Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொகுதிவாரியான வாக்குப்பதிவு நிலவரம் மாலை 5 மணியளவில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு தேர்தல்: மாலை 5 மணி வரை 63.73% வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் #LIVE

  •  
தமிழ்நாடு தேர்தல்படத்தின் காப்புரிமை PIB INDIA

(தமிழகத் தேர்தல் வாக்குப்பதிவு குறித்த செய்திகளைத் தொடர்ந்து தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தை புக்மார்க் செய்துகொள்ளுங்கள்.)

தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வேலூர் தவிர தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி தேர்தல் நடக்கும் 38 மக்களவைத் தொகுதிகளில் 63.73% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக சிதம்பரம் தொகுதியில் 70.73% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாடு தேர்தல் Image caption தமிழகத்தில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம்

இடைத் தேர்தல் நடக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் 67.08% வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதுச்சேரியில் மாலை 5 மணி வரை 71% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

5:40 PM பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், வாக்குச்சாவடிக்கு வெளியில்தான் வெவ்வேறு கட்சிகளின் தொண்டர்களிடையே மோதல் நடந்தது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ தெரிவித்தார்.

5:15 PM ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஐந்து வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் மோதல் என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

5:00 PM திருநெல்வேலி மக்களைவைத் தொகுதிக்கு உள்பட்ட பணகுடி எனும் இடத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

4:20 PM சட்டமன்ற இடைத் தேர்தல் நடக்கும் ஆம்பூரில் அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலால், அதைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இடைத் தேர்தல் நடக்கும் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் கல்லூர் எனும் இடத்தில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களிடையே மோதல் என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆம்பூர், குடியாத்தம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளும் மக்களவைத் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வேலூர் மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ளன.

4:10 PM தமிழகத்தில் அதிகளவில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இல்லாமல் வாக்குப்பதிவு இதுவரை அமைதியாகவே நடந்து வருவதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

3:40 PM மதியம் 3 மணி வரை கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் 48.99 % மற்றும் 53.83% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஈரோட்டில் 54%, தூத்துக்குடியில் 51.58% வாக்குகள் பதிவாகியுள்ளன.

3:25 PM அதிமுக கூட்டணியினர் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டப் போடத் திட்டமிட்டிருப்பதாகவும், சிசிடிவி கேமரா காட்சிகளை கண்காணிக்க வேண்டும் எனவும் திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடமும், மாநில காவல் துறை தலைவருக்கும் மனு அளித்துள்ளனர்.

ஸ்டாலின்படத்தின் காப்புரிமை FACEBOOK/MK STALIN

3:10 PM எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களை குறிவைத்து நடத்தப்படும் வருமான வரி சோதனைகள் ஆளும் தரப்புக்கு பலன் தராது என்று தூத்துக்குடியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குச் சென்று பார்வையிட்டுவரும் திமுக வேட்பாளர் கனிமொழி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தேர்தல் பணியாற்றிவரும் தங்கள் தொண்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும் கனிமொழி குற்றம் சாட்டினார்.

3:00 PM கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தூத்தூர் கடற்கரையை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.

வாக்களிக்கு அனுமதிக்க வேண்டுமென அவர்கள் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

2:40 PM தமிழகத்தின் பல வாக்குச்சாவடி மையங்களில் வாக்குபதிவு இயந்திரங்கள் பழுதாகியுள்ளதால் அவற்றை உடனடியாக மாற்ற வேண்டும் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.

2:00 PM1951 முதல் இந்தியாவில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்துள்ள, கோவையைச் சேர்ந்த 103 வயதான மாரண்ணன் கருப்பராயன்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

மாரண்ணன் Image caption மாரண்ணன்

1:40 PM தமிழகத்தில் ஒரு மணி நிலவரப்படி 39.49 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்யபரதா சாஹூ தெரிவித்தார்.

1:30 PM ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

தேர்தலில் வாக்களித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், தாம் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளதாகவும், பொதுமக்களை மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க கூறியதாகவும் அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பாபு முருகவேல், தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மக்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதால், முக ஸ்டாலின் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளதாகவும், அவர் மீது மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

1:20 PM தேர்தலை புறக்கணித்த மக்கள்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட்ட வளாகம், கள்வழி ஏந்தல், கடம்பூர் ஆகிய வாக்குசாவடியில் பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து இதுவரையும் ( 11.30 மணி) வாக்காளர்கள் யாரும் வாக்களிக்கவில்லை.

ராமநாதபுரம்

12:55 PM கோவை தொகுதி  போத்தனூர் சித்தன்னபுரம் வாக்குச்சாவடியில், ராஜேஷ் என்பவர் தனது வாக்கினை வேறு ஒருவர் போட்டு விட்டார் என்று தேர்தல் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். 

