Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வல்­வெட்­டித்­துறையில் களைகட்டும் இந்­திர விழா­!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வல்­வெட்­டித்­துறையில் களைகட்டும் இந்­திர விழா­!!

பதிவேற்றிய காலம்: Apr 18, 2019

யாழ்ப்­பா­ணம்,  வல்­வெட்­டித்­துறை இந்­திர விழா நாளை கொண்­டா­டப்­ப­ட­வுள்ள நிலை­யில், அதற்­கான ஏற்­பா­டு­கள் அனைத்­தும் பெரும் எடுப்­பில் முன்­னெ­டுக்­கப்­பட்டு நிறை­வு­பெற்­றுள்­ளன.

FB_IMG_1555510352427.jpg?resize=845%2C56FB_IMG_1555510323621.jpg?resize=1170%2C720190417_190614.jpg?resize=1170%2C1560&s

இந்­திர விழாவை முன்­னிட்டு, வல்­வெட்­டித்­துறை ஊரிக்­காடு தொடக்­கம் வல்­வெட்­டித்­துறை பொலி­கண்டி வரைக்­கு­மான சுமார் நான்கு கிலோ­மீற்­றர் தூத­ரத்­துக்கு 15 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட மின்­கு­மிழ் அலங்­கா­ரங்­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

சுமார் 300க்கும் மேற்­பட்ட வாழை­கள் இந்த விழா­வுக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந்­துக் கட­வு­ளர்­க­ளின் திரு­வு­ரு­வங்­கள் பொருத்­தப்­பட்ட 10 கட்­அ­வுட்­கள் பெரி­ய­ள­வில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன. சுமார் 100 புகைக்­கூண்­டு­கள் விடப்­ப­ட­வுள்­ளன.

அவற்­றில் ஐந்து கூடு­கள் அறு­பது அடி­கள் உய­ர­மு­டிவை. வாண­வே­டிக்­கை­க­ளுக்­கும் ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன. ஏழு இசைக்­கு­ழுக்­கள் இசை வழங்­கத் தயா­ரா­கி­யுள்­ளன.

வில்லுப்­பாட்டு, நாட­கம், நட­னம், பாரம்­ப­ரிய நிகழ்­வு­கள் என்­ப­வற்­று­டன் கட­லில் மேடை அமைத்­தும் ஓர் இசை நிகழ்வு நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 50 வரு­டங்­க­ளுக்­கும் மேலாக இந்த விழா கொண்­டா­டப்­பட்டு வரு­கின்­றது.

இந்த விழாவை யாழ்ப்­பா­ணத்­தி­லும் ஏனைய பகு­தி­க­ளி­லும் இருந்­தும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­கள் நேரில் சென்று பார்­வை­யிட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

https://newuthayan.com/story/09/வல்வெட்டித்துறையில்-க.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்திரனை பற்றிய ஓர் குறிப்பு

அகலிகை ஒரு பேரழகி. கவுதம முனிவரின் மனைவி. அவளது அபரிமிதமான அழகில் இந்திரன் மதி மயங்கினான். அவளை அடையும் நோக்கில், கவுதம முனிவர் வெளியே சென்றிருந்த வேளையில், அவரது உருவத்திலேயே அகலிகையிடம் வந்தான். சிறிது நேரத்தில் கவுதம முனிவர் இல்லம் திரும்பினார். அவரைப் பார்த்ததும் அஞ்சிய தேவந்திரன், பூனை வடிவம் எடுத்தான். மனைவி தவறு செய்து விட்டதாக கருதிய முனிவர், அவளை கல்லாக போகும்படி சபித்தார். பிறர் மனை நோக்கிய இந்திரனை, அவனது உடல் முழுவதும் ஆயிரம் குறிகள் தோன்றும்படி சாபம் கொடுத்தார்.

https://www.dailythanthi.com/Others/Devotional/2017/05/16160209/IndraCurseLeavingPlace.vpf
 

இத்த‌தைகைய ஒருவனுக்கு ஏன் யாழில் திருவிழா எடுக்க வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, colomban said:

இத்த‌தைகைய ஒருவனுக்கு ஏன் யாழில் திருவிழா எடுக்க வேண்டும்?

