படுகின்றேன்.. யார் யாருக்கோ என்னென்னமோ தியாகம் எல்லாம் செய்கின்றோம், ஆனால், பெற்ற தாயிற்காக இதுவரை என்ன கைம்மாறு செய்துள்ளோம் என்று நினைத்துப் பார்க்க வேதனையாய் உள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உங்கள் கவிதையாக்கும் எண்டு ஓடியாந்து பார்த்தால் கவிஞர் வைரமுத்துவின் கவிதை.

அழகான கவிதை

  • தொடங்கியவர்

:blink::mellow:

நான் தப்பி விட்டேன் ஒரு கவிதை எழுதியபடியால் :D

நானும் உங்கள் கவிதையாக்கும் எண்டு ஓடியாந்து பார்த்தால் கவிஞர் வைரமுத்துவின் கவிதை.

அழகான கவிதை

கப்பியக்க என்னை இப்படி நக்கலடிக்கக் கூடாது, இப்படி அழகான கவிதை எழுதுமளவிற்கு எனக்கு எங்கே ஆற்றல் உள்ளது :blink:

உண்மையில் பெற்ற தாயின் அருமை, அருகில் தாய் நம்முடன் இருக்கும்போது நமக்கு விளங்குவதில்லை, சுயநலமற்ற தாயின் சேவையை விட ஒரு சிறந்த சேவையை நாம் எவ்வளவு காசு கொடுத்தும் பெறமுடியாது, தாய் தரும் சுகத்தை விஞ்சிய சுகம் வேறு ஒன்று உலகில் இல்லை....

இங்கு நான் கூறவருவதென்னவென்றால், பெற்ற தாயுக்கு நாம் எவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்தாலும் நாம் அவருக்கு சிறு குழந்தையே! ஒருவருக்கு அவரது தாயின் அன்பிற்கு முன்னால் மனைவியின் அன்பு அல்லது கணவனின் அன்பு ஈடாகாது! இதனாலேயே தாயிற்கு பின் தாரம் என்று கூறுவார்கள்?

நீர் சொல்வதை நான் ஒத்துக் கொள்கிறேன் தாய் இல்லாதவர்களிற்க்கு.......? :mellow:

வானவில் அம்மாவைப் பற்றிய கவிதை உண்மையில் நன்றாக இருக்கு...! இணைப்பிற்கு நன்றி...!

அம்மா கவிதையைச் சொன்னதும் நான் அம்மாவுக்கு எழுதிய ஒரு கவிதை ஞாபகம் வந்திட்டு ... பழைய களத்தில் கிடக்கு ...இதோ இந்த இணைப்பில் பாருங்கள் .... http://www.yarl.com/forum/index.php?showto...amp;mode=linear

Edited by அனிதா

கவிப் பேரரசின் அவர்களின் கவிதை இணைப்புக்கு நன்றி.

ஒவ்வொருவரது உள்ளத்தை உறுத்தும் கவிதை

படிக்கும்போது இதயம் கனத்தது.

  • தொடங்கியவர்

வானவில் அம்மாவைப் பற்றிய கவிதை உண்மையில் நன்றாக இருக்கு...! இணைப்பிற்கு நன்றி.!

அம்மா கவிதையைச் சொன்னதும் நான் அம்மாவுக்கு எழுதிய ஒரு கவிதை ஞாபகம் வந்திட்டு ... பழைய களத்தில் கிடக்கு ...இதோ இந்த இணைப்பில் பாருங்கள் .... http://www.yarl.com/forum/index.php?showto...amp;mode=linear

என் அம்மா.... Options

Track this topic

Email this topic

Print this topic

Download this topic

Subscribe to this forum

Display Modes

Switch to: Outline

Standard

Switch to: Linear+ அனிதா Sep 20 2005, 04:54 PM Post #1

Group: Members

Posts: 2,545

Joined: 13-May 05

From: Suisse

Member No.: 1,310

என் அம்மா

அம்மா என் அம்மா..

அன்பாய் அரவணைத்து..

ஆசை முத்தம் தந்து..

ஆராரிரோ பாடல் பாடி

என்னை தூங்க வைப்பாள்

என் அம்மா..!

காலையில் நான் தூக்கத்தில் இருக்க..

என் பக்கத்தில் வந்து..

என் தலையை வருடியபடி..

என் நெற்றியில் முத்தமிட்டு..

காலை வணக்கம் சொல்லி ..

