Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வசித்து வருடத்தில் பலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வசித்து வருடத்தில் பலன்

புத்தாண்டு ராசிபலன்கள்.

எமது தமிழ் பாரம்பரிய கலாசாரத்தின் வழிகாட்டியாக அமைவது சமயமும் ஜோதிடமும். மேடம் முதல் மீனம் வரையான பன்னிரு ராசிகளுமே பன்னிரு மாதங்களாக எமது மூதாதையர் வகுத்தனர். முதல் ராசியில் சூரியபகவான் சஞ்சரிக்கும் காலமே எமது முதல் மாதமாகவும், வருஷமாகவும் அமைகின்றது. அந்த வகையில் யாழ்ப்பாண இரகுநாத ஐயர் வாக்கிய பஞ்சாங்கப்படி எமது அறுபது வருடச் சுற்றின் 21 ஆவது வருஷமாகிய சர்வசித்து வருஷம் 14.04.2007 சனிக்கிழமை அபரபட்ஷ துவாதசித்திதி, சதயம் நட்க்ஷதிரம், சுப்பிரநாம யோகம், கவுலவ கரணம், மிதுனலக்னம், மகர நவாம்ஸம், சுக்கிரகாலவோரை, சூக்சூமவோரை தாமத குணவேளை, சேர்ந்த காலை 10 மணி 42 நிமிட நேரமளவில் மலர்கின்றது. விஷú புண்ணியகாலம் காலை 6.42 முதல் பிற்பகல் 2.42 வரை.

* இப்புண்ணிய காலத்தில் யாவரும் சங்கற்பித்து மருத்து நீர்தேய்த்து, சிரசில் கொன்றமிலையும் காலில் ஆலிலையும் வைத்து ஸ்நானம் செய்து, கரும் நீலம் அல்லது புகை நிறமுள்ள பட்டாடை அணிந்து, மரகதம், பவளம் இழைத்த பொன் ஆபரணம் அணிந்து சுகந்த சந்தனம் பூசி, நறுமலர் சூடி, விநாயகர் முதலிய குலதெய்வ வழிபாடு செய்து, சூரியனுக்கு பொங்கல் பூசைகள் செய்து குரு, பெற்றோர் முதலிய பெரியோரை வணங்கி அவர்களின் ஆசி பெற்று அறுசுவை உணவருந்தி புதிய வருஷ பலாபலன்களை வாசித்தும் ஐவகை சிறப்புகளும் பெற்றோங்கி நெடிது வாழ இறையை பிரார்த்திப்போமாக.

மேஷராசி இடபராசி மிதுன ராசி கடகராசி சிம்மராசி கன்னி ராசி

துலாம் ராசி விருச்சிக ராசி தனுசு ராசி மகரராசி கும்பராசி மீனராசி

--------------------------------------------------------------------------------

மேஷராசி

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் நட்க்ஷத்திரங்கள்)

மேன்மையான குண இயல்புகளைக் கொண்ட மேஷராசி அன்பர்களே! எந்த விடயத்தையும் சீராகவும் சிறப்பாகவும் செய்ய வேண்டும் என்கின்ற குண இயல்பும், எல்லோருக்கும் உதவி செய்கின்ற நல்ல பரோவுபகார சிந்தனையும் கொண்ட உங்களுக்கு இந்த சர்வசித்து வருஷம் எப்படி அமையப் போகின்றது என்கின்ற ஆவல் இருக்கும்.

இந்த வருஷத்தின் முற்பகுதியில் பெரும் நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை சுகஸ்த்தானமாகிய நான்காம் இடம் சனி பகவானின் சஞ்சாரம், 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அட்டமத்து குருவின் சஞ்சாரம் என அமைவது எந்த விடயம் எடுத்தாலும் சற்று இழுபறி தாமத நிலைகள் இருக்கும். முக்கியமாக தொழிலில் பிரச்சினைகள், வேலைப்பளு, வேலை நீக்கம், பண வரவில் சிரமங்கள் போன்ற பலாபலன்களுக்கு இடமுண்டு. குடும்ப ரீதியில் எதிர்பாராத வகை செலவீனங்கள், உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் போன்ற பலாபலன்கள் அமைகின்ற நிலை உண்டு. திருமணம் போன்ற சுபகாரியங்களை எதிர்கொள்வோர்க்கு இழுபறி, தாமத நிலைகள் தொடரலாம். திடீ

ர் உடல் நிலை சுகயீனங்கள், மருத்துவ செலவீனம் போன்ற நிலைகளுக்கும் இடமுண்டு. எனவே, நீங்கள் உண்டு உங்கள் வேலையுண்டு என இருப்பது மிக மிக நன்மை தரும். 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடுப் பகுதியின் மேலே குருவின் சஞ்சாரம், பாக்கியஸ்தானமாகிய 9 ஆம் இடம் அமைவது மிகவும் சிறப்பான யோகமான நற் பலாபலன்களை கொடுக்கும். அதன் பின்னர் எடுக்கின்ற எந்த முயற்சி என்றாலும் மிகவும் நேர்த்தியாகவும், வெற்றியாகவும் அமையும். அட்டம குரு சஞ்சார காலம் குருவிற்கு வியாழன் தோறும் கடலை மாலை அணிவித்து மஞ்சள் பூவால் அர்ச்சனை செய்யவும். சனீஸ்வரனுக்கும் எண்ணெய்த் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது உத்தமம்.

