Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

90 எம்எல்: திரை விமர்சனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

90 எம்எல்: திரை விமர்சனம்!

27.jpg

பாலுறவு உள்ளிட்ட சிக்கல்களைப் பெண்களின் பார்வையில் பேசும் இந்தப் படம் எப்படி உள்ளது?

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஓவியா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் 90 எம்.எல். அனிதா உதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கும்படியாக ஏ சான்றிதழுடன் வெளியாகியுள்ளது. நிவிஸ் என்டர்டெய்ன்மென்ட் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

அபார்ட்மென்ட் ஒன்றில் வசிக்கும் நான்கு தோழிகளுடன் புதிதாக வந்த ரீட்டா நட்பாகிறார். அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக வலம் வரும் ரீட்டாவை மற்ற பெண்களுக்குப் பிடித்துப் போகிறது. அவளைப் போல் தம்மால் இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. ரீட்டாவின் குணநலன்கள் அவர்களையும் மாற்ற, துணிச்சலுடன் சுதந்திரமாக செயல்படத் தொடங்குகின்றனர். அவர்களுக்கு உள்ள ஒவ்வொரு பிரச்சினையையும் ரீட்டா தன் பாணியில் கையாண்டு சுமுகமாக முடித்துவைக்கிறார்.

ஐந்து தோழிகளை மையமாகக் கொண்ட கதையாக இருந்தாலும் அவர்களுடைய பிரச்சினைகள், அவற்றைச் சமாளிக்கும் விதம் ஆகிய எல்லாமே வயது வந்தோர்களுக்கான சமாச்சாரங்களாகவே உள்ளன. உறவுச் சிக்கல்கள், தன் பாலினத் திருமணம் என வெளிப்படையாகப் பல விஷயங்களைப் பேசியுள்ளது படம்.

27a.jpg

தோழியின் கணவன் மற்றொரு பெண்ணுடன் உறவு வைத்துள்ளான் என்பதை அறிந்ததும் தோழிகள் நேராக அவனது வீட்டிற்குச் சென்று சண்டை போடுவது, இரவு முழுவதும் போதையில் சென்னையைச் சுற்றி வருவது, பாண்டிச்சேரிக்குச் சென்று காதலர்களை ஒன்று சேர்க்கத் திட்டம் போடுவது என சற்று மிகையான காட்சியமைப்புகளும் உள்ளன.

பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக ஆரம்பம் முதல் மது, கஞ்சா பழக்கத்தை பின்பற்றுபவர்களாகக் காட்டப்படுகின்றனர். கொண்டாட்டம், சுதந்திரம் எல்லாமே மது பாட்டிலோடு சுருக்கப்படுவதாக உள்ளன. படம் முழுவதும் போதையைக் கடைபரப்பிவிட்டுக் கடைசியில் இது உடல் நலத்திற்கு தீங்கு என்று கூறுவது போலித்தனமாக உள்ளது. தன் பாலினத் திருமணம் பற்றி வெகுஜன சினிமாவில் காட்சிகள் வைத்தது வரவேற்க வேண்டிய விஷயம் என்றாலும் ஆரம்பத்தில் சில காட்சிகளில் அதை நகைச்சுவைக்காகப் பயன்படுத்தியது அந்த உறவைக் கொச்சைப்படுத்துவதாகவே உள்ளது.

நாயகியை மையமாகக் கொண்டு உருவாகும் பெரும்பாலான படங்கள் பெண்ணை மனதில் கொண்டு கதை எழுதாமல் கதாநாயகனுக்காக உருவாக்கப்பட்ட கதையில் நாயகியைப் பொருத்துவது போன்று அமைந்திருக்கும். இந்தப் படத்திலும் அந்த பிரச்சினை உள்ளது. திருமணத்தின்போது காரில் கல்யாண ஜோடியைக் கடத்தி வருவது, ரவுடி கும்பல்களிடம் நேருக்கு நேர் சண்டை போட்டு ஜெயிப்பது என தமிழ் சினிமா கதாநாயகன் தன் நண்பர்களுடன் செய்துவந்ததை ஓவியா தனது தோழிகளுடன் இந்தப் படத்தில் செய்கிறார்.

