Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரியா படகின் மர்மம்

Featured Replies

மரியா படகின் மர்மம்

(கலைஞன்)

*ஈழப்பிரச்சினையும் இந்தியாவும்

தமிழக மீனவர்கள் மீது தொடரும் இலங்கைக் கடற்படையின் தாக்குதல்கள் போலவே குமரி மீனவர்களை சுட்டுக் கொன்ற மரியா படகின் மர்மமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

கடந்த வாரம் தமிழக ஊடகங்களில் வெளியான மரியா படகு சிறைப்பிடிப்பு குமரி மீனவர்களைக் கொன்ற 12 சிங்களவர்கள் கைது என்ற செய்திகளால் தமிழகத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

இச் செய்திகள் காட்டுத் தீ போல் பரவியதையடுத்து தமிழக மீனவக் கிராமங்களில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டது. தமது சக பாடிகளைக் கொன்ற அந்த 12 சிங்களவர்களையும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென குமரி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் பொலிஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட போது தான் அந்தப் 12 பேரில் 6 பேர் அப்பாவி ஈழத் தமிழ் மீனவர்கள் என்றும் மிகுதி 6 பேரும் அவர்களைக் காப்பாற்றிய இந்திய மீனவர்களென்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

மரியா படகுடன் 12 சிங்களவர்கள் கைது ஆயுதங்களும் மீட்பு என்ற செய்தி தொடர்பில் உண்மையில் நடந்ததென்ன எனப் பார்ப்போம்.

கடந்த 11 ஆம் திகதி தூத்துக்குடி கடலோர காவல் படையின் ரோந்துக் கப்பலான நாயகிதேவியில் கப்டன் தீபக் யாதவ் தலைமையில் கடற்படையினர் தீவிர கடற்கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். பிற்பகல் 2 மணியளவில் கப்பலின் ராடாரில் கன்னியாகுமரியிலிருந்து தென் கிழக்கே 40 கிலோ மீற்றர் தூரத்தில் படகுகள் நிற்பது தெரிந்தது.

உடனடியாக அந்தப் படகுகளை நோக்கி ரோந்துக் கப்பல் விரைந்த போது அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த மர்மப் படகுகளை இந்திய கடலோர காவல் படையின் கப்பல்கள் சுற்றி வளைத்த போது அந்தப் படகொன்றில் மரியா என எழுதப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில், சில வாரங்களுக்கு முன்பு குமரி மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு திடீரென ஒரு படகில் சிலர் சிவிலுடையில் வந்து சுட்டதில் 5 குமரி மீனவர்கள் பலியானார்கள். அவ்வாறு சுட்ட படகில் மரியா எனப் பெயர் பொறிக்கப்பட்டிருந்ததாக தப்பி வந்த மீனவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த காரணத்தினாலேயே மரியா என்ற படகையும் அதில் இருந்த 12 பேரையும் கடற்படை கைது செய்ததுடன் குமரி மீனவர்களை சுட்டுக் கொன்ற சிங்களவர்கள் கைது என்ற செய்தி வெளியாகியது.

மரியா படகையும் அதிலிருந்தவர்களையும் கைது செய்த கடலோர காவல் படையினர் அவர்களை தமிழக கியூ பிரிவு பொலிஸாரிடம் விசாரணைக்காக ஒப்படைத்தனர். இவர்களிடம் பொலிஸ் அத்தியட்சர் ஜோன் நிக்கல்சன் கியூ பிரிவு பொலிஸ் அத்தியட்சர் அசோக்குமார் ஆகியோர் விடிய விடிய விசாரணைகளை நடத்தினர்.

அப்போது தான் கைதான 12 மீனவர்களில் 6 பேர் இலங்கையில் வன்னி, மன்னார் , யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த தமிழர்களான அருள்தாசன் (21 வயது), ரொபின் (23 வயது), அருள்(19 வயது), செல்வகுமார் (19 வயது), பனிபாஸ் (28 வயது) , ரவிக்குமார் (24 வயது) எனத் தெரிய வந்தது.

