Jump to content

குட்டி கதை -1


Recommended Posts

பதியப்பட்டது

காட்டில் புலி ஒன்று கழுதையிடம் வாதிட்டுக் கொண்டிருந்தது: “நீ சொல்றது பொய். புல் எப்பவுமே பச்சை நிறம்தான்.” 

“இல்லவே இல்லை புல்லின் நிறம் நீலம” என்றது கழுதை. விவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில்..

தீவிரமாகி, “சரி.. நாம அரண்மணைக்குப் போய் சிங்கராஜாட்ட கேட்கலாம்” என்று முடிவானது. கழுதையும் புலியும் அரண்மணைக்குள் சென்று சிங்கராஜா முன் நின்றனர். புலி பேசத்துவங்குமுன், கழுதை “ராஜா.. புல்லின் நிறம் நீலம்தானே.. இந்தப் புலி பச்சைனு சொல்லுது” என்றது. உடனே ராஜா.. “ஆமாம்.. 
புல்லின் நிறம் நீலம்தான். தவறாகச் சொன்ன இந்தப் புலிக்குத் தண்டனை..  ஓராண்டு காவல்” என்றது. கழுதை மகிழ்ச்சியாக வெளியேற, காவலர்கள் புலியை கைது செய்தனர். புலி பரிதாபமாக சிங்கராஜாவைப் பார்த்துக் கேட்டது. “யோவ் ராஜா.. இதென்ன போங்காட்டம்? சரியாச் சொன்னதுக்கு எனக்கு தண்டனையா?” 

அதற்கு சிங்கராஜா சொன்னது; “தண்டனை அதுக்காக அல்ல. முட்டாள் கழுதைகூடல்லாம் விவாதம் பண்ணி அதை அரண்மணை வரைக்கும் வரவெச்சுட்டியே.. அதுக்காகத்தான்!” 
 Dont Argue With Stupids!

 

#Twitter

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது யாருக்கோ  உள் குத்து போல இருக்குது 🤩

Posted
6 hours ago, ரதி said:

இது யாருக்கோ  உள் குத்து போல இருக்குது 🤩

அப்பிடி எல்லாம் இல்லைக்கா? 😄

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புல் பச்சை என்று எதை வைத்து நிரூபிப்பது?
எமது கண்களுக்கு அவை பச்சையாக தெரிகிறது 

பச்சை நிறமே ... நீலம் மஞ்சள் கலப்பால் வருவது. 
இதில் புல் பச்சை நிறம் என்று எதை அடிப்படையாக வைத்து 
வாதிடுவது? 

ஒருவேளை நிறங்களை பற்றிய அறிவு 
கழுதைக்கு புலியையும் சிங்கத்தையும் விட அதிகமாக 
இருந்து இருப்பின் ... 

இந்த கதையில் யார் முட்டாள்? 

Additive-and-Subtractive-Color.png

Related image

  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, Maruthankerny said:

இந்த கதையில் யார் முட்டாள்? 

Moral of the story ஐ விட்டுவிட்டு  வர்ணக் கலவைகளுக்கு விளக்கம் கொடுப்பவர்தான்!😬

அடிப்படை வர்ணங்கள் சிவப்பு, பச்சை, நீலம். மஞ்சள் அடிப்படை வர்ணம் இல்லை.

மனிதர்களின் கண்களில் உள்ள வர்ண நிறங்களை உணரும் கூம்புகள் மூன்று வர்ணங்களைத்தான் வைத்து எல்லா வர்ணங்களையும் காணச் செய்கின்றன. இதே வர்ணக் கூம்புகள் கழுதைக்கும், புலிக்கும், சிங்கத்திற்கும் இருக்குமா என்று தெரியாது. ஆனால் குதிரை பச்சையை பழுப்பாகத்தான் காணும் என்று எங்கோ படித்த நினைவு!

 

6iOu8.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, கிருபன் said:

Moral of the story ஐ விட்டுவிட்டு  வர்ணக் கலவைகளுக்கு விளக்கம் கொடுப்பவர்தான்!😬

அடிப்படை வர்ணங்கள் சிவப்பு, பச்சை, நீலம். மஞ்சள் அடிப்படை வர்ணம் இல்லை.

மனிதர்களின் கண்களில் உள்ள வர்ண நிறங்களை உணரும் கூம்புகள் மூன்று வர்ணங்களைத்தான் வைத்து எல்லா வர்ணங்களையும் காணச் செய்கின்றன. இதே வர்ணக் கூம்புகள் கழுதைக்கும், புலிக்கும், சிங்கத்திற்கும் இருக்குமா என்று தெரியாது. ஆனால் குதிரை பச்சையை பழுப்பாகத்தான் காணும் என்று எங்கோ படித்த நினைவு!

 

6iOu8.png

Related image

Related image

Related image

நாய்க்கு கறுப்பு வெள்ளைதான் தெரியும் ...

கதையில் மிருகங்கள் வந்தாலும் ...
கதை மனிதர்களை பற்றியது.

உலகம் உருண்டை என்றவனை 
முட்டாள் என்று கூறி ஏளனம் செய்து கைகொட்டி சிரித்து 
கொலைசெய்த புத்திசாலி உலகமும் இதுதான். 

 

இந்த உலகில் முட்டாள் ஆக 
இருப்பது சிறப்பு ... எந்த மன கஸ்ட்டமும் இல்லை. 

Posted

வாழ்க்கையில் எல்லாவற்றையும் அறிவு கண் கொண்டு பார்க்க வெளிக்கிட்டால் இப்படியான பிரச்சினைகள் வருவது இயல்பே..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On ‎1‎/‎27‎/‎2019 at 11:28 PM, அபராஜிதன் said:

அப்பிடி எல்லாம் இல்லைக்கா? 😄

நான் என்ட அனுபவத்தில் கன தரம் உணர்ந்து இருக்கிறேன்....கதைச்சு வேலை இல்லை தங்களாவே பட்டு உணரட்டும் என்று இப்ப பேசாமல் இருக்க பழகிட்டன்  

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.