Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இணைய அரட்டை

Featured Replies

chating ( தமிழ் ஆக்கம் தெரியாது )

முகங்கள் புதைத்து

முகவரி கள் தொலைத்து

வயதுகள் மறைத்து

உணர்ச்சி விளையாட்டில்

பறிபோனது இங்கே

இதயங்கள்

பண்பாடு தொலைத்து

காதல் மொழி பேசி

உணர்ச்சி விளையாட்டில்

பிரிந்தது குடும்பங்கள்

நிஜத்தை தொலைத்துவிட்டு

போலி வாழ்க்கைக்காய்

வழக்காடு மன்றத்தில்

பிரிவுக்காய் தவிக்க

குழந்தையோ வீதியில்

அனாதையாக தத்தளிக்குது.

நாகரிக வளர்ச்சியால்

தமிழ் பண்பாடு

அகதியாய் அலைகின்றது

எம்மைப் போல்.

தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

Edited by yarlpriya

chating ( தமிழ் ஆக்கம் தெரியாது )

(இணைய) அரட்டை என்று போடலாம் என்று நினைக்கிறேன்....

கவிதை எல்லாம் சரி.... முதல் ஆக்கத்திற்கும் இதற்கும் இடைவெளி தெரிகிறது... ஆனால் எப்படி இந்த மாற்றம் என்று புரியவில்லை.... ரசிக்கும் படி உள்ளது... ஏதோ முடிவில்லாமல் இருப்பது போல தோன்றுகின்றது... நீங்க களத்தில வந்து உரையாடுவதுவும் "Chatting" இன் ஒரு வகை வடிவம் தானே... என்ன "Live" ஆக இல்லை அவ்வளவு தான்.... களத்தில கன நண்பர்கள் கோவிக்கப் போகினம்.... அரட்டையில் கூட நல்ல பக்கங்கள் இருக்கு என்பதை மறக்க வேண்டாம் சகோதரி... பார்வைகள் சரியானால் பாதைகள் தெளிவாகும்...

தொடர்ந்து வாருங்கள் கவிதையோடு....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(இணைய) அரட்டை என்று போடலாம் என்று நினைக்கிறேன்....

நீங்க களத்தில வந்து உரையாடுவதுவும் "Chatting" இன் ஒரு வகை வடிவம் தானே... என்ன "Live" ஆக இல்லை அவ்வளவு தான்.... களத்தில கன நண்பர்கள் கோவிக்கப் போகினம்.... அரட்டையில் கூட நல்ல பக்கங்கள் இருக்கு என்பதை மறக்க வேண்டாம் சகோதரி... பார்வைகள் சரியானால் பாதைகள் தெளிவாகும்...

தொடர்ந்து வாருங்கள் கவிதையோடு....

<<<

அப்படிச் சொல்ல முடியாது கவிரூபன் அவர்களே, பெரும்பாலான அரட்டைகளில்! ஆக்கபூர்வமான நிகழ்வுகள் குறைவு!.எல்லாமே ஒளிவுமறைவு!

இந்தக் கவிதையில் நிதர்சனங்களின் தெளிவு!..பாராட்டுக்கள்..

  • தொடங்கியவர்

<<<

அப்படிச் சொல்ல முடியாது கவிரூபன் அவர்களே, பெரும்பாலான அரட்டைகளில்! ஆக்கபூர்வமான நிகழ்வுகள் குறைவு!.எல்லாமே ஒளிவுமறைவு!

இந்தக் கவிதையில் நிதர்சனங்களின் தெளிவு!..பாராட்டுக்கள்..

நன்றி தழிழ்

உண்மையை உண்மை என்று புரிந்துகொண்டதற்கு

  • தொடங்கியவர்

(இணைய) அரட்டை என்று போடலாம் என்று நினைக்கிறேன்....

கவிதை எல்லாம் சரி.... முதல் ஆக்கத்திற்கும் இதற்கும் இடைவெளி தெரிகிறது... ஆனால் எப்படி இந்த மாற்றம் என்று புரியவில்லை.... ரசிக்கும் படி உள்ளது... ஏதோ முடிவில்லாமல் இருப்பது போல தோன்றுகின்றது... நீங்க களத்தில வந்து உரையாடுவதுவும் "Chatting" இன் ஒரு வகை வடிவம் தானே... என்ன "Live" ஆக இல்லை அவ்வளவு தான்.... களத்தில கன நண்பர்கள் கோவிக்கப் போகினம்.... அரட்டையில் கூட நல்ல பக்கங்கள் இருக்கு என்பதை மறக்க வேண்டாம் சகோதரி... பார்வைகள் சரியானால் பாதைகள் தெளிவாகும்...