அதானே அடுத்த மாதம் நோன்பு தொடங்குதுப்பா கொழும்ஸ் வாங்கோ போய் கஞ்சியாவது வாங்கி குடிப்பம்  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அதானே அடுத்த மாதம் நோன்பு தொடங்குதுப்பா கொழும்ஸ் வாங்கோ போய் கஞ்சியாவது வாங்கி குடிப்பம்  :grin:

ராஜா,

கீழ வாசித்துப்பாருங்கள்.

இப்படிபட்டவனுக்கு ஏன் விழா எடுக்க வேண்டும். மனசட்சியுள்ள எவனும் செய்யமாட்டான்.

 

இந்திரனுக்கு அரம்பையர் கோன் என்றொரு பெயரும்
உண்டாம்.தேவேந்திரன், விஜயேந்திரன் என்பவை இந்திரனுக்கு விளங்கும் வேறு
பெயர்கள்.அரம்பையர் உலகம் என்பது 60 ஆயிரம் அப்சரசுகள் (தேவமாதர்கள்)
உள்ள ஓர் உலகமாம் .

அங்கு பாற்கடலில் பிறந்த அலம்புஷை முதற்கொண்டு
ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, கிருதாசி முதலிய அப்சரசுகள்
நிறைந்துள்ளனராம்.இங்கு இருமனப் பெண்டிரும், விரதம் தவறிய பெண்களும்
சென்றடைவராம்.இவர்களுக்குத் தலைவன் இந்திரன்.

அதனால்தான் இந்திரனுக்கு
“அரம்பையர் கோன்” என்று பெயர் உலகத்தில் ‘பெருந்தவம்’ செய்வோர் இந்திர
பதவியை அடைவர்.

பதவியில் இருக்கும் இந்திரன் தன் பதவியைக் காத்துக் கொள்ள
இந்த “தேவருலக அப்சரசுகளை ” அனுப்பி பெருந்தவம் செய்வோர் தவத்தைக்
கெடுப்பான்.அப்படியானால் அவர்களால் இந்திர பதவி வகிக்க முடியாதல்லவா?

அதே
முறையில் தான் அரம்பையர் உலகை சேர்ந்த மேனகை விசுவாமித்திரனின் தவத்தைக்
கெடுத்தாளாம்.மாற்றான் மனைவி மீது மோகம் என்பது எந்த காலத்தில்தான்
இல்லை.புராணகாலங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன!!....

இந்த முன்னுரையை
நிறுத்திவிட்டு வாருங்கள் இனி கதைக்கு வருவோம்.ஒருமுறை தேவலோகம் சென்ற
நாரதர் இந்திரனிடம் அகலிகை என்னும் அழகியைப் பற்றி வருணித்தார்.

கௌதம
முனிவர் மனைவி அகலிகை. சிறந்த அழகி;கற்புக்கரசி.தேவர் தலைவனான இந்திரன்,
கவுதமரின் மனைவியான அகலிகை மீது ஆசை கொண்டான். 


ஒருநாள், நள்ளிரவில் சேவல்
வடிவெடுத்து கூவினான். பொழுது புலர்ந்தது என எண்ணிய முனிவர், காலைநேர
அனுஷ்டானத்திற்காக கிளம்பினார். இதைப் பயன்படுத்திக் கொண்ட இந்திரன்,
கவுதமரின் வடிவில் சென்று அகலிகையை ஏமாற்றினான்.

தன் இச்சையைத் தீர்க்க
அகலிகையை அணைக்கின்றான்.வந்தது கணவன் என்று நம்பிய அகலிகை அவனுக்கு இடம்
தருகின்றாள்.ப்சி ஆறி தன் விரகதாபத்தை தீர்த்துக்கொண்டான்
இந்திரன்.

