Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா? என்ன சொல்கிறார்கள் முன்னாள் போராளிகள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
இலங்கைபடத்தின் காப்புரிமை LAKRUWAN WANNIARACHCHI

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என்று, அந்த இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் 'ஜனநாயகப் போராளிகள் கட்சி'யின் ஊடகப் பேச்சாளர் கே. துளசி தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார்.

எவ்வாறாயினும், சில தனிப்பட்ட நபர்கள் தமது நலன்களுக்காக பொட்டு, அம்மான் உயிரோடு இருப்பதாகக் கூறுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆயினும், புலிகள் அமைப்பின் தலைவர் எவரும் தற்போது உயிருடன் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைபடத்தின் காப்புரிமை ISHARA S. KODIKARA

"பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக தற்போது கூறுகின்றவர்கள், எதிர் காலத்தில் தமது நலன்களுக்காக புலிகளின் ஏனைய தலைவர்களான பால்ராஜ் அல்லது கிட்டு போன்றோரைக் கூட உயிருடன் உள்ளார்கள் என்று கூறுவார்கள்" எனவும், 'ஜனநாயகப் போராளிகள் கட்சி'யின் ஊடகப் பேச்சாளர் துளசி கூறினார்.

மேலும், புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் எவரும் உயிருடன் இல்லை என்பது, அவர்களுடன் முள்ளிவாய்க்காலில் இணைந்து நின்று போராடிய, இப்போதைய புனர்வாழ்வு பெற்றுள்ள முன்னாள் போரளிகளுக்கே தெரியும் எனவும், புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களின் கட்சியினுடைய ஊடகப் பேச்சாளர் கே. துளசி தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் உள்ளானர் என்றும், அவர் நோர்வேயில் வசித்து வருவதாகவும் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த, அந்த அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சிங்களப் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்திருந்த நிலையிலேயே, 'ஜனநாயகப் போராளிகள் கட்சி'யின் ஊடகப் பேச்சாளர் துளசி மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-46423840

Edited by பிழம்பு

நீர் சொல்வது உண்மையா யாருக்கு தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

இனி மேல் யாரும் இருந்தாலும் வரவும் கூடாது அது தான் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு நல்லது இருவர் சுட்டுக்கொல்ப்பட்டதற்கு மட்டக்களப்பு எப்படி சோதனை (வாகனங்கள் , போகும் பயணிகள்) என்பது நான் கண்டது  இது எங்களுக்கு பழகிப்போன ஒன்று இளையவர்கள் பாவம் அவர்களுக்கு கொஞ்சம் கடுப்பாகும் தான் 

  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளை பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறார் எனும் செய்தி புலம்பெயர் தேசத்தில் சிலருக்குச் சந்தோசமாகவும் பலருக்கு உதறலாகவும் இருக்கும் சந்தோசமாக இருப்பவர்கள் ஆகா புலத்தில் வானவேடிக்கை நடக்கப்போகுது எனவும் உதறல் கொள்பவர்கள் அடிச்ச காசு பணம் புலிகளது சொத்து இவைகளில் கைவைக்கப்பொகினம் எனவும் இருப்பார்கள்.

சந்தோசப்படுபவர்கள் ஒரு விடையத்தில் ஆயத்தமாக இருக்கவும் அங்கை இனிமேல் யாரோ பெத்த பிள்ளைகளை போர்க்களத்துக்கு அனுப்பமுடியாது ஆகவே உங்களது மகள் மகன் பேரப்பிள்ளைகளை நாட்டுக்கு அனுப்பி போராட ஆயத்தமாகுங்கோ ஒரு டீல் வைப்பம் புலம்பெயர் தேசத்தில் ஐந்துபேரை அனுப்பினால தாயகத்தில் ஒருவர் எனும் விகிதாசத்தில் போராட்டத்துக்கு ஆக்களை அனுப்புவம் டீல் ஓகேயா நண்பர்களே.

பொட்டம்மான் இருந்தால் ஒரு நல்ல வேலை செய்யலாம் புலம்பெயர் தேசங்களில் ஊர்ப்பணத்தைக் கொள்ளையடிச்சவர்களைக் கண்டுபிடித்து அவர்களது கோவணத்துண்டு முதற்கொண்டு உருவவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

அதெப்படி சாத்தியமாகும்.நாங்கள் எமது பிள்ளைகளை யுனிக்கு அனுப்புவதில் குறியாக இருக்கிறம்.அப்படி அவர்கள் மேலை மேலை போனால் சமுகவலைத்தளங்களிலில் பிரசுரித்து மகிழுவம்.எங்கடை தேசியப்பற்றை கேலி செய்யக் குடாது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.