Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனோர் விவகாரத்தில் களமிறங்கும் பிரதான எதிர்க்கட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனோர் விவகாரத்தில் களமிறங்கும் பிரதான எதிர்க்கட்சி- (அஜாதசத்ரு)

[15 - April - 2007]

ஆட்கடத்தல், கைது, காணாமல் போதல், கப்பம் பெறுதல், படுகொலை போன்ற சம்பவங்கள் நாடுபூராவும் மிக மோசமாக அதிகரித்துள்ள நிலையில் அது தொடர்பான எந்தவொரு உண்மை நிலைவரத்தையும் எவராவது வெளியிட முன்வந்தால் அல்லது தட்டிக்கேட்க முற்பட்டால் `சவப்பெட்டிகளை' தயாராக வைத்திருங்கள் என்ற கடுமையான அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிரான சுயாதீன மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதை எவராலும் தடுத்துநிறுத்த முடியாத போக்கொன்றையே காணக்கூடியதாகவுள்ளது.

கடத்தப்பட்டு காணாமல் போனோரின் பெற்றோர் உறவினர்களின் முதலாவது மாநாடு கடந்த திங்கட்கிழமை கொழும்பு கதிரேசன் வீதியிலுள்ள வீரமைலன் மண்டபத்தில் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்ட உறவுகளைப் பறிகொடுத்தோரின் கண்ணீரும் அழுகுரல்களும் அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.

ஆட்கடத்தல், கைது, காணாமல் போதல் மற்றும் படுகொலைகளுக்கு எதிரான மனித உரிமை அமைப்பான மக்கள் கண்காணிப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த முதலாவது மாநாட்டில் உறவுகளைப் பறிகொடுத்தோரின் குழந்தைகள், மனைவிமார், தாய், தந்தையர், உறவினர் நண்பர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மாநாடு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இறுதிவரையும் தமது உறவுகளின் புகைப்படங்களை கைகளில் ஏந்தியவாறு கண்ணீர் விட்டழுதனர். சிறுகுழந்தைகள் காணாமல் போன தமது தந்தையர்கள் மீண்டும் எப்போது வருவார்கள் என்ற ஆதங்கத்துடனும் சோகத்துடனும் காணப்பட்டனர்.

மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஐக்கிய சோஷலிச கட்சியின் தலைவரும் மக்கள் கண்காணிப்புக்குழுவின் தலைவருமான சிறிதுங்க ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்கா, ஜோன் அமரதுங்க உட்பட பல அரசியல் பிரமுகர்கள், மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டமை நம்பிக்கையூட்டும் ஒரு நிகழ்வாகவே அமைந்திருந்தது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அதுவும் குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிராக மக்கள் கண்காணிப்பு குழு மேற்கொண்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கொண்டுள்ளமையானது துணிச்சலுடன் எதிர்காலத்திலும் பல்வேறு மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு வழிவகுத்துள்ளது.

காணாமல் போனோரின் பெற்றோர் உறவினர்களின் இந்த மாநாட்டில் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றி அதன் முதலாவது மகஜர் மாநாட்டு நிகழ்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எமது நாட்டில் காணாமல் போதல் சம்பவங்கள் நடைபெற்றும், நடந்த வண்ணமும் உள்ளது என்பதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். 15 சம்பவங்கள் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழு மற்றும் சர்வதேச நிபுணர்களின் குழு என்பவற்றின் விசாரணைகள் மூலம் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கவோ சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதை தடுக்கவோ முடியாமல் போயுள்ள யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், காணாமல் போனோர் தொடர்பிலான மஹாநாம திலகரட்ண ஆணைக்குழுவின் அறிக்கை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் திருமதி லூயிஸ் ஹாபர் இலங்கை நிலைவரங்களை கண்காணிக்க அழைக்கப்பட வேண்டும். பலவந்த ஆட்கடத்தல் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு இலங்கைக்கு விஜயம் செய்வதற்காக விடுத்துள்ள கோரிக்கையை சாதகமாக பரிசீலித்து காணாமல் போனோரை மீட்பதற்கும் அதனை தடுப்பதற்கும் முன்வர வேண்டும், மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கும் காணாமல் போனோரை கண்டுபிடிக்கவும் சர்வதேச சுதந்திர மனித உரிமைகள் ஆணைக்குழு ஒன்றினை நியமிக்க வேண்டும், பலவந்த ஆட்கடத்தல் இலங்கையின் குற்றவியல் கோவையில் சேர்க்கப்பட வேண்டும். பலவந்த ஆட்கடத்தலிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைப் பிரகடனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகிய எட்டு கோரிக்கைகள் இந்த மாநாட்டின் போது நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த கோரிக்கைகள் அடங்கிய மகஜரைப் பெற்றுக்கொண்டதுடன் நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்களை கட்டுப்படுத்த ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக பாடுபடும் என்றும் தெரிவித்துள்ளார்.

சொந்த நாட்டு மக்களுக்கே பாதுகாப்பு வழங்க முடியாத அரசாங்கம் அவர்களை கொன்றொழிப்பதற்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறது.