அதேவேளை, ஏனைய 6 மீனவர்களும் குமரி மாவட்டம் மேல முட்டத்தை சேர்ந்த சகாயலிங்கம் (26 வயது), அந்தோனி (38 வயது), சபின் சுதாகர், முத்தப்பன் , முத்தப்பன் நெல்சன் (34 வயது) சார்லின் (25 வயது) என்பவர்களாவர்.

இலங்கை மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது அவர்கள் தாங்கள் இலங்கையிலிருந்து மீன்பிடிக்க புறப்பட்டு வந்ததாகவும் ஆறு நாட்கள் கடந்த நிலையில் தங்கள் படகின் இயந்திரம் பழுதடைந்து விட்டதால் கடல் நீரோட்டத்தில் சிக்கி இந்திய எல்லைக்குள் வந்து விட்டதாகவும் தம்மை கண்ட இந்திய மீனவர்கள் காப்பாற்றி படகில் ஏற்றிய போதே கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் கூறினர்.

இலங்கை மீனவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்ட பொலிஸார் மீன்பிடிக்க வந்தது உண்மையென்றால் நீங்கள் பிடித்த மீன்கள் எங்கேயெனக் கேள்வியெழுப்பினர்.

அதற்கு அவர்களோ நடுக்கடலில் படகின் இயந்திரம் பழுதடைந்து விட்டது. நாங்கள் எம்மைக் காப்பாற்றுமாறு சைகை செய்து கொண்டிருந்தோம். யாருமே எமக்கு உதவவில்லை. அதனால் பிடிபட்ட மீன்கள் படகில் இருந்தால் அழுகிப்போய்விடும் என்பதால் அவற்றைக் கடலுக்குள்ளேயே தூக்கி எறிந்து விட்டோம் என்றனர்.

இந்த 6 இலங்கை மீனவர்களைக் காப்பாற்றிய 6 இந்திய மீனவர்களும் இலங்கை மீனவர்களின் படகு பழுதடைந்ததெனவும் அவர்களை தாம் காப்பாற்றிய போதே கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் கூறினர்.

ஆனாலும், கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் இளம் வயதினராக இருந்ததால் சிலவேளைகளில் குமரிமாவட்ட மீனவர்களின் கொலைக்கும் இவர்களுக்கும் தொடர்பிருக்குமோ எனச் சந்தேகப்பட்ட பொலிஸார் அந்த சந்தேகத்தையும் தீர்த்துக் கொள்ள விரும்பினர்.

இதனால், `மரியா' என்ற படகில் வந்தவர்கள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்து தப்பிய ஜிரோபி துைறயைச் சேர்ந்த ஜெரின் அருளானந்ததாஸ், லூயிஸ் ஆகியோரை அழைத்து வந்து அவர்களுக்கு மரியா படகை காட்டியதுடன் கைது செய்யப்பட்டிருந்த 6 மீனவர்களையும் காட்டி இந்த மரியா என்ற படகில் வந்த இவர்களா உங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் எனக் கேட்டனர். ஆனால், உயிர் தப்பிய மீனவர்களோ படகு அந்த மரியா இல்லையெனக் கூறியதுடன் 6 இலங்கை மீனவர்களையும் தாங்கள் இதுவரை பார்த்ததில்லையெனவும் கூறினர். இதன் பிறகே பொலிஸார் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இலங்கை மீனவர்களிடம் விசாரணை நடத்திய தூத்துக்குடி பொலிஸ் அத்தியட்சர் ஜோன் நிக்கல்சன் கூறும் போது பிடிபட்ட படகில் மரியா என்ற பெயர் இருந்ததால் தான் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், விசாரணையில், மரியா படகில் வந்தவர்கள் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு படகு நின்றுவிட்டதால் அப்போது அங்கு வந்த இந்திய மீனவர்களிடம் உதவி கேட்டுள்ளனர். அவர்களும் மரியா படகில் இருந்தவர்களைக் காப்பாற்றிய நேரத்தில்தான் கடற்படையினர் இவர்களைக் கைது செய்து எம்மிடம் ஒப்படைத்தனர்.

இவர்களிடம் நாம் நடத்திய விசாரணையின்போது குமரி மீனவர்கள் படுகொலைக்கும் இந்த 6 இலங்கை தமிழ் மீனவர்களுக்கும் எவ்வித தொடர்புமில்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து எந்த ஆயுதமோ வெடி பொருட்களோ கைப்பற்றப்படவில்லை.