சிரிப்புடன் அரவணைப்பாள்

என் அம்மா...!

படிப்பும் சொல்லித்தந்து ..

பாடல்களையும் படித்து காட்டி

தமிழ் பண்பாடுகளையும் சொல்லித் தந்து

நன்றாக படிக்க சொல்லி

உற்சாகமும் தருகிறாள்

என் அம்மா...!

நான் கோபத்தில்

சாப்பிடாமல் இருந்தால்

என்னிடம் எதோ சொல்லி

என்னை சமாதான படுத்தி..

எனக்கு சாப்பாடும் ஊட்டி விடுவாள்

என் அம்மா...!

எனக்கு ஒரு சின்ன காயமென்றாலும்..

பட படர்த்த இதயத்துடன்

துடி துடித்த பார்வையுடன்

என் காயத்துக்கும் மருந்து போடுவாள்

என் அம்மா...!

என் அம்மா நீ அம்மா..

என் அன்புத் தெய்வம் நீதானம்மா...!

:roll: :roll: :roll:

--------------------

அன்புடன் அனிதா

:mellow: அழகாக உள்ளது

Edited by வானவில்

என் அம்மா

அம்மா என் அம்மா..

அன்பாய் அரவணைத்து..

ஆசை முத்தம் தந்து..

ஆராரிரோ பாடல் பாடி

என்னை தூங்க வைப்பாள்

என் அம்மா..!

காலையில் நான் தூக்கத்தில் இருக்க..

என் பக்கத்தில் வந்து..

என் தலையை வருடியபடி..

என் நெற்றியில் முத்தமிட்டு..

காலை வணக்கம் சொல்லி ..

சிரிப்புடன் அரவணைப்பாள்

என் அம்மா...!

படிப்பும் சொல்லித்தந்து ..

பாடல்களையும் படித்து காட்டி

தமிழ் பண்பாடுகளையும் சொல்லித் தந்து

நன்றாக படிக்க சொல்லி

உற்சாகமும் தருகிறாள்

என் அம்மா...!

நான் கோபத்தில்

சாப்பிடாமல் இருந்தால்

என்னிடம் எதோ சொல்லி

என்னை சமாதான படுத்தி..

எனக்கு சாப்பாடும் ஊட்டி விடுவாள்

என் அம்மா...!

எனக்கு ஒரு சின்ன காயமென்றாலும்..

பட படர்த்த இதயத்துடன்

துடி துடித்த பார்வையுடன்

என் காயத்துக்கும் மருந்து போடுவாள்

என் அம்மா...!

என் அம்மா நீ அம்மா..

என் அன்புத் தெய்வம் நீதானம்மா...!

அழகிய கவிதை! நன்றாக இருக்கின்றது!

இந்தக் கவிதையை உங்கள் அம்மாவிற்கு படித்து காட்டியுள்ளீர்களா? படித்து காட்டாவிட்டால் கட்டாயம் உங்கள் அம்மாவிற்கு இதை படித்துக் காட்டுங்கள், அவர் மிகுந்த சந்தோசப்படுவார்....

எனது தாயாருக்கு அவரைப்பற்றி நான் ஏதாவது பாடல் - அம்மா என்று அழைக்காத உயிரில்லையே போன்ற சினிமா பாடல் - பாடினால், ஆர்வமுடன் அதை விரும்பிக் கேட்பார்.

நன்றி வானவில் & கலைஞன்

ஹும் ....

எழுதிட்டு அம்மாட்ட காட்டினன் ........அம்மாக்கு இந்த கவிதைய பிரிண்ட் பண்ணியும் குடுத்தனான். இப்பவும்,யாரும் சொந்தக்காரர்கள் வீட்ட வந்தால் எடுத்துக்காட்டி சந்தோசப்படுவாங்க..... :mellow: அந்த நேரத்தில் அம்மாட முகத்தில் ஒரு சிரிப்பு அத எப்படி சொல்லுற எண்டு தெரியல...... :blink:

வைரமுத்து,வானவில்,கலைஞன் மற்றும் அனிதாவின் அம்மா பற்றிய கவிதை என் மதை தொட்டு விட்டது வாழ்த்துகள்.அத்துடன் மாப்பி சொன்ன கருத்து நூறு வீதம் உண்மை.

உலகிலே பரதி உபகாரம் கருதாத ஒரே உறவு தாயாகத் தான் இருக்க முடியும்.