--------------------------------------------------------------------------------

இடபராசி

(கார்த்திகை 2 ஆம், 3 ஆம், பாதம்,ரோணிகி, மிருகசீரிடம், 1ஆம், 2ஆம் பாதம்)

இதய சுத்தியோடு செயற்படுகின்ற இடபராசி அன்பர்களே! மனதில் பலவித கற்பனைகளை கொண்டு அதன்படியே வாழ்க்கை அமைக்க போராடும் குணமும், உள்ளதை அறிய முடியாத செயற்பாடும் கொண்ட உங்களுக்கு இந்த சர்வசித்து வருஷம் எப்படி இருக்கும் என்ற எண்ணம் மேலோங்கும். இந்த வருஷம் ஓரளவிற்கு அனுகூலமான நல்ல பலாபலன்களை கொடுக்கின்ற நிலை இருக்கும். குருபகவானின் சஞ்சாரம் களத்திரஸ்தானமாகிய 7 ஆம் இடம் அமைகின்றது. சனி பகவான் சஞ்சாரம் ஜெயஸ்த்தானமாகிய 3 ஆம் இடம் அமைகின்றது.

எனவே, நன்மைகள் அமைய இடமுண்டு. திருமணம் போன்ற விடயம் எதிர்பார்ப்பவர்களுக்கு அந்த பலாபலன்கள் சிறப்பாக அமையக் கூடிய நிலை உண்டு. குடும்பத்தில் நல்ல மகிழ்வும், திடீர் நன்மைகளும் அமையும். தொழில் ரீதியில் எதிர்பார்க்கின்ற நன்மைகளும் அமையும் சூழல் உண்டு. 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சனி பகவானின் சஞ்சாரம், சுகஸ்த்தானமாகிய 4 ஆம் இடம் அமைவது அதன் பின்னர் சிறு சிறு பிரச்சினைகள், எடுக்கும் முயற்சிகளில் தாமத இழுபறி நிலைகள் போன்ற பலாபலன்கள் அமைய இடமுண்டு.

உடல் நிலையிலும் சுகயீனம், மருத்துவ செலவுகள் என்பன அமையும் நிலைகள் உண்டு. 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாத நடுப் பகுதியின் மேல் குருவின் சஞ்சாரம் அட்டமஸ்த்தானமாகிய 8 ஆம் இடம் அமைவது அதன் பின் எந்த விடயமாக இருந்தாலும் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். தேவையற்ற வீண் பிரச்சினைகள் உங்களைத் தேடி வருகின்ற நிலை இருக்கும். அதற்கு ஏற்ப செயற்பாடு கொள்ள வேண்டும். எனவே, சர்வசித்து வருஷத்தின் முற்பகுதி மிகவும் சிறப்பான அனுகூலமான பலாபலன்களை கொடுக்கும். புதிய முயற்சிகளில் தாராளமாக ஈடுபாடு கொள்ளலாம். பிற்பகுதியில் சனீஸ்வரன், குருபகவான் வழிபாடு மேற்கொண்டு வருவது உத்தமம். அனுகூலமான காலங்களில் அதற்குரிய நல்ல முயற்சிகளை மேற்கொண்டும், சுமாரான காலங்களில் அதற்கு ஏற்ப செயல் கொண்டும் வெற்றி காணலாம்.

--------------------------------------------------------------------------------

மிதுன ராசி

(மிருகசீரிடம் 2 ஆம், 3 ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 ஆம் பாதம்)

மிடுக்கான மன நிலையுடைய மிதுனராசி அன்பர்களே, எந்த விடயமாக இருந்தாலும் உங்களுக்கு உள்ளேயே வைத்து தீர்வை காண்கின்ற குணமும், தன் காரிய செயற் திறனும் கொண்ட உங்களுக்கு இந்த சர்வசித்து வருஷத்திலே ஏழரைச் சனி சஞ்சார கடைக்கூறு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ரோகஸ்த்தானமாகிய 6 ஆம் இடம் குருபகவான் சஞ்சாரம் அமைகின்றது.

இரண்டு நிலைகளும் உங்களுக்கு நன்மை தருவதாக இல்லை. முக்கியமாக 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையுள்ள காலப் பகுதி மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். எடுக்கின்ற முயற்சிகளில் தடை தாமத நிலைகள் தொடரும். எதிர்பாராத வகையிலே திடீர் செலவுகள் ஏற்படும். உடல் நிலையில் சுகயீனங்களும், மருத்துவ செலவுகளும் தொடரும். கடன் பிரச்சினைகளிலே பலவித சிக்கல் நிலைகள் ஏற்படுகின்ற நிலையுண்டு. எனவே, எந்த விடயம் என்றாலும் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டிய நிலை உண்டு.

2007 ஆகஸ்ட் மாதத்துடன் ஏழரைச் சனி சஞ்சாரம் நிறைவு பெறுகின்றது. அதன் பின்னர் ஓரளவிற்கு அனுகூலமான பலன்கள் அமையும். இருப்பினும் 2007 நவம்பர் மாதம் வரை 6 ஆம் இடம் குருபகவான் சஞ்சாரம் அமைவது எதிர்பாராத வகையிலே திடீர் பிரச்சினைகள் ஏற்படுகின்ற நிலை உண்டு. பொதுவாக தொழில் ரீதியில் இந்த வருஷம் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். மேலதிகாரிகளினால் பிரச்சினைகள், வேலைப் பளு, இடமாற்றம் போன்ற நிலைகள் ஏற்படலாம். 2007 நவம்பர் மாதத்தின் பின்னர் அனுகூலமான பலாபலன்களுக்கு இடமுண்டு. அதன் பின்னர் எடுக்கின்ற முயற்சிகளிலும் நல்ல வெற்றிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளும் சாதகமான நிலையைக் கொடுக்கும். எனவே, முற்பகுதியிலே சிரமங்களும் பிற்பகுதியிலே நன்மைகளும் அமைகின்ற நிலை இந்த வருஷம் உங்களுக்கு தருகின்றது.

