Jump to content

தாயக மக்களிற்கான புனர்வாழ்வு நிதிசேகரிப்பு - ஆய்வுப் போட்டி!


Recommended Posts

Posted

இன்னுமொருவன் உங்கள் கருத்துக்களிற்கு மிக்க நன்றி! உங்கள் கருத்துக்கள் போட்டியில் பங்குபற்றும் மற்றைய போட்டியாளர்களிற்கு பல தகவல்களை வழங்கியிருக்கின்றது. உங்களிற்கு விருப்பம் என்றால் நீங்களும் இந்தப் போட்டியில் ஒரு நடுவராகப் பணியாற்ற முடியும் என்பதை அன்புடன் அறியத் தருகின்றேன். அல்லது போட்டியாளராகவும் பங்குபற்ற முடியும். தேர்வு உங்கள் விருப்பம், நன்றி!

  • 2 weeks later...
  • Replies 68
  • Created
  • Last Reply
Posted

போட்டி யூன் 19 அன்று ஆரம்பமாகும்... மேலதிக தகவல்கள், போட்டி விதிகள் விரைவில் வெளிவிடப்படும்...உங்கள் ஆதரவிற்கு நன்றி!

  • 3 weeks later...
Posted

மாப்பி ஏன் இதை இன்னும் ஆரம்பிகவில்லை??????????

Posted

போட்டி யூன் 20 அன்று ஆரம்பமாகும்... மேலதிக தகவல்கள், போட்டி விதிகள் விரைவில் வெளிவிடப்படும்...உங்கள் ஆதரவிற்கு நன்றி! :)

  • 2 weeks later...
Posted

போட்டி மூன்று பகுதிகளாக இடம்பெறுகின்றது! போட்டி இன்று ஆரம்பிக்கின்றது!

பகுதி 01: இன்று ஆரம்பிக்கின்றது!

கால அவகாசம்: 10 நாட்கள்

நடுவர்: கருத்துக்கள உறவுகளின் கருத்துக்கணிப்பு - ஒரு வாக்கிற்கு ஒரு புள்ளி

கருத்துக்கணிப்பிற்கு விடை பிரசுரிக்கப்படும் திகதி: ஜலை 01, 2007

பகுதி 01 ற்கான கேள்வி:

நீங்கள் வாழும் நாடுகளில், தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் புனர்வாழ்விற்கு நிதிசேகரிக்கக்கூடிய சிறந்த பத்து வழிமுறைகளை விபரிக்கவும்? குறிப்பு: உங்கள் வழிமுறைகள் நடைமுறைச் சாத்தியமானவையாகவும், அந்தந்த நாட்டு சட்டதிட்டங்களிற்கு கட்டுப்பட்டவையாகவும் இருக்க வேண்டும். இந்த வழிமுறைகள் தமிழ் மக்களிடம் இருந்து மட்டுமே நன்கொடை பெறுவதற்கானவையாய் இருக்கத் தேவையில்லை. வேற்று இன மக்களிடம் இருந்து நிதிஉதவி பெறும் வழிவகைகளாகக் கூட இருக்க முடியும்.

* பகுதி 02:

கால அவகாசம்: 20 நாட்கள்

நடுவர்: கருத்துக்கள உறவுகளின் கருத்துக்கணிப்பு - ஒரு வாக்கிற்கு ஐந்து புள்ளிகள்

கருத்துக்கணிப்பிற்கு விடை பிரசுரிக்கப்படும் திகதி: ஜலை 21, 2007

பகுதி 02 ற்கான கேள்வி:

பகுதி 01 இல் வழிமொழிந்த பத்து ஆரம்பவழி வகைகளில் நீங்கள் சிறந்ததாகக் கருதும் மூன்று வழிகளை தெரிவு செய்து, அவற்றை எவ்வாறு நடைமுறையில் செயற்படுத்துவது என்பதற்கான வழிமுறைகளை விபரிக்கவும்? பகுதி 01 இல் கூறிய ஒவ்வொரு வழிக்கும் ஐந்து வழிமுறைகளாக, மூன்று ஆரம்ப வழிமுறைகளிற்குமாக சேர்த்து மொத்தம் பதினைந்து வழிமுறைகள் விபரிக்கப்படவேண்டும்.