இவர்கள் 6 பேரையும் இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்த குற்றச்சாட்டில் தடுத்து வைத்துள்ளோம். இவர்களைக் காப்பாற்றிய 6 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்து விட்டோம். கடல் கொள்ளையர்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்துவோர் என்று இவர்கள் குறித்து வெளியான தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்று தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து மீனவர் கூட்டமைப்பின் தலைவர் அன்ரன் கோமஸ் கூறுகையில்;

மரியா படகில் வந்தவர்கள் இலங்கை மீனவர்கள் என்று தெரிந்த பின்னரும் அவர்களை காப்பாற்றி தமது படகில் எமது மீனவர்கள் ஏற்றியுள்ளனர். ஆனால், மனிதாபிமானமே இல்லாத இலங்கைக் கடற்படையினர் எமது மீனவர்களிடம் எதுவுமே விசாரிக்காமல் சுட்டுக் கொன்று விடுகின்றனர். எமது மீனவர்களின் மனிதாபிமானம் இலங்கை கடற்படைக்கு என்றைக்கு வருகிறதோ அன்றுதான் இந்தப் பிரச்சினை தீரும் என்கிறார்.

கைது செய்யப்பட்ட ஆறு இலங்கைத் தமிழ் மீனவர்களும் அப்பாவிகளெனவும் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எவ்வித தொடர்புகளுமில்லையெனவும் விசாரணைகளை மேற்கொண்ட தூத்துக்குடி பொலிஸ் அத்தியட்சர் ஜோன் நிக்கல்சன் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை அரசு வழக்கம் போலவே விடுதலைப்புலிகள் மீது பழியை போட முயற்சிக்கின்றது.

கடந்த 18 ஆம் திகதி கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்திய இலங்கை கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி.தசநாயக்க, இந்திய கடற்படையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள, இந்திய மீனவர்களை விடுதலைப்புலிகளே சுட்டுக் கொன்று வருவதாக தெரிவித்துள்ளதாகவும் அது குறித்த ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன் இந்த மீனவர்களின் தகவலினால் இலங்கை கடற்படை மீது கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டுகள் பொய்யென நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி தமது கடற்படைக்கு வெள்ளையடிக்க முற்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று வரும் தமது கடற்படையினரை மனித நேயமிக்கவர்களென காட்டிக் கொள்ள இலங்கையரசும் அதன் கடற்படையும் பெரு முயற்சி செய்து வந்தாலும், இந்திய மீனவர் படுகொலையில் இலங்கை கடற்படையின் பங்களிப்பு என்னவென்பதில் தமிழக மீனவர்கள் மிகவும் தெளிவுடன் இருக்கின்றார்கள் என்பதே உண்மை.

http://www.thinakkural.com/

நயவஞ்சக தச நாயக என்ன கூறினாலும் எங்கள் மீனவர்களை கொன்றது யார் என்று எங்களுக்கு தெரியும்.... இலங்கை கடற்படை முற்று முழுவதுமாக கடற்புலிகளால் அழித்தொழிக்கப்பட வேண்டும் அப்போது தான் தமிழ் மீனவர்கள் ஈழத்திலும் தமிழகத்திலும் நிம்மதியாக தொழில் செய்ய முடியும்.

நயவஞ்சக தச நாயக என்ன கூறினாலும் எங்கள் மீனவர்களை கொன்றது யார் என்று எங்களுக்கு தெரியும்.... இலங்கை கடற்படை முற்று முழுவதுமாக கடற்புலிகளால் அழித்தொழிக்கப்பட வேண்டும் அப்போது தான் தமிழ் மீனவர்கள் ஈழத்திலும் தமிழகத்திலும் நிம்மதியாக தொழில் செய்ய முடியும்.

கொஞ்சம் அதிகமா தெரியுது வேலவன்.

இன்றைய நிலமையில் நமக்கு வேன்டியது வேகமல்ல விவேகம்.

தமிழீலத்தை சர்வதேச சமுகத்தில் அங்கிகரிக்கப்பட்ட நாடாக ஆக்குவதெ நமது உடனடி தேவை.

