Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்முனை அப்பமும் கிழக்கு மாகாண அப்பக்கடையும் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கல்முனை அப்பமும் கிழக்கு மாகாண அப்பக்கடையும்
- வ.ஐ.ச.ஜெயபாலன்

கடந்த 30 வருடங்களாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக கல்முனை வடக்கு தமிழரும் கல்முனைகுடி முஸ்லிம்களும் முறுகி முரண்படுகிறார்கள். நட்புறவு நிலவுவதாக சொல்வது ஆழமான உண்மையல்ல. இதுதான் அடிபடை பிரச்சினை. இப்பிரச்சினை சுமூகமாக தீர்க்கபடதமைதான்.அடுத்தவர் தலையீடு எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம். 

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக மட்டகளப்பில் இருந்து அம்பாறை கச்சேரிக்கு கிழக்கு மாகாண தமிழர் ஆர்ப்பாட்ட ஊர்வலமாக செல்லபோவதாக அறிக்கை வந்துள்ளது. இதிலும் வேறு சக்திகள் கலந்து கொள்ளக் கூடும். பிரச்சினைக்கு காரணம் காரணம் அப்பம் பகிரும் குரஙல்ல. காரணம் இணங்கித் தீர்க்க முடியாத பூனைகள்தான். .
. கல்முனை வடக்கு பிரதேச சபை பிரச்சினையை நன்குணர்ந்துள்ள கல்முனை முஸ்லிம்களின் தலைவர் ஹாரிஸ் அவர்கள் இன்று சம்பத்த பட்ட துறை அமைச்சராக பணியாற்றுகிறார். மாண்பு மிகு ஹாரிஸ் அவர்கள் கல்முனை தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒரு பிரதேச செயலகத் தீர்வுக்கு ஒன்று சேர்க்க ஒருமுறை முயன்று பார்க்க வேண்டும். இயலாத பட்சத்தில் தமிழரின் 30 வருடக் கோரிக்கையான கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு வழிவிடுவதன் மூலம் கல்முனை வாழ் தமிழர்களும் முஸ்லிம்களும் மீண்டும் ஒன்றுபட உதவ வேண்டும். 30 வருடங்களாக தென்கிழக்கு கரையோர மாவட்டமும் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்துடன் சேர்த்து பரணில் கிடக்கிறது.  கல்முனை அப்பமல்ல. மாகாணசபை தேர்தல் பதவிகள் என்கிற கிழக்குமாகாண அப்பக்கடையை பங்கிடுவதுதான் குரங்குகளின் நோக்கம். 
.
இத்தகைய ’போர்கால மோதல் சூழலுக்கு நேர் எதிரான’ ஒரு கிழக்கு மாகாண பனீப்போர் சூழல் இறுதியில் தமிழ் முஸ்லிம் மக்கள் இரு சாராரது நலன்களையும் எதிர்காலத்தையும் குழி தோண்டிப் புதைத்துவிடும். கல்முனைகுடி மக்கள் தங்கள் நிலைபாடு தொடர்பாக தனிமைபடுதல் தமிழ் மக்கள் மத்தியில் மட்டும் நிகழ்ந்தால் புறக்கணிக்க முடியும். ஆனால் சம்மாந்துறை மாளிகைக்காடு நாவிதன் வெளி போன்ற அயல் முஸ்லிம் மக்கள் மத்தியில் தனிமைபடுகிற சூழலை புறக்கணிக்க முடியும் என தோன்றவில்லை.கல்முனை அப்பம் மட்டுமல்ல கிழக்குமாகாண அப்பக்கடையும் தமிழ் தலைமைக்கு மட்டுமல்ல முஸ்லிம் தலைமைக்கும் முக்கியம் இதனால் முஸ்லிம் கட்சிகள் மத்தியிலும் இப்பிரச்சினையில் கல்முனை குடி நிலைபாடு சிக்கலை ஏற்படுத்தவே செய்யும். இதனை கல்முனைக்குடி சமூக அரசியல் சக்திகள் விவாதிக்க வேண்டும். . 
.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை பிரச்சினை முன்னைப்போலன்றி இன்று எல்லைப்புற அச்சங்களிலேயே தொக்கி நிற்கிறது என்பதை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தீர்வுக்குத் தடையாக மேம்படும் அச்சம்கல்முனைகுடி மக்கள் மத்தியில் உள்ள அச்சம் இடைப்பட்ட அரச நிலங்கள் பற்றியதாகும். எல்லையோர பொது நிலங்கள் தொடர்பான கல்முனைகுடி முஸ்லிம் மக்களின் அச்சத்தை தீர்பதற்க்கு சாத்தியமான குறைந்த பட்ச்ச குடுக்கல் வாங்கல் அடிப்படையிலான விட்டுக்கொடுப்புகள் அவசியப்படலாம். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை தரமுயர்தல் பிரச்சினைக்கு தீர்வுகாண கல்முனைக்குடி சமூக அரசியல் சக்திகள் ஒத்துழைக்கும் சூழலில் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணும் அடிப்படையில் தமிழர்களும் சாத்தியமான எல்லாவறையும் செய்ய முன்வரவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை மக்கள் ஒத்துக்கொண்டாலும் அரசியல் வாதிகள் பாராளுமனறத்தில் கல்முனை பிரதேச செயலகம் தொடர்பாக ஆற்றிய உரையை நீங்கள் கேட்கவில்லை போல மற்றது கல்முனையில் இயங்குவது சட்டவிரோத பிரதேச செயலகமாம் அதை தரமுயர்த்தக்கூடாது என மூஸ்லீம்கள் நோட்டீஸ் வெளியீட்டு இருக்கிறார்கள் கிடைத்ததும்  இணைக்கிறேன் .