--------------------------------------------------------------------------------

கடகராசி

(புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம்)

கஷ்டங்கள், கவலைகள் பற்றி சிந்திக்காத கலகலப்பான கடகராசி அன்பர்களே! எல்லோருக்கும் உதவ வேண்டும் என்கின்ற நல்ல சிந்தனையும் எல்லோருடனும் நட்புடன் பழகுகின்ற குண இயல்பும் கொண்ட உங்களுக்கு சர்வசித்து வருஷம் அனுகூலமானதாகவே அமையும். ஏழரைச் சனியின் நடுக்கூற்று சஞ்சாரம் நிறைவு பெற்று கடைக் கூற்று சஞ்சாரம் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கின்றது. பொதுவாக ஏழரைச் சனியின் நிறைவு காலம் நன்மைகளை அதிகம் செய்யும் என்பது விதி. அத்தோடு பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய 5 ஆம் இடம் குருபகவான் சஞ்சாரம் அமைகின்றது. 2007 ஆம் ஆண்டு வரை குருவின் சஞ்சாரம் பலவிதத்திலும் சிறப்புகள் தரக் கூடியதாய் அமையும். தொழில் ரீதியில் முன்னேற்றங்கள் இருக்கும். புதிய முயற்சிகள், புதிய பதவிகள் என்பன அமையும். சமூகத்தில் கௌரவமும், பொது சேவையில் சாதனைகளும் செய்யக் கூடிய நிலைகள் உண்டு. மனதில் நினைக்கின்ற சில விடயங்களை செயல் வடிவமாக மாற்றக் கூடிய பலன் உண்டு. 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் பின் குரு பகவானின் சஞ்சாரம் ரோகஸ்த்தானமாகிய 6 ஆம் இடம் அமைவது சற்று சிரமங்கள், பிரச்சினைகள், எடுக்கும் முயற்சிகளிலே இழுபறி தாமத நிலைகள், எதிர்பாராத வகை திடீர் செலவுகள் என்பன இடையிடையே ஏற்பட்டு மறையும் பலன் உண்டு. எனவே, ஆண்டின் முற்பகுதியிலே மிகவும் சிறப்பான யோகமான பலாபலன்களும் ஆண்டின் பிற்பகுதியிலே சற்று சுமாரான மத்திமமான பலாபலன்களும் அமையும் நிலைகள் உண்டு.

--------------------------------------------------------------------------------

சிம்மராசி

(மகம், பூரம், உத்தரம் 1 ஆம் பாதம்)

சீரிய நோக்கும், சிந்தனையில் சுயநலமும் கொண்ட சிம்மராசி அன்பர்களே! விடயங்களிலே நிதானமான செயற்றிறனும் எதிர்காலத்தை வளமாக்கும் ஆற்றலும் தன் நலனுக்காக எதையும் செய்யத் தயங்காத மன வலிமையும் கொண்ட உங்களுக்கு இந்த சர்வசித்து வருடம் சற்று சுமாரானதாகவே அமைகின்ற நிலை உண்டு. 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையான காலம். ஏழரைச் சனியின் முதற்கூறு நடைபெறுகின்றது. அத்தோடு குருவின் சஞ்சாரம் சுகஸ்த்தானமாகிய 4 ஆம் இடம் அமைகின்றது. ஜென்ம கேது சஞ்சாரம் அமைகின்றது. எனவே பல வகையிலும் சற்று சிரமங்கள், சிக்கல் நிலைகள் ஏற்பட்டு மறைகின்ற நிலை உண்டு. எடுக்கின்ற முயற்சிகளில் நிதானமான செயற்பாடு வேண்டும். தொழில் ரீதியில் தேவையற்ற வீண், பிரச்சினைகள், வேலைப்பளு, அலைச்சல், மேலதிகாரியுடன் மனக்கசப்பு போன்ற பலாபலன்கள் அமையும் நிலை உண்டு. எதிர்பாராத வகையில் உடல் நிலையில் திடீர் சுகயீனங்களும் மருத்துவ செலவுகளும் அமையும் பலன் உண்டு. குடும்பத்தில் ஓரளவிற்கு அனுகூலமான பலாபலன்கள் அமையும் நிலையுண்டு. இருப்பினும் இடையிடையே சிறு சிறு மந்தநிலைகள் இருக்கும். 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் மேல் ஏழரைச் சனியின் நடுக்கூற்று சஞ்சாரம் ஆரம்பம். நவம்பர் மாதத்தின் மேல் குருவின் சஞ்சாரம், பஞ்சமஸ்த்தானமாகிய 5 ஆம் இடம் அமைவது ஓரளவிற்கு அனுகூலமான நற்பலாபலன்கள் அதன் பின் அமையும். தொழில் ரீதியில் எதிர்பாராத வகை நன்மைகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றிகள் ஏற்படுகின்ற நிலை உண்டு. பண வரவும் சுபகாரிய அனுகூலங்களும் அமைய இடமுண்டு. இருப்பினும் ஏழரைச் சனி சஞ்சாரத்தின் பலன்கள் இடையிடையே சற்று சிரமங்கள் கொடுக்கும். சனீஸ்வர வழிபாடு மிகவும் நல்லது.