* பகுதி 03:

கால அவகாசம்: ஒரு மணித்தியாலம்

நடுவர்: கருத்துக்கள உறவுகளின் கருத்துக்கணிப்பு - ஒரு வாக்கிற்கு மூன்று புள்ளிகள்

கருத்துக்கணிப்பிற்கு விடை பிரசுரிக்கப்படும் திகதி: ஐலை 24, 2007 நேரம் ---->

அவுஸ்திரேலியா - 22.00 P.M.

ஐக்கிய இராச்சியம் - 13.00 P.M.

மத்திய ஜரோப்பிய நேரம் - 14.00 P.M.

வட அமெரிக்க கிழக்குக் கரைநேரம் EST - 8.00 A.M.

தாயகம் - 17.30 P.M

மற்றைய நாடுகளில் உள்ளவர்கள் மேலுள்ள தரவுகளின் அடிப்படையில் உங்கள் உள்ளூர் நேரங்களைக் கணித்துக்கொள்ளவும். நாடுகளிற்கிடையேயுள்ள மேலுள்ள நேரமாற்றத்தில் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும். நன்றி!

பகுதி 03 ற்கான கேள்வி:

போட்டியாளர் இலக்கம் குறிக்கப்பட்டு அவருக்குரிய மூன்று கேள்விகள் ஒன்லைனில் பிரசுரிக்கப்படும். கேள்வி பிரசுரிக்கப்பட்டு ஒரு மணி நேரத்தினுள் நீங்கள் உங்கள் விடைகளை எமக்கு தனி மடலில் அனுப்பிவைக்க வேண்டும். அதாவது போட்டியாளர்கள் தமது பகுதி 03 ற்கான விடைகளை எழுதி எமக்கு அனுப்பிவைப்பதற்கான கால அவகாசம் ஒரு மணித்தியாலம் ஆகும். போட்டியாளர்களின் விடைகள் அவற்றின் கருத்து மாறாதவகையில் எடிட் செய்யப்பட்ட பின்னர் (போட்டியாளரின் அடையாளம் வெளிப்படாது இருப்பதற்காக) யாழ் களஉறவுகளின் இறுதிக் கருத்துக்கணிப்பிற்கு பிரசுரிக்கப்படும். பகுதி 03 இல் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கவிரும்பும் கருத்துக் களஉறவுகள் பகுதி 02 ற்கான போட்டியாளர்களின் விடைகள் பிரசுரிக்கப்பட்டபின், போட்டியாளர்களிடமான உங்கள் கேள்விகளை போட்டியாளரின் இலக்கத்தை குறிப்பிட்டு (யாரிடம் கேள்வி கேட்கின்றீர்கள் எனகுறிப்பிட்டு) எமக்கு தனிமடலில் அனுப்பிவைக்கலாம். நேரடிப்போட்டி நடைபெறும்போது அனைத்துப் போட்டியாளர்களிற்குமான கேள்விகள் ஒரே நேரத்தில் பிரசுரிக்கப்படும்.

* பகுதி மூன்றில் கேட்கப்படும் கேள்விகள் போட்டியாளர்கள் பகுதி 02 இல் கூறிய சிந்தனைகளை செயற்படுத்தும்போது ஏற்படக்கூடிய சிக்கல்கள் சம்மந்தமாக, மற்றும் அந்தச் சிந்தனைகளில் உள்ள பிரச்சனைகள் சம்மந்தமாக இருக்கும். பகுதி 03 இல் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கவிரும்பும் கள உறவுகள் தமது கேள்விகளை எனக்கு தனிமடலில் அனுப்பிவைக்க வேண்டிய கடைசித் திகதி: யூலை 23, 2007.

போட்டியாளர்களிற்கான பகுதி 03 கேள்விகள் பிரசுரிக்கப்படும் நேரம்:

ஐலை 24, 2007

அவுஸ்திரேலியா - 20.00 P.M.

ஐக்கிய இராச்சியம் - 11.00 P.M.

