Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் கொள்ளையிலீடுபட்டு வந்த இரு இந்தியர்கள் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கொள்ளையிலீடுபட்டு வந்த இரு இந்தியர்கள் கைது

பொருள் விற்பனையாளர் என்ற  போர்வையில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இரு இந்தியப் பிரஜைகளை  ஊர்காவற்றுறைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

ஊர்காவற்றுறைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கரம்பன், நாரந்தனைப் பகுதிகளில்  அண்மைக்காலமாக கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கபெற்றது.

000__10_.jpg

இதையடுத்து மண்டைதீவு பொலிஸ் சோதனைச்சாவடியில் பாதுகாப்பினை பொலிஸார் பலப்படுத்தினர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை (27) மாலை கரம்பன் மற்றும் நாராந்தனை பகுதிகளில் பொருள் விற்பனைக்காக சென்ற சந்தேகநபர்கள் இருவரும்,  வீடுகளில் தனித்திருந்த பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றிருந்தனர்.

000__8_.jpg

உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் மண்டைதீவு பொலிஸ் நிலையத்திற்குப் பொறுப்பான உப பொலிஸ் பரிசோதகர்  விவேகானந்தன் தலைமையிலான குழுவினருக்கு அறிவித்தனர்.

இதனடிப்படையில் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீரசேகரவின் ஆலோசனையின் படி   கொள்ளையடித்த நகைகள் பொருள்களுடன் யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணித்த சந்தேகநபர்கள் இருவரையும் துரத்திச் சென்று  பொலிஸார் கைதுசெய்தனர்.

000__7_.jpg

கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், வங்கி அட்டைகள், கடவுச்சீட்டுகள், விக்கிரகங்கள்  இந்திய நாணயத்தாள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

000__4_.jpg

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

 

http://www.virakesari.lk/article/52938

15 hours ago, கிருபன் said:

பொருள் விற்பனையாளர் என்ற  போர்வையில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இரு இந்தியப் பிரஜைகளை

இவர்களுக்கும் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் இந்தியாவின் யாழிலுள்ள  துணை தூதரகத்துக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, போல் said:

இவர்களுக்கும் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் இந்தியாவின் யாழிலுள்ள  துணை தூதரகத்துக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்!

இது, இந்தியாவின், புல நாய்வு  பிரிவிவின்... தேர்தல் வியூகம்.
பாகிஸ்தானிடம்... அடி வாங்கியது காணாது என்று,
ஸ்ரீலங்காவிடமும்... அடி வாங்க வேண்டிய, கட்டாயத்தில் தான்... 
பாவம்... அவங்க, உள்ளாங்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.