Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்ணின், சடலத்தை கண்டெடுக்கச் சென்ற பொலிஸார் அதிர்ச்சியில் உயிரிழப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

police-death-2-720x450.jpg

பெண்ணின்... சடலத்தை கண்டெடுக்கச் சென்ற பொலிஸார், அதிர்ச்சியில் உயிரிழப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள திகிலிவெட்டை எனும் கிராமத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த இளம் பெண்ணின் சடலத்தை கண்டெடுக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள திகிலிவெட்டை எனும் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு பிள்ளைகளின் தாயான முத்துலிங்கம் நிரஞ்சலா (வயது 31) என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள ஏறாவூர் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 4 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், குறித்த பெண்ணின் சடலத்தை கண்டெடுக்க சென்றிருந்தனர்.

இதன்போது சடலத்தைப் பார்வையிட்ட நிதிய துரைலாகே லக்ஷ்மன் குமார ராஜபக்ஷ (வயது 37) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் உத்தியோகஸ்தர் மயங்கி வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து சக பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மூவரும் அவரை மீட்டு அருகிலுள்ள சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

police-death-3.jpg

police-death-1.jpg

http://athavannews.com/உயிரிழந்த-பெண்ணின்-சடலத்/

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது கிழக்கில் யானைகளின் அட்டகாசமும் அதிகரித்துள்ளது அண்மையில் கரடினாறு சென்றிருந்தோம் நண்பர்களூடன் வேளாண்மை பயிர் செய்கை மும்முரமாக நடை பெறுகிறது ஆனால் யானைகளின் அட்டகாசம் அதிகம் இரவு வேளைகளில் அதிகமாக வயலை சூறையாட வருகிறது வன இலாகவிற்கும் அறிவித்தல் கொடுத்தால் அவர்கள் கண்டு கொள்வதில்லை 

இதனால் மக்கள் வாழ்வாதாரமும் . வீடு , சொத்துக்கள் அழிக்கப்படுகிறது 

  • கருத்துக்கள உறவுகள்

இருவரது ஆத்மாவும் சாந்தியடையட்டும்...சிங்களப் போலீசாய் இருந்தும் இளகிய மனம் கொண்டவராய் இருக்கிறார் ...பூர்வ ஜென்ம பந்தமாய் இருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.