--------------------------------------------------------------------------------

கன்னி ராசி

(உத்தரம் 2, 3, 4 ஆம் பாதம், அத்தம்,

சித்திரை 1, 2 பாதம்)

கண்ணியமான குண இயல்பும், கனிந்து பேசும் பண்பும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே! வாழ்க்கையில் பொறுமையை மிகவும் சிறப்பாகக் கையாண்டு விடயங்களை சாதிக்கக் கூடிய ஆற்றலும் மிகுந்த எதிர்பார்ப்பு, கற்பனைகளை கொண்டு செயலாற்றும் உங்களுக்கு சர்வசித்து வருஷம் சற்று சுமாரானதாகவே இருக்கும். 2007 ஆம் ஆண்டு நவம்பர் வரையான காலம் ஜெயஸ்த்தானமாகிய 3 ஆம் இடம் குருபகவான் சஞ்சாரம் அமைவது எடுக்கின்ற முயற்சிகளில் சிறு சிறு தடை தாமத இழுபறி நிலைகள் தொடரும். தொழில் ரீதியில் சற்று மத்திம பலாபலன்களே அமையும். தேவையற்ற வீண் பிரச்சினைகள் உங்களைத் தேடி வரும் நிலை உண்டு. ஆகஸ்ட் மாதம் வரை சனியின் சஞ்சாரம் ஓரளவிற்கு அனுகூலமாய் அமையும். 2007 ஆகஸ்ட் நடுப் பகுதியில் உங்களுக்கு ஏழரைச் சனி சஞ்சாரம் ஆரம்பமாகின்றது. நவம்பர் மாதம் குருவின் சஞ்சாரம் சுகஸ்த்தானமாகிய 4 ஆம் இடம் அமையும். எனவே, எதிர்பாராத வகையில் உடல் நிலை சுகயீனம், மருத்துவ செலவுகள், தாயார் வழியில் உடல் நிலை சுகயீனங்கள் என்பன ஏற்படுகின்ற நிலை உண்டு. குடும்பத்தில் சுமாரான மத்திமமான பலன்களே அமையும். பண வரவு விடயம் சற்று சிரமங்களைக் கொடுக்கும். கடன் வாங்க வேண்டிய சூழல் அமையும். ராகு, கேது சஞ்சாரமும் அனுகூலம் அற்ற ஸ்தானம் அமைந்திருப்பது தேவையற்ற வீண் பிரச்சினைகளும் விரயங்களும் சற்று அதிகமாகவே அமைகின்ற நிலையுண்டு. எந்த விடயம் செய்வதாயினும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசனை புரிந்து நிதானமாக செயல்படவும். குரு, சனீஸ்வர வழிபாடு மேற்கொண்டு வருவது மிகவும் நல்லது.

--------------------------------------------------------------------------------

துலாம் ராசி

(சித்திரை 3, 4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3 ஆம் பாதம்)

துணிந்த செயற்பாடும், துவளாத மனமும் கொண்ட துலாராசி அன்பர்களே! நீதி, நேர்மை இரண்டிற்கும் உதாரண புருஷர் நீங்கள். தவறு செய்தால் தயங்காது ஒப்புக் கொண்டு அதற்கு பரிகாரம் தேடுகின்ற மன இயல்பு அதிகமாக கொண்ட உங்களுக்கு சர்வசித்து வருஷம் ஓரளவிற்கு அனுகூலம் கொடுக்கும் நிலை உண்டு எனலாம். குருபகவானின் சஞ்சாரம் தனஸ்த்தானமாகிய 2 ஆம் இடம் அமைவது தொழில் ரீதியில் நல்ல சிறப்புகளும், திருப்திகரமான பண வரவும், சமூக அந்தஸ்த்தும் உங்களுக்கு சிறப்பாக அமையக் கூடிய நிலைகள் உண்டு. சனிபகவான் சஞ்சாரம், ஜீவனஸ்தானமாகிய 10 ஆம் இடம் அமைவது தொழில் ரீதியில் அலைச்சல், வேலைப் பளு என்பன இருந்தாலும் அதற்கு உரிய லாபங்களை கொடுக்கின்ற அனுகூலம் நிறையவே உண்டு. அத்தோடு ராகுவின் சஞ்சாரம், கோசார நிலையின் அனுகூலங்களின்படி ஆன்மீக தொண்டுகளில் ஈடுபாடும், தலயாத்திரைகளும் அமையக் கூடிய நிலைகளைக் கொடுக்கும். 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் மேல் குருவின் சஞ்சாரம் ஜெயஸ்த்தானமாகிய 3 ஆம் இடம் அமைவது சற்று சுமாரான பலாபலன்களுக்கே இடமுண்டு. எடுக்கின்ற முயற்சிகளில் நிதானம் வேண்டும். தொழில் ரீதியில் சற்று அலைச்சல் இழுபறி நிலைகள் தோன்றி மறையும். ஆகஸ்ட் மாதம் சனியின் சஞ்சாரம் லாபஸ்த்தானமாகிய 11 ஆம் இடம் அமைவது சிறப்பான பலாபலன்களையே கொடுக்கும். குறிப்பாக விசாகம் நட்க்ஷத்திரம் உடையோர் நட்க்ஷத்திர அதிபதி குருவாக அமைவது குருவின் பலன் பெரும் கஷ்டம் கொடுக்காது. எனவே, இந்த சர்வசித்து வருஷத்தின் முற்பகுதியில் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றியும், தொழிலில் மேன்மையும், குடும்ப மகிழ்வும் சிறப்பாக அமையக் கூடிய நிலைகள் உண்டு. பிற்பகுதியில் சிறு சிறு சிரமங்கள் இருப்பினும் பெரும் கஷ்டம் இருக்காது. எனவே, அதற்கு தகுந்தாற்போல செயற்றிறடன் நடந்து வெற்றிகளும் சிறப்புகளும் பெற்றிடவும்.