அதன் பிறகு வான் படையென்ன சேட்டிலைட்டே வைத்திருந்தாலும் யாரும் எதுவும் கேட்க்கபோவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதங்கள் என்று சொல்லப்பட்டவை வலைகளும் மீன்பிடி உபகரணங்களுமா? இந்தியக் கடற்படைக்கு இப்போது பயிற்சி கொடுப்பது இலங்கைப் படைகளா? அவர்கள் தான் பால் மாவிலும் விவசாய உரத்திலும் பேரழிவு ஆயுதங்களைத் தரிசித்த அறிவு சார் நிபுணர்கள்! :unsure:

அப்போது தான் கைதான 12 மீனவர்களில் 6 பேர் இலங்கையில் வன்னி, மன்னார் , யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த தமிழர்களான அருள்தாசன் (21 வயது), ரொபின் (23 வயது), அருள்(19 வயது), செல்வகுமார் (19 வயது), பனிபாஸ் (28 வயது) , ரவிக்குமார் (24 வயது) எனத் தெரிய வந்தது.

மரியா படகில் வைத்து கைதாகிய 12 பேரில் ஏன் அனைவரையும் விசாரணை செய்யவில்லை. குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை விடுவித்து இலங்கைத் தமிழர்கள் மட்டும் விசாரணை செய்யப்பட்டார்களா?

இலங்கை மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது அவர்கள் தாங்கள் இலங்கையிலிருந்து மீன்பிடிக்க புறப்பட்டு வந்ததாகவும் ஆறு நாட்கள் கடந்த நிலையில் தங்கள் படகின் இயந்திரம் பழுதடைந்து விட்டதால் கடல் நீரோட்டத்தில் சிக்கி இந்திய எல்லைக்குள் வந்து விட்டதாகவும் தம்மை கண்ட இந்திய மீனவர்கள் காப்பாற்றி படகில் ஏற்றிய போதே கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் கூறினர்.

மரியா இலங்கையிலிருந்து வந்த படகாயின் அதில் எப்படி இந்தியத் தமிழர்கள் வந்து பிடிபட்டார்கள்.

1. ஏங்க அவங்கதான் 16 சிங்களமீனவர்கள்னாங்க, இப்ப12 மீனவர்கள் என்கிறார்கள்.

2. இந்த மரியா படகு தான் எங்கள் சகோதரர்கள் உயிரை குடித்தது. இது இலங்கையை சேர்ந்தது என்றால் ரிப்பேராகிய படகு எங்கே? இந்திய மினவர்கள் சென்ற படகு எங்கே?

3. அல்லது இந்தியாவுக்கு சொந்தமான படகு என்றால்(தமிழ் மினவர்களுக்கு சொந்தமானது அல்ல). இது யாருக்கு சொந்தமானது. இந்தியன் நேவிக்கா? அப்படியென்றால் 200 க்கும் மேற்பட்ட தமிழ் மீனவ்ர்களை சுட்டது ,,...........!!!!!

4. அதைவிட முக்கியமானது இந்திய மீனவர்களைகூட அடையாளம் தெரியாத இந்திய கடர்படை யாரிடம் இருந்து யாரை காப்பாற்ற போகிறது?

ஒண்ணுமே புரியல,. யாருக்காவது தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்.

"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப் பொருள் காண்பது அறிவு"

இதனால், `மரியா' என்ற படகில் வந்தவர்கள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்து தப்பிய ஜிரோபி துைறயைச் சேர்ந்த ஜெரின் அருளானந்ததாஸ், லூயிஸ் ஆகியோரை அழைத்து வந்து அவர்களுக்கு மரியா படகை காட்டியதுடன் கைது செய்யப்பட்டிருந்த 6 மீனவர்களையும் காட்டி இந்த மரியா என்ற படகில் வந்த இவர்களா உங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் எனக் கேட்டனர். ஆனால், உயிர் தப்பிய மீனவர்களோ படகு அந்த மரியா இல்லையெனக் கூறியதுடன் 6 இலங்கை மீனவர்களையும் தாங்கள் இதுவரை பார்த்ததில்லையெனவும் கூறினர். இதன் பிறகே பொலிஸார் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

போலீஸார் மரியா படகு தாக்குதலில் காயமடைந்து தப்பிய மீனவருக்கு அடையாள அணிவகுப்பில் காட்டிய 6 பேரும் உண்மையாக மரியா படகில் வந்தவர்களில்லை என்று தெரிகிறது. உண்மையாக நடந்தது என்ன என்பதை தமிழக உறவுகள்தான் மேற்படி மீனவரை விசாரணை செய்து உண்மையை வெளிக் கொண்டு வரவேண்டும்.

