Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினி: பெரியாரும் வாழ்த்தும் சூப்பர் அப்பா !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி: பெரியாரும் வாழ்த்தும் சூப்பர் அப்பா !

65.jpg

ஆரா

ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் நேற்று பிப்ரவரி 11 ஆம் தேதி நடந்தத் திருமணம் மிக விமரிசையாக, பல்வேறு பிரபலங்கள், பெரிய மனிதர்களின் ஆசீர்வாதத்தோடும் வாழ்த்துகளோடும் நடந்தது.

ரஜினியின் மகளும், அவரது கணவரும் மணமகள்-மணமகனாக வீற்றிருக்க நடுவே சௌந்தர்யாவின் பிஞ்சு மகன் அமர்ந்திருக்க அதை ரஜினி அருகே நின்று பார்க்கும் அந்தப் புகைப்படம் ரஜினிக்கு சூப்பர் அப்பா என்ற அன்புப் பட்டத்தை இந்த தமிழ்ச் சமூகத்தில் பெற்றுத் தந்திருக்கிறது.

ரஜினியின் பெரும்பாலான படங்களில், பெண்கள் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும், கிழித்த கோட்டைத் தாண்டக் கூடாது என்ற மரபுக் குரலே அவரது குரலாக ஒலிக்கும். மன்னன் படத்தில் பெண்களை சண்டி ராணியாகவும், அல்லி ராணியாகவும் காட்டி கப்பம் கேட்கும் ரஜினி, படையப்பாவில் நீலாம்பரிக்கு பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று தியேட்டர்கள் அதிர அதிர வகுப்பெடுப்பார்.

அந்த ரஜினியா இந்த ரஜினி என்று நினைக்கையில்தான் சூப்பர் ஸ்டார் சூப்பர் அப்பாவாகிவிட்டார்.

ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் முதல் திருமண வாழ்வு இனிக்கவில்லை. அதனால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள். இந்நிலையில்தான் ரஜினியே தன் இரண்டாவது செல்ல மகளுக்காக அவரது பாணியில் சொல்ல வேண்டுமானால்... ‘ச்சும்மா அதிர அதிர’ கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்.

இந்த விஷயம் இரண்டு வேறுபட்ட உளவியல் பார்வைகளை முன்னிறுத்தியிருக்கிறது. ‘அம்மாவின் திருமணத்தைப் பார்த்த மகன்’ என்ற கேலி கிண்டல்கள் ஒருபக்கம் எவ்வித லஜ்ஜையும் இன்றி ரஜினி குடும்பத்தைக் குறிவைத்து ஏவப்படுகின்றன. இன்னொரு பக்கம் ஒரு பெண்ணின் அதுவும் இளம் பெண்ணின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட தந்தையாக ரஜினியை பாராட்டித் தள்ளும் நெகிழ்ச்சியான கருத்துரைகள் ரஜினி மீது வாழ்த்துப் பூக்களாக தூவப்படுகின்றன. இந்த வாழ்த்துப் பூக்களின் பின்னால் பெரியாரும் சிரித்து ரஜினியை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்.

65a.jpg

பெரியாரை தமிழ்நாட்டின் பொதுப்புத்தி கடவுள் நம்பிக்கை பற்றி வறட்டு வகுப்பெடுப்பவர் என்றே முத்திரை குத்தி வைத்திருந்தது. பெரியார் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியலை நடைமுறை இயலோடு பொருத்தி எவ்வளவு நுட்பமான தொலைநோக்குக் சிந்தனைகளை அன்றே வெளியிட்டிருக்கிறார் என்பதெல்லாம் அந்த பொதுமைச் சித்திரிப்புகளுக்குள் புதைந்து கிடந்தது. ஆனால் அதையெல்லாம் தாண்டி சமீப ஆண்டுகளாகத்தான் பெரியாரின் சமூகக் கோட்பாடுகள் சமூகத்தின் பல்வேறு பிரதிநிதிகளிடையே அலசப்படுகின்றன என்பது ஆறுதல் தரத்தக்க விஷயம்.