நன்றி

chatting இல் நன்மைகள் மிக குறைவு நான் சொன்னது அணனத்தும் உண்மையானவை என் கண்களால் பார்த்தவை, நடந்தவைகளை தான் சொன்னேன் .அதற்கு முடிவில்லை என்பதால் முடிக்காமல் விட்டுவிட்டேன்

தமிழ்தங்கை,

நீங்கள் ஒளிவு மறைவு பற்றிச் சொல்கிறீர்கள்.... களத்தில் சிலர் மேற்படி கவிதையில் சொன்னது போல

முகம் மறைத்து வருவது தெரியுமா உங்களுக்கு....? போலி முகம் தேவைப்படுது சிலருக்கு கருத்துச் சொல்ல...

புலம்பெயர் இளைய சமுதாயத்தின் சாபக்கேடு.

நல்ல கவிதை. தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அழகான கவிதை

அழகிய கவிதை, ஆனால் கவிஞர் சொல்ல வந்தது விளங்கவில்லை. இங்கு எந்த அரட்டையை பற்றி கதைக்கிறீர்கள்? யாழ் கள அரட்டையா அல்லது எம்.எஸ்.என் அரட்டையா?

யாழ் கள அரட்டையாக இருந்தால் உங்கள் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணங்கள்: யாழ் களத்திற்கு வரும்பலர் வெவ்வேறு நோக்கத்துடன் வருகின்றனர். பல வியாதிக்காரர்கள் (உடல் உபாதைகள்) கொண்டவர்கள் உள்ளனர். வீட்டில் பல பிரச்சனைகள், வாழ்க்கையில் பல பிரச்சனைகள் உள்ளவர்கள் இருக்கின்றனர், நண்பர்களை உருவாக்க விரும்புபவர்கள் இருக்கின்றனர்... இப்படி பல ரகங்கள். இவர்கள் அரட்டை அடிப்பதால் சிறிது நேரம் தமது துன்பங்களை மறந்து சந்தோசமடையலாம், சிறிது நேரம் தமது பிரச்சனைகளை மறந்து மனம் அமைதியாக இருக்கலாம், ஏன் நல்ல நண்பர்களைக் கூட உருவாக்கி இருக்கலாம்... அன்பை, அறிவை பகிர்வதற்கு முகவரிகளோ, முகங்களோ, வயதோ இந்த நவீன உலகில் ஒரு தடையாக இருக்க முடியாது. மேலும், முகவரி, முகம், வயது, பால் அறிந்து பகிரப்படும் உணர்வுகள்,அன்பு, அறிவு என்பன இதயம் தொலைபடாமல் இருப்பதற்கு ஒருபொழுதும் உத்தரவாதம் வழங்குவதில்லையே? பண்பாடு, கட்டுப்பாடு, சுய ஒழுக்கநெறி என்பன தனித்தனி நபர்களின் ஆளுகையில், ஆளுமையில் இருக்கின்றனவேயொழிய, அவை அவர் பயன்படுத்தும் ஊடகத்தின், தொடர்பாடல் முறையின் வகையில், தன்மையில் ஒருபொழுதும் தங்கியில்லை. உலகில் வெவேறு மூலைமுடுக்குகளில் அகதிகளாக வாழும் நாங்கள் இன்று ஒருவருடன் ஒருவர் தொடர்புகொண்டு கருத்துப்பரிமாற்றம் செய்வதற்குமனித நாகரீத்தின் வளர்ச்சி, விஞ்ஞான முன்னேற்றங்கள் படிசமைத்தனவேயொழிய தமிழ் பண்பாடு, கலாச்சாரம் இவை எல்லாம் இதன் பின்பே வருகின்றது. நாகரீக வளர்ச்சி நிஜத்தை தொலைத்துவிட்டு போலி வாழ்க்கை வாழ வழிசெய்யவில்லை, மாறாக போலியான பண்பாடுகளை பற்றிச் சிந்திக்கச் செய்து நிஜத்தை தரிசனம் செய்ய வழிசெய்கின்றது. இப்படி பல...