மத்திய ஜரோப்பிய நேரம் - 12.00 P.M.

வட அமெரிக்க கிழக்குக் கரைநேரம் EST - 6.00 A.M.

தாயகம் - 15.30 P.M

மற்றைய நாடுகளில் உள்ளவர்கள் மேலுள்ள தரவுகளின் அடிப்படையில் உங்கள் உள்ளூர் நேரங்களைக் கணித்துக்கொள்ளவும். நாடுகளிற்கிடையேயுள்ள மேலுள்ள நேரமாற்றத்தில் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும். நன்றி!

போட்டி விதிமுறைகள்:

* போட்டியாளர்கள் பகுதி 01, பகுதி 02, பகுதி 03 இற்கான தமது விடைகளை தமிழில் எழுதி எனக்கு தனிமடலில் அனுப்பிவைக்கவேண்டும்.

* யாழ் இணையத்தில் உறுப்பினர் அல்லாத வெளியாரும் இந்தப்போட்டியில் கலந்துகொள்ளமுடியும். இவர்கள் தமது விடைகளை kalainjan@yarl.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கமுடியும். மின்னஞ்சல் தமிழ் யுனிக்கோட்டில் வாசிக்கக்கூடியவகையில் அனுப்பிவைக்கபடவேண்டும்.

* போட்டியாளர்களிற்கு போட்டியாளர் இலக்கம் கொடுக்கப்படும்.

* கருத்துக்கணிப்பில் ஆகக்கூடியளவில் இருபது தேர்வுகள் மட்டுமே இடம்பெறமுடியும் என்பதால், போட்டியாளர்களின் எண்ணிக்கை இருபதிற்கு மேற்படும் சந்தர்ப்பத்தில் பகுதி 01 ற்கு அனுப்பிவைக்கப்படும் விடைகளில் சிறந்தனவாக கருதப்படும் இருபது விடைகள் மட்டும் கருத்துக்கள உறவுகளின் பார்வைக்காக கருத்துக்கணிப்பிற்கு விடப்படும்.

* போட்டியில் ஒருவர் தனியாகவோ அல்லது இருவர் சேர்ந்த குழுவாகவோ பங்குபற்றமுடியும். இரண்டு பேருக்கு மேற்பட்ட குழுவாக பங்குபற்ற முடியாது.

* இன்னுமொருவருடன் சேர்ந்து குழுவாக பங்குபற்றினால் அவரது பெயரையும் பகுதி 01 ற்கான விடையை அனுப்பும்போது மடலில் குறிப்பிடவும்.

* இறுதி முடிவு அறிவிக்கப்படும்வரை போட்டியாளர்கள் தனிப்பட்ட போட்டியாளர் இலக்கம் மூலமே மற்றைய கள உறவுகளிற்கும், பார்வையாளர்களிற்கும் அறிமுகப்படுத்தப்படுவார்கள்.

* போட்டியில் பங்குபற்றுபவர்கள் போட்டி இறுதிமுடிவு அறிவிக்கப்படும்வரை தாம் போட்டியில் கலந்துகொள்கின்றோம் என்ற விடயத்தை மற்றைய யாழ் கள உறவுகளிற்கு அறிவிக்கமுடியாது.

* இங்கு போட்டியில் முக்கியமாக சிந்தனைகளே - போட்டியாளர்களின் சிறந்த ஐடியாக்களே எதிர்பார்க்கப்படுகின்றன. தமிழில் எவ்வாறு எழுதுகின்றீர்கள் என்பது அல்ல!

* நீங்கள் எழுதி அனுப்பும் விடைகள் அதன் கருத்து - சிந்தனை மாறாதவகையில் எடிட் செய்யப்பட்ட பின்பே கள உறவுகளின் கருத்துக்கணிப்பிற்காக பிரசுரிக்கப்படும். ஏனெனில், ஒருவர் யாழ் களத்தில் எழுதும்முறையை வைத்து மற்றைய கருத்துக்கள உறவுகளால் அதை எழுதியவர் யார் என்பதை இலகுவாக கண்டுபிடிக்கமுடியும் என்பதால் இவ்வாறு செய்யப்படுகின்றது.