--------------------------------------------------------------------------------

விருச்சிக ராசி

(விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம்,

கேட்டை)

வீரியமான செயற்றிறனும், வித்தகமான தொழிற் திறனும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே! எல்லோருடனும் அனுசரித்து போகின்ற குண இயல்பும், தனக்குப் பிடிக்காத நபரை எந்த வகையிலும் சேர்த்துக் கொள்ளாத போக்கும், தன்னலத்தில் அதிக அக்கறையும் கொண்ட உங்களுக்கு சர்வசித்து வருஷம் முற்பகுதி சற்று சிரமமான பலன்களைக் கொடுக்கும். உங்கள் ராசிக்கு குரு பகவான் ஜென்ம குரு சஞ்சாரமாய் அமைகின்றார். எந்த விடயம் எடுத்தாலும் தடை, தடை,தாமத நிலைகள் சற்று அதிகமாகவே இருக்கும். தொழில் ரீதியில் வேலைப்பளு, உயர் அதிகாரிகளுடன் மனக் கசப்பு, தேவையற்ற வீண் பிரச்சினைகளில் பண வரவில் மந்த நிலைகள், விபத்துக்கள் போன்ற பலாபலன்கள் ஏற்படுகின்ற நிலையுண்டு. கடன் பிரச்சினைகள் சற்று அதிகமாக இருக்கும். உடல் ரீதியில் திடீர் சுகயீனங்கள் ஏற்படும். எதிர்பாராத வகையிலே பண விரயங்கள் ஏற்படுகின்ற நிலை உண்டு. குடும்பத்தில் மந்தமான நிலைகள் இருக்கும். ஆகஸ்ட் மாதம் வரை சனீஸ்வரனின் சஞ்சாரம், பாக்கியஸ்தானமாகிய 9 ஆம் இடம் அமைவது ஓரளவு அனுகூலமான பலாபலன்கள் அமையும் நிலையுண்டு. 2007 நவம்பர் மாதம் குருவின் சஞ்சாரம், தனஸ்த்தானமாகிய 2 ஆம் இடம் அமைவது மிகவும் சிறப்பான யோகங்களைக் கொடுக்கும் பலன் உண்டு. தொழிலில் நல்ல சிறப்பும், மேன்மையும் அமையும். குடும்பத்தில் மகிழ்வும், சுபகாரிய அனுகூலங்களும் அமையும். பண வரவில் முன்னேற்றம் அமையும். திருமணம் போன்ற சுப காரியங்களை எதிர்கொள்வோருக்கு அப்பலாபலன்கள் அனுகூலமாய் அமையக் கூடிய நிலை உண்டு. பொதுவாக முற்பகுதியிலே சற்று சிரமமான மத்திமமான பலாபலன்களும், பிற் பகுதியில் நல்ல சிறப்பான பலாபலன்களும் அமைகின்ற நிலையுண்டு.

--------------------------------------------------------------------------------

தனுசு ராசி

(மூலம், பூராடம், உத்தராடம் 1 ஆம் பாதம்)

தன்னம்பிக்கையும், தைரியமான செயலும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே! எந்த நிலையில் இருந்தாலும் அந்த நிலையைத் தாண்டி முன்னுக்கு வரவேண்டும் என முயற்சிக்கும் திறமும், உங்களின் வளர்ச்சிக்காக எதையும் செய்யக்கூடிய ஆற்றலும், எல்லா விடய நிலையிலும் ஆர்வமும் கொண்ட உங்களுக்கு சர்வசித்து வருட பலன்கள் சற்று சிரமங்கள் தருவதாகவே அமைய உள்ளது. அதேநேரம், எதிர்பாராத வகை நன்மைகளும் இடையிடையே ஏற்படும். 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையான காலப் பகுதியில் அட்டமத்து சனியின் சஞ்சாரம் பல வகையிலும் தொல்லைகள் தருவதாய் அமையும். முயற்சிகளிலே நிதானமான செயற்பாடு வேண்டும். தொழில் ரீதியில் பல வகையிலும் சற்று அலைச்சல் நிலைகள் இருக்கும். பண வரவு சற்று சுமாரான நிலையிலேயே அமையும். தேவையற்ற வீண் பிரச்சினைகளில் சிக்க வேண்டிய சூழல் அமையும். யோகஸ்தானமாகிய 12 ஆம் இடம் குருவின் சஞ்சாரம் அமைவதும் ஆகஸ்ட் மாதம் சனியின் சஞ்சாரம் பாக்கியஸ்தானமாகிய 9 ஆம் இடம் அமைவதும் எதிர்பாராத வகை நன்மைகள் அமையக் கூடிய நிலைகள் உண்டு. ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் வரையான காலப் பகுதி ஏதேனும் புதிய முயற்சிகள், வெற்றிகள் தரக் கூடியதாய் அமைகின்ற நிலை உண்டு. நவம்பர் மாதம் குருபகவானின் சஞ்சாரம் ஜென்மஸ்தானம் அமைவது உடல் நிலையில் சிறு சிறு சுகயீனம், தொழில் ரீதியில் சிக்கல் நிலைகள், கடன் பிரச்சினைகளின் தொல்லை, எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடை, தாமத நிலைகள் என பல வகையிலும் சற்று அலைச்சல் நிறைந்த காலமாகவே அமையும். குருபகவான், சனிபகவான் வழிபாடுகள் செய்து வருவது மிகவும் நல்லது. எந்த முயற்சி எடுப்பதாயினும் மிகவும் நிதானமாக சிந்தித்து செயற்பட்டு முயற்சி கொள்ளவும். எனவே, இந்த சர்வசித்து வருஷம் உங்களுக்கு பெரும் நன்மை தரக் கூடிய வாய்ப்புகள் சற்றுக் குறைவாகவே உண்டு. அதற்கு ஏற்ப உங்களின் செயற்றிறன் அமைத்து உரிய காலங்களில் உரிய வெற்றிகளை பெற்றுக் கொள்ளலாம்.