திருமணம் என்பதே வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம் என்று வரையறுக்கும் பெரியார், மறுமணத்தை தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். “ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதுதான் வாழ்க்கை. வாழ்க்கை நடத்த ஆணும் பெண்ணும் உற்ற துணைவர்கள் ஆவார்கள் என்பதைக் குறிப்பதுதான் வாழ்க்கைத் துணை என்பதாகும். வாழ்க்கை என்பது சுதந்திர இன்ப வாழ்க்கையே அன்றி கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட துன்ப வாழ்க்கையல்ல” என்கிறார் பெரியார்.

மேலும் அவர், “ உலக இன்பத்தை நுகர்ந்து அலுத்துப் போயிருக்கும் பழுத்த கிழவனே ஆயினும் தன் மனைவி இறந்துபட்டவுடன் மறுமணம் புரிய முயலுகின்றான். அதுவும் வனப்பு மிகுந்த எழில் கொழிக்கும் இளநங்கை ஒருத்தியை தேர்ந்தெடுக்கிறான்.

ஆயின் ஒரு இளம்பெண் தன் கொழுநனை இழந்துவிட்டால் (கொழுநன் இறந்துவிட்டால் என பெரியார் சொல்லுகிறார்) அவள் உலக இன்பத்தையே துய்க்காதவளாக இருப்பினும் அவள் தன் ஆயுட்காலம் முழுதும் இயற்கைக்குக் கட்புலனை இறுக்க மூடி மனம் நொந்து வருந்தி, மடிய நிபந்தனை ஏற்பட்டு விடுகின்றது... இஃது என்ன அநியாயம்?” என்று கேட்கிறார் பெரியார்.

பெரியாரின் இந்தக் கேள்விக்கு எத்தனையோ அமைப்புகள், தனி நபர்கள் மறுமணம் மூலம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் இந்த சமூகத்தின் காதுகளிலும், கண்களிலும் புலப்படுவது கிடையாது. புலப்பட்டாலும் அது பொதுமைச் செய்தியாக ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படுவது கிடையாது.

ஆயின் அதையே ரஜினி போன்ற ஆன்மீக அரசியலாளர்கள் செய்யும்போது பெரியாரின் சமூகவியல் வழியில்தான் ரஜினியும் பயணம் செய்கிறார் என்பதை சுட்டிக்காட்டி பாராட்ட வேண்டியது அவசியமாகிறது. இது பெரியாருக்கான பாராட்டு கிடையாது. ரஜினிக்கான பாராட்டுதான்.

ரஜினி தன் மகளின் மறுமணத்தை காதும் காதும் வைத்த மாதிரி திருப்பதியிலோ ரிஷிகேஷிலோ சில நிமிடங்களில் முடித்திருக்க முடியும். ஆனால் ஊரைக் கூட்டி செயற்கைக் கோள் சேனல்களைக் கூட்டி முதலமைச்சர் முதல் அனைத்து பெரிய இடத்து மனிதர்களையும் நேர் சென்று அழைத்து விழாக்கோலம் பூண வைத்து நடத்துவது என்பது ரஜினியின் மிகப்பெரிய உளவியல் மாற்றம். பெரியார் அன்று பல்வேறு கூட்டங்களில் விதைத்ததுதான் இன்று போயஸ் தோட்டத்திலும் விளைந்திருக்கிறது.

ப்65b.jpg

“சமூகத்தில் மறுமணம் என்றாலே அச்சப்பட்டு இரகசியமாகவோ அல்லது ஏளனங்களுக்கு எளிமையாகவோ செய்யவேண்டும் என்ற நிலை. அதுவும் ஒரு பெண்ணின் இரண்டாம் திருமணம்தான் கொண்டாட்டத்தோடு செய்யவேண்டுமா....? என்ற கேள்வி. புதிய வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. மனுஷிகளுக்கும் அமைதியான ஏற்ற வாழ்க்கையும் உரிமைதான்! காலத்துகேற்ற நல்ல ஆரோக்கியமான மாற்றங்கள் தேவை.

