Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

தமிழ் மாணவி... விண்வெளிக்கு செல்ல உள்ளார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

625.0.560.320.160.600.053.800.700.160.90-720x450.jpg

விண்வெளிக்கு பயணமாகும், முதல் ஈழத்தமிழ் மாணவி!

ஈழத்தமிழ் மாணவி ஒருவர் முதன்முறையாக சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு பயணமாகவுள்ளார்.

பிரித்தானியாவில் வசிக்கும் சியோபன் ஞானகுலேந்திரன் என்ற மாணவியே, விண்வெளி தொடர்பான கற்கைநெறியில் சிறப்பு தேர்ச்சி பெற்று விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார்.

பிரித்தானியாவிலுள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்வி கற்று வருகின்றனர்.

செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியிலிருந்து நில அளவை செய்வது என பல துறைகளில் சுமார் 30,000 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆய்வு மையம் தீர்மானித்திருந்தது.

அதன்படி,  ஈழத்தமிழ் மாணவியான சியோபன் ஞானகுலேந்திரன் திறமையாக செயற்பட்டு விண்வெளிக்கு செல்லும் இருவரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இவருடன் இணைந்து பிரித்தானிய மாணவியான டியானாவும் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார்.

Tamil_News_large_2203552.jpg

http://athavannews.com/விண்வெளிக்கு-பயணமாகும்-ம/

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பறக்கும் பாவைகளுக்கு வாழ்த்துக்கள். போய் வாருங்கள்.......!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது போன்று செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேரும் சமயம் வந்தால் யாரெல்லாம் குடியேர தயாராவீர்கள்...

எனது வீட்டில் வெளிநாடு என்றாலே என் மனைவி துடைப்பானையும் செருப்பையும் எடுக்காத குறை தான்... எனது மனைவி மட்டுமல்ல குடும்பமே...

இந்த சிறு வயதில் விண்வெளிக்கு செல்லும் இந்த மங்கைக்கு எந்தளவு மன துணிச்சலும் பக்குவமும் இருந்திருக்க வேண்டும்...

இதய பூர்வமான வாழ்த்துக்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

E_1476333361.jpeg

பிரபஞ்சத்தை அருகில் காண செல்லும் மாணவிக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் .. 💐