அது மட்டுமன்றி தமிழர்களை அழித்தால் மாத்திரமே யுத்தத்தில் வெற்றிபெற முடியுமென்றும் தமிழர்கள் அனைவரும் புலிகள் எனும் ஒரு கருத்தை முன்னிறுத்துவதாகவே மகிந்த சிந்தனை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ் மக்களை கடத்துவதன் மூலம் புலிகளை இல்லாதொழிக்க முடியும் என்று யாரும் நினைத்தால் அது மிகவும் தவறான கருதுகோளாகவே இருக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதுடன் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டுவர அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமெனவும் இந்த மாநாட்டின் போது தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுவதற்கு எழுந்த போது மாநாட்டில் கலந்துகொண்ட காணாமல் போனோரின் உறவினர்கள் மேடையை சுற்றிநின்று காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கண்ணீர் விட்டழுது கெஞ்சி மன்றாடினார்கள்.

தலைநகர் கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பதவியேற்றதற்கு பின்னரான காலப்பகுதியில் சுமார் மூவாயிரத்திற்கு மேற்பட்டோர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதாக மனித உரிமைகள் அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. ஆனாலும், இந்த எண்ணிக்கை இதனிலும் விட கூடுதலாகவே இருக்குமென்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். குடாநாட்டிலேயே மிகக் கூடுதலானோர் கடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 1,500 இற்கு மேற்பட்டோர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு அடுத்தபடியாக மட்டக்களப்பு, வவுனியா மாவட்டங்களில் ஆட்கடத்தல்கள் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

வெள்ளைவான் ஆயுதபாணிகளாலேயே பெரும்பாலான கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போன பலர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.

தலைநகர் கொழும்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பின்னரே கூடுதலான கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் தற்போதும் அது முடிவுக்கு கொண்டுவரப்பட முடியாத ஒன்றாகவேயுள்ளது.

முழத்துக்கு முழம் சோதனைச் சாவடிகள் பொலிஸார் மற்றும் படையினரின் வீதி ரோந்து நடவடிக்கைகள் சிவிலுடை தரித்த பாதுகாப்பு பிரிவினரின் கண்காணிப்பு இவ்வாறான அதிஉயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ள தலைநகர் கொழும்பில் வெள்ளைவான் ஆயுதபாணிகளால் நூற்றுக்கு மேற்பட்ட கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட பல தமிழ் வர்த்தகர்கள் கோடிக்கணக்கான ரூபா பணத்தை கப்பமாக செலுத்திய பின்னரே விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒரு சிலர் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.

மேலும், பல தமிழ் வர்த்தகர்கள் தலைநகர் கொழும்பில் வர்த்தகம் செய்ய முடியாத நிலையில் தமிழகத்திற்கும் வேறு பல நாடுகளுக்கும் தமது வர்த்தக நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

தலைநகர் கொழும்பில் வைத்து இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட 80 இற்கு மேற்பட்ட தமிழர்களின் நிலைமை என்னவென்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்தக் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் நிலையங்களிலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் முறையிடப்பட்டுள்ள போதிலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மக்கள் கண்காணிப்பு குழுவின் அமைப்பாளர்களில் ஒருவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி என். ரவிராஜ் அதிஉயர் பாதுகாப்பு வலய பிரதேசத்தில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை.

கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத் அதிஉயர் பாதுகாப்பு பிரதேசமான பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திற்குள் வைத்து கடத்திச் செல்லப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் அது தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மக்கள் கண்காணிப்புக்குழு, காணாமல் போனோரை கண்டறியும் குழு மற்றும் மனித உரிமை அமைப்புகள், ஆசிய மனித உரிமைகள் அமைப்பு, சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புகள் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தை நேரடியாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன் அதனை கட்டுப்படுத்துவதற்கு உடன் நடவடிக்கையெடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளன.

ஆனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் அவரது ஆட்சியாளர்களும் அப்படியான எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லையென மிகச் சாதாரணமாக பதிலளித்துவிட்டிருப்பது எதனை நோக்கிய அரசியல் போக்கை சுட்டிக்காட்டுகிறது.

மூலம் - தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் அரசியல்தானே அன்றி வேறெதுவும் இல்லை.. அணிலுக்கு எங்கே இருந்து பிறந்தது உந்த ஞானம்?

எல்லாம் நாடகத்தின் ஒரு பாகம்.

"அரசன் அன்று கொன்றல்,

தெய்வம் நின்று கொல்லும்"

அந்த தெய்வம் யாருங்கோ??