--------------------------------------------------------------------------------

மகரராசி

(உத்தராடம் 2, 3, 4 ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2 ஆம் பாதம்)

மனதில் பட்டதை வெளியில் சொல்லும் குணம் கொண்ட மகர ராசி அன்பர்களே! உங்களுக்கு எதிரி உங்களின் பேச்சுத்தான். யார் எந்தத் தவறு செய்தாலும் துணிந்து கூறும் தைரியம் உண்டு. ஆனால் அதை தீர விசாரிக்காமல் கூறி பகைமை சேர்த்துக் கொள்ளும் நிலையும் குண இயல்பும் கொண்ட உங்களுக்கு, சர்வசித்து வருஷத்தின் பலாபலன்கள் முற்பகுதியிலே மிகவும் அனுகூலமான நற்பலாபலன்கள் அமையும் நிலை உண்டு. குருபகவான் உங்களின் ராசிக்கு லாபஸ்தானமாகிய 11 ஆம் இடம் அமைகின்றார். தொழில் ரீதியிலே நல்ல மேன்மைகள் உண்டு. பண வரவு மிகவும் திருப்திகரமானதாக அமைகின்ற நிலையுண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபகாரிய நிகழ்வுகளும் அமையும். எடுக்கின்ற முயற்சிகளில் சிறப்பான வெற்றிகள் அமையும். புதிய முயற்சிகளிலும் நிறைவான பலன்கள் அமையும். 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சனி மாற்றம் உங்களின் ராசிக்கு அட்டமஸ்த்தானமாகிய 8 ஆம் இடம் அமைகின்றார். அட்டமத்து சனி சஞ்சார காலமும் 2007 நவம்பர் மாதம் குருவின் விரயஸ்தான சஞ்சாரமும் சற்று சிரமங்களை கொடுக்கக் கூடிய நிலையுண்டு. எடுக்கின்ற முயற்சிகளிலும் சிறு சிறு தடை தாமத நிலைகள் இருக்கும். தொழில் ரீதியில் அலைச்சல் நிலைகளும், வேலைப் பளுவும் அதிகமாக இருக்கும். தேவையற்ற வீண் பிரச்சினைகள் உங்களைத் தேடி வரும் நிலையுண்டு. பொதுச் சேவைகளில் நிதானமாக செயற்பட வேண்டும். பண வரவு நிலைகளில் திடீர் இறக்கம் ஏற்படும் நிலைகள் இருக்கும். ஒரே ஒரு ஆறுதல் உங்களின் ராசி அதிபதி சனி பகவானாக இருப்பது. அட்டமத்து சனியின் சஞ்சாரம் பெரும் கஷ்டங்களை கொடுக்காது என்பதாகும். எனவே முற்பகுதி குறிப்பாக 2007 நவம்பர் வரையான காலப்பகுதி மிகவும் சிறப்பான நற் பலாபலன்களைக் கொடுக்கும். எடுக்கின்ற முயற்சிகளும் வெற்றிகளை தரும். அக்கால கட்டங்களில் அதற்குரிய செயற்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளவும். குரு, சனி வழிபாடுகளில் ஈடுபாடு கொண்டு செயற்படுவது நன்மைகள் தரும். இந்த சர்வசித்து வருஷம் உங்களுக்கு நடுத்தரமான பலன் தருவதாய் அமைகின்றது.

--------------------------------------------------------------------------------

கும்பராசி

(அவிட்டம் 3, 4 ஆம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 ஆம் பாதம்)

குன்றாத குண நிறைவை மேன்மையாகக் கொண்ட கும்பராசி அன்பர்களே! தெளிவான சிந்தனை தெய்வபக்தி, செயற்றிறன் மூலமாகவோ அல்லது பரிதாபமாகவோ, மற்றவர்களை கவர்ந்திடும் குண இயல்பும் எல்லோருடனும் அனுசரித்து செயற்படுகின்ற நடைமுறையும் கொண்ட உங்களுக்கு சர்வசித்து வருடம் சிறப்பானதாகவே அமையக் கூடிய நிலையுண்டு. உங்களின் ராசிக்கு சனி பகவான் சஞ்சாரம் 6 ஆம் இடம் அமைகின்றது. ஆகஸ்ட் மாதம் வரை சனி பகவானின் சிறப்புப் பலா பலன்களை நீங்கள் பெற முடியும். எடுக்கின்ற விடயங்களில் நல்ல வெற்றிகள் தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் வழக்கு விவகாரங்களிலே வெற்றி போன்ற நிலைகள் அமையும். குருவின் கோசார சஞ்சாரம் ஜீவனஸ்த்தானமாகிய 10 ஆம் இடம் அமைவது இடமாற்றம், தொழில்சார்ந்த பதவி மாற்றம் என்பன ஏற்படலாம். 2007 ஆகஸ்ட் மாதத்தின் மேல் சனியின் சஞ்சாரம் களத்திரஸ்தானமாகிய 7 ஆம் இடம் அமைகின்றது. எடுக்கின்ற முயற்சிகளில் தடைகள் தாமத நிலைகள் என்பன ஏற்பட்டு மறையும். இருப்பினும் திருமணம் போன்ற சுப காரியங்களை எதிர்நோக்குவோர்க்கு அதற்குரிய அனுகூல பலாபலன்கள் அமையும் நிலையுண்டு. நவம்பர் மாதத்தின் மேல் குருவின் சஞ்சாரம், லாபஸ்த்தானமாகிய 11 ஆம் இடம் அமைவது மிகவும் சிறப்பான நற்பலா பலன்களுக்கு இடமுண்டு. தொழிலில் சிறப்பான முன்னேற்றங்களும், திருப்திகாரமான பண வரவுகளும் சுபகாரிய அனுகூலங்களும் சிறப்பாக அமையும் நிலையுண்டு. புதிய முயற்சிகளில் தாராளமாக ஈடுபாடு கொள்ளலாம். கடன் பிரச்சினைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். எதிர்பார்க்கும் விடயங்களில் வெற்றிகள் அமையும். எல்லா நிலைகளிலும் நல்ல அனுகூலங்களுக்கு அதிக பலன் உண்டு. எனவே, சர்வசித்து வருடம் உங்களுக்கு சிறப்பான நற்பலன்களை தரும் நிலை அதிகமாக உண்டு. குறிப்பாக முற்பகுதி சனிபகவான் சிறப்புப் பலனும், பிற்பகுதி குருபகவான் சிறப்புப் பலனுமாய் அமையும். எனவே, அதற்கு தகுந்தாற்போல் உங்களின் செயற்றிறன் அமைத்து வெற்றிகள் பெறுக!

