Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.மத்திய பேருந்து நிலையம் நவீனமயப்படுத்தப்படவுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மத்திய பேருந்து நிலையம் நவீனமயப்படுத்தப்படவுள்ளது

January 29, 2019

jaffna-bus-stand.jpg?resize=800%2C450

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.மத்திய பேருந்து நிலையம் நவீன மயப்படுத்தப்பட்ட பேருந்து நிலையமாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. அதற்கான பணிகள் மார்ச் மாத நடுபகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மூன்று மாடிகளை கொண்ட வர்த்தக தொகுதி , வாகன தரிப்பிடம் என்பவற்றை உள்ளடக்கி , யாழ்.போதனா வைத்திய சாலை மற்றும் நவீன சந்தை ஆகியவற்றை இணைத்து மேம்பாலமும் கட்டப்படவுள்ளது.இதற்காக 400 மில்லியன் ரூபாய் நிதியினை பெருநகர மேல்மாகாண அமைச்சு ஒதுக்கியுள்ளது.

யாழ்.மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதிகளில் காணப்படும் தற்காலிக கடைகளை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறும் , தவறும் பட்சத்தில் மாநகர கட்டளை சட்டத்தின் பிரகாரம் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் அறிவித்துள்ளார்.

அது தொடர்பில் முதல்வர் தெரிவிக்கையில் ,

தற்போதைய மத்திய பேருந்து நிலையத்தை நவீன மயப்படுத்துவதற்கான புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண நகரப்பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெருக்கடி , சுகாதார சீர்கேடுகள் , சன நெருக்கடிகள், வியாபர நிலையங்களுக்கான நெருக்கடி, இடப்பற்றாக்குறைகள் , ஆகியவற்றை தீர்க்கும் முகமாக தற்போதுள்ள பேருந்து நிலையம் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வுள்ளதனால் , தற்போதைய மத்திய பேருந்து நிலையம் தற்காலிகமாக ஸ்ரான்லி வீதியில் , யாழ்.புகையிரத நிலையத்திற்கு பின்புறமாக மாற்றப்படவுள்ளது.

புனரமைப்பு பணிகளின் பின்னர் தற்போது அங்கே தற்காலிக வர்த்தக நிலையம் நடாத்தியவர்களிற்கு மாநகர சபைச் சட்டத்திற்கு அமைய இடங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என தெரிவித்தார

 

http://globaltamilnews.net/2019/111476/

 

அந்த குட்டி இடதுக்குள்ள நவீனப்படுத்தல் சாத்தியமா?

31 minutes ago, Rajesh said:

அந்த குட்டி இடதுக்குள்ள நவீனப்படுத்தல் சாத்தியமா?

நிச்சயமா இல்லை 

யாழ் புகையிரத நிலையத்துக்கும் ஸ்டான்லி வீதிக்கு இடைப்பட்ட அரசாங்க காணியில் உள்ளூர் போக்குவரத்து நிலையத்தையும் வெளியூர் போக்குவரத்தை பண்ணைக்கும் மாற்ற அரசினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் - நம்ம மாகாண சபை + மாநகராட்சி புடுங்கலில் அது காத்தோடு போனது மறந்த கதை.

புலிகளின் காலத்தில் இவ்விடம் பேருந்து நிலையமாக பாவிக்கப்பட்டதாக அறிந்தேன் - உண்மை தெரியாது. தெரிந்தவர்கள் எழுதலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.