அஜாதசத்துருவினை விமர்சிக்கும் நிலையிலில்லை . ஆனால் இவ்வளவு காலமும் காத்திருந்து இதில் களமிறங்கி தங்களுக்குச் சாதகமான நிலையை இவர்கள் தோற்றுவிக்க முயன்றாலும் அரசின் பேரினவாதக் கூச்சலின் முன் இவை எடுபடாது போகும். அப்படியில்லை என்று களமிறங்கினாலும் அதை எங்கிருந்து தொடங்கப் போகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ரனிலுக்கு நல்ல காலம் என்று சாத்திரி சொல்லியிருக்கின்றானாம். அது தான் அண்ணை அரசியலில் குதித்து விளையாடுகிறார்.ஒரு தேர்த்தலை எதிர்பார்த்து நல்ல பிள்ளைக்கு நடிக்கிறார் பம்மாத்து ரனில்.

உரிமை மீறல்களை தடுப்பதற்கு இலங்கை அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

வீரகேசரி நாளேடு

மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள சர்வதேச விசாரணைக் குழுவை அமைப்பதற்கு அமெரிக்கா ஆதரவு வழங்கும் என்று அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான பிரதி செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள் கவலையளிக்கின்றன என்று கூறிய அவர் அவற்றை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

வாஷிங்டனில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உரிமைகள் தொடர்பான சட்ட வியல் நிபுணர்களின் உதவிகளை பெற்று நடவடிக்கைகள் எடுப்பதனை அரசு உறுதி செய்ய வேண்டும்.

அதேவேளை விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் சிறார் படைச் சேர்ப்பு மற்றும் பொது மக்கள் பஸ் மீதான குண்டுத் தாக்குதல் போன்றவை தொடர்பாகவும் அமெரிக்கா கவலையடைகின்றது.

இங்கே நாங்கள் இரு காரணிகளை பார்க்க வேண்டும் என நான் நினைக்கின்றேன்.

முதலாவதாக ஒரு ஜனநாயக நாடான இலங்கை பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் சிறார் படைச் சேர்ப்பு, பேரூந்துகள் மீதான குண்டு வெடிப்புக்கள் என்பனவாகும். இரண்டாவதாக அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இடம்பெற்று வரும் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரசாங்கம் உண்மையான விசாரணைகளை நடத்த வேண்டும்.

இலங்கையின் நீதித்துறையினரால் தெளிவான முறையில் நீதி விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பனவாகும்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பான முழுமையான விசாரணைகளுக்கும் அதற்கு உறுதுணையாக அனைத்துலக விசாரணை ஆணைக்குழுவை அமைப்பதற்கும் அமெரிக்கா ஆதவு வழங்கும். இலங்கையில் இடம்பெறும் முழு அளவிலான மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் நாம் கவனத்தை செலுத்தியுள்ளோம். எம்மால் அவதானிக்கப்படும் கடுமையான நிலைமைகள் தொடர்பாக நாம் அக்கறை கொண்டுள்ளோம் என்று கூறினார்

அரசுக்கு எதிராக ஐ.தே.கட்சி முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டம்

கொழும்பு,ஏப்.16

நாட்டில் தற்போது இடம்பெற்று வரு கின்ற யுத்தம், கொலைகள், ஆட்கடத்தல் கள், கப்பம்கோரல், கொள்ளை, பாலியல் வல்லுறவு போன்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகள், விலைவாசி அதிகரிப்பு மற்றும் அரசில் இடம்பெறுகின்றன என்று கூறப்படுகின்ற ஊழல் நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு எதிராக, பெரிய அளவி லான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்த ஐக்கியதேசியக்கட்சி முடிவு செய்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிர மசிங்க தலைமையிலான அரசியல்குழு கடந்த வாரம் கொழும்பு கேம்பிரிஜ் டெரெ ஸில் உள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் அலுவலகத்தில் கடந்த வாரம் கூடி ஆராய்ந்து இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்தக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் குழுவைச் சேர்ந்த 20 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டு தற் போதைய நாட்டுநிலைமை தொடர்பாக பல்வேறு வகையான கருத்துகளையும், யோசனைகளையும் முன்வைத்தனர் என்று கூறப்பட்டது.

இதன்படி மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் நாட்டில் உள்ள பிரதான நக ரங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்களையும் பொதுக்கூட்டங்களையும் நடத்த முடி வாகியுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள விடயங்களுக்கு அப்பால், யுத்தம் காரணமாக உள்ளூரி லும் இந்தியாவிற்கும் இடம்பெயர்ந்துள்ள தமிழ் அகதிகள் நிலை தொடர்பாகவும் இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட் டுள்ளது.

குறிப்பாக படையினரின் ஷெல் தாக்கு தல்கள் காரணமாக மட்டக்களப்பில் இடம் பெயர்ந்து அகதிமுகாம்களில் வாழும் அகதிகளின் நிலைபற்றியும் தற்போது வெள்ளத்தால் அனுபவிக்கும் துன்பம் பற்றியும் இங்கு விரிவாகக் கலந்துரையா டப்பட்டது.

இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து தமிழ் நாட்டில் அகதிமுகாம்களில் வாழ்கின்ற தமிழர்களின் நிலைபற்றியும் ஆராயப்பட்டுள்ளது.

ரணில்தான் தொடக்கி வைத்தார் அதை மகிந்த அமோகமாக கொண்டு நடத்துகிரார் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.