Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிமன்றில் வழக்கு – சட்ட விரோதமாக முல்லைத்தீவில் புத்தர் சிலை திறப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றில் வழக்கு – சட்ட விரோதமாக முல்லைத்தீவில் புத்தர் சிலை திறப்பு :

January 23, 2019
 
01-M.jpg?zoom=1.3224999725818633&resize=
 
முல்லைத்தீவு நாயாறு நீராவியடிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த புத்தர்சிலை, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இன்று காவல்துறை மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 
பௌத்திற்கு எந்த வித்திலும் தொடர்பற்ற குறித்த பகுதியில், அமைக்கப்பட்டு வந்த விகாரை தொடர்பில் நீதிமன்றம் ஊடாக தீர்ப்பினை மக்கள் எதிர்பார்திருந்த நிலையில், குறித்த விகாரை அமைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த பிக்கு, புத்தர்சிலையை இன்று திறந்துள்ளார்.
 
இந்த நிகழ்வு பிரதேச மக்களை பெரும் கவலைக்கும் அதிருப்திக்கும் உள்ளாக்கியுள்ளது. கடந்த 14 ஆம் திகதி அப்பகுதித் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளுக்காக சென்றவேளை அப்பகுதியில் குடியிருக்கும் பௌத்த துறவிக்கும் மக்களுக்குமிடையில் முறுகல் ஏற்பட்டிருந்தது.
இந்த முறுகல் நிலை தொடர்பாக முல்லைத்தீவு காவல்துறையிளர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதனையடுத்து எதிர்வரும் 29 ஆம் திகதி வழக்கிற்கு வருமாறு முரண்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் அழைப்புவிடுத்திருந்தது.

 

எனினும் அவசர நிலையொன்றினை உணர்ந்து, ஆலய நிர்வாகத்தினர் மற்றும், தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வி.நவநீதன் ஆகியோர் நகர்த்தல் பத்திரம் ஒன்றின்மூலம் அது தொடர்பன வழக்கை நேற்றைய தினத்திற்கு மாற்றி வழக்கு நடைபெற்றது.

 

நேற்றைய வழக்கு விசாரணைகளில், புத்தர் சிலை அமைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்பது, தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கிராம மக்களின் சார்பில் முன்னிலையானவர்களினால் வெளிப்படுத்தப்பட்டது. இதனால் குறித்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் உடையதாக மாறியது.

அத்துடன், முரண்பாட்டில் ஈடுபட்ட பௌத்த துறவியையும் எதிர்வரும் 24 ஆம் திகதியான நாளையதினம் மன்றில் முன்னிலையாகவேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டிருந்து. இந்த நிலையில், இன்றைய தினம் காவல்துறை மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினரின் ஆதரவுடன் சட்டவிரோதமான வகையில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை திறக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதேவேளை தகவலறிந்து குறித்த இடத்திற்கு விரைந்த முன்னாள் வடமாகாசபை உறுப்பினர் து.ரவிகரன், நிலமைகளை நேரில் கண்காணிக்கும்போது, அங்கிருந்த பௌத்த துறவிகள் மற்றும் தென்னிலங்கையைில் இருந்து வருகை தந்தவர்கள் சிலரும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர்.

மேலும் அங்கு செய்தி சேகரிப்பிற்குச் சென்ற ஊடகவியலாளர்களை தென்னிலங்கையில் இருந்து வருகை தந்தவர்களும், பௌத்த துறவிகள் சிலரும் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதுடன், ஊடகவியலாளர்களுடன் அவர்கள் முரண்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 01-12.jpg?zoom=1.3224999725818633&resize02-M.jpg?zoom=1.3224999725818633&resize=02-8.jpg?zoom=1.3224999725818633&resize=03-M.jpg?zoom=1.3224999725818633&resize=
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி

முல்லைத்தீவு, செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாவடியாக குருகந்த ரஜமகா விஹாரை என்ற பெயரில் விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் அப்பகுதியில் அமைக்கபட்டுவந்த பிரம்மாண்ட புத்தர்சிலை இன்று திறந்துவைக்கபட்டுள்ளது.

polmotai2.jpg

முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நாளைய தினம் பௌத்த பிக்கு மற்றும் பிள்ளையார் ஆலயத்தினருக்கும் முல்லைத்தீவு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைக்கபட்டுள்ளது.

இந்தநிலையில் இன்று புத்தர் சிலை திறக்கப்படுவதை அறிந்து செய்தி சேகரிப்புக்காக சென்ற ஊடகவியலாளர் ஒருவருக்கு குறித்த விகாரை பிக்குவாலும் புல்மோட்டை அரிசிமலையிலிருந்து வருகைதந்த பிக்குகளாலும் இடையூறு ஏற்படுத்தபட்டது.

polmotai1.jpg

polmotai3.jpg

மேலும் நேற்றையதினம் தகவலறியும் சட்டம் மூலம் ( RTI ) பெற்ற தகவல்படி பத்திரிகைகளுக்கு செய்தி அனுப்பியது என நாயரு விகாராதிபதி மிரட்டும் தொனியில் கேள்வி எழுப்பினார் .

பொலிசாரும் பிக்குகளும் இணைந்து நீண்டநேரம் குறித்த ஊடகவியலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் செய்தி சேகரிக்கவிடாது  தடைகளை ஏற்படுத்தினர் .அத்தோடு குறித்த ஊடகவியலாளரை பொலிசாரும் பிக்குகளும் இணைந்து புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஊடகவியலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/48579

1 hour ago, பிழம்பு said:

பொலிசாரும் பிக்குகளும் இணைந்து நீண்டநேரம் குறித்த ஊடகவியலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் செய்தி சேகரிக்கவிடாது  தடைகளை ஏற்படுத்தினர் .அத்தோடு குறித்த ஊடகவியலாளரை பொலிசாரும் பிக்குகளும் இணைந்து புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஊடகவியலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிங்கள-பௌத்த இனமதவெறி அரச பயங்கரவாதம் என்பதில் இதுவும் அடங்கும்!
சிங்கள-பௌத்த நீதித்துறையால் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது!
ரணிலுக்கு வக்காலத்து வாங்கும் சுமந்திரன் எங்கே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இப்படியான விடயங்களை பார்க்கவா சுமந்திரன் ரணிலின் ...... பின்னால் அலைகின்றார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.