* எல்லா போட்டியாளர்களின் விடைகளும் ஒரே நேரத்திலேயே கருத்துக்கணிப்பிற்கு விடப்படும்.

* போட்டி சம்மந்தமான உங்கள் சகல சந்தேகங்களையும் எனக்கு தனிமடலில் அனுப்பிவைத்து அறிந்துகொள்ளவும்.

* போட்டி விதி முறைகளை மீறுபவர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்.

* இறுதி வெற்றியாளர் பகுதி 01, பகுதி 02, பகுதி 03 களில் பெற்ற மொத்தப்புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்.

* போட்டியின் பகுதி 03 இல், கருத்துக்கணிப்பில் கலந்து உங்களுக்கு பிடித்தமான மிகச்சிறந்த போட்டியாளரை தெரிவு செய்வதற்கு அரை மணித்தியாலங்கள் கால அவகாசங்கள் மாத்திரமே உள்ளது என்பதை களஉறவுகள் கவனிக்கவும்!

* போட்டியின் வெற்றியாளன் யார் என்ற குழப்பம் ஏற்படாதிருக்க பகுதி 03 இன் கருத்துக்கணிப்பு தெரிவு கால அவகாசம் நிறைவடைந்ததும், பகுதி 01, பகுதி 02, பகுதி 03 போட்டி தலைப்புக்கள் நிருவாகத்தின் உதவியுடன் பூட்டுப்போட்டு மூடப்படும். (இதன் மூலம் குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் வாக்களிப்பு இடம்பெறுவதை தடுக்கமுடியும்)

* போட்டியாளர்களும் கருத்துக்கணிப்பில் பங்குபற்றமுடியும் என்பதோடு, சக போட்டியாளர்களிடம் பகுதி 03 இல் மற்றைய கள உறவுகளைப் போல் கேள்விகள் கேட்கவும் முடியும்.

* போட்டியில் வெற்றிபெரும் முதல் மூன்று போட்டியாளர்களின் சிந்தனைகள் யாழ் இணையத்தில் அனைத்து களஉறவுகளும் பங்குபற்றும் பகிரங்கவிவாதத்திற்கு விடப்படும். வேறு பரிசு விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.

*போட்டியை ஒழுங்கமைத்து நல்ல முறையில் வழிநடத்துவதற்கு திரு. பண்டிதர், திரு. குறுக்காலபோவான் ஆகியோர் என்னுடன் இணைந்து பணியாற்றுவார்கள்.

* போட்டி சம்மந்தமான உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை தனிமடலில் அறியத்தரவும்.

போட்டியின் வெற்றியாளர் அறிவிக்கப்படும் திகதி: ஐலை 24, 2007 நேரம் ---->

அவுஸ்திரேலியா - 22.30 P.M.

ஐக்கிய இராச்சியம் - 13.30 P.M.

மத்திய ஜரோப்பிய நேரம் - 14.30 P.M.

வட அமெரிக்க கிழக்குக் கரைநேரம் EST - 8.30 A.M.

தாயகம் - 18.00 P.M

மற்றைய நாடுகளில் உள்ளவர்கள் மேலுள்ள தரவுகளின் அடிப்படையில் உங்கள் உள்ளூர் நேரங்களைக் கணித்துக்கொள்ளவும். நாடுகளிற்கிடையேயுள்ள மேலுள்ள நேரமாற்றத்தில் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும். நன்றி!

* தாயக மக்களிற்கு உதவக்கூடிய ஒரு நல்ல காரியம் சம்மந்தமாக நடைபெறும் இந்தப் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து உங்கள் ஆதரவைத் தரும்படி அனைத்து கள உறவுகளையும் அன்புடன் வேண்டி நிற்கின்றோம். நன்றி!

Posted

போட்டி பற்றிய தகவல்களுக்கு நன்றிகள் மாப்பு

Posted

இரண்டு பேருக்கு மேற்படாத குழுவாக போட்டியில் பங்குபற்றமுடியும்... நன்றி!