--------------------------------------------------------------------------------

மீனராசி

(பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி)

மிடுக்கான தோற்றமும், மிடுக்கான பேச்சும் கொண்ட மீன ராசி அன்பர்களே! உங்களின் நினைத்ததை நடத்திக் காட்டுகின்ற குண இயல்பினாலே பல வகையிலும் பகைமையை சம்பாதித்துக் கொள்வீர்கள். தருணத்திலே உதவுகின்ற குணம் இருக்கும். இருப்பினும் ஆணவம் உங்களின் கூடவே ஒட்டிக் கொள்ளும் ஒரு விடயமாகும். இந்த சர்வசித்து வருடம் உங்களுக்கு மிகவும் சிறப்பான நன்மைகள் தருவதாய் அமையும். உங்களின் ராசிக்கு பாக்கியஸ்தானமாகிய 9 ஆம் இடம் குருபகவான் சஞ்சாரம் அமைவது தொழில் ரீதியிலே சிறப்பான முன்னேற்றம் அமையும். பதவி உயர்வுகள், குடும்பத்தில் சுப காரிய பலன், திருப்திகரமான பண வரவு என்பன சிறப்பாக அமையும். எடுக்கின்ற முயற்சிகளிலே நல்ல வெற்றிகள் கிடைக்கும். ஆகஸ்ட் மாதம் வரை சனியில் சஞ்சாரம் 5 ஆம் இடத்திலே அமைவது சற்று சிரமமான மத்திமமான பலாபலன்கள் இருக்கும். இருப்பினும் குருவின் சிறப்புப் பலன்கள் மேலோங்கும். ஆகஸ்ட் மாதம் சனி பகவான் சஞ்சாரம் 6 ஆம் இடம் அமைவது மிகுந்த சிறப்புகளை வாரி வழங்கும். நவம்பர் மாதத்தின் மேல் குருவின் சஞ்சாரம் ஜீவனஸ்த்தானமாகிய 10 ஆம் இடம் அமைவது தொழில் ரீதியில் இடமாற்றம், பதவி மாற்றம், திடீர் பிரயாணங்கள் என்பன ஏற்படலாம். வெளிநாட்டு பிரயாணங்களை எதிர்கொள்வோருக்கு அதற்குரிய பலாபலன்கள் அனுகூலமாக அமையும் நிலை உண்டு. வருஷத்தின் முற்பகுதியில் குருவின் சிறப்பான பலனும் வருஷத்தின் பிற்பகுதியில் சனியின் சிறப்பான பலன்களும் அமைகின்ற நிலை உண்டு. எனவே, அதற்குரிய செயற்றிறன் கொண்டு பலாபலன்களை நீங்கள் பெறலாம். பொதுவாக நவம்பர் மாதம் வரையுள்ள காலப் பகுதியில் எடுக்கின்ற காரியங்களில் நிறைவான வெற்றிகள் அமையும்.

மூலம் - வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சகோதரி! எனக்கு இன்னும் புதுவருட பஞ்சாங்கம் கிடைக்கவில்லை.

உங்களது தகவலுக்கு மிகவும் நன்றி. :rolleyes::rolleyes:

முடிந்தால் கைவிசேச நாள்பலனையும் தந்தால் நல்லது.

அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். :rolleyes::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா.. ரொம்ப முக்கியம்.. நாடுகெட்ட கேட்டுக்கு

தழிழீழம் என்ன ராசியுங்கோ?

தலை டைகர்பமிலியின் ராசி எது

:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கறுப்பி அக்கா இணைப்பிற்க்கு... சாத்திரத்தில நம்பிக்கை இல்லாட்டிலும் ராசி பலன் ஆர்வமா வாசிப்பேன்.. :unsure:

நன்றி கறுப்பி அக்கா இணைப்பிற்க்கு... சாத்திரத்தில நம்பிக்கை இல்லாட்டிலும் ராசி பலன் ஆர்வமா வாசிப்பேன்.. :lol:

ஓ அப்படியா ஜன்னி அக்கா இந்த வருசம் தங்களுக்கு எப்படி,நம்மளுக்கு ஆகா ஒகோ

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ அப்படியா ஜன்னி அக்கா இந்த வருசம் தங்களுக்கு எப்படி,நம்மளுக்கு ஆகா ஒகோ

:P

உங்களுக்கே ஆகா ஒகோ என்று போட்டு இருக்கேக்க...எங்களுக்கு அதைவிட சூப்பரா போட்டு இருக்கு. :P

ம்ம்ம்ம் பேசாமல் இதை படிக்காமல் இருந்திருக்கலாம் :lol:

உங்களுக்கே ஆகா ஒகோ என்று போட்டு இருக்கேக்க...எங்களுக்கு அதைவிட சூப்பரா போட்டு இருக்கு. :P

ஓ அப்படியா அப்ப அதில ஒரு பங்கை எனக்கு அனுப்பி வையுங்கோ

:lol:

ம்ம்ம்ம் பேசாமல் இதை படிக்காமல் இருந்திருக்கலாம் :lol:

ஏன் துக்கமா சொல்லுறீங்க தூய்ஸ் தாங்கள் என்ன ராசி?

:(

ரொம்ப மோசமா இருக்கிறது தான்...