என்னுடைய அம்மாவுக்காக நான் எழுதி களத்தில் இணைத்திருந்த கவிதை இதோ

எந்தன்குரல் கேட்கிறதா?

அவனியிலே வித்தகனாய்

அறிவுடனே நான்வாழ

அனுதினமும் கனவுகண்ட

அன்பான அம்மாக்கு

என்னருகே இருக்கையிலே

உன்னருமை தெரியவில்லை

அருமையினை உணர்கையிலே

அருகினிலே நீயில்லை

மெழுகாய் உனைஉருக்கி

வெளிச்சத்தைத் தந்தவளே

வெளிச்சத்தின் அருமையினை

இருட்டில்தான் உணர்கின்றேன்

உன்பேனா பிரசவித்த

உரைகளைநான் மேடையேற்றி

பேச்சாளன் ஆகியதை

பெருமையுடன் நினைக்கின்றேன்

பரீட்சைக்கு முதல்நாளும்

படுக்கையிலே விழுந்திடுவேன்

என்னருகே வந்திருந்து

எனக்காக நீபடித்தாய்

என்பாடம் தனைப்படித்து

எனைஉயர்த்த முயன்றவளே

உன்பாசம்தனை எந்த

உலகத்தில் காண்பேனோ

சிந்தையிலே எந்நாளும்

எந்தனையே தாங்கியதால்

உந்தனுக்கு எப்போதும்

நிம்மதியே இருந்ததில்லை

உனக்காக எதையும்நீ

என்னிடத்தில் கேட்டதில்லை

எனக்காக எதையும்நீ

செய்யாமல் விட்டதில்லை

சேவைசெய்தோம் என்கின்ற

செருக்கொடு இருப்போரே

சேயெனக்குத் தாய்செய்த

செயலுக்கு இணைவருமோ

கடைமையினைச் செய்துவிட்ட

களிப்போடு சென்றுவிட்டாய்

கைம்மாறு செய்யாமல்

கலங்குகின்றேன் தனியாக

வியர்வையினை நீராக்கி

விளைவித்த பயிரெங்கள்

விளைச்சலினைக் காணாமல்

விட்டுவிட்டுப் போனாயே

கடனாளி இல்லாமல்

கடைசிவரை வாழுமெந்தன்

கனவினைநீ கலைத்துவிட்டு

கண்மூடிப் போனாயே

உன்னிடத்தில் பட்டகடன்

அடைப்பதற்கு வழியின்றி

அரைவழியில் விட்டுவிட்டு

அவ்வுலகம் போனாடீய

அடுத்துஒரு பிறப்பிருந்தால்

அம்மாஉன் பிள்ளையாகப்

பிறக்கின்ற வரமெனக்குப்

பிச்சையாகவும் வேண்டாம்

மாறாக நீயெனக்கு

மகனாக வரவேண்டும்

நான்செய்த தவறெல்லாம்

நீசெய்ய அழவேண்டும்

எமனுன்னைப் பிரித்தெடுத்து

எங்கேதான் வைத்தாலும்

என்மீது ஒருகண்ணை

எப்போதும் வைத்திருப்பாய்

உதிரத்தை எரித்துநீயும்

உழைத்திட்ட உழைப்பெந்தன்

உள்ளத்தில் இருக்கும்வரை

உன்நினைவோ டிருந்திடுவேன்

அழகான கவிதை, வேறு யாரிடமும் அம்மா கவிதை இருந்தால் கொண்டு வந்து போடுங்க. இது அம்மா கீதம் ஆக்கிடுவம்

  • கருத்துக்கள உறவுகள்

நம்மிடமும் இருக்கு ஆனா அது அப்பா கவிதை. அம்மா 10 மாதம் சுமக்கிறா என்றா அப்பா நீங்க நீங்க உங்க சொந்தக்காலில நிற்கும் வரை சுமக்கிறார். அம்மாவையும் சேர்த்து..! பாவம் அந்த மனிசனை யாரும் கண்டுக்கிறதே இல்ல..!