Posted

பகுதி 01 ற்கான கேள்வி:

நீங்கள் வாழும் நாடுகளில், தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் புனர்வாழ்விற்கு நிதிசேகரிக்கக்கூடிய சிறந்த பத்து வழிமுறைகளை விபரிக்கவும்? குறிப்பு: உங்கள் வழிமுறைகள் நடைமுறைச் சாத்தியமானவையாகவும், அந்தந்த நாட்டு சட்டதிட்டங்களிற்கு கட்டுப்பட்டவையாகவும் இருக்க வேண்டும். இந்த வழிமுறைகள் தமிழ் மக்களிடம் இருந்து மட்டுமே நன்கொடை பெறுவதற்கானவையாய் இருக்கத் தேவையில்லை. வேற்று இன மக்களிடம் இருந்து நிதிஉதவி பெறும் வழிவகைகளாகக் கூட இருக்க முடியும்.

மாப்பி கட்டாயமாக 10 வழிகள் சொல்ல வேண்டுமா அல்லது ஒரு நல்ல வழியை எடுபதன் மூலம் அதற்கு சிறந்த விளக்கம் கொடுத்தா என்ன?

Posted

மாப்பி 10 வழிகளா............................... சரி கண்டுபிடிகிறேன்............நன்றி அதை உங்களுக்கு அனுப்பினா சரியா......................

:lol:

போட்டி என்று வந்தா ஜம்மு என்ன செய்வேன் ஏது செய்வேன் என்று எனக்கே தெறியா................. :lol:

எல்லோருக்கும் நான் சொல்ல விருபுவது என்னவென்றா ஜேயிகிறோம் என்பது முக்கியமில்லை போட்டியில பங்குபற்றுறது தான் முக்கியம்...............

வரட்டா

நன்றி வாய்புக்கு :P

Posted

கலைஞன் நல்லதொரு முயற்சி. போட்டி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். போட்டியில் பங்குபற்ற முடியாமைக்கு வருந்துகிறேன்.

Posted

இதுவரை இரண்டு போட்டியாளர்கள் தங்கள் விடைகளை அனுப்பிவைத்துள்ளார்கள்.

பகுதி 01 இற்கு பதில் அளித்து போட்டியில் நீங்களும் கலந்துகொள்வதற்கு இன்னும் 07 நாட்கள் கால அவகாசமே இருக்கின்றது என்பதை போட்டியாளர்கள் கவனத்தில் கொள்ளவும்.

ஜூன் 30 ற்கு பின் அனுப்பி வைக்கப்படும் பகுதி 01 இற்கான விடைகள் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது.

போட்டிக்கு அனைவரும் தரும் ஒத்துழைப்பிற்கும், போட்டியில் காட்டுகின்ற ஆர்வத்திற்கும் மிக்க நன்றி! :lol:

கள உறவு ஒருவர் சுட்டிக்காட்டியதற்கு அமைய ஐக்கிய இராச்சியத்தின் சரியான போட்டி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேரக் கணிப்பில் இருந்த பிழையை சுட்டிக்காட்டிய கள உறவு சிறி யிற்கு மிக்க நன்றி! :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னுடைய வாழ்த்துக்களும் இந்த நிகழ்வுக்கு.........

Posted

இதுவரை மூன்று போட்டியாளர்கள் தமது பகுதி 01 இற்கான விடைகளை அனுப்பி வைத்துள்ளார்கள்.

பகுதி 01 கால அவகாசம் முடிவடைய இன்னும் ஐந்து நாட்களே உள்ளது. விரைவில் உங்கள் விடைகளை அனுப்பிவையுங்கள்.

நீங்கள் அனுப்பும் பகுதி 01 விடைகளின் அடிப்படையில் பகுதி 02 ஐ சிறப்பாகச் செய்வதற்கு உங்களுக்கு பின்னூட்டல் - Feedback அனுப்பி வைக்கப்படும். நன்றி! :(

Posted

நல்ல முயற்சி. போட்டி சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்!!

போட்டியில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு விடுத்த கலைஞன் அண்ணாவுக்கு நன்றி.

