Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காற்று மாசடைவதை சுத்தப்படுத்தும் புதிய தாவரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காற்று மாசடைவதை சுத்தப்படுத்தும் புதிய தாவரம்

Researchers-develop-a-new-houseplant-that-can-clean-your.jpg

வீட்டில் காற்று மாசடைவதை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

காற்றில் ஏற்படும் மாசு சுற்றுச்சூழலை மட்டுமின்றி வீட்டையும் பாதிக்கிறது. வீட்டிற்குள் உருவாகும் குலோரோபாம், பென்சீன் போன்ற இரசாயன வாயுக்களால் புற்றுநோய், இருதய நோய்கள் ஏற்படுகின்றன.

இந்தநிலையில் அவற்றை தடுக்க அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய தாவரத்தை உருவாக்கியுள்ளனர்.

‘போதோஸ் ஐவி’ எனப்படும் தாவரம் மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதை வீட்டிற்குள் வளர்க்க முடியும். அந்த தாவரங்களின் இலை அதிக அகலம் உடையது. இது ‘பி 450 2இ1 அல்லது 2இ1’ எனப்படும் புரோட்டீனை வெளிப்படுத்துவதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்மூலம் வீட்டிற்குள் வெளியாகும் நச்சு வாயுக்களை நீக்கி அறையின் சுற்றுச்சூழலை மாசடைவிலிருந்து தடுப்பதாகவும் அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

http://athavannews.com/காற்று-மாசை-சுத்தப்படுத்/

  • கருத்துக்கள உறவுகள்

சித்தவைத்தியம், நாட்டுவைத்தியம், ஆயுர்வேதம் என்று அவற்றுக்கான, தமிழர்கள் கண்டுபிடித்த மருந்துகளை உட்கொள்வோருக்கு பக்க விளைவுகள் என்று எவையும் ஏற்படுவதில்லை. ஆனால் மேல்நாட்டுக் கண்டுபிடிப்புகளால் வெளிவரும் அத்தனை நோய் நிவாரனிகளுக்கும் பக்கவிளைவுகளும் உண்டு.

இந்தத் தாவரம் காற்றைச் சுத்தப்படுத்தலாம் மேற்கொண்டு என்னாகுமோ......??:rolleyes::shocked:  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, கிருபன் said:

வீட்டில் காற்று மாசடைவதை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

காற்றில் ஏற்படும் மாசு சுற்றுச்சூழலை மட்டுமின்றி வீட்டையும் பாதிக்கிறது. வீட்டிற்குள் உருவாகும் குலோரோபாம், பென்சீன் போன்ற இரசாயன வாயுக்களால் புற்றுநோய், இருதய நோய்கள் ஏற்படுகின்றன.

கண்ட கண்ட களிசறைகளை கண்டு புடிச்சு உலகத்தையே நாசமாக்கிப்போட்டு......
இப்ப சுத்தம் சுகாதாரத்துக்கு மரத்தையே கண்டு புடிச்சிட்டாங்களாமெல்லே....tw_tounge_xd:

இயற்கை தந்த மரங்களை அழியாமல் பாதுகாக்கிற வேலையை பாருங்கப்பா......அதுவே போதும்.....:(
இருக்கிற காடுகளை அழிச்சுப்போட்டு...... மரங்கள் கண்டு புடிக்கிறாங்களாம்.....காமெடியாய் இல்லை????

  • கருத்துக்கள உறவுகள்
On 12/21/2018 at 10:04 PM, Paanch said:

சித்தவைத்தியம், நாட்டுவைத்தியம், ஆயுர்வேதம் என்று அவற்றுக்கான, தமிழர்கள் கண்டுபிடித்த மருந்துகளை உட்கொள்வோருக்கு பக்க விளைவுகள் என்று எவையும் ஏற்படுவதில்லை. ஆனால் மேல்நாட்டுக் கண்டுபிடிப்புகளால் வெளிவரும் அத்தனை நோய் நிவாரனிகளுக்கும் பக்கவிளைவுகளும் உண்டு.

இந்தத் தாவரம் காற்றைச் சுத்தப்படுத்தலாம் மேற்கொண்டு என்னாகுமோ......??:rolleyes::shocked:  

இலங்கையில் இப்படி மரங்கள் விற்க ஆரம்பித்து விட்டார்கள் பெயர்தான் மணி பிளான்ற் (Money Plant)  வீட்டிற்ற்குள் வைத்தால் காசு கொட்டுமாம் என ஆனால் இலைதான் கொட்டுகிறது  ஆனால் பலரின் வீட்டுக்குள் நுழைந்து விட்டது தற்போது மரங்கள்

அதில் ஒன்றுதான் இப்படி அழகாக பின்னல் செய்யப்பட்ட மரம் ஒன்று ( அழகுதான்)

lfplants005-2.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் பலர் “மணி பிளான்ற்” என்று அழகுக்காக வீட்டினுள் வளர்க்கின்றார்கள்தான். ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகள் இந்த தாவரத்திற்கு முயலின் ஜீன் ஒன்றை செலுத்தி காற்றை சுத்தப்படுத்த வைத்துள்ளனராம்!

Rabbit gene turns houseplant into air detoxifier

(CNN) — Humble houseplants have long been known to bring benefits that go way beyond brightening a room, and now researchers have given their powers an extra boost, turning a popular species of climber into an air purifier. 

A team of scientists at the University of Washington in the United States made the golden pothos (Epipremnum aureum) remove toxic gases from the air by inserting a rabbit gene called CYP2E1 into its DNA.

The air breathed in homes usually contains more harmful compounds than office or school air, according to the study. 

"This is the first houseplant that has been transformed to break down toxic compounds in the home," study author Stuart Strand told CNN via telephone.

This gene, which is present in all mammals, makes an enzyme called cytochrome P450 2E1 that breaks down a number of volatile organic compounds (VOCs), many of which are toxicThe enzyme also metabolizes alcohol in the human liver.

https://edition-m.cnn.com/2018/12/21/health/pothos-toxic-gases-scli-intl/index.html?r=https%3A%2F%2Fwww.google.co.uk%2F

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

தமிழர்கள் பலர் “மணி பிளான்ற்” என்று அழகுக்காக வீட்டினுள் வளர்க்கின்றார்கள்தான். ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகள் இந்த தாவரத்திற்கு முயலின் ஜீன் ஒன்றை செலுத்தி காற்றை சுத்தப்படுத்த வைத்துள்ளனராம்!

கிருபன் இதை இங்கு காசு கொடுத்து வாங்க நுவரெலியாவில் இருந்து வந்த நண்பனின் மனைவி சொல்கிறா அங்கே சும்மா படர்ந்திருக்கின்ற  புல் எனவும் .வளர்திருக்கின்ற தாவரமாம் என 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கிருபன் இதை இங்கு காசு கொடுத்து வாங்க நுவரெலியாவில் இருந்து வந்த நண்பனின் மனைவி சொல்கிறா அங்கே சும்மா படர்ந்திருக்கின்ற  புல் எனவும் .வளர்திருக்கின்ற தாவரமாம் என 

காசு கொடுத்து வாங்குவதை விட ஒரு “ஓடியை” வெட்டி  புதிதாக உண்டுபண்ணலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

காசு கொடுத்து வாங்குவதை விட ஒரு “ஓடியை” வெட்டி  புதிதாக உண்டுபண்ணலாம்!

அந்த ஒடி மற்றும் தாவரம் கிழக்கில் வடக்கில் இல்லையென நான் நினைக்கிறன்  வாங்கி வைத்தால் தான் உண்டு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.