Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் தொடரும் பாலியல் துஷ்பிரயோகங்கள் – மீண்டுமொரு சம்பவம் பதிவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

da37b43438772b32171e661cbdb41edc-720x450.jpg

யாழில் தொடரும் பாலியல் துஷ்பிரயோகங்கள் – மீண்டுமொரு சம்பவம் பதிவு!

கொக்குவில் பகுதியில் பதின்ம வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிற்குச் சென்று தலைமறைவாகியிருந்த சந்தேகநபர், நேற்று வான் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது வானையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

குறித்த நபரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

கொக்குவில் பகுதியில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை விவாகரத்து பெற்ற நிலையில், சிறுமி தாயாருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தாயாருக்கும் வேறு ஒரு நபருக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனால் குறித்த நபர் சிறுமியின் வீட்டுக்கு வந்து சென்ற நேரங்களில், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுமி தனது தாயாருக்கு தெரியப்படுத்திய போதிலும், தாயார் இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தாத நிலையில் சிறுமி தனது தந்தைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து அவரது தந்தை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தந்தையின் முறைப்பாட்டின் பிரகாரம் தாயின் பாதுகாப்பில் இருந்த சிறுமியை மீட்ட பொலிஸார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

http://athavannews.com/யாழில்-தொடரும்-பாலியல்-த/

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமிகளுக்கு ஏற்படும் உளபாதிப்பு அவர்களது வாழ்க்கையில் பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தும், சிறுமியின் துணிவு, தன்னை தற்காத்துகொள்ள தந்தை மூலமாக எடுத்த முயற்சிக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியவருக்கு விளக்கமறியல்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
judge.jpg?zoom=1.1024999499320984&resize
“பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவது பாரதூரமான குற்றம். அது சமூகத்துக்கு அச்சுறுத்தல் விடுவிக்கும் சம்பவம். அவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவரை விசாரணைகள் நிறைவடைவதற்குள் பிணையில் விடுவிப்பது ஏற்புடையது அல்ல” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் சுட்டிக்காட்டினார்.
 
கொக்குவில் பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றில் முற்படுத்திய சந்தேகநபரை பிணையில் விடுவிக்க முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை நிராகரித்து விளக்கமறியல் உத்தரவு வழங்கிய போதே நீதிவான் இதனைச் சுட்டிக்காட்டினார்.
 
கொக்குவில் பகுதியில் குடும்பப் பெண் ஒருவருடன் முறையற்ற உறவை வைத்திருந்த வான் சாரதி ஒருவர், அந்தப் பெண்ணின் பதின்ம வயதுச் சிறுமியை  வன்புணர்வுக்குட்படுத்தினார் என்று கோப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
 
அந்தப் பெண்ணிடமிருந்து மணநீக்கம் பெற்ற பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இந்த முறைப்பாட்டை வழங்கியதனடிப்படையில் தாயாரின் பாதுகாப்பிலிருந்த சிறுமியை மீட்ட காவல்துறையினர், அவரை சட்ட மருத்துவரின் பரிசோதனைக்குட்படுத்தினர்.
 
அத்துடன் சந்தேகநபரை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவையும் காவல்துறையினர் இந்த மாத முற்பகுதியில் யாழ்ப்பாணம் நீதிமன்றில் பெற்றிருந்தனர்.  எனினும் சந்தேகநபர் இந்தியாவுக்குச் சென்றிருந்ததால் அவரைக் கைது செய்ய முடியவில்லை.
 
இந்த நிலையில் சந்தேகநபர் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அவரது உறவினர் ஒருவரின் இறுதி சடங்குக்கு வந்துள்ளமையை காவல்துறையினர் அறிந்து கொண்டனர். அதனை அடுத்து சந்தேகநபர் நேற்றுத் திங்கட்கிழமை வான் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது கைது செய்ததுடன் அவரது வானையும் கைப்பற்றினர்.
 
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவருக்கு எதிராக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழான முதல் அறிக்கையின் கீழ் முற்படுத்தப்பட்டார்.  சந்தேகநபர் சார்பில் முன்னிலையான  சிரேஸ்ட சட்டத்தரணி   சந்தேகநபர் சார்பில் அவர் பிணை விண்ணப்பத்தை முன்வைத்தார்.
 
“சந்தேகநபருக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கும் தொடர்பில்லை. அவர் சிறுமியை தாயாரின் அனுமதியுடனேயே 3 தடவைகள் வெளியில் அழைத்துச் சென்றார். அதனால் சந்தேகநபரை பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று  சிரேஸ்ட சட்டத்தரணி மன்றுரைத்தார்.
 
சந்தேநபர் சார்பான பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், “பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவது பாரதூரமான குற்றம். அது சமூகத்துக்கு அச்சுறுத்தல் விடுவிக்கும் சம்பவம்.
 
அத்துடன், சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டுத் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முடிவுறுத்தவில்லை. அதனால் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது” என்று சுட்டிக்காட்டி சந்தேநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.