27b.jpg

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவிற்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உருவானதற்கு முக்கியக் காரணம், அவருடைய இயல்பான நடவடிக்கைகள். தன் இயல்பை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்; தனக்கு பிடித்ததைத் துணிந்து செய்வேன் என்ற ரீதியில் அவர் செயல்பட்டதுதான். அதே வார்ப்பில் இந்தப் படத்தின் நாயகி ரீட்டாவின் பாத்திரத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர். எனவே, ஓவியாவுக்கு ‘நடிக்க’ வாய்ப்பு அதிகம் இல்லை. தன் பாத்திரத்தை இயல்பாகவே வெளிப்படுத்துகிறார். ஒரு சிலகாட்சிகளில் வரும் தேவையில்லாத ‘ஹீரோ’யிசத்தைத் தவிர்த்திருந்தால் இந்தப் பாத்திரம் வலுவாக இருந்திருக்கும்.

அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக்குகிறது. சிம்புவின் இசையில் பாடல்கள், பின்னணி இசை கவனம் ஈர்க்கிறது.

பாலுறவு உள்ளிட்ட உறவுச் சிக்கல்களைப் பெண்களின் பார்வையில் வெளிப்படையாகப் பேசிய படங்கள் தமிழ் சினிமாவில் மிகக் குறைவு. அத்தகைய முயற்சியில் இறங்கிய இப்படத்தில் அதற்கான பாசாங்கு மட்டுமே உள்ளது. ஆபாச நெடி அடிக்கும் வசனங்கள், போதையில் மிதக்கும் காட்சிகள் ஆகியவற்றுக்கு நடுவே பெண் விடுதலை, உறவுச் சிக்கல் என்றெல்லாம் பேசுவதற்கான பாவனைகளைச் செய்துள்ளார் இயக்குநர். ஆனால், இந்தப் பிரச்சினைகளோ விடுதலைக் குரலோ எடுபடாமல், மலினமான விஷயங்கள் மட்டுமே ஓவர் டோஸ் ஆக உள்ளன.

- மதரா

https://minnambalam.com/k/2019/03/02/27

  • கருத்துக்கள உறவுகள்

இயங்கிய பெண், அழகிய ராட்சசன் என்ற பெயரில், தனது பெயரை நேரடியாக போட தைரியம் இல்லாத ஒரு கேரளப் பெண்.... ஓவியா ஒரு கேரளப் பெண்... A சேட்டிபிகேட் கொடுத்த தணிக்கை குழு பெண் உறுப்பினர் தெலுங்கு நடிகை (முன்னாள்) கவுதமி (கமல் முன்னாள் பார்ட்னர் தான்). பெண் உறுப்பினர் ஒருவர் கை எழுத்து இடவேண்டுமாம். வேறு பெண்கள் மறுக்க, இவர் கையெழுத்து போட்டாராம்.

உங்களுக்கு தமிழ் சினிமா உலகமா  கிடைத்தது என்று குரல்கள் கிளம்புகின்றன.

இது போன்ற படங்களால் quick பணம் பண்ணலாம் என்ற ஐடியாவுக்கு எல்லோரும் போனால், தென் இந்திய திரைப் பட சங்கமே மூடிவிட்டு போயிடலாமே.... மூத்த தயாரிப்பாளர்கள் இது போன்ற படங்களுக்கு ரெட் கார்ட் போடவேண்டும் என்கிறார்கள்.