[அரட்டைக்கு வரவும் ஜம்மு]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்னம்பிக்கையும், இறைநம்பிக்கையும் அதிகமாக இருப்பதால் பலன்களை வாசிப்பதோடு சரி.

ஆனால்,

"மனதில் பட்டதை வெளியில் சொல்லும் குணம் கொண்ட மகர ராசி அன்பர்களே! உங்களுக்கு எதிரி உங்களின் பேச்சுத்தான். யார் எந்தத் தவறு செய்தாலும் துணிந்து கூறும் தைரியம் உண்டு"

அப்படியே உண்மை என்பதால்!. இதை நம்பாமல் இருக்க முடியவில்லை!. :o !

மிகவும் முக்கியமானதகவல் :o

மேன்மையான குண இயல்புகளைக் கொண்ட மேஷராசி அன்பர்களே

இப்படி என்னை புகழ வேண்டாம் எனக்கு துதி பாடுதல் பிடிக்காது :P :P

இப்படி என்னை புகழ வேண்டாம் எனக்கு துதி பாடுதல் பிடிக்காது :P :P

கண்ணியமான குண இயல்பும், கனிந்து பேசும் பண்பும் கொண்ட *** ராசி அன்பர்களே! :o
:( :P
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை யமுனாவுக்கு இந்த வருசமாவது ஒரு அப்பாவி வந்து மாட்டுப்படோணுமெண்டு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன். :)

எங்கடை யமுனாவுக்கு இந்த வருசமாவது ஒரு அப்பாவி வந்து மாட்டுப்படோணுமெண்டு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன். :blink:

தாத்தா தாத்தா சின்ன பிள்ளை என்னை பார்த்து இப்படியா கதைப்பது,நான் நல்லா படிச்சு அவுஸ்ரேலியாவிற்கு பிரதனர் ஆகுறது தான் என்னுடைய இலட்சியம் அதில் கல்வி அமைச்சர் நீங்கள் தான்

:):o :P

தாத்தா தாத்தா சின்ன பிள்ளை என்னை பார்த்து இப்படியா கதைப்பது,நான் நல்லா படிச்சு அவுஸ்ரேலியாவிற்கு பிரதனர் ஆகுறது தான் என்னுடைய இலட்சியம் அதில் கல்வி அமைச்சர் நீங்கள் தான்

:):o :P

ஜம்மு அவுஸ்திரேலியாவுக்கு பிரதமர் ஆனால் அவுஸ்திரேலியாவின் பெயரை அரட்டைஏரியா என்று மாற்றி விடுங்கள்.

தாத்தா தாத்தா சின்ன பிள்ளை என்னை பார்த்து இப்படியா கதைப்பது,நான் நல்லா படிச்சு அவுஸ்ரேலியாவிற்கு பிரதனர் ஆகுறது தான் என்னுடைய இலட்சியம் அதில் கல்வி அமைச்சர் நீங்கள் தான்

:):o :P

ஜம்மு ஆசி பிரமதரானால் எனக்குத்தான் சிட்னி ஏரியா எனக்குத்தான்

வானவில்

பொறுக்கி ஒப் சிட்னி :blink:

ஜம்மு அவுஸ்திரேலியாவுக்கு பிரதமர் ஆனால் அவுஸ்திரேலியாவின் பெயரை அரட்டைஏரியா என்று மாற்றி விடுங்கள்.

அது நல்ல பெயர் இல்லை அவுஸ்ரேலியா இன் அரட்டை என்று மாற்றி கொள்கிறேன் அது சரி உங்களுக்கு தான் சுகாதார அமைச்சு பொறுப்பு வழங்கபடும்

:)

ஜம்மு ஆசி பிரமதரானால் எனக்குத்தான் சிட்னி ஏரியா எனக்குத்தான்

வானவில்

பொறுக்கி ஒப் சிட்னி :o

ஆமாம் உமக்கு தான் சிட்னி வைத்து கொள்ளும்

:blink::unsure:

அது நல்ல பெயர் இல்லை அவுஸ்ரேலியா இன் அரட்டை என்று மாற்றி கொள்கிறேன் அது சரி உங்களுக்கு தான் சுகாதார அமைச்சு பொறுப்பு வழங்கபடும்

ஆமாம் உமக்கு தான் சிட்னி வைத்து கொள்ளும்

எப்படியோ, அவுஸ்திரேலியாவை டைகர் பமிலியின் கொன்றோலில் கொண்டுவந்தால் சரி.

அது நல்ல பெயர் இல்லை அவுஸ்ரேலியா இன் அரட்டை என்று மாற்றி கொள்கிறேன் அது சரி உங்களுக்கு தான் சுகாதார அமைச்சு பொறுப்பு வழங்கபடும்

:)

ஆமாம் உமக்கு தான் சிட்னி வைத்து கொள்ளும்

:o:blink:

ஒப்பந்தத்தில் கைசாத்திட்டு அனுப்பும் :angry:

ஒப்பந்தத்தில் கைசாத்திட்டு அனுப்பும் :angry:

அதற்கு இன்னும நாள் இருக்கு நான் படித்து மாப்பிகாக்கி மாதிரி பெரியா ஆளா மாறிதான் நான் பிரதமர் ஆகலாம்,

:) :P

அதற்கு இன்னும நாள் இருக்கு நான் படித்து மாப்பிகாக்கி மாதிரி பெரியா ஆளா மாறிதான் நான் பிரதமர் ஆகலாம்,

:) :P

அப்போ நான் எப்படி ரன் பண்ணுறது சிட்னிய :angry:

அப்போ நான் எப்படி ரன் பண்ணுறது சிட்னிய :angry:

இப்பவே நீர் ரன் பண்ணும் நம்ம ஏரியா தான் யாரும் என்னாவது சவுண்ட் கொடுத்தா ஒரு போன் பண்னும்

:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.