மற்றையது, எம்.எஸ். என் அரட்டையாக இருந்தாலும் உங்கள் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணங்கள்: மேற்குறிப்பிட்ட காரணங்களோடு, நாம் நாளந்தம் செய்யும் வேலைகளை இது - எம்.எஸ்.என் இலகுவாக்குகின்றது, உதாரணமாக, ஒரு ஆய்வுக்கட்டுரையை பல்கலைக்கழகத்திற்காக எழுதும் போது நடுச்சாமம் 12.00 மணிக்கு ஒரு சந்தேகம் வந்தால், வாத்தியார் வந்து தீர்க்கமாட்டார், மாறாக, இதை தீர்க்க உதவுவது ஒன்லைனில் நிற்கும் முகவரி தெரியாத உறவுகளின் உதவியே! மேலும், ஒரு உதாரணத்திற்கு 2 மணித்தியாலம் எம்.எஸ்.என் இல் நீங்கள் ஒருவருடன் ஒரு நாளைக்கு அரட்டை செய்கின்றீர்கள் என வையுங்கள், நீங்கள் அங்கு அவருடன் பெறும் அறிமுகம், அனுபவம் 02 வருடங்கள் நீண்டு இழுபடக்கூடிய ஒரு சிக்கலில் இருந்து உங்களை காப்பாற்றகூடும்.. உதாரணம், வேலை இல்லாத் திண்டாட்டம் உள்ள நிலையில், ஒருவரின் எம்.எஸ்.என் அறிமுகம் காரணமாக, அவர் மூலம் உங்களுக்கு மிக இலகுவாக ஒரு வேலை கிடைத்தல்.. மற்றையவர்கள் எவ்வாறு எம்.எஸ். என் ஐ பயன்படுத்துகின்றார்கள் என எனக்கு தெரியாது. ஆனால், எனது அனுபவப்படி எம்.எஸ்.என் ஒரு மிகச்சிறந்த ஒரு தொடர்பாடல் ஊடகம். இதன் மூலம் மணித்தியாலக் கணக்கில் நாம் அரட்டை அடிக்கின்றோமோ இல்லையோ, எத்தனையோ சிக்கலான வேலைகளை இதன் மூலம் மிக இலகுவாக செய்துமுடிக்க முடிகின்றது....

நான் அடிக்கடி களத்தில் எழுதும் ஒரு பொன்மொழியை இங்கு திரும்பவும் எழுத விரும்புகின்றேன்..

A fool with a tool still a fool!

அதாவது, இந்த Chatting எவ்வாறு தனிநபர்களினால் கையாளப்படுகின்றது என்பதை பொருத்தே அதன் சாதக, பாதக விளைவுகள் அமையும். சிலருக்கு இதனால் நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு இதனால் தீமைகள் கிடைக்கும். இது அவரவர் தனிப்பட்ட ஆளுமைகளை, அனுபவங்களை பொறுத்தது.

இதைவிட, வாழ்க்கை என்பது ஒரு நேர்கோடு அல்ல, அது பல சுத்துவழிகளை, அனுபவங்களை, ஏமாற்றங்களை, இன்பங்களை, துன்பங்களை கொண்டது. ஒருவன் தனது வாழ்வில் ஒரு நாளில் செய்யும் ஒரு வேலையை முடிப்பதற்கு இன்னொருவனுக்கு ஒரு வருடம் எடுக்கலாம். எம்.எஸ். என், யாழ் கள அரட்டை போல் குறிப்பிட்ட ஒரு இலக்கைதேடி ஏற்கனவே தீர்மானிக்கப்படாத பாதையூடாக பயணிப்பதே யதார்த்த வாழ்க்கை. நாம் அரட்டை அடிக்கும் போது எந்தபாதையால் பயணம் செய்யபோகின்றோம் என நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால், எமக்கு எந்த இலக்கை நோக்கிச் செல்லவேண்டும் என தெரிந்திருக்கின்றது.

இது அரட்டை - Chatting - பற்றிய எனது தனிப்பட்ட கருத்து... மற்றையவர்களிற்கு வேறு அனுபவங்கள் இருக்ககூடும்....

Edited by கலைஞன்

கலைஞன் சொல்வது தான் என்னுடைய கருத்தும்.

இதயப் பரிமாற்றம் குடும்ப பிரிவு நடுவீதியில் குழந்தையின் தத்தளிப்பு தமிழ் பண்பாடு அகதியாய் அலைவது இவை யாவும் ஒரு சற்றிங் ஆல் நடக்குது என்றால் முட்டாள் தனமாக இல்லையா? இருப்பினும் எல்லோரும் ஒரே மனத்துடையவர்களாய் இருக்கமாட்டார்கள் தானே.