பிபிசி தமிழிடம் பேசிய ராஜேஷ், ''நான் 11 மணிக்கு வாக்களிக்க வந்து பார்க்கும் பொழுது, நீங்கள் ஏற்கனேவே வாக்களித்து விட்டீர்கள் என்று கூறினர், நான் இப்பொழுது தான் வந்தேன் என்று தேர்தல் அதிகாரிகளிடம் பேசினேன், கையில் மை உள்ளதா என்று பரிசோதித்து விட்டு சிறிது நேரம் காத்திருக்க சொன்னார்கள்'' என்று கூறினார்.

Presentational grey line

12:30 PM "எனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வந்தேன். முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு வாழ்த்துகள். அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி நிறைய மாற்று கருத்து வருகிறது. அது உண்மையாக இருந்தால் மாற்றப்பட வேண்டும்" - வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி.

Presentational grey line

இந்திய மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் மொத்தம் 95 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது.

11.50 AM ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகை திரிஷா

காலை 11 மணி வரை 30.62% வாக்குப்பதிவு

11.30 AM தமிழகத்தில் காலை 11 மணி வரை 30.62 சதவீதம் வாக்குப்பதிவு

தமிழகத்தில் 11 மணி வரை 30.62 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 66,167 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூபடத்தின் காப்புரிமை FB/ CEO TAMILNADU Image caption தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ

பழுதாகி இருந்த 305 வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றியுள்ளதாகவும், அதே போல 525 விவிபாட்களை மாற்றியுள்ளதாகவும் சத்யப்ரதா சாஹூ குறிப்பிட்டார்.

தேர்தலுக்காக சரியாக பேருந்து வசதி செய்து தரப்படவில்லை என்பது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தொடர்ச்சியாக மூன்று நான்கு நாட்கள் விடுமுறை வந்ததால் மக்கள் அதிகளவில் ஊருக்கு செல்லும் சூழல் ஏற்பட்டது என்றும், தேர்தல் ஆணையத்தால் பேருந்துகளை ஏற்பாடு செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.

Presentational grey line

11.00 AMதூத்துக்குடியில் வாக்குப்பதிவு

தூத்துக்குடியில் விறுவிறுவென வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய கார்த்திகேயன் என்ற இளைஞர், ''தூத்துக்குடியில் எவ்வளவோ  போராட்டங்கள் நடந்துள்ளன. மக்கள் பலரும் இதில் பங்கேற்றனர். அதேபோல் தற்போது தேர்தலிலும் மக்கள் பங்கேற்று தங்கள் கடமையை ஆற்ற வேண்டும்'' என்று கூறினார். 

Presentational grey line

10.50 AM புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தனது வாக்கினை பதிவு செய்தார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிபடத்தின் காப்புரிமை ANI Image caption புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி Presentational grey line

10.40 AM 63 வயதான முருகேசன், ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு செலுத்திவிட்டு திரும்பும் போது மயங்கி விழுந்தார், அவசர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Presentational grey line

10.35 AM தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வாக்கினை பதிவு செய்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் Image caption தேமுதிக தலைவர் விஜயகாந்த்

10.30 AM அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் டிடிவி தினகரன், பெசன்ட் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

டிடிவி தினகரன் Image caption டிடிவி தினகரன்

10.25 AM பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில், அங்குள்ள பாத்திமா நகர் வாக்குச்சாவடி அமைந்துள்ள 265 வாக்குச்சாவடியில் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது இரண்டு மணி நேரமாக வாக்களிக்க முடியாமல் வாக்காளர்கள் தடுமாற்றம்.

Presentational grey line

10.00AM சென்னையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு, பல இடங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

9.50 AM கோவையில் இருந்து ஊட்டிக்கு வாக்களிக்க செல்லும் மக்கள் பேருந்து இல்லாமல் நீண்ட வரிசையில் மூன்று மணி நேரத்திற்கும் மேல் நிற்கின்றனர்.

9: 35 AM தமிழகத்தில் 9 மணி வரை 13.48 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

Presentational grey line

9:25 AM சென்னை தேனாம்பேட்டையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது மனைவியுடன் வந்து வாக்கினை பதிவு செய்தார். வாக்குப்பதிவுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஒவ்வொருவரும் தவறாமல் தங்கள் வாக்கினை பதிவு செய்ய வேண்டும். இதுவரை நடந்திருக்கக் கூடிய தேர்தல்களை விட இது முக்கியமான தேர்தலாக அமையப்போகிறது" என்று தெரிவித்தார்.