Posted

இதுவரை நான்கு போட்டியாளர்கள் தமது விடைகளை அனுப்பி வைத்துள்ளார்கள். மற்றவர்களும் பகுதி 01 ற்கான உங்கள் விடைகளை விரைவில் அனுப்பி வைக்கவும். நன்றி! :rolleyes:

Posted

போட்டி பகுதி 01 இற்கான உங்கள் விடைகளை அனுப்பி வைப்பதற்கு இன்னும் 03 நாட்கள் கால அவகாசமே இருக்கின்றது.

விரைவில் உங்கள் விடைகளை அனுப்பி வையுங்கள்.

போட்டிக்கு ஆரம்பத்தில் கிடைத்த ஆதரவை தற்போது காணவில்லை.

இதுவரை நான்கு போட்டியாளர்கள் தமது விடைகளை அனுப்பிவைத்துள்ளார்கள்.

போட்டியில் அனைவரையும் கலந்து ஊக்கப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி! :)

Posted

போட்டி பகுதி 01 இற்கான உங்கள் விடைகளை அனுப்பி வைப்பதற்கு இன்னும் 02 நாட்கள் கால அவகாசமே இருக்கின்றது.

விரைவில் உங்கள் விடைகளை அனுப்பி வையுங்கள்.

போட்டிக்கு ஆரம்பத்தில் கிடைத்த ஆதரவை தற்போது காணவில்லை.

இதுவரை நான்கு போட்டியாளர்கள் தமது விடைகளை அனுப்பிவைத்துள்ளார்கள்.

போட்டியில் அனைவரையும் கலந்து ஊக்கப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி! :lol:

Posted

போட்டி பகுதி 01 இற்கான உங்கள் விடைகளை அனுப்பி வைப்பதற்கு இன்னும் 01 நாள் கால அவகாசமே இருக்கின்றது.

விரைவில் உங்கள் விடைகளை அனுப்பி வையுங்கள்.

போட்டிக்கு ஆரம்பத்தில் கிடைத்த ஆதரவை தற்போது காணவில்லை.

இதுவரை நான்கு போட்டியாளர்கள் தமது விடைகளை அனுப்பிவைத்துள்ளார்கள்.

போட்டியில் அனைவரையும் கலந்து ஊக்கப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

போட்டியில் நீங்கள் வெற்றி பெறுகின்றீர்களா என்பது அல்ல உங்கள் Participation தான் இங்கு முக்கியம்!

நன்றி! :(

Posted

போட்டி பகுதி 01 இற்கான உங்கள் விடைகளை அனுப்பி வைப்பதற்கு இன்னும் 01 நாள் கால அவகாசமே இருக்கின்றது. பகுதி 01 இற்கான போட்டி நேரம் நாளை சனி இரவு 11.59 (வட அமெரிக்கா கிழக்குகரை நேரம்) உடன் முடிகின்றது.

விரைவில் உங்கள் விடைகளை அனுப்பி வையுங்கள்.

போட்டிக்கு ஆரம்பத்தில் கிடைத்த ஆதரவை தற்போது காணவில்லை.

இதுவரை ஐந்து போட்டியாளர்கள் தமது விடைகளை அனுப்பிவைத்துள்ளார்கள்.

போட்டியில் அனைவரையும் கலந்து ஊக்கப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

போட்டியில் நீங்கள் வெற்றி பெறுகின்றீர்களா என்பது அல்ல உங்கள் Participation தான் இங்கு முக்கியம்!

நன்றி! :unsure:

Posted

போட்டி பகுதி 01 இற்கான உங்கள் விடைகளை அனுப்பி வைப்பதற்கு இன்னும் 01 நாள் கால அவகாசமே இருக்கின்றது. பகுதி 01 இற்கான போட்டி நேரம் நாளை சனி இரவு 11.59 (வட அமெரிக்கா கிழக்குகரை நேரம்) உடன் முடிகின்றது.

விரைவில் உங்கள் விடைகளை அனுப்பி வையுங்கள். இன்னும் சுமார்31.5 மணித்தியாலங்கள் கால அவகாசம் இருக்கின்றது!

