Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவேந்திர சில்வா  விவகாரம் – நாடாளுமன்றில் கேள்வி எழுப்பவுள்ளார் சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சவேந்திர சில்வா  விவகாரம் – நாடாளுமன்றில் கேள்வி எழுப்பவுள்ளார் சம்பந்தன்

 

R.sampanthan-300x199.jpg

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து, அடுத்த நாடாளுமன்ற அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பவுள்ளது.

இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, கடந்த வாரம் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனத்துக்கு, அனைத்துலக மனித உரிமை அமைப்புகள்  கடும் கண்டனங்களையும் எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே, போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டியவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு இராணுவத்தில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளதற்கு, அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, எதிர்ப்புத் தெரிவித்து பிரச்சினை எழுப்புவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

போர்க்குற்றவாளி என குற்றம்சாட்டப்படும் ஒருவரை, சிறிலங்கா அதிபர் உயர் பதவிக்கு நியமித்திருப்பது குறித்து தாம் கவலையடைந்துள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் அடுத்த அமர்வில் இந்தப் பிரச்சினையை எழுப்புவோம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/01/16/news/35868

சம் சும் , வழக்கு தொடுக்க முடியுமா , நீங்கள் உண்மையான மனிதர்கள் என்றால் வழக்கு தொடுத்து இந்த நியமனத்திற்கு தடை போட வேண்டும் .....

சும்மா மக்களை ஏமாற்ற வேண்டாம் .....

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள நீதித்துறை என்பது சுயாதீனமாக இயங்கக் கூடிய ஒரு அமைப்பல்ல. எப்பக்கம் அதிகாரம் இருக்கின்றதோ, அப்பக்கம் சார்ந்து செயற்படக்கூடியது. ஆகவே, சவீந்திர சில்வா எனும் போர்க்குற்றவாளிக்கெதிரான வழக்கென்பது, சிங்கள நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படக் கூடும் என்பதை நம்பமுடியாது. 2009 இனவழிப்புப் போரில் இவனது படுகொலைகள் விசாரிக்கப்பட முடியுமென்றால், கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அனைத்துப் படுகொலைகளும் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கிருஷாந்தி குமாரசாமி மற்றும் அவரின் குடும்பத்தாரின் படுகொலைகளைகளின் சூத்திரதாரிகளின் மீதான விசாரணையைத்தவிர வேறு எந்தச் சிங்கள ராணுவக் கொலையாளிகளும் இதுவரை விசாரிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. ஆகவே சுமந்திரனால் எதுவுமே செய்ய முடியாது.

சிங்களவரின் தயவுடனான ஒரு அரசியல் தீர்வைப் பெறவேண்டும் என்கிற உறுதியில் செயற்பட்டு வரும் சுமந்திரனால், ரணில் அரசிற்கு கீழ்ப்படாத ராணுவத்திற்கெதிரான ஒரு வழக்கை கொண்டு நடத்தமுடியுமென்பது இயலாத காரியம். இது, அவரது தீர்விற்கான முயற்சிகளை முற்றாகவே கலைத்துப் போட்டுவிடும்.

இதில் இன்னொரு விடயமும் இருக்கிறது. 2001 ரணில் புலிகள் பேச்சுவார்த்தையில், அப்போது சனாதிபதியாகவிருந்த சந்திரிக்கா, தொடர்ச்சியான முட்டுக்கட்டைகளை சமாதான முயற்சிகளுக்கு எதிராகப் போட்டு வந்ததுபோல, இன்றைய ரணில் அரசிற்கும் மைத்திரி செய்துவருகிறார். மகிந்த எனும் இனக்கொலையாழியின் உத்தரவின்பேரில் செயற்பட்டுவரும் மைத்திரியின் இன்றைய நடவடிக்கைகளில் ஒன்றுதான் சவீந்திர எனும் போர்க்குற்றவாளியின் பதவி நியமனமும். அதுமட்டுமல்லாமல், ஐ. நா வினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதென்கிற முடிவிற்கெதிராகச் செயற்பட மைத்திரி முடிவெடுத்திருப்பதும் இதன் ஒரு அங்கம்தான். கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றிற்கான அமெரிக்க பரிந்துரையை உதாசீனம் செய்திருக்கும் மைத்திரி, மகிந்தவின் ஆலோசனையின்படி செயற்பட்டு மேற்குலகினை இலங்கையில் ஓரங்கட்டி வருகிறார். போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து மகிந்த, கோத்தா மற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் முதல், சாதாரண சிப்பாய்கள் வரையானவர்கள்  எல்லோருமே தப்பிக்க, மேற்குலகினை விட்டு சீனாவின் பக்கம் மைத்திரி சென்றுகொண்டிருக்கிறார்.

சுமந்திரனுக்கும் சம்பந்தருக்கும் இன்னொரு வழியிருக்கிறது. சிங்களத்துடன் உடன்பட்டுப் போகாமல், நேரடியாக சர்வதேசத்திடம் நீதிகேட்டு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் போர்க்குற்றங்களுக்கெதிரான வழக்கொன்றைப் பதிவுசெய்யலாம். ஆனால், அது சிங்களத்துடனான அனைத்துக் கதவுகளையும் மூடி விடும். அதன்பிறகு, சமரசம் என்கின்ற பேச்சிற்கு இடமிருக்காது. 

மேற்குலகு, தமிழரின் நலனுக்காக  இறங்கிவந்து, சிங்களப் போர்க்குற்றவாளிகளை தண்டித்து எமக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தரும் என்பது நம்பமுடியாதது. ஏனென்றால், போர்க்குற்றங்கள் நடைபெற்றபோது, அதற்குத் தேவையான அனுசரணையை வழங்கி, தமிழர்களை அழிக்கத் துணைபோய், அதை ஆமோதித்தவர்களே இந்த மேற்குலகுதான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.