இணைய அரட்டையினால் நடக்கும் பாதிப்புக்கள் நன்றாக உள்ளது

கலைஞன் அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.... சிந்திக்கும் படி இருக்கு .... கவிஞர் சிந்திப்பாரா? :unsure:

கவிதை மெய்..

அரட்டை என்பதன் அர்த்தமே..உதவாத வாதம்தானே..

இதிலே..

யார் மெய் யார் பொய் என முகம் தெரியாத மின் முகவரிகளோடு பேசுவது ..ஆழ்ந்துபோவது..

நல்லதல்ல என்பதே சகி என் கருத்தும்..

அழகாக சொன்னீர்கள் நன்றி..பாராட்டுகள்..

  • தொடங்கியவர்

அழகிய கவிதை, ஆனால் கவிஞர் சொல்ல வந்தது விளங்கவில்லை. இங்கு எந்த அரட்டையை பற்றி கதைக்கிறீர்கள்? யாழ் கள அரட்டையா அல்லது எம்.எஸ்.என் அரட்டையா?

வணக்கம் நிறைய எழுதினதிற்கு நன்றி

நான் யாழ் களத்தை அரட்டை அடிக்கும் இடமாக கருதவில்லை ஒரு பயனுள்ள பத்திரிகையாக நினைக்கின்றேன் இதன் முலம் நல்ல கருத்தை சொல்ல ஆசைப்படுகின்றேன் நான் சொல்ல வந்தது வீணாக அரட்டை அடித்து தவறாக எண்ணி தடுமாறும் இதயங்களுக்காகதான் எழுதுகின்றேன் இன்றைய இளஞ்சமுதாயம் அதிகமாக தப்பான பாதைக்கு போவதால் ஏற்பட்ட வலிகளின் உண்மை இது அதற்கு எத்தனை ஆதாரம் வேண்டும்

  • தொடங்கியவர்

கலைஞன் சொல்வது தான் என்னுடைய கருத்தும்.

புலம்பெயர் வாழ்வியலில் அதிகமான குடும்பங்களின் வாழ்க்கையில் அரட்டை அடிப்பதால் பல பிரச்சனை உருவாகி உள்ளதை நீங்கள் அறியவில்லையா புலம்பெயர் நாடுகளில் இளைய சமுகம் அதிகமாக பாதிப்படைவது அரட்டையாலே இதை நிறைய பேர் உணர்ந்துள்ளார்கள்.

அப்படி ஒரு தவறான கருத்தை நீங்கள்தான் சொல்கிறீர்கள், உங்களுக்கு தவறாக இருக்கலாம், நீங்கள் அரட்டையை தவறாக அனுகியிருக்கலாம், அல்லது உங்களை அரட்டை மூலம் யாராவது தவறாக அனுகியிருக்கலாம், அது அவரவர்களின் தனிப்பட்ட விடயம். புலத்தில் சிலபேருக்கு உணவு உண்பதற்க்குகு கூட நேரமில்லை, அவர்களெள்ளாம் அரட்டை அடிக்கிறார்களா, இளைஞர்கள் வெட்டுக்குத்து என்று அலைகிறார்கள் அவர்கள் அரட்டை மூலம கெட்டார்கள், சில பெண்கள் தினமொரு ஆண்கூட அலைகிறார்கள் அது அரட்டை மூலாமா கெட்டார்கள்.................?

சகி உங்களின் வாதம் உண்மையானது நான் ஏற்றுக்கொள்கின்றேன் இங்கு தவறு ு

செய்பவர்கள்தவறை தெரிந்து செய்கின்றனர் நீங்கள் எத்தனை கவிதையெழுதினாலும்

அவர்களுக்கு புரியுமா?தெரியவில்லை

சகி உங்களின் வாதம் உண்மையானது நான் ஏற்றுக்கொள்கின்றேன் இங்கு தவறு ு

செய்பவர்கள்தவறை தெரிந்து செய்கின்றனர் நீங்கள் எத்தனை கவிதையெழுதினாலும்

அவர்களுக்கு புரியுமா?தெரியவில்லை

அப்படி உங்களைபோல் மேதாவிகள் நினைத்தால் ஒன்றும் பண்ணமுடியாது,

  • கருத்துக்கள உறவுகள்

அரட்டை அடிப்போர்

அன்பால் இணைவர்-மற்றோர்

குறட்டை விட்டு குப்பையில்

தூங்குவார்கள்

அது சரி நண்பர்களே....