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • களையப்படவேண்டிய களைகளை களைந்தாலே நன்மையடைய முடியும். இல்லையேல் பழைய குருடி கதவைத் திறவாடி கதைதான். பொது அமைப்புகள் சேர்ந்து ஆரம்பித்த நடைபவனியை தமதாக்கிக்கொண்டதுபோல் நான்தான் இணைத்தேன், நான்தான் செய்தேன் என்பார்கள். பிரிந்து சென்ற தேசியக்கட்சிகளை மீண்டும் இணைத்துக்கொள்வீர்களா என்று சுமந்திரனிடம் வினவியபோது, மக்களே தீர்மானித்து எங்களுக்கு வாக்களித்து விட்டார்கள் என்று பதிலளித்துள்ளார். ஆனால் அவரையுந்தான் விலக்கியுள்ளார்கள் என்பதை அவர் ஏற்றுக்கொள்வதாக இல்லை. ஆகவே அவரை விலத்திவிடுவது எல்லோர்க்கும் நல்லது. அவர் இனி கட்சியைப்பற்றி எந்த முடிவும் எடுக்க அனுமதிக்க கூடாது. அவரே சொன்னவற்றை, செய்தவற்றை நினைவு படுத்துங்கள். மற்றவருக்கு குழிபறிக்கும்போது மண்வெட்டி தன்பக்கமும் பாத்திருக்கு என்பதை விளங்க மறுத்து, மறந்து விடுகிறார்கள். ஆம், என்றால் கோட்டுக்கு போவேன் என்று எச்சரிக்கிறது, முக்கிய தனக்கு பாதகமான தீர்மானம் எடுக்கும்,  கூட்டங்களுக்கு சமூகமளிக்காமல் விடுவது, நழுவுவது இதெல்லாம் அழகா? அவரது சொல் செயல்  வடக்கின் வசந்தம் கட்சிக்கே பொருத்தமானவர்.
    • சுமந்திரன் ஒருவரால் தான்…. தமிழரசு கட்சியில் இவ்வளவு பிரச்சினைகளும், பிழவுகளும் ஏற்பட்டது. நடந்து முடிந்த தேர்தலிலும் தமிழரசு கட்சி படு தோல்வி அடைந்ததற்கு சுமந்திரனின் செயல்களே முக்கிய காரணம். அதனை மக்களே “தேவை இல்லாத ஆணி” என்று  அவரை வாக்குகளால் தோற்கடித்து  காட்டி  விட்டார்கள்.  இப்போ கட்சியை விட்டு சுமந்திரனை வெளியே அனுப்ப வேண்டிய பொறுப்பு தமிழரசு கட்சியிடமே உள்ளது. 💪  சுமந்திரனை தூக்கி வெளியே போட்ட அடுத்த  நிமிடமே…  தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு அணியாக திரளும். ✅ அதை விட்டுட்டு…. போகாத ஊருக்கு, வழி சொல்லிக் கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை.
    • ஆர்.ராம் தமிழ்த் தலைவர்கள் நீண்டகாலமாக வாக்குறுதிகளை நிறைவேற்றாதிருக்கின்ற நிலையில் அவர்கள் மீதான ஏமாற்றமே வடக்கு, கிழக்கில் எமது வெற்றிக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீதும், தேசிய மக்கள் சக்தியின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையை குலைக்கப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார். தேசிய மக்கள் சக்தி, வடக்கு, கிழக்கில் பெற்றுள்ள தேர்தல் வெற்றி சம்பந்தமான கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலின்போது, ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் அவரை ஆதரித்த பரிவாரங்களும் எம்மை தமிழ் மக்களின் எதிரிகளாக சித்தரித்து பிரசாரங்களை செய்தார்கள். சொற்ப காலமே ஆட்சியில் இருப்பார்கள். வன்முறைகள் தோற்றம் பெறும் என்றும் கூறினார்கள். இதனால் தமிழ் மக்கள் மத்தியில் எம்மீது சந்தேகங்கள் இருந்தன. இதனால் 25ஆயிரத்துக்கு உட்பட்டதாகவே வாக்குகளை அளித்தார்கள். ஆனால் ஜனாதிபதி தேர்தலின் பின்னரான 45நாட்களில் ஜனாதிபதி அநுரகுமாரவின் ஆட்சியை மக்கள் நேரடியாகவே பார்த்தார்கள். எந்தவிதமான வன்முறைகளும் இடம்பெறவில்லை. சுமூகமான நிலையில் நாடு செயற்பட்டது. இதனால் தமிழ் மக்களுக்கு எம்மீதான நம்பிக்கை ஏற்பட்டது அதுமட்டுமன்றி, எழுபது ஆண்டுகளாக பிரபுத்துவ தமிழ் அரசியல்வாதிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்கள். ஆனால் அவர்கள் அளித்த வாக்குறுதிகள் எவற்றையும் நிறைவேற்றவில்லை. தமிழ் மக்களுக்கான உரிமைகளையும் பெற்றுக்கொடுக்கவில்லை. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அன்றாடம் அவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்றார்கள். போதைப்பொருள் பாவனைக்கு இளையோர் அடிமையாதல் உள்ளிட்ட நெருக்கடிகள் பல உள்ளன. அந்தப்பிரச்சினைகள் கூட சரியாகக் கையாளப்படவில்லை. இதனால் அவர்கள் அரசியல் பிரச்சினைகளுக்கு முன்னதாக தமது அன்றாடப் பிரச்சினைகளை களைவதற்காக மாற்றத்தை எதிர்பார்த்தார்கள். அந்த மாற்றத்துக்காவே எமக்கு வாக்களித்துள்ளார்கள். நாம் நிச்சயமாக அவர்கள் கொண்டிருக்கின்ற எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம். ஜனாதிபதி அநுரகுமாரவும்ரூபவ் தேசிய மக்கள் சக்தியும் தமிழ் மக்களின் நம்பிக்கையை குலைக்காது பாதுகாக்கும் என்றார். https://www.virakesari.lk/article/198945