அம்மாவுக்கு 50 % முன்னுரிமை அளிச்சா அப்பாக்கு 55% அளிக்கனும்..! உடலின்றி உயிரில்லை.. உயிரின்றி உடலில்லை...! அம்மா உடல் என்றால் அப்பா உயிர்..! இருவரையும் சனமா வைச்சுக்கனும்..! :blink::mellow:

இல்லை எனக்கு அம்மா தான் அப்பாவை ஒரு படி உயர்வு தான் அப்பாட்ட வந்து சைட் அடிததில இருந்து எல்லா விசயத்தையும் என்னால சொல்லமுடியாது பட் அம்மாட்ட நான் என்ன செய்தனான என்று முழு விசயத்தையும் சொல்ல முடியும் ஆகவே அம்மா ஒரு படி கூட தான் யார் என்ன சொன்னாலும்

மாதா,பிதா,குரு,தெய்வம்

ஆகவே இதில் கூட மாதா தான் முதலில் வருது

அம்மாவுக்கு 50 % முன்னுரிமை அளிச்சா அப்பாக்கு 55% அளிக்கனும்..! உடலின்றி உயிரில்லை.. உயிரின்றி உடலில்லை...! அம்மா உடல் என்றால் அப்பா உயிர்..! இருவரையும் சனமா வைச்சுக்கனும்..! :blink::blink:

50 + 55 =105 :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

50 + 55 =105 :lol:

5% அப்பாக்கு முன்னுரிமையா அளிச்சது. அம்மா மேல பற்றுதல் இயல்பானது. ஆனா பல அம்மாமார் அப்பாமாரை மட்டந்தட்டிடுறது இல்ல குழந்தைகள் அதிகம் அப்பாவோட இருக்க அனுமதிக்கிறதில்ல..! சோ அதால அப்பாமார் குழந்தைப் பாசத்துக்காக ஏங்கிறாங்க..! அதால அவங்களுக்கு 5% முன்னுரிமை அளிச்சிருக்கு..! அப்பாமார் யாரேனும் ஏதாச்சும் பிரச்சனைகளை சந்திச்சா எங்க கிறீன் பிரிகேட்டுக்கு அறிவியுங்கள். தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும்..!

நம்மிடமும் இருக்கு ஆனா அது அப்பா கவிதை. அம்மா 10 மாதம் சுமக்கிறா என்றா அப்பா நீங்க நீங்க உங்க சொந்தக்காலில நிற்கும் வரை சுமக்கிறார். அம்மாவையும் சேர்த்து..! பாவம் அந்த மனிசனை யாரும் கண்டுக்கிறதே இல்ல..!

அம்மாவுக்கு 50 % முன்னுரிமை அளிச்சா அப்பாக்கு 55% அளிக்கனும்..! உடலின்றி உயிரில்லை.. உயிரின்றி உடலில்லை...! அம்மா உடல் என்றால் அப்பா உயிர்..! இருவரையும் சனமா வைச்சுக்கனும்..! :lol::lol:

ஓ அப்பாக் கவிதை இருக்கோ .... ? எனக்கும் அப்பாவை ரொம்ப பிடிக்கும்...!எங்க.. இங்க இணையுங்கோ பாப்பம் ... உங்க அப்பா கவிதையை வாசிச்சதேயில்லை...... :lol:

ஆனால்,

இப்ப உடனே எழுதிப் போடக் கூடாது. ஏற்கனவே எழுதினதாக இருக்கனும்..

அதுவும் யாழ்லயோ வேற தளத்திலயோ எப்பயாவது போட்டிருக்கனும்.

அப்பாக் கவிதை இருக்கு எண்டு போட்டு இப்ப எழுதி இங்க போடுறயில்லை சொல்லிட்டன். :lol::lol: ;)

ஒரு குழந்தையின்வளர்ச்சியில் அப்பாவின் பங்கு முக்கியம் தான் என்றாலும் அதை அம்மாவுடன் ஒப்பிட முடியாது.

அம்மாவிற்கு அடுத்த இடம் தான் அப்பாவிற்கு.

அதிலும் குழந்தை தவறொன்று செய்து விட்டால் "உன்ரரை பிள்ளை செய்த வேலையைப் பார்" என்று குழந்தையின் மீதான தங்களின் உரிமையைக் கூட விட்டுக் கொடுக்கும் அப்பா மார் அதிகம்.

ஆனால் அதே குழந்தை ஒரு சாதனை செய்துவிட்டால் "என்ரை பிள்ளை" என்று உரிமை கோர அவர்கள் தயார்.

