Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவால்களை தாண்டி தலைநகரில் அரசியல்பணி தொடரும் – சண். குகவரதன் சபதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சவால்களை தாண்டி தலைநகரில் அரசியல்பணி தொடரும் – சண். குகவரதன் சபதம்!

வர்த்தக முரண்பாடுளை அரசியல் பழிவாங்கலுக்கான காரணமாக பயன்படுத்தி தன்மீது சேறுபூசியவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் மக்கள் ஜனநாயக ரீதியாக பதில் அளிப்பார்கள் என்றும் எத்தகைய சவால்கள் ஏற்படுத்தப்பட்டாலும் தலைநகரில் தன்னுடைய அரசியல் பணி தொடரும் என்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் குற்றப் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் விளக்கமளிக்கும்  நோக்கில் கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைமையோடு  ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இருந்து தனித்துவமாக செயற்பட்டு வந்தமையினால் தன்னுடைய வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், நீண்ட காலமாக வர்த்தக முதலீட்டாளராக தன்னுடன் இணைந்து  செயற்பட்டுவந்த திரு. சற்குணநாதன் என்கின்ற லண்டன் வாசிக்கும் தனக்கும் இடையில் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் முரண்பாட்டை சாதகமாக பயன்படுத்தி தன்மீது அவதுாறு பிரசாரம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலை தொடர்ந்து கொழும்பு மாநகர சபைக்கு கட்சி தீர்மானத்திற்கு மாறாக தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் உறுப்பினர்களை நியமித்தமை, வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை வலுவிழக்கச் செய்யும் செயற்பாடுகளை மேற்கொண்டமை மற்றும் கட்சி வளர்ச்சிக்கு ஆரோக்கியமற்றவர்களை கட்சிக்குள் உள்வாங்கியமை உட்பட  பல்வேறு தீர்மானங்களுக்கு எதிராக கட்சிக்குள் குரல் கொடுத்தமையே  கட்சி தலைமைக்கும் தனக்கம் முரண்பாடு ஏற்படக் காரணம் எனவும் சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்கால அரசியல் கட்சி தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த குகவரதன், தனிக் கட்சி ஆரம்பிக்க வேண்டிய தேவையிருப்பதாக தான் உணரவில்லை எனவும், ஏற்கனவே பல்வேறு கட்சிகளில் இருந்தும் அழைப்பு வந்து கொண்டிருப்பதால் எந்தக் கட்சியின் ஊடாக பயணிப்பது என்பது தொடர்பில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் விரைவில் அதுதொடர்பில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

https://athavannews.com/ஜனநாயக-மக்கள்-முன்னணியுட/

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ  மனோவோட பிரச்சனை போல கதை விடுறார்.

யோவ், நீதிமன்றம் விசாரித்து, பிழை எண்ட படியால் தானே பிணையில் விட்டிருக்குது....

கொடுத்த 7.2 கோடி காசோலைக்கு வங்கியில் பணம் இல்லை என்று திரும்பி இருக்கிறது.

அந்த பணத்தை கொடுத்து, காசோலையை வாங்கி விசயத்தை  முடிக்க முடியாததால், கைதாகி, பிணையில் விடுதலை ஆகி இருக்கிறார்.

பிறகென்ன பீலா....?

http://www.dailymirror.lk/article/Councillor-Kuhavardhan-hits-out-at-Mano-160630.html

இதில ஒரு பின்னூட்டம்:

மோசடிக் குற்றம் சுமத்தப்பட்டவர்கள், அந்த மோசடியை பற்றி  தான் பேசவேண்டும்..... அதைவிட்டு அரசியலை அல்ல... 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.விதுஷா)

தனது தனிப்பட்ட  வர்த்தக பரிவர்த்தனையை தனக்கு எதிராக அரசியல் சூழ்ச்சியை செய்வதற்கு  கொழும்பு மாவட்ட  தமிழ் அரசியல் வாதியொருவர்  பயன்படுத்தியிருப்பதாக மேல்மாகாணசபை உறுப்பினர் சண்முகனாதன் குகவரதன்  குற்றஞ்சாட்டினார்.  

san.jpg

கொழும்பு தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக தலைநகரில்  புதியதொரு தலைமை உருவாகின்றது என்ற அச்சத்தில்  ஜனநாயகத்தை குழிதோண்டிப்புதைக்கும் செயற்பாடுகளில்  இறங்கியிருப்பதாகவும்  தெரிவித்தார். 

கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள  ஹெட்டலொன்றில்  இன்று வியாழக்கிழமை காலை  இடம் பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போது தனக்கு எதிராக  மேற்கொள்ளப்படுகின்ற  அவதூறுகள் குறித்தும்   அரசியல் நாடகங்கள் குறித்தும்  விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

குகவரதன்  மேலும்  குறிப்பிடுகையில் ,

குற்றப்புலனாய்வுப்பிரிவினர்   ஒருவரை  கைது செய்து  அழைத்துச்சென்றவுடன்   அவர் குற்றவாளி என்ற நீதிமன்றத்தீர்ப்பிற்கு  முன்னர் எவ்வாறு குறித்த கொழும்பு மாவட்ட  தமிழ் அரசியல் வாதி தனது  முகதூலிலும் , ஊடக அறிக்கைகளிலும் குறுஞ் செய்தியாகவும் என்னை  மோசடி செய்தவன்  என்று கட்சி நடவடிக்கைகளிலிருந்து இடைநிறுத்துவதாகவும்  எப்படி அறிவித்தார்? இதிலிருந்து  இது முற்று முழுதாக  எனக்கு சேறு பூசும்  அல்லது பழிவாங்கும்  திட்டமிட்ட  அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்  என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் . 

அத்துடன், நான்   நீண்டகாலமாக  கட்சியின் உறுப்பினராகவிருந்து  2011 ,  2014, 2015 மற்றும் 2018 ம் ஆண்டுகளில்   முறையே மாநகரசபை ,  மாகாணசபை  , பாராளுமன்ற தேர்தல்களில்  கடந்த 15 வருடங்களாக செய்து வந்த  வர்த்தக நடவடிக்கையால் சேர்ந்த எனது சொந்தப்பணத்தைக்கட்சிக்கு செலவளித்துள்ளேன். 

அப்படி செலவளிக்கும் போது  அல்லது என்னில் பயன்பட்ட போது  தேவைப்பட்ட நான்  இன்று  அவருக்கு பணரீதியாக பயன்படமாட்டேன்  என்பதற்காகவும்  சடுதியதான எனது மக்கள் செல்லாக்கை பொறுத்துக்கொள்ள முடியாமலும் என்னை வெளியேற்றுவதற்கான  காரணங்களை தேடியழைத்து  காரணம் எதுவும் கிடைக்காத பட்சத்தில்    தனிப்பட்ட கொடுக்கல்வாங்கலை திட்டமிட்டு பழிவாங்கியுள்ளார்  என்பதை நாட்டுமக்கள் நன்கு அறிவார்கள்  .  

http://www.virakesari.lk/article/47454

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.