    • ரஷ்யா நாட்டில் செக்ஸிற்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்த ஜனாதிபதி விளாடிமிர் புதின் திட்டமிட்டுள்ளார். இதற்கான காரணம் குறித்த பின்னணி தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. ரஷ்யாவுக்கும் – உக்ரைன் நாட்டிற்கும் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இருநாட்டு எல்லையில் உள்ள ஏராளமான பொதுமக்கள் இடம்பெயர்ந்து வருகிறார்கள். இதனால் இந்த இரு நாடுகளிலும், மக்கள் தொகை எண்ணிக்கையில் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வலிமையான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ரஷ்யாவுக்கு இந்த மக்கள் தொகை பெருக்கம் குறைவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் ரஷ்யாவில் மக்கள் தொகை குறைந்து வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே மக்கள் தொகையை அதிகரிப்பது குறித்து நிபுணர் குழுவிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் பாலியல் அமைச்சகம் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் மக்கள் தொகையை அதிகரிக்கச் செய்யலாம் என்று சிலர் ஆலோசனை கூறியிருந்தனர். இந்த ஆலோசனை ஏற்று செக்ஸ் விவகார அமைச்சகத்தை ஏற்படுத்த ரஷ்ய அதிபர் புதின் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதே போன்று மக்கள் தொகையை அதிகரிக்க மற்ற எந்தெந்த வழிகளை கையாளலாம் என்பது பற்றியும் நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்கள். அந்த ஆலோசனையில் பின்வரும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதாவது பொதுமக்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை தங்கள் வீடுகளில் இன்டர்நெட், விளக்குகளை அணைத்து விட்டு குழந்தைகளை உருவாக்க உடலுறவு கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இன்னொரு ஆலோசனையில், வீட்டிலேயே தங்கி தங்களது குழந்தைகளை வழக்கும் பெண்களுக்கு அரசு தரப்பில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/312202
    • தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக ஜெனிவாவில் இனி கேள்வியெழுப்ப முடியாது; அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் - சட்டத்தரணி பிரதீபா மஹாநாம (இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். அரசியல் கட்டமைப்பில் இருந்து தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று  ஜெனிவாவில்  இனி கேள்வியெழுப்ப முடியாது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சட்டத்தரணி பிரதீபா மஹாநாம தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பொதுத்தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி  21 தேர்தல் மாவட்டங்களிலும் அமோக வெற்றிப் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பாரம்பரியமான அரசியல் கலாச்சாரத்தில் இருந்து விலகி புதிய அரசியல் கலாச்சாரத்துக்குள் பிரவேசித்துள்ளார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். எவ்விதமான அரசியல் கூட்டணியுமில்லாமல் தேசிய மக்கள் சக்தி வெற்றிப் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பொது அரசியல் கட்டமைப்பில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவே கடந்த காலங்களில் சர்வதேச மட்டத்திலும்,  சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் தொடர்ச்சியாக குறிப்பிட்டது. இந்த விடயங்களை முன்னிலைப்படுத்தி இலங்கைக்கு எதிரான பிரேரணைகளும் முன்வைக்கப்பட்டன. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். ஆகவே, பொது அரசியல் கட்டமைப்பில் இருந்து தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள் என்று இனி ஜெனிவாவில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர்  2025 பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. தமிழ் மக்கள் புதிய அரசியல் கட்டமைப்புக்குள் பிரவேசித்துள்ளார்கள், பழைய பாரம்பரியமான அரசியல் கட்டமைப்பை புறக்கணித்துள்ளார்கள் என்ற செய்தியை அரசாங்கம் சர்வதேச அரங்கில் எடுத்துரைக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எவ்விதமான எதிர்பார்ப்பு மற்றும் நிபந்தனைகளின்றி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவளித்துள்ளார்கள். ஆகவே தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி நாட்டின் சட்ட கட்டமைப்புக்குள் இருந்துக் கொண்டு தீர்மானங்களை எடுக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக  சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும். அத்துடன் நாட்டில் மனித உரிமையை மென்மேலும் வலுப்படுத்த பாராளுமன்ற பொறிமுறைக்குள் விசேட செயற்திட்டங்களை வகுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/198926
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.