ஆனால் தாயன்பு அப்படிப்பட்டதல்ல. உயர்ச்சியின் போதும் தாழ்ச்சியின் போதும் துணை வரும் தூய அன்பு அது.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை எனக்கு அம்மா தான் அப்பாவை ஒரு படி உயர்வு தான் அப்பாட்ட வந்து சைட் அடிததில இருந்து எல்லா விசயத்தையும் என்னால சொல்லமுடியாது பட் அம்மாட்ட நான் என்ன செய்தனான என்று முழு விசயத்தையும் சொல்ல முடியும் ஆகவே அம்மா ஒரு படி கூட தான் யார் என்ன சொன்னாலும்

மாதா,பிதா,குரு,தெய்வம்

ஆகவே இதில் கூட மாதா தான் முதலில் வருது

ஆம் மாதாவுக்கு முதலிடம் கொடுக்கிறதில நமக்கு எந்த கருத்துமுரண்பாடும் இல்ல. ஆனால் அப்பாக்கு அவரின் நிலை கருதி முன்னுரிமை அளிக்கனும். அதை அம்மாமார் அனுமதிக்க முன் வரணும்...! அப்பாமாரை அதிகம் பிள்ளைகளோட இருக்க அனுமதித்தால் பிள்ளைகள் அப்பாட்டத்தான் சைட் அடிக்கிறதையும் சொல்லுங்கள்..! அம்மாமார் இயல்பா அதிகம் வீட்டோட இருப்பதால அவங்க அதிக நேரம் குழந்தைகளோட உறவாட முடியுறதால.. அம்மா - குழந்தை நெருக்கம் அப்பா - குழந்தை நெருக்கத்தை விட அதிகம் என்பதால பிள்ளைகள் அம்மாவைத் தேடி ஓடுறது இயல்பாப் போச்சு. நாங்களும் அப்படித்தான். ஆனா யோசிச்சுப் பார்த்தா அப்பாமார் மனசுக்குள்ள உள்ள வேதனையை அறிய முடியுது..! அதுதான்.. இந்த வேண்டுகோள்..! :P :lol:

  • தொடங்கியவர்

5% அப்பாக்கு முன்னுரிமையா அளிச்சது. அம்மா மேல பற்றுதல் இயல்பானது. ஆனா பல அம்மாமார் அப்பாமாரை மட்டந்தட்டிடுறது இல்ல குழந்தைகள் அதிகம் அப்பாவோட இருக்க அனுமதிக்கிறதில்ல..! சோ அதால அப்பாமார் குழந்தைப் பாசத்துக்காக ஏங்கிறாங்க..! அதால அவங்களுக்கு 5% முன்னுரிமை அளிச்சிருக்கு..! அப்பாமார் யாரேனும் ஏதாச்சும் பிரச்சனைகளை சந்திச்சா எங்க கிறீன் பிரிகேட்டுக்கு அறிவியுங்கள். தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும்..!

என்னை பொறுத்த வரை அம்மா = அப்பா தான் நெடுக்ஸ் உமக்கு பெண்களை பிடிக்காவிட்டால் அதற்கு நாமென்றும் பண்ண முடியாது, இது 21ம் நூற்றாண்டு சமத்துவமாக வாழும் காலம் உம்மை போல் சிலர் 19ம் நூற்றாண்டிலையே இருப்பதற்கு என்ன காரணமோ தெரிய வில்லை

ஒரு குழந்தையின்வளர்ச்சியில் அப்பாவின் பங்கு முக்கியம் தான் என்றாலும் அதை அம்மாவுடன் ஒப்பிட முடியாது.

அம்மாவிற்கு அடுத்த இடம் தான் அப்பாவிற்கு.

அதிலும் குழந்தை தவறொன்று செய்து விட்டால் "உன்ரரை பிள்ளை செய்த வேலையைப் பார்" என்று குழந்தையின் மீதான தங்களின் உரிமையைக் கூட விட்டுக் கொடுக்கும் அப்பா மார் அதிகம்.

ஆனால் அதே குழந்தை ஒரு சாதனை செய்துவிட்டால் "என்ரை பிள்ளை" என்று உரிமை கோர அவர்கள் தயார்.

ஆனால் தாயன்பு அப்படிப்பட்டதல்ல. உயர்ச்சியின் போதும் தாழ்ச்சியின் போதும் துணை வரும் தூய அன்பு அது.