Edited by Nathamuni

இந்திய சினிமாவில், முக்கியமாக தமிழ் சினிமாவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கும் இயல்பான காமத்தை அழகியலுடன் காட்டும் போது அதை தணிக்கை செய்து நீக்கிவிடுவார்கள். ஒரு முத்த காட்சி இடம்பெற்றால் கூட ஒன்றில் அதை நீக்குவார்கள் அல்லது ஏ சான்றிதழ் கொடுத்து விடுவார்கள் இந்த கலாச்சார காவலாளிகள். ஆனால் ஆண் பெண்ணை கன்னத்தில் அறைவதில் தொடங்கி கழுத்தை நெரித்து கொல்வது வரைக்கும் அனுமதிப்பதுடன் அதை குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க கூடியவாறு யூ சான்றிதழ் கொடுப்பார்கள

காமத்தை அழகியலுடன் காட்டப்படுவதை, உடலுறவை இயல்பான முறையில் காட்சிப்படுத்துவதை தடுக்கும் இதே கூட்டம் தான், 90 ml, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற நாலாம் தர பாலியல் படங்களை அனுமதிக்கின்றனர். ஏனென்றால் காமம் என்பதை ஒரு நாலம் தர விடயமாக கருதுவதை தான் கலாச்சாரம் என நினைப்பதால். இந்த  பார்ப்பனிய சிந்தனை அருவருப்பான விடயங்களை மட்டுமே அனுமதிக்கின்ற இந்த சிந்தனை தான் தமிழ் சினிமா தன் குறுகின வட்டத்துக்குள் இருந்து வெளி வர தடுப்பவை.

பெண் சுதந்திரம் என்றால் தண்ணி அடிப்பதும், கஞ்சா அடிப்பதும் தான் எனக் காட்டபடுவதை அனுமதிப்பது பெண் சுதந்திரம் பற்றி எதிர்மறையான சிந்தனையை மக்களுக்கு கொடுப்பதற்காகவே.

நாமும் இதற்கு பழக்கப்பட்டவர்கள். பிள்ளைகளுடன் படம் பார்க்கும் போது ஒரு முத்தக்காட்சி வந்தால் நெளியும் நாங்கள் மனுசிக்கு புருசன் அல்லது புருசனுக்கு மனுசி அடிக்கும் காட்சி வந்தால் நெளிய மாட்டோம். இரட்டை அர்த்த ஜோக்குகள் வந்தால் விழுந்து விழுந்து சிரிப்போம். ஒருவரின் உடல் குறைப்பாட்டை வைத்து சந்தானமும், கவுண்டமணியும் ஜோக்குகள் அடித்தால் ரசிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

நிழலி, அதுவல்ல பிரச்சணை.

சிகரெட் பாவனை தவிர்க்க, விளம்பரம் மேலைநாடுகளில் தடை. இங்கே படம் முழுக்க ஓவியாவும், அவரது நண்பிகளும்... ஒரே சிகரெட்.

இதன் விசயம் என்னவெனில்.... அங்குள்ள பெண்களை, ஓவியா போன்ற, bigboss பிரபலத்தை வைத்து, சிகரெட் ஊதித்தள்ள சிகரெட் கொம்பனிகள் ஒரு  உந்துதல் கொடுக்கின்றன. (advert) சிகரெட் மட்டுமல்ல.... தண்ணியும் தான்.

அதுக்காக, பெரும் தொகை பணம், ஓவியா நினைக்க முடியாத பணம், கொடுக்கப் பட்டிருக்கிறது.

இங்கே ஒளிந்து இருப்பது, கார்ப்பரேட் வியாபார உத்தி. இதனை சந்தானம், கவண்டர் கொமடியுடன் ஒப்பிட முடியாது.

தணிக்கை குழு கவுதமிக்கு கூட பணம் கொடுக்கப் பட்டிருக்கும்.

அண்மையில் தமிழ்நாட்டில், 25கோடி பணம் அரசியல்வாதிகளுக்கு லஞ்சமாக கொடுத்ததறக்காக, cognizent என்ற US காப்ரேட் நிறுவனத்துக்கு, பெரும் தொகை அபராதம் வழங்கப் பட்டுள்ளது.

அதேவேளை, லைக்கா, போல சினிமா எடுக்க முதலிடலாம்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணிக ரீதியாக எதிர்பார்க்கப்பட்ட 90 ML, தடம், திருமணம் ஆகிய மூன்று படங்களுக்கும் தியேட்டரில் ஓப்பனிங் இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.