போட்டிக்கு ஆரம்பத்தில் கிடைத்த ஆதரவை தற்போது காணவில்லை.

இதுவரை ஏழு போட்டியாளர்கள் தமது விடைகளை அனுப்பிவைத்துள்ளார்கள்.

போட்டியில் அனைவரையும் கலந்து ஊக்கப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

போட்டியில் நீங்கள் வெற்றி பெறுகின்றீர்களா என்பது அல்ல உங்கள் Participation தான் இங்கு முக்கியம்!

நன்றி! :huh:

Posted

மன்னிக்கவும், ஒரு சிறு தவறு.... :lol:

ஆய்வுப் போட்டி பகுதி ஒன்றிற்கான கால அவகாசம் நிறைவு காலம் ஜூன் 30, 2007 சனி இரவு 11. 59 என்பதை தவறுதலாக வெள்ளி இரவு 11.59 என எழுதிவிட்டேன்.

தவறு திருத்தப்பட்டுள்ளது. நன்றி! :huh:

Posted

இதுவரை 08 போட்டியாளர்கள் போட்டியில் பங்குபற்றுவதற்கு தமது விடைகளை அனுப்பியுள்ளார்கள்.

பகுதி 01 கால அவகாசம் நிறைவடைய இன்னும் சுமார் 10.5 மணித்தியாலங்கள் உள்ளது...

நன்றி!

Posted

எல்லாமாக பத்து போட்டியாளர்கள் தாயக மக்களின் புனர்வாழ்விற்கான நிதிசேகரிப்பு ஆய்வுப் போட்டியில் கலந்துகொள்கின்றார்கள்.

முதலில் இவர்களிற்கு எமது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். போட்டியில் வெற்றிபெற இவர்களிற்கு வாழ்த்துக்கள்!

இவர்களிற்குரிய பின்னூட்டலை திருவாளர். குறுக்காலபோவான் அவர்கள் வழங்கிக்கொண்டு இருக்கின்றார். இவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

போட்டியை ஒழுங்கமைப்பதற்கு உதவியாக இருக்கும் திருவாளர். பண்டிதருக்கும் மிக்க நன்றிகள்!

போட்டி - பகுதி 01 இன் வெற்றியாளரை கள உறவுகள் தீர்மானிக்கும் கருத்துக்கணிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கருத்துக்கணிப்பில் பங்குபற்றும் கள உறவுகளின் கவனத்திற்கு:

நீங்கள் உங்கள் தெரிவை (விருப்பு வாக்கை)இடமுன் முதலில் தயவுசெய்து சகல போட்டியாளர்களினதும் விடைகளை ஆர அமர்ந்து வாசிக்கவும்.

தமிழ் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது, எத்தனை வசனங்கள் உள்ளது போன்றவற்றின் அடிப்படையில் இல்லாமல், சிறந்த சிந்தனையின் அடிப்படையில் பகுதி 01 இன் வெற்றியாளரை தெரிவு செய்யவும்.

இந்த போட்டியின் வெற்றியாளரைத் தெரிவு செய்யும் முழுப் பொறுப்பும் கருத்துக்கள உறவுகளாகிய உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது. நீங்கள்தான் இந்தப்போட்டியின் நடுவர்கள். எனவே, தயவுசெய்து பொறுப்புணர்வுடன் செயற்பட்டு போட்டிக்கு உங்கள் ஆதரவை தரவும்.

இறுதியாக, தயவுசெய்து ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஐடி மூலம் கருத்துக்கணிப்பில் பங்குபற்றவேண்டாம் என மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். உங்கள் ஆதரவிலேயே தாயக மக்களிற்கு உதவுவதை அடிப்படையாக வைத்து நாடாத்தப்படும் இந்த நல்ல காரியத்தின் வெற்றி தங்கியுள்ளது.

போட்டி பகுதி 01 நிறைவுக்கு வந்துளது. தற்போது போட்டி பகுதி 02 ஆரம்பித்துள்ளது! போட்டி 01 இற்கான கருத்துக்கணிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.

அனைவருக்கும் நன்றி! :D

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.