பெண்கள் மறுமணம் தவறில்லை. தாலி கட்டிவிட்டாலே 'அதுதான் வாழ்க்கை என அனைத்தையும் பொறுத்து வாழவேண்டுமா? வாழ்த்துகள் ரஜினிகாந்த்” என்று கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் ஃபேஸ்புக்கில் பாராட்டுகிறார்.

பல இளம்பெண்கள் ரஜினியை சௌந்தர்யாவின் மறுமணத்துக்காக, அதை இவ்வளவு விமரிசையாக நடத்தியதற்காக தங்கள் அப்பா ஸ்தானத்தில் வைத்து கொண்டாடுகிறார்கள். பல ’சிங்கிள் மதர்’கள் ரஜினியைக் குறிப்பிட்டு ஆனந்தக் கண்ணீர் சிந்துகிறார்கள்.

ரஜினி எத்தனையோ சினிமாக்கள் மூலம் மெசேஜ் கொடுத்திருக்கிறார். சில தேர்தல் களங்களில் வாய்ஸ் கொடுத்திருக்கிறார். அவற்றையெல்லாம் கடந்து தன் மகள் சௌந்தர்யாவின் திருமணம் மூலம் அவர் தமிழ்ச் சமூகத்துக்காக வெளிப்படுத்தியிருக்கும் செய்தி மகத்தானது. வாழ்த்துகள் ரஜினிக்கும், மண மக்களுக்கும் மட்டுமல்ல... ’என்றோ நடக்கும் அது என் பெயர் சொல்லாமலே நடக்கும்’ என்பதை அறிந்தும் தளராமல் சொல்லிச் சென்ற அந்த சமூக மருத்துவர் பெரியாருக்கும்!

 

https://minnambalam.com/k/2019/02/12/65

 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஓர் அபத்தமான, அலம்பறை  கட்டுரை...

பெரியார்  மறுமணம் குறித்து பேசியது, போதித்தது, விதவைகள் மறுமணம் குறித்து.

இங்கே, இருவருமே, விவாகரத்து செய்து விட்டு, மீண்டும் திருமணம் செய்கின்றனர். 

அதிலும், பெண், ஒரு பிள்ளையையும் பெத்தவர், அந்த பிள்ளைக்கு, தார்மீக ரீதியாக ஒரு தந்தை உயிருடன் உள்ளார்.

இந்த நிலையில்,  இந்த திருமணத்தினை கோலாகலமாக நடத்தி முடித்த ரஜனியை ஆகா , ஓகோ என்று பெரியாரையும் இழுத்து....

சிம்பிளா நடத்தி, ஒரு யாருமில்லா குழந்தைகள்  அனாதை நிலையத்துக்கு , அந்த திருமணத்துக்கு செலவழித்து இருக்க கூடிய பணத்தினை கொடுத்து இருந்தால்.... ரஜனி, மாமனிதராய் உயர்ந்து இருப்பார்.

சும்மா பீலா... விட்டுக் கொண்டு... அய்யோ... ஐயோ.

தாலி, புனிதம் என்று திரைப்படங்களில் பத்தாம்பசலித்தனமான  கருத்துக்களை தெரிவிக்கும் ரஜனி நிஜத்தில் தான்பேசியவசங்கள் எல்லாம் முட்டாள்தனமானவை என்பது உணர்ந்து ஆணோ பெண்ணோ மனிதன் வாழும் போது சமூக பொது ஒழுக்கத்தோடு  மகிழ்ச்சியாக  வாழ்வதே உண்மையான வாழ்க்கை என்ற ஜதார்த்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். பாராட்டவேண்டிய மாற்றம்.மற்றப்படி திருமணத்தை விமர்சையாக செய்வது அவர் விருப்பம். அதில் எந்த தவறும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, tulpen said:

தாலி, புனிதம் என்று திரைப்படங்களில் பத்தாம்பசலித்தனமான  கருத்துக்களை தெரிவிக்கும் ரஜனி நிஜத்தில் தான்பேசியவசங்கள் எல்லாம் முட்டாள்தனமானவை என்பது உணர்ந்து ஆணோ பெண்ணோ மனிதன் வாழும் போது சமூக பொது ஒழுக்கத்தோடு  மகிழ்ச்சியாக  வாழ்வதே உண்மையான வாழ்க்கை என்ற ஜதார்த்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். பாராட்டவேண்டிய மாற்றம்.மற்றப்படி திருமணத்தை விமர்சையாக செய்வது அவர் விருப்பம். அதில் எந்த தவறும் இல்லை. 

ரஜனியின் தனிப்பட்ட விருப்பத்தில்  யாருமே தவறு சொல்லலையே. 

இந்த கட்டுரையாளரின் அலம்பறை குறித்து தான் பேசுகிறோம்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, tulpen said:

தாலி, புனிதம் என்று திரைப்படங்களில் பத்தாம்பசலித்தனமான  கருத்துக்களை தெரிவிக்கும் ரஜனி நிஜத்தில் தான்பேசியவசங்கள் எல்லாம் முட்டாள்தனமானவை என்பது உணர்ந்து ஆணோ பெண்ணோ மனிதன் வாழும் போது சமூக பொது ஒழுக்கத்தோடு  மகிழ்ச்சியாக  வாழ்வதே உண்மையான வாழ்க்கை என்ற ஜதார்த்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். பாராட்டவேண்டிய மாற்றம்.மற்றப்படி திருமணத்தை விமர்சையாக செய்வது அவர் விருப்பம். அதில் எந்த தவறும் இல்லை. 

மனம் ஒரு குரங்கு. அது நேரத்திற்கு நேரம் மாறும்.

அதை கணக்கு வைத்து திருமணம் நடத்த தினசரி திருமணம் செய்ய நேரிடும்.

மனித வாழ்க்கையில் சலிப்புகள் ஏராளம்.அதற்கு திருமணமும் தாலியும் தீர்வல்ல.

மனித மனம் ஒரு தடவை சுவைப்பட்டால் அது இன்னொரு தடவையும் அந்த சுவையை  தேடும். 

இதற்கு பச்சையாக பல உதாரணங்களை பகிரலாம். ஆனால் இங்கில்லை.
 

14 hours ago, குமாரசாமி said:

மனம் ஒரு குரங்கு. அது நேரத்திற்கு நேரம் மாறும்.

அதை கணக்கு வைத்து திருமணம் நடத்த தினசரி திருமணம் செய்ய நேரிடும்.

மனித வாழ்க்கையில் சலிப்புகள் ஏராளம்.அதற்கு திருமணமும் தாலியும் தீர்வல்ல.

மனித மனம் ஒரு தடவை சுவைப்பட்டால் அது இன்னொரு தடவையும் அந்த சுவையை  தேடும். 

இதற்கு பச்சையாக பல உதாரணங்களை பகிரலாம். ஆனால் இங்கில்லை.
 

இதில் நீங்கள் கூறுவது என்ன? ஒரு திருமணம் செய்த தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதை தீர்க்க முடியாமல் இருவரும் பிரிந்துவிட்டால் அந்த ஆணும் பெண்ணும்  தமக்கு பிடித்த வேறு ஒருவரைத் திருமணம் முடித்து சந்தோசமாக வாழ்க்கையை தொடரக்கூடாதா? (நான் கூறுவது அடிக்கடி  பொழுதுபோக்காக அது ணையை மாற்றிக்கொள்ளுவது பற்றி அல்ல) இயல்பான மனிதர்களைப்பற்றியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.