9:20 AM பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மரகதாம்பிகை நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

Presentational grey line அன்புமணி ராமதாஸ்

9: 15 AM திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

Presentational grey line

9:10 AM வெயில், கூட்ட நெரிசல் பயம் காரணமாக பெரும்பாலான சினிமா பிரபலங்கள் காலை 9 மணிக்குள் ஓட்டு போட்டனர்

9:07 AM மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா இன்று மத்திய சென்னை தொகுதியில் அரும்பாக்கத்தில் உள்ள குட்ஹோம் மெட்ரிகுலேசன் பள்ளிக்கூட வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

Presentational grey line

8:58 AM காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் வாக்களித்தார்

8:55 AM "கருணாநிதி இடத்தை மு.க ஸ்டாலின் நிரப்புவார்" - கனிமொழி

"எதிர்கட்சி வேட்பாளர்களை மட்டுமே குறிவைத்து சோதனைகள் நடைபெறுகின்றன. பாஜகதான் அதிமுகவை ஆள்கிறது. தமிழகத்தில் கருணாநிதியின் இடத்தை மு.க ஸ்டாலின் நிரப்புவார்" என்று திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்தார்.

கனிமொழிபடத்தின் காப்புரிமை ANI

8:48 AM ஆழ்வார்பேட்டை மாநகராட்சி பள்ளியில் ஒரு மணி நேரம் காத்திருப்புக்கு பின்னர் நடிகர் கமல்ஹாசன் மற்றும் அவரது மகள் ஷ்ருதிஹாசன் இருவரும் வாக்களித்தனர்.

8:30 AM சேலம் குகை மேல்நிலை பள்ளியில் சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் வாக்களித்தார்.

Presentational grey line

8:15 AM வாக்களித்த பிரபலங்கள்

சூர்யா மற்றும் ஜோதிகா Image caption சூர்யா மற்றும் ஜோதிகா கோடு

https://www.bbc.com/tamil/india-47967143

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இரவு 9 மணி நிலைவரப்படி 70.90 வீத வாக்குப்பதிவு – தொகுதிவாரி முழுவிபரம்

Tamilnadu-Voting-6.jpg

தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நாமக்கல்லில் அதிகபட்சமாக 78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்தனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்பின் மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

இதற்கிடையே, இரவு 9 மணி நிலைவரப்படி வாக்குப்பதிவு விபரம் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியுள்ளார்.

இதேவேளை,  6 மணி நிலைவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீதம் வருமாறு:

வடசென்னை 61.46%, தென்சென்னை 58.14%, மத்திய சென்னை 57.05%, ஸ்ரீபெரும்புதூர் 60.39% நெல்லை 65.78%, கடலூர் 72.51% பொள்ளாச்சி 69.81% சேலம் 72.73%, தென்காசி 70.39% திருவண்ணாமலை 69.84% தர்மபுரி 73.45%, விழுப்புரம் 72.50% கன்னியாகுமரி 65.55%, தூத்துக்குடி 69.31% காஞ்சிபுரம் 67.52% அரக்கோணம் 72.86% கள்ளக்குறிச்சி 75.18% தஞ்சாவூர் 70.53%, திண்டுக்கல் 70.40% வாக்குகள் பதிவாகின.

அத்துடன், மயிலாடுதுறை 71.20%, நீலகிரி 69.74%, சிவகங்கை 70.48%, தேனி 74.57%, ராமநாதபுரம் 67.70% பெரம்பலூர் 74.67%, கிருஷ்ணகிரி 72.79% திருச்சி 71.12%, விருதுநகர் 70.38%, கரூர் 75.84%, திருவள்ளூர் 70.46 ஆரணி 75.08% மதுரை 62% கோவை 63.81% நாகை 75.42% திருப்பூர் 63.18% சிதம்பரம் 76.07% நாமக்கல் 78% ஈரோடு 71.10% வாக்குகள் பதிவாகின.

இதேபோல், 18 தொகுதி இடைத் தேர்தலில் 6 மணி நிலைவரப்படி தொகுதி வாரியாக வாக்கு வீதம்:

பூந்தமல்லி-79.14%, பெரம்பூர்-61.06%, திருப்போரூர் – 81.05%, சோளிங்கர் – 79.63%, குடியாத்தம் – 81.79%, ஆம்பூர் – 76.35%, ஓசூர் – 71.29%, பாப்பிரெட்டிப்பட்டி – 83.31%, அரூர் – 86.96%, நிலக்கோட்டை – 85.50% வாக்குகள் பதிவாகின.

மேலும், திருவாரூர் – 77.38%, தஞ்சாவூர் – 66.10%, மானாமதுரை – 71.22%, ஆண்டிப்பட்டி – 75.19%, பெரியகுளம் – 64.89%, சாத்தூர் – 60.87%, பரமக்குடி – 71.69%, விளாத்திக்குளம் – 78.06% வாக்குகள் பதிவாகின.

 

http://athavannews.com/தமிழகத்தில்-இரவு-9-மணி-நில/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.