அப்போது தான் கைதான 12 மீனவர்களில் 6 பேர் இலங்கையில் வன்னி, மன்னார் , யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த தமிழர்களான அருள்தாசன் (21 வயது), ரொபின் (23 வயது), அருள்(19 வயது), செல்வகுமார் (19 வயது), பனிபாஸ் (28 வயது) , ரவிக்குமார் (24 வயது) எனத் தெரிய வந்தது.

அது மட்டுமின்றி இலங்கை மீனவர்களென்று பெயர்குறிப்பிட்ட நபர்களையும் யாராவது தொடர்புகொண்டு உண்மையை அறியவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதன் முதலில் இந்திய கடற்படையிடம் சிக்கிய மரியா படகு வேறு.

செய்திகள் பரவதொடங்கியபின் டில்லியில் இருந்து வந்த 'றோ"

நரிகள் கொண்டுவந்த மரியா படகின் கதைதான் மேலேயிருப்பது.

'றோ' விற்கு கதை சோடிக்க தெரிந்தாலும் தமிழ்நாட்டு தமிழரை அவர்கள் ஒரு முட்டாள்கள் என நினைத்துத்தான் கதைவிடுவார்கள்.

1995ம் ஆண்டு 12 விடுதலைப்புலிகள் ராஜீவ்காந்தியின் கொலைவழக்கில் தடுத்து வைத்திருந்தவர்கள் சிறையிலிருந்து பதுங்குகுழி தோண்டி சுரங்கபாதையுடாக தப்பி ஒடிவிட்டதாக கதை விட்டார்கள.; தமிழ்நாட்டு பத்திரிகைகள் அனைத்துதும் அவர்களின் பிரச்சாரத்திற்கு துண்டுகோலாக இருந்துகொண்டு செய்திகளை வெளியிட்டார்களே தவிரே. ஓருவர் கூட சுரங்க பாதை கிண்டிய மண்ணை தப்பிய புலிகள் திண்றுவிட்டார்களா? என்று கேட்கவில்லை......... அதை தொடர்ந்து நடந்தது யாவரும் அறிந்ததே துரோகி மத்தையாவிற்கு துணையாகவே இவர்கள் மூளைசலவை செய்து அனுப்பிவைக்கப்பட்டிருந்தார

இந்த கருத்த எப்படி பிற தமிழ் களங்களுக்கு எடுத்து செல்வது. அல்லது ஏற்கனவே யாராவது எடுத்து செல்கிறார்களா?

இந்தியாவிலுள்ளது போல் ஒரு ஆட்சிமுறை ஈழத்தமிழருக்கும் அமைந்தால் நல்லது என்று முன்பு பலமுறை செய்திகளில் பிரஸ்தாபிக்கப்பட்டது இப்போது எனது நினைவுக்கு வருகிறது. றோ உளவுப் பிரிவினர் மத்திய அரசின் சார்பில் தமிழக அரசையும் அதற்கும் மேலாக தமிழக மக்களையும் எந்தளவுக்கு முட்டாளாக்கி ஏமாற்றி ஆட்சி செய்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது ஈழத்தமிழருக்கு இப்படியான ஒரு ஆட்சிமுறை வேண்டவே வேண்டாம்.

எப்போது தமிழக மக்கள் தங்களை தமிழர் என்று உணர்வார்களோ தெரியாது?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சம்பவங்கள் சார்பாக செய்திகள் உருவாக்கப் படுகின்றனவே ஒழிய உண்மைகள் எதுவுமில்லை, இவற்றிற்க்கு சார்பாக பண பலம், ஆட்பலம் நிறையவே உண்டு. ஆகவே இதை முறியடிப்பதிற்கு எங்களால் எடுக்கும் முயற்ச்சி வெற்றியளித்தால் ஆச்சரியப் படவேண்டிய ஒரு நிகழ்வாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.