மக்களை அரசியல் வாதிகள் கல்முனையை வைத்துகாய் நல்லா நகர்த்துகிறார்கள்  கோடிஸ்வரன் ,ஹரிஸ் மன்சூர் ம்  ஹக்கீம் போன்றவர்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அளவுக்கு இல்லையானாலும் வடகிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு பகுதிகள் பற்றியும் என்னால் இயன்ற அளவுக்கு கவனம் செலுத்தியபடிதான் செயல்படுகிறேன். எல்லா பிரச்சினைகளுக்கும் இரண்டு பக்கம் உண்டு. இரண்டு பக்கத்திலும் மனிதர்கள். முள்ளில்போட்ட சேலையை எடுப்பதுபோலத்தான் அரசியல்

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, poet said:

உங்கள் அளவுக்கு இல்லையானாலும் கிழக்கு மாகாணம் நான் வசிக்கும் மாகாணம் என்பதால் சொல்கிறேன் அரசியலாலும் முள்ளில் விழுந்த சேலையை எடுக்க முடியாது  ஏனென்றால் அரசியல் அதை இன்னும் கிழிக்கத்தான் செய்கிறதே தவிர அந்த  சீலையை அவ்வளவு சீக்கிரம் எடுக்க முனைப்பு காட்டவில்லை அப்படி எடுக்க அரசியலில் தெம்பு இல்லை கிழக்கு அரசியல் வாதிகளுக்கு .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனிக்காட்டுராஜா, நீங்கள் கிழக்கா?  மன்னித்துக்கொள்ளுங்கள். நான் சும்மா கிண்டலாகத்தான் சொன்னேன். உங்களைபோல  கிழக்கில் பிறக்காவிட்டாலும் கிழக்கு என் இதயத்துக்கு அருகில் உள்ளது நண்பா

என்ன செய்வது இருக்கிற காய்களை தூக்கி வீசிவிட்டு இந்த சதுரங்கத்தை ஆடமுடியாது நண்பா

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, poet said:

ம்ம் நான் கிழக்கு அதுவும் அம்பாறை என்றால் நம்புவீர்களா கல்முனை பக்கம் தான் அதனால் தான் சொன்னது மற்றும் அரசியல் வாதிகள் மீது நம்பிக்கை இல்லை அது கிழக்கிலும் சரி வடக்கிலும் சரி சுயநல வாதிகள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தனிக்காட்டுராஜா,

கல்முனைப்பக்கமா? மகிழ்ச்சி. யாழ் இணைய குடும்பத்தின்மீதான மதிப்பு அதிகரிக்கிறது. கல்முனைப்பக்கமென்றால் எங்கே காரைதீவா? அல்லது மருதமுனை நாய்பிடீமுனை துறை நிலாவணை பக்கமா? உங்கள் பகுதிபற்றி வடக்கைச் சேர்ந்த நான் எழுதுகிறபோது பிழைகள் அதிகம் இருக்கா? இருந்தால் திருத்துங்க. மகிழ்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, poet said:

ஓம் ம் பிழை இருக்கும் போது தட்டிக்கேட்பேன் ஐயா நாய்பிடீமுனை அல்ல நற்பட்டிமுனை என்பதே சரி  அக்னியஷ்த்ரா  பக்கம் தானே தகுந்த விளக்கம் கொடுக்கலாம் தானே  ஐயாவுக்கு

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஓம் ம் பிழை இருக்கும் போது தட்டிக்கேட்பேன் ஐயா நாய்பிடீமுனை அல்ல நற்பட்டிமுனை என்பதே சரி  அக்னியஷ்த்ரா  பக்கம் தானே தகுந்த விளக்கம் கொடுக்கலாம் தானே  ஐயாவுக்கு

அதற்க்கென்ன தனி கொடுத்தால் போச்சு ....
புலவரே நாங்கள் இருவரும் கிழக்கர்கள் தான் ,அருகருகே அடிக்கடி சந்தித்துக்கொள்வதுமுண்டு .
நாய்ப்பிட்டி ,நாய்ப்பட்டி இரண்டுமே தவறு, இந்த இடத்தின் பெயர் நெற்பிட்டிமுனை அதாவது ஒருகாலத்தில் விவசாயத்தில் செழித்து நெற்குவியல்கள் பிட்டிகளாக குவித்துவைக்கப்பட்டிருந்ததால் இந்த பெயர் வந்தது  பின் காலப்போக்கில் மருவி நற்பட்டிமுனையாகி நாய்ப்பட்டியில் வந்து நிற்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஹாஹா அதே ஒவ்வொரு ஊருக்கு ஒரு வரலாறே உள்ளது ஆனால் அவை தற்போது கனபேருக்கு தெரிய வாய்ப்பில்லை அவை அழிக்கப்பட்டு விட்டது எனலாம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

aன்புக்குரிய அக்னியஷ்த்ரா, தனிக்காட்டு ராஜா, நான் அரை நூற்றாண்டுகளுக்கு முன்னம் யாழ்பாணநகரத்தில் மூத்த எழுத்தாளர் பதிப்பாளர் வரதரோடு பேசிக்கொண்டிருந்தேன். சின்னவயசுக்கதையொன்று சொன்னார். புன்னாலை என்ற தங்கள் ஊர்பேர் கிண்டலுக்கு உள்ளாவதால் தானும் தனது நண்பர்களும் கவலை அடைந்திருந்ததாகச் சொன்னார். ஒரு இரவில் இரண்டாம் காட்ச்சி படன் பார்த்து விட்டு வழி நெடுக அயலூர்களில் இருந்து ஊருக்கு வழிகாட்டும் பெயர்பலகைகளிலும்  புன்னாலை என்பதை பொன்னாலை என மாற்றிவிட்டார்களாம்.  இப்படி நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இது வரலாற்று ஆய்வுகளில் சிக்கல்களை உருவாக்கும்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, poet said:

தற்போது கன ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட்டு விட்டது நீங்கள் அறிவீர்கள் தானே ஏன் சின்ன உதாரணம் எனது வீதி கூட யாரோ ஒரு வெள்ளைக்காரனின் பெயர் வைத்துவிட்டார்கள் என்றால் பாருங்கோவன்.......... அந்த பெயருக்கு முன் எங்கள் வீதியின் பெயரோ சுத்த தமிழ் பெயர்

வடகிழக்கில் நிறைய ஊர்கள் பெயர்கள் மாற்றத்துக்கு காத்துக்கொண்டுதான் இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் அந்த அந்த கிராம மக்களும் அமைப்புகளும் தொடர்ச்சியான அழுத்தங்களை பிரதேச சபைக்கு வழங்கினால் மாற்றம் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

இந்த விடயத்தில் அந்த அந்த கிராம மக்களும் அமைப்புகளும் தொடர்ச்சியான அழுத்தங்களை பிரதேச சபைக்கு வழங்கினால் மாற்றம் வரும்.

