Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்க்கெதிரான இனவழிப்பை முற்றாக நிராகரித்துச் சிங்களவர்களுக்கு நிகராகச் செயற்படும் வடமாகாண ஆளுநர், சுரேன் ராகவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்க்கெதிரான இனவழிப்பை முற்றாக நிராகரித்துச் சிங்களவர்களுக்கு நிகராகச் செயற்படும் வடமாகாண ஆளுநர், சுரேன் ராகவன்

அண்மையில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைக் கவுன்சில்க் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட இலங்கையைப் பிரதிநித்துவப்படுத்தும் குழுவில், ஜனாதிபதி மைத்திரியினால் நியமிக்கப்பட்ட தமிழரான சுரேன் ராகவனும் கலந்துகொண்டிருந்தார். 

இவ்வமர்வுகளின்பொழுது, இலங்கை அரசாங்கத்திற்கெதிராக முன்வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுக்களை இவருடன் அங்கு சமூகமளித்திருந்த சிங்களவர்களுக்கு நிகராக இவரும் மறுதலித்திருந்தார் என்பது இப்போது தெளிவாகியிருக்கிறது.

இவர் தனது ஜெனீவாப் பயணம் பற்றிக் குறிப்பிடுகையில், தான் மனிதவுரிமைக் கவுன்சில் ஆணையாளர், மிச்செல் பாக்லெட்டுடன் பேசும்போது, அவர் தயாரித்திருந்த இலங்கைக்கெதிரான அறிக்கையில் தவறுகள் இருப்பதை சுட்டிக் காட்டியதாகவும், அதனை உடனேயே ஏற்றுக்கொண்ட அம்மையார், இவ்வறிக்கையைத் தயார் செய்த இரு அதிகாரிகளைக் கண்டித்து, இனிமேல் இதுதொடர்பாக கவனமெடுத்துச் செயற்படவேண்டும் என்று கூறியதாகவும் கூறி, இலங்கைக்கெதிராகச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தவறானது என்று நிரூபணமாகிறதென்றும் கூறியிருக்கிறார்.

மேலும், இவ்வறிக்கையில் முன்வைக்கப்பட்டிருக்கும் சாட்சியங்கள் நம்பகத்தன்மை அற்றவை என்றும், ஊர்க்கதை பேசி வம்பளக்கும் இணையத்தளங்களிலிருந்து பெறப்பட்டவை என்றும் கூறியிருக்கிறார். தன்னால், இவ்வாறான கொசுறு இணையத்தளங்கள் பற்றிய இலத்திரணியல் விடயங்களை முன்வைக்க முடியெமென்றாலும் கூட, இவ்வாறான இணையத் தளங்களுக்கு அது ஒரு விளம்பரமாக மாறிவிடும் என்பதால் அதைச் செய்யப்போவதில்லையென்றும் கூறியிருக்கிறார்.

"இந்த அறிக்கையில், மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி போர்க்காலத்தில் ஏற்படுத்தப்பட்டதென்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அது 1499 இலிருந்து 1719 வரையான காலப்பகுதியில் கொல்லப்பட்ட மக்களுடையவை என்பதை காபன் காலக் கணிப்பீடினை ஆதாரமாக வைத்து அமெரிக்க நிறுவனம் நிறுவியிருப்பதை முன்வைத்து, அறிக்கை தவறானதென்பதை நிறுவினோம். அதுமட்டுமில்லாமல், இலங்கையைப் பொறுத்தவரையில் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய நீதி விசாரணை அமைப்போ அல்லது உள்நாட்டு - வெளிநாட்டு கலப்பு நீதிவிசாரணை அமைப்போ தேவையற்றதென்பதையும் அழுத்தமாகக் கூறியிருந்தோம். ஏனென்றால், எமது நீதி அமைப்பு சுதந்திரமானதும், பக்கச்சார்பற்றதும் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத் நம்பிக்கை இருக்கிறது. எமது நீதியமைப்பு சுதந்திரமாக இயங்குவதற்குச் சிறந்த உதாரணம் கடந்த வருடம் ஆக்டோபர் மாத்தத்தில் நடந்த அரசியல் சிக்கலில் அது எடுத்த முடிவைக் குறிப்பிட முடியும்".

"இவ்வாறே முஸ்லீம்களுக்கெதிராக மனிதவுரிமை மீறல்கள் இடம்பெற்றதாக திகனவில் நடந்தவற்றை ஆதாரமாகக் கொண்டு இவ்வறிக்கை குற்றம்சாட்டியிருந்தது. ஆனால், அவைகூட தவறான தகவல்கள் தான் என்பதை நாம் எடுத்துரைத்தோம்".

"மொத்தத்தில், ஐ நாவுக்கான எமது பயணம் மிகவும் வெற்றிகரமாக அமைந்திருந்ததுடன், இலங்கைக்கெதிராக முன்வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் எம்மால் நிராகரிக்கச் சந்தர்ப்பத்தையும் வழங்கியிருந்தது".. . 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ரஞ்சித் said:

மொத்தத்தில், ஐ நாவுக்கான எமது பயணம் மிகவும் வெற்றிகரமாக அமைந்திருந்ததுடன், இலங்கைக்கெதிராக முன்வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் எம்மால் நிராகரிக்கச் சந்தர்ப்பத்தையும் வழங்கியிருந்தது".. . 

நாய் வளர்ப்பது வீட்டுக்காரரின் பாதுகாப்புக்கே அன்றி ஊரவரின் பாதுகாப்புக்கில்லையே?

எஜமானுக்கு விசுவாசமாக இருந்திருக்கிறார் அவ்வளவு தான்.

இவர் மூன்று பாசையும் சரளமாக பேசும் போதே தமிழர்களுக்கு ஆப்பிறுக்கக் கூடிய ஆள் என்று நினைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கொய்யால, வாங்கின காசுக்கு மேல கூவுறாண்டா...

  • கருத்துக்கள உறவுகள்

வரும் காலத்தில் இவருக்கும் மாலைபோட்டுச் சிறப்பித்து மரியாதை செய்யப்போகும் தமிழரென்று உலா வருவோரையும் வடமாகாணத்தில் காணத்தான்  போகிறோம்.   

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப கூவ கிளம்பி, இன்று ஐநா மனித உரிமை ஆணையரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார் ஆளுனர்.

தான் பேசியதை விளங்காது, தவறான கருத்துக்களை பரப்புவதாகவும், தனது அறிக்கையில் தவறு என்று தான் சொல்லவில்லை என்றும், தனது அறிக்கையை முழுதாக சரியானது என்றும் அவர் கூறி இருக்கிறார்.

நாட்டின் வெளிவிவகார அமைச்சே அமைதியாக இருக்க, சர்வதேச விடயங்களில் நேற்று வந்த ஒருவர், தனக்கு எவ்வித அதிகாரமும் இல்லாமல் மூக்கை நுழைப்பது தவறானது என கொழும்பு வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தனிப்பட்ட ரீதியில் கவலை தெரிவித்தனர்.

http://www.dailymirror.lk/breaking_news/I-stand-fully-behind-report-on-SL:-UN-HR-chief/108-164602

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.