ம்ம் சரியா சொன்னீங்கள்...... சில பேருக்கு எப்படி சொன்னாலும் புரியாது.... :lol: :P

ஆம் மாதாவுக்கு முதலிடம் கொடுக்கிறதில நமக்கு எந்த கருத்துமுரண்பாடும் இல்ல. ஆனால் அப்பாக்கு அவரின் நிலை கருதி முன்னுரிமை அளிக்கனும். அதை அம்மாமார் அனுமதிக்க முன் வரணும்...! அப்பாமாரை அதிகம் பிள்ளைகளோட இருக்க அனுமதித்தால் பிள்ளைகள் அப்பாட்டத்தான் சைட் அடிக்கிறதையும் சொல்லுங்கள்..! அம்மாமார் இயல்பா அதிகம் வீட்டோட இருப்பதால அவங்க அதிக நேரம் குழந்தைகளோட உறவாட முடியுறதால.. அம்மா - குழந்தை நெருக்கம் அப்பா - குழந்தை நெருக்கத்தை விட அதிகம் என்பதால பிள்ளைகள் அம்மாவைத் தேடி ஓடுறது இயல்பாப் போச்சு. நாங்களும் அப்படித்தான். ஆனா யோசிச்சுப் பார்த்தா அப்பாமார் மனசுக்குள்ள உள்ள வேதனையை அறிய முடியுது..! அதுதான்.. இந்த வேண்டுகோள்..! :P :lol:

நீங்கள் சொல்வது சரி தான் பட் அப்பாமார் தங்களுடைய பாசத்தை வெளிகாட்ட தயங்கி நிற்பார்கள் அம்மா அதை வெளிபடையாகா காட்டுகிறா,ஆனால் அப்பாமார் நான் தான் பெரிசு என்று முரண்டுபிடிக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு ஆனால் அப்பா சரியில்லை என்று சொல்லவில்லை அவர்கள் ஏன் அந்த பாசத்தை காட்ட மறுக்கிறார்கள்,உண்மையாக சொல்ல போனால் அவர்களுகு பாசம் இருக்குது பட் அதை காட்டமாட்டார்கள்,அப்பா எனக்கு எத்தனயோ செய்திருக்கிறார் ஆனால் அம்மாவின் மடியி படுப்பதை போல் வராது,வளர்ந்த பிறகும் நான் இரவு அம்மாவின் மடியில் தான் படுக்கிறனான் அப்பா நக்கல் அடிப்பார்,கேலி செய்வார் ஆனால் அம்மா அதனை பொறுபடுத்தமாட்டா ஏதோ தெறியவில்லை என்னிடம் கேட்டால் அம்மாவுக்கு தான் முதலிடம்

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்த வரை அம்மா = அப்பா தான் நெடுக்ஸ் உமக்கு பெண்களை பிடிக்காவிட்டால் அதற்கு நாமென்றும் பண்ண முடியாது, இது 21ம் நூற்றாண்டு சமத்துவமாக வாழும் காலம் உம்மை போல் சிலர் 19ம் நூற்றாண்டிலையே இருப்பதற்கு என்ன காரணமோ தெரிய வில்லை

அப்படிவாங்க வழிக்கு..! 21ம் நூற்றாண்டில தான் அப்பாமார் குழந்தைகளின் பிரிவால மன அழுத்தம் அதிகரித்து நோய்வாய்ப்படுறது அறிய முடிகிறது..! அம்மாக்கு முதலிடம் கொடுக்கேக்க அப்பா இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படுறார். அதாலதான் இரண்டாம் இடத்தில உள்ள அப்பாக்கு முன்னுரிமை அளிச்சு அம்மா = அப்பாவா ஆக்கியிருக்கம்..! பிரிஞ்சுக்கோங்க..! அப்பாமாரின்ர மனநிலையைப் புரிஞ்சுக்க முனையுங்க..! அதற்காக அம்மாவை கைவிடச் சொல்லேல்ல..! அப்பாக்கும் முன்னுரிமை அளியுங்க..! அவங்கள இரண்டாம் தரமாக நோக்க வேண்டாம்..!

நாங்கள் பெண்களை மனிதர்களாக எல்லாரும் போலவே மதிக்கிறம். பெண்களின் சமூக அட்டூழியங்களை மன்னிக்கிற அளவுக்கு நாம் தயார் இல்ல. அதை வெளிக்காட்டுவதால நாங்க பெண்களை வெறுக்கிறதா நீங்க 19 நூற்றாண்டு ஆக்கள் போல நினைக்கிறீங்க..! உண்மைல நாங்க 22 நூற்றாண்டை நோக்கிப் போயிட்டு இருக்கம்..! :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.