Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கியமைக்காக மாணவன் தாக்கப்படவில்லை – பிரதிக் காவல்துறைமா அதிபர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கியமைக்காக மாணவன் தாக்கப்படவில்லை – பிரதிக் காவல்துறைமா அதிபர்

February 2, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சியில் கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கிய மாணவன் ஒருவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அச் சிறுவன் தாக்கப்பட்டத்திற்கும், கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கியமைக்கு எதுவித தொடர்புமில்லை என வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் ரொஷான் பனான்ர்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுவன் துவிச்சக்கரவண்டியில் பயணித்த போது மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் குறித்த சிறுவனது துவிச்சக்கர வண்டிக்கு முன்பாக தமது மோட்டார் சைக்கிளை திருப்பியதால் ஏற்பட்ட விபத்திலேயே இச் சிறுவன் காயமடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கியமையாலேயே தாக்கப்பட்டதாக முறைப்பாடு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காவல்துறையினருருக்கு கஞ்சா கடத்தல்கள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பாக பொது மக்களால் வழங்கப்படும் தகவல்கள் தொடர்பில் யாரிடமும் பகிரப்படாது எனவும் அது இரகசியமான முறையிலேயே பேணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த மாணவன் கஞ்சா தொடர்பாக தகவல் வழங்கியமையாலேயே இத் தாக்குதல் நடாத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்ததுடன் இன்றைய தினம் இதனை கண்டித்து கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

http://globaltamilnews.net/2019/111968/

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
51562076_1976978535754465_67819056771041

4 minutes ago, பிழம்பு said:

கஞ்சா கடத்தலை வழிநடத்துவதே இந்த ரொஷான் பனான்ர்டோ தானே!

சிங்கள-பௌத்த போலீஸ் காடையர்கள் தமிழ் மண்ணை ஆக்கிரமித்திருக்கும் வரைக்கும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது.

மாணவன் தாக்கப்பட்டமைக்கு எதிராக கிளிநொச்சியில் ஆர்பாட்டம்!

போதைப் பொருட்களுக்கு எதிராகவும், தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது கஞ்சா விற்பனை தகவல் வழங்கிய மாணவன் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று 02-02-2019 கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை ஒன்பது மணிக்கு கிளிநொச்சி டிப்போச் சந்தியிலிருந்து ஆரம்பமான கண்டன ஆர்ப்பாட்டம் கிளிநொச்சி பொலீஸ் நிலையம் வரை சென்றடைந்து. அங்கு கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி பொலீஸ் மா அதிபருக்கான மகஜரும் கையளிக்கப்பட்டது.

போதையை ஒழிக்கும் பாதையை வளர்ப்போம், போதைப் பொருட்களிலிருந்து எம் மாணவர்களை பாதுகாப்போம், போதை அது சாவின் பாதை, வேண்டாம் போதைப் பொருள் வேண்டாம், போதைப் பொருளிலிருந்து எம் சமூகத்தை பாதுகாப்போம்,கஞ்சாசையும் கசிப்பையும் குடித்து உன் வாழ்வை சிதைக்காதே, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தவாறு பேரணி இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

https://www.ibctamil.com/srilanka/80/113269

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.