கட்டிலில் வைத்து அவன் காட்டிய வித்தையில் அவள் கதிகலங்கிப்
போனாள். இத்தனை நாள் இதை எங்கே ஒளித்து வைத்திருந்தார்?என்று ஒரு
சந்தேகம் அகலிகைக்கு அப்போதுதான் மனதுக்குள் வந்தது.அகலிகை இப்படி
நினைத்து முடிக்கவில்லை. கதவு தட்டப்படுகிறது.'

'அகலிகை அகலிகை கதவை
திற''என்று குரல் வந்தது.கூப்பிடுவது கணவர் கௌதமன் குரல் போல்
இருக்கவே,பதறியடித்த அகலிகை தன்னோடு ஓருடலாகி விட்டவன் முகத்தைப்
பார்க்கிறாள்.

கௌதமன்தான் இங்கேயும்!.தன்னைக் கட்டித் தழுவி இருப்பவனை
உதறிவிட்டு எழுகிறாள். “யார் நீ” என்கிறாள்.கவுதமன் வேடம் பூண்டுவந்த
இந்திரனின் முகம் வெளிறிற்று. கைகளில் நடுக்கம்.

“என்னை மன்னித்து
விடு,நான் தேவேந்திரன்” என்கிறான்.வெளியே மீண்டும் கதவு கட்டப்படுகிறது
.கலைந்து கிடந்த ஆடையை அள்ளி அலங்கோலமாய் உடம்பில் சுற்றிக்
கொண்டாள்;கதவை திறந்தாள்.

அகலிகை நின்ற கோலமே என்ன நடந்தது என்பதை
கௌதமனுக்கு உணர்த்தி விட்டது. கோபாவேசத்தில் நிற்கும் கௌதமனைப் பார்த்த
இந்திரன் பூனையாய் உருமாறி மெல்ல கதவிடுக்கின் வழியாக வர,விஷயமறிந்த கௌதம
முனிவர், இந்திரன் உடம்பெங்கும் பெண்குறிகளாகும் படி சபித்தார்.

தேவேந்திரனாய் இருந்தும் காமனால் ஆட்கொள்ளப்பட்டமையால், காமத்தை வெல்ல
முடியாத இந்திரன் கவுதம முனிவரால் சாபம் பெற்றானல்லவா?அப்படி தாம் பெற்ற
சாபத்தை இந்திரன் முழுவதுமாக சிவபூஜை செய்து போக்கிக் கொண்டான்.

https://m.facebook.com/agathiyar.astrology/posts/2179596285593301

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, colomban said:

  ராஜா,

கீழ வாசித்துப்பாருங்கள்.

இப்படிபட்டவனுக்கு ஏன் விழா எடுக்க வேண்டும். மனசட்சியுள்ள எவனும் செய்யமாட்டான்.

போர் குற்றம் சாட்டப்பட்ட ராஜபக்சேக்கு கூட ஆராத்தி எடுத்து வரவேற்கிறோம் இப்படி இருக்க 

அதேதான் நானும் சொல்கிறன் கஞ்சி குடிப்போம் நாளைக்கு பிறக்கிற பிள்ளைக்கு தமிழ் பெயர் வைப்பதென்றால் கூட பாரிய பிரச்சினைக்குள்ளதான் நாம் நிற்க போறம்  

 

அதுசரி இந்திரன் சிலவேளை சிங்களவராக கூட இருக்கலாம் எதுக்கும் நன்றாக விசாரித்துப்பாருங்கள் ஏனென்றால் இன்று ஒரு புத்தகம் வெளியிடப்பட்டதாக பார்த்தேன் அதில மட்டக்களப்பு முன்னொரு காலத்தில் அரேபியர்களின் துறைமுகமாக இருந்ததாம் அதன் பெயர் மஹரப்பாம் அதுதான் நாளடைவில் மட்டக்களப்பானதாம் நம்புங்க புத்தகத்தின் அந்த பக்கம் மட்டும் தருகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

