Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பானது இனரீதியின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே பாதகமான விளைவுகள் எதுவும் ஏற்படும் முன்னர் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

sampanthan2.jpg

இது தொடர்பாக சம்பந்தன் அவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பிற்கான போட்டிப் பரீட்சை கடந்த ஜூலை 14 ஆம் திகதியன்று இடம்பெற்றிருந்தது.

அதன்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டு பரீட்சை நடத்தப்பட்ட போது, இனரீதியிலான அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறும் என்பதற்கான எந்தவொரு பிரத்தியேக பிரிவுகளும் கொடுக்கப்படவில்லை.எல்லா விண்ணப்பதாரிகளும் சமமாக நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் தற்போது கிழக்கு மாகாண சபையின் சில நிர்வாக உத்தியோகத்தர்களினால் ஆட்சேர்ப்பிற்கான வெட்டுப்புள்ளிகள் இனரீதியிலான அடிப்படையில் பின்வருமாறு அமையும் என ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. (சிங்களவர் 105, முஸ்லிம்கள் 120, தமிழர்கள் 130) 

ஆட்சேர்ப்பு தொடர்பில் இப்படியான ஒரு நடைமுறை முன்னர் எப்போதும் பின்பற்றப்படவில்லை என்பதோடு, இது அப்பட்டமான ஒரு பாகுபாடு காட்டும் அநீதியான செயலாகும். எந்த அடிப்படையில் இப்படியான ஒரு தீர்மானத்தினை உத்தியோகத்தர்கள் எடுத்தார்கள் என்பதனை விளங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த நடவடிக்கையானது கிழக்கு மாகாணத்தில் தனிப் பெரும்பான்மை சமூகமான தமிழ் மக்களுக்கு குறிப்பிடத்தக்க பாதக விளைவுகளை உருவாக்கும்

அண்மைக்காலங்களில் கல்வி விடயங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட சமூகம் தமிழ் சமூகமாகும். 30 வருடங்கள் நிலைத்த ஆயுத போராட்டமானது,வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் பிரதேசங்களிலேயே இடம்பெற்றது, இதன் நிமித்தம் தமிழ் பாடசாலைகள் தேவையான ஆசிரியர்களும் ஏனைய சலுகைகளும் இன்றி இயங்காத நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் இந்த பிரதேசங்கள் கல்வியில் பின்னோக்கி நகர நேர்ந்தது. இந்த பின்னணியில், 3 ஆம் பந்தியில் குறிப்பிட்டுள்ளவாறு எவ்வாறு வெட்டுப்புள்ளிகள் முடிவு செய்யப்பட்டது என்பதனை விளங்கிக்கொள்ள முடியவில்லை.

எனவே அனைத்து விண்ணப்பதாரிகளும் சமமாக நடாத்தப்படுவதையும் இன அடிப்படியில் எந்தவொரு பாகுபாடும் காட்டப்படாமல் இருப்பதனையும் நீதி நிலைநாட்டப்படுவதனையும் உறுதி செய்யும் முகமாக உரிய திருத்த நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என நான் மிக வினயமாக கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/46119

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பிழம்பு said:

கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பானது இனரீதியின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே பாதகமான விளைவுகள் எதுவும் ஏற்படும் முன்னர் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

ஆகா ஐயாவும் வெருட்டுறாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது சிறிலங்காவில் எதற்கு எடுத்தாலும் அரசியல்வாதிகள் உயர்நீதிமன்றில் இடைக்கால தடையுத்தரவு  வாங்கிவிடுகிறார்கள்.
இதற்கும் ஐயாவிடம் சொல்லி கைகாவலுக்கு இடைக்கால தடையுத்தரவு  ஒன்று வாங்கி வைக்கவேண்டும்.
யாரும் அசைச்சுக்கேலாது ஆமா !

  • கருத்துக்கள உறவுகள்

கடிதம் மட்டும் தான் எழுதுவார் ஐயா பாவம் தமிழ் ஆட்கள் :grin:

முகாமைத்துவ உதவியாளர்கள் (கிழக்கு மாகாணம்) வழக்கு - CA W 27/2014  
கிழக்கு மாகாணத்தில் முகாமைத்துவ உதவியாளர்களுக்கான பதவிக்கு விண்ணப்பித்த மனுதாரர்களுக்கு, அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்த தமிழர்களையும் பதவிக்கு நியமனம் செய்யாத நிலையில் அரசாங்கத்தின் கோட்பாட்டு கொள்கை காரணமாக கருதப்படவில்லை. பின்னர், அரசு மனுதாரர்களுக்கு நியமனங்களை வழங்க ஒப்புக்கொண்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.