Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணா …..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

40,000 தமிழ் பொது மக்கள்,  18 பில்லியன் டொலர்,  போர்க்குற்றம்,  சிறைவாசம்,  200-300 பவுத்தர் அல்லாதோரின் உயிர்

On 7 May 2015, Foreign Minister Mangala Samaraweera received intelligence reports from four foreign nations that involved in tracing the billions of Dollars stashed aboard, stating that the Rajapaksa family holds $18 Billion (approximate Rs. 237,933,000,000) worth of assets in foreign countries.

நீங்கள் ஒரு பத்து வருட இடைவெளிக்குள் , மனச்சாட்சியின் உறுத்தல் எதுவுமேயில்லாமல் 40,000  தமிழ் பொதுமக்களை கொன்று குவித்துவிட்டு சேர்த்துக்கொண்ட 18 பில்லியன் டொலர் பெறுமதியான அசையும் அசையாச் சொத்துக்களை வைத்துக்கொண்டு 70  வயதுக்கு மேல் உடம்பில் இன்னமும் திமிரும் தெம்பும் இருக்கும் ஒரு ஆளாக இருந்தால் , போர்க்குற்றம் அது இது என்று எஞ்சிய வாழ்நாளின் ஒரு பெரும்பகுதியை சிறையில் கழிக்க வேண்டிய ஒரு சந்தர்ப்பத்துக்கு முகம் கொடுப்பவராக இருந்தால்  200 -300 உயிர்களின் கொலை  -  அதுவும் பவுத்தர் அல்லாதோரின் உயிர்-  பற்றி என்ன நினைப்பீர்கள்.

இருக்கும் வளங்களை கொண்டு சந்தர்ப்பங்களை உருவாக்கி உங்களுக்கு ஏற்ற மாதிரி நிலைமைகளை உருவாக்க மாட்டீர்களா ..

  1. குறுகிய நீண்ட கால நோக்குகளில் ராசீவ் காந்தியை அகற்ற வேண்டிய தேவை,  ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளூர் வெளியூர் அமைப்புகளுக்கு  ( USA,  , இந்தியன் Politicians , LTTE) இருந்தது.  தங்களாலேயே தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பில் தொடர்புடையவராக இருந்த ஒருவரை மாஸ்டர் Mind க மாற்றி இதனை அவர்கள் செய்து முடித்தார்கள். Co-lateral Damages  பற்றி கவலைப்படவில்லை.  ( கவனிக்க உள்ளூர் அரசியல் வாதிகள் எவருமே அந்த சம்பவத்தில் பாதிக்கப்படவில்லை)

  2. சதாம் ஹூசைன் அமெரிக்க டொலரை தவிர்த்து இரஸ்சியன் ரூபிளில் எண்ணெய் வர்த்தகம் செய்யத் தொடங்கியதும் அவரை அகற்ற வேண்டிய தேவை ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளூர் வெளியூர் அமைப்புகளுக்கு  ( USA,  , அமெரிக்காவில் சொத்துக்களை எல்லாம் முதலீடு செய்திருக்கும் சவுதி அரேபியா , உள்ளூர் Anti Saddam  குழுக்கள்) இருந்தது.  வந்தது 9/11.  இல்லாத WMD ஐச் சொல்லி சதாமை அகற்றினார்கள். (  கவனிக்க :  ஒசாமாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அவரின் உடனடி உறவினர் உட்பட எவருமே இதில் பாதிக்கப்படவில்லை. உண்மையில் அமெரிக்க அரசினால் 9/11 நடந்தவுடனும்  பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் இந்தத் தொகுதியினர் தான்)

  3. இலங்கையின் தற்போதைய நிலவரம் -  பார்க்க முதலாவது தமிழ் பத்தி. (  கவனிக்க :  இலங்கயரைப் பொறுத்தளவில்  அப்பாவி பெரும்பகுதியான தமிழ் கத்தோலிக்க   பொதுமக்களைத் தவிர எந்தவொரு அரசியல்வாதியும் பாதிக்கப்படவில்லை - இவ்வகையான திட்டமிட்ட (உள்வீட்டு )  செயல்பாடுகளில் இது இயல்பானதொன்றாகவே இருக்கின்றது . Co-lateral damage அந்த 40 சொச்சம் வெளிநாட்டவர்)

    சோனகரை வெள்ளையடிப்பது அல்ல இந்த ஆக்கத்தின் நோக்கம்.  உண்மையில் இலங்கைச் சோனகருக்கு கணக்கு தீர்க்க வேண்டிய பாக்கி பெரும்பான்மை பவுத்த சிங்களவரிடம் இருந்ததேயொழிய நொந்து நூடில்ஸாகப் போன,  தொடர்ந்து போய்க் கொண்டிருக்கும் தமிழர்களிடம் அல்ல.

    சம்பவங்கள் நடந்ததும் உடனடியாகவும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டவர்கள் இலங்கை சோனகர்.  ஒசாமாவின் உறவினர் 9/11 