இந்திரனை பற்றிய ஓர் குறிப்பு

அகலிகை ஒரு பேரழகி. கவுதம முனிவரின் மனைவி. அவளது அபரிமிதமான அழகில் இந்திரன் மதி மயங்கினான். அவளை அடையும் நோக்கில், கவுதம முனிவர் வெளியே சென்றிருந்த வேளையில், அவரது உருவத்திலேயே அகலிகையிடம் வந்தான். சிறிது நேரத்தில் கவுதம முனிவர் இல்லம் திரும்பினார். அவரைப் பார்த்ததும் அஞ்சிய தேவந்திரன், பூனை வடிவம் எடுத்தான். மனைவி தவறு செய்து விட்டதாக கருதிய முனிவர், அவளை கல்லாக போகும்படி சபித்தார். பிறர் மனை நோக்கிய இந்திரனை, அவனது உடல் முழுவதும் ஆயிரம் குறிகள் தோன்றும்படி சாபம் கொடுத்தார்.

https://www.dailythanthi.com/Others/Devotional/2017/05/16160209/IndraCurseLeavingPlace.vpf
 

இத்த‌தைகைய ஒருவனுக்கு ஏன் யாழில் திருவிழா எடுக்க வேண்டும்?

இந்திர விழா என்று ஆரம்பித்திருந்தாலும் காலப்போக்கில் கடலாடுவிழாவாக இவ்விழா இந்தியாவிலும் இலங்கையிலும் மாறியது. அதுமட்டுமன்றி பூம்புகாரில் இவ்விழா காதலர்களுக்குரியதாக்க் கொண்டாடப்பட்டதேயன்றி இந்திரனை யாரும் நினைத்திருப்பார்களா என்று தெரியவில்லை. பின்னர் குடும்பமாக்கடற்கரைக்கு விதவிதமாகச் சமையல் செய்து உறவுகள் நண்பர்களுடன் கூடிக் கழிக்கும் விழாவாக மாறியது. 

வல்வெட்டித்துறையிலும் அப்படித்தான். இம்முறை சித்திரையில் லீவு வந்ததால் லண்டனில் இருந்துமட்டும் நாதூறு பேருக்குமேல் அவ்விழாக்காணச் சென்றுள்ளதாக அவ்வூரார் கூறுகின்றனர். வீடுகள் எல்லாம் நிரம்பி வழிகின்றனவாம். 

வீதிகளின் மேலால் மேடைகள் அமைக்கப்பட்டு அதிலும் கலை நிகழ்வுகள் நடைபெறுமாம். பர் ஊர்களிலும் இருந்து இவற்றைக் காண்பதற்கும் மக்கள் கூடுவார்களாம். 

அங்கு உள்ள அம்மனின் தீர்த்தத் திருவிழாவையே இந்திர விழாவாக அம்மக்கள் கொண்டாடுகின்றனரே அன்றி இந்திரனுக்கும் விழாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இந்திரனின் பெயர் அவ்விழாவுக்கு வைத்ததைத்தவிர நீங்கள் கூறிய கதையே ஆரியர்களின் கதைதானே கொழும்பான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்திரன் என்பது ஜனாதிபதி பிரதமர் போல ஒரு பதவி அவ்வளவே கொழும்பான். அதில் பல இந்திரர்கள் வந்து போய் விட்டார்கள். யாரோ ஒன்றிரண்டு இந்திரர்கள் தப்பு செய்கிறார்கள்.அவர்களை வைத்து எல்லோரையும் எடை போடக்கூடாது. அவர்தான் (அந்தபதவியில் இருப்பவர்) நவகிரகங்கள் எல்லாவற்றையும் ஆட்சி செய்ப்பவர்.பஞ்சபூதங்களுக்கும் தலைவராக அறியப்படுகின்றார்.பூமி செழிப்பதற்கு பெய்யும் மழையின் அதி தேவதை. அதனால்தான் அவருக்கு விழா எடுப்பது......!  😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.