அப்படி பிரதேச சபை அல்ல பிரதேச செயலகம் கல்முனை மாநகரத்தில் உள்ள தமிழ் பிரதேச செயலகம் சம்பந்தமான பிரச்சனை அது ஏராளன் அரசியலுக்குள் கிடந்து புரள்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2019 at 3:29 AM, poet said:
கல்முனை அப்பமும் கிழக்கு மாகாண அப்பக்கடையும்
- வ.ஐ.ச.ஜெயபாலன்

கடந்த 30 வருடங்களாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக கல்முனை வடக்கு தமிழரும் கல்முனைகுடி முஸ்லிம்களும் முறுகி முரண்படுகிறார்கள். நட்புறவு நிலவுவதாக சொல்வது ஆழமான உண்மையல்ல. இதுதான் அடிபடை பிரச்சினை. இப்பிரச்சினை சுமூகமாக தீர்க்கபடதமைதான்.அடுத்தவர் தலையீடு எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம். 

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக மட்டகளப்பில் இருந்து அம்பாறை கச்சேரிக்கு கிழக்கு மாகாண தமிழர் ஆர்ப்பாட்ட ஊர்வலமாக செல்லபோவதாக அறிக்கை வந்துள்ளது. இதிலும் வேறு சக்திகள் கலந்து கொள்ளக் கூடும். பிரச்சினைக்கு காரணம் காரணம் அப்பம் பகிரும் குரஙல்ல. காரணம் இணங்கித் தீர்க்க முடியாத பூனைகள்தான். .
. கல்முனை வடக்கு பிரதேச சபை பிரச்சினையை நன்குணர்ந்துள்ள கல்முனை முஸ்லிம்களின் தலைவர் ஹாரிஸ் அவர்கள் இன்று சம்பத்த பட்ட துறை அமைச்சராக பணியாற்றுகிறார். மாண்பு மிகு ஹாரிஸ் அவர்கள் கல்முனை தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒரு பிரதேச செயலகத் தீர்வுக்கு ஒன்று சேர்க்க ஒருமுறை முயன்று பார்க்க வேண்டும். இயலாத பட்சத்தில் தமிழரின் 30 வருடக் கோரிக்கையான கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு வழிவிடுவதன் மூலம் கல்முனை வாழ் தமிழர்களும் முஸ்லிம்களும் மீண்டும் ஒன்றுபட உதவ வேண்டும். 

இந்த அமைச்சரை கவிஞர் அவர்கள் மாண்புமிகு என அழைப்பது எனது மனதுக்கு இதமளிக்கவில்லை.ஏனெனில் இந்தப்பிரச்சனைகளின் விளைநிலமாக இன்று விஸ்வரூபத்தில் நிற்பவர் இவர்தான்.உறக்கமின்றி,உணவின்றி ஒத்தக் காலில் நிற்கிறாராம்.இந்த அமைச்சர் ஒன்றை உணரமறுக்கிறார்.சிலரது உரிமைகளை சிலகாலம் தடுக்கலாம்.பலரது உரிமைகளை பலகாலம் தடுக்கலாம்.ஆனால் எல்லாரது உரிமைகளையும் எல்லாக்காலமும் தடுக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நந்தி said:

வழக்கும் போடப்பட்டுள்ளது தமிழர்களுக்கு எதுவும் விட்டுக்கொடுக்க கூட தயாரில்லை உரிமை இருந்தும் நந்தி ஐயாவின் காலத்தில் அவருக்கு நல்ல நண்பர்கள்  இருந்திருக்கலாம் அதனால் சொல்கிறார் என்னவோ தெரியல ஆனால் ஹரிஸ் சாய்ந்தமருது தனி பிரதேச செயலகம் கேட்ட போதும் கூட கொடுக்கல  காரணம் கல்முனை தமிழர்கள் கையில் போய்விடும் என்பதற்க்காக.

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை தமிழ் மக்கள் தங்களுக்கான தனியான பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி கேட்க அதாவது நடைபவனி மூலம் 21.04.0219 அன்று கோரவுள்ளார்கள் அதற்கு முஸ்லீம் தரப்பினரது பிரசுரம் ஒன்று 

இதற்கு பொயட் ஐயா என்ன சொல்ல போகிறார்

No photo description available.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.