ஒரே ஆள் களத்தில் இரண்டு மூன்று பெயரோடு வந்து கருத்துச் சொல்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? வேடிக்கையாக இல்லை.... :unsure:

Edited by kavi_ruban

  • தொடங்கியவர்

அப்படி ஒரு தவறான கருத்தை நீங்கள்தான் சொல்கிறீர்கள், உங்களுக்கு தவறாக இருக்கலாம், நீங்கள் அரட்டையை தவறாக அனுகியிருக்கலாம்,

நான் தவறான கருத்தை சொல்ல வில்லை அதை தவறு என்று கருதினால் அதைப்பற்றி கவலையில்லை

நான் தனிப்பட்ட யாரையும் குறிப்பிடவில்லை . அரட்டை தவறு என்று எழுதியதால் நான் அரட்டையை தவறாக பயன்படுத்தினேன் என்று அர்த்தம் இல்லையே எல்லா தவறுகளுக்கும் அரட்டைதான் முழு காரணம் என்று சொல்லவில்லை அரட்டையும் தவறுகளுக்கு வழிவகுக்கின்றது இதை புரிந்துகொண்டால் சரி தவறை தவறு என்று ஏற்றுக்கொள்ள ஒருசிலர் தயாராக இல்லைதானே

புலம்பெயர் வாழ்வியலில் அதிகமான குடும்பங்களின் வாழ்க்கையில் அரட்டை அடிப்பதால் பல பிரச்சனை உருவாகி உள்ளதை நீங்கள் அறியவில்லையா புலம்பெயர் நாடுகளில் இளைய சமுகம் அதிகமாக பாதிப்படைவது அரட்டையாலே இதை நிறைய பேர் உணர்ந்துள்ளார்கள்.

நான் தவறான கருத்தை சொல்ல வில்லை அதை தவறு என்று கருதினால் அதைப்பற்றி கவலையில்லை

நான் தனிப்பட்ட யாரையும் குறிப்பிடவில்லை . அரட்டை தவறு என்று எழுதியதால் நான் அரட்டையை தவறாக பயன்படுத்தினேன் என்று அர்த்தம் இல்லையே எல்லா தவறுகளுக்கும் அரட்டைதான் முழு காரணம் என்று சொல்லவில்லை அரட்டையும் தவறுகளுக்கு வழிவகுக்கின்றது இதை புரிந்துகொண்டால் சரி தவறை தவறு என்று ஏற்றுக்கொள்ள ஒருசிலர் தயாராக இல்லைதானே

நீங்கள் முதல் சொன்னதையுஇம் கடைசியாக சொன்னதையும் ஒப்பிட்டு பாருங்கள்

  • தொடங்கியவர்

நீங்கள் முதல் சொன்னதையுஇம் கடைசியாக சொன்னதையும் ஒப்பிட்டு பாருங்கள்

நான் சொல்ல வந்தது முழுமையாக அரட்டையால் பாதிக்கபடுகின்றாக என்பதல்ல அதிகமாக அரட்டையால் பாதிப்பு உண்டு அதுவும் இளயசமுதாயத்துக்கு நான் தனிப்பட்ட கருத்தாக சொல்ல வில்லை ஒரு சமுகத்தின் கருத்தை தான் முன்வைத்தேன் அரட்டையால் உங்களுக்கும் உங்களை சார்ந்த சமுகத்திற்கும் அதிக நன்மையே என்றால் எல்லோருக்கும் சந்தோசம் நான் அறிந்தவரைக்கும் பலர் அரட்டையால் நன்மை என்று சொல்லவில்லை இக்கருத்தை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் தனிப்பட்ட சுகந்திரம்

ஹா....ஹா....... சபாஷ் சரியான போட்டி.... (வீரப்பாவை நினைவில் கொள்க... யாரப்பா அது என்றெல்லாம் கேட்டு என் அதிகப் படியான நம்பிக்கையை தகர்க்க மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.... )

கவிஞருக்கு சீரியசாக ஜோக் கூட அடிக்க முடிகிறதே... அரசியல்வாதிக்கான தகுதியோ?

ஹிஹி ..... ஹும் இந்த தலைப்பில் நடப்பவையைப் பார்க்க முந்தி யாழ்ல நடந்த ஒரு பட்டிமன்றம் ஞாபகம் வருது. :lol:

தொடந்து எழுதுங்கள் ஸகி.... ! :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.