Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சற்று முன்னர் வடக்கு, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களுக்கான பதவியேற்பு!

Featured Replies

வடக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான ஆளுநர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சற்று முன்னர் சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சத்திய பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இதன்படி, ரெஜினோல் குரே ஆளுநராக பதவி வகித்த, வடக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் சிரேஷ்ட ஆலோசகராக கடமையாற்றியிருந்தமை சுட்டிக்காட்டத் தக்கது.

நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளராக கடமையாற்றிய, கீர்த்தி தென்னக்கோன், ஊவா மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சப்ரகமுவ மாகாண ஆளுநராக, சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம திஸாநாயக்க, ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துக்கொண்டிருந்தார்.

சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநராக இதற்கு முன்னர், நிலுகா ஏக்கநாயக்க பதவி வகித்திருந்தார்.இதன்படி, 8 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இதுவரை நியமிக்கப்பட்ட பின்னணியில், தென் மாகாணத்திற்கான ஆளுநர் பதவி தொடர்ந்தும் வெற்றிடமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/111999

  • தொடங்கியவர்

வடக்கு மாகாண ஆளுநராக சுரேன் ராகவன் நியமனம்!

வடக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

03 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இன்று (திங்கட்கிழமை) அவர் வடக்கு மாகாண ஆளுநராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜனாதிபதி ஊடக பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யார் சுரேன் ராகவன்..??

வடக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் கலாநிதி சுரேஷ் ராகவன் ஆசியாவில் முதன்முறையாக ஜேம்ஸ் மெடிசன் நம்பிக்கை புலமைப் பரிசிலை இரண்டு தடவைகள் பெற்றார்.

2005 ஆம் ஆண்டு கென்ட் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற இவர் 2008ஆம் ஆண்டு முதுகலைமாணி முடித்தார் பின்னர் 2008-2011 களில் பிரித்தானிய அரசாங்கத்தின் புலமைப்பரிசிலும் அவருக்கு வழங்கப்பட்டது.

கனடா – ஒன்றாரியோ பல்கலைக்கழகத்தின் OSAP விருதினை வென்ற அவர் நேரடி அரசியலில் பெரும் அனுபவசாலியாவார். இவர் தற்போது ஒட்டாவா சென் போல் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக உள்ளார்.

அத்தோடு அவர் மிக முக்கியமாக அவர் ஒரு பௌத்த சிந்தனைவாதியாவார், பௌத்த துறவிகளுக்கும், யுத்தத்துக்குமான இடைத்தொடர்புகள் குறித்த இரண்டு புத்தகங்களையும், ஏனைய சில புத்தகங்களையும் அவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

அவரது அரசியல் தொடர்பான பல்வேறு ஆய்வுகள் பல முன்னணி பல்கலைக்கழகங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வடக்கு-மாகாண-ஆளுநராக-சுர/

புதிதாக வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டவரின் பிரமிக்கவைக்கும் பின்னணி!

வட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

கடந்த காலங்களில் தென்னிலங்கையை சேர்ந்த சிங்களவர்கள் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய வம்சவாளியான இவர் கம்பாஹவில் பிறந்து, அரசியல் மற்றும் கல்வித்துறையில் பல பரிணாமங்களை கொண்டுள்ளார்.

அரசியல் ரீதியான பல சாணக்கியங்களை கொண்ட சுரேன், ஜனாதிபதி ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளராக செயற்பட்டுள்ளார்.

ஆசியாவில் முதன்முறையாக ஜேம்ஸ் மெடிசன் நம்பிக்கை புலமைப் பரிசிலை இரண்டு தடவைகள் பெற்று சாதனை படைத்தவர்.

பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளில் மேற்படிப்புகளை மேற்கொண்டுள்ளதுடன், அந்நாடுகளின் பல விருதுகளையும் வென்றுள்ளார்.

2008-2011ஆம் ஆண்டுகளில் அவருக்கு பிரித்தானிய அரசாங்கத்தின் புலமைப்பரிசிலும் வழங்கப்பட்டது.

கனடா - ஒன்டோரியோ பல்கலைக்கழகத்தின் OSAP விருதினையும் அவர் பெற்றுள்ளார்.

தற்போது வரையில் கனடா ஒட்டாவா சென் போல் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக செயற்பட்டு வருகின்றார்.

அவர் ஒரு பௌத்த சிந்தனைவாதியாக கருதப்படுகின்றது. பௌத்த துறவிகளுக்கும், யுத்தத்துக்குமான இடைத் தொடர்புகள் குறித்த இரண்டு புத்தகங்களையும், ஏனைய சில புத்தகங்களையும் அவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

அவரது அரசியல் தொடர்பான பல்வேறு ஆய்வுகள் பல முன்னணி பல்கலைக்கழகங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/112011

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.