Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு தற்கொலை குண்டுதாரி காத்தான்குடியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மட்டக்களப்பு சீவோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்டவர் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது 


இக் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்க்கொண்டவர் காத்தான்குடி 6ம் பிரிவு தைக்கா வீதியைச் சேர்ந்த முகமட் காசிம் முகமட் றில்வான் என அடையாளம் காணப்பட்டதுடன் இவர் தௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர் எனவும் கடந்த 2007 ம் ஆண்டு காத்தான்குடியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர் எனவும் பொலிசாரால் தேடப்பட்டு வந்துள்ளவர் எனவும் கடந்த 12 திகதி வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு நாடுதிரும்பிய இவர் கடந்த 16 ம் திகதி காத்தான்குடியில் வாழ்ந்து வந்த மனைவி மற்றும் 4 வயதுடைய ஒரு குழந்தையையும் காத்தான்குடியில் இருந்து கூட்டிச் சென்றுள்ளார். என பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும்

இவரின் மனைவியை பாணந்துறைப் பகுதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாகவும் இவரின் மனைவியின் தாயார் தந்தையாரை காத்தான்குடியில் வைத்து கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிஜடி யினர் மேற்கொண்டு வருகின்றனர்

IMG_20190421_125010.jpg

http://www.battinews.com/2019/04/batticaloa-suicide-bomber-identified.html

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவோ காத்தான்குடியை புலனாய்வுத்துறை விசாரித்திருந்தால் இந்த சம்பவங்களை தடுத்திருக்கலாம் 

எல்லாம் காலம் கடந்துதான் ................

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எப்பவோ காத்தான்குடியை புலனாய்வுத்துறை விசாரித்திருந்தால் இந்த சம்பவங்களை தடுத்திருக்கலாம் 

எல்லாம் காலம் கடந்துதான் ................

தமிழனால் தான் ஆபத்து என்று  ,சிங்கள தலமைகளுக்கு புலனாய்வு தகவல் கொடுத்திட்டு.....அந்த சைக்கிள் கப்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள் புகுந்து விளையாடிட்டினம்...

இன்னும் காத்தன் குடியில் விசாரனை தொடங்கின மாதிரி தெரியவில்லையே ....சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளும் இன்னும் அறிக்கை விட்டுகொண்டிருக்கிறார்கள்.....அவர்களை விசாரனை செய்ததாக தகவல் வரவில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை குண்டுவெடிப்பு: "அந்த சந்தேக நபர் தனது பெயர் உமர் என்று கூறினார்" - சியோன் தேவாலய பாதிரியார்

 
p0775cdj.jpg

இலங்கையில் தற்கொலை குண்டுதாரி தாக்குதல்கள் நடைபெற்ற இடங்களில் மட்டக்களப்பிலுள்ள சீயோன் கிறித்துவ தேவாலயமும் ஒன்று.

அங்கு அந்த சமயத்தில் பொறுப்பில் இருந்தவர் பாதிரியார் ஸ்டான்ஸி.

அந்த தாக்குதலில் அவர், அவருடைய மனைவி மற்றும் மகன் ஆகியோர் காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஸ்டான்லியின் உறவினர்களின் 10 மற்றும் 13 வயது குழந்தைகளும் பலியாகியுள்ளனர்.

சீயோன் தேவாலய தாக்குதலில் மொத்தம் 26 பேர் பலியாகியுள்ளனர் அதில் டஜன் கணக்கானோர் சிறுவர்கள்.

சீயோன் தேவாலயத்துக்குப் பொறுப்பான அருட்தந்தை வெளிநாடு சென்றிருப்பதால், அங்குள்ள பாஸ்டர் தேவாலயத்துக்குப் பொறுப்பாக இருக்கின்றார். இந்த நிலையில், சம்பவ நேரத்தில் பாஸ்டரும் வெளியே சென்றிருந்தமையினால், பாதிரியார் ஸ்டான்லியே குண்டு வெடித்தபோது தேவாலயத்துக்குப் பொறுப்பாக இருந்துள்ளார்.

"சீயோன் தேவாலயத்தில் தாக்குதலை மேற்கொண்டவர் என சந்தேகிக்கப்படும் நபர், எமக்கு புதியவராக இருந்தார். எனவே, அவரிடம் பேசினேன். அவர் தன்னை ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த உமர் என்று அறிமுகம் செய்து கொண்டார்", என்று சம்பவம் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் ஸ்டான்லி.

மட்டக்களப்பு மாவட்டத்தில்தான் ஓட்டமாவடி பிரதேசம் அமைந்துள்ளது.

முஸ்லிம் பெயரையுடைய அந்த நபர், கிறித்துவ தேவாலயத்துக்கு வந்தமை குறித்து நீங்கள் ஏதும் கேட்டீர்களா என ஸ்டான்லியிடம் கேட்டபோது, "நாங்கள் அவ்வாறு கேட்பதில்லை. எங்கள் தேவாலயத்துக்கு சகல மதத்தவர்களும் வருவார்கள். முஸ்லிம்களும் வருவார்கள் என்பதால் அது குறித்து அவரிடம் நான் கேட்கவில்லை" என்கிறார் ஸ்டான்லி.

இலங்கைபடத்தின் காப்புரிமை Getty Images

மேலும், அந்த சந்தேக நபரை ஸ்டான்லி தேவாலயம் உள்ளே அழைத்துள்ளார். ஆனால், அவரோ தனக்கு அடிக்கடி தொலைப்பேசி அழைப்புகள் வரும், எனவே வெளியே செல்ல நேரிடும் என்று ஸ்டான்லியிடம் தெரிவித்துள்ளார்.

"நான் பேசிய நபர் தோள் பை ஒன்றை மாட்டியிருந்தார். அவர்தான் குண்டை வெடிக்கச் செய்ததாக சிறுவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால், அவர்தான் அதை செய்தாரா என்பது எனக்கு தெரியவில்லை" என்கிறார் ஸ்டான்லி.

"ஞாயிறு வகுப்பை முடித்துக் கொண்டு தேவாலயத்துக்கு உள்ளே வந்து கொண்டிருந்த சிறுவர்களும், சில பெண்களும் தேவாலயத்தின் வெளியே இருந்த சமயத்தில் குண்டு வெடித்ததுவிட்டது." என்கிறார் ஸ்டான்லி

"சுற்றி நிறைய வாகனங்கள் இருந்தன. அனைத்தும் தீப்பிடித்துவிட்டன. யாரையும் காப்பாற்ற முடியவில்லை குழந்தைகளை முடிந்தவரை தூக்கி காப்பாற்றினோம்." என்று சொல்லும் போதே உடைந்து அழுகிறார் ஸ்டான்லி

"யார் யார் உயிர் பிழைத்தார்கள் என்றுகூட எனக்கு தெரியவில்லை அங்கும் இங்கும் ஓடி கடைசியில் என்னுடைய மனைவியையும் மகனையும் இந்த மருத்துவமனையில் சந்தித்தேன். இதில் நிறைய அப்பாவி மக்கள் இறந்துவிட்டனர்." என்கிறார் ஸ்டான்லி

https://www.bbc.com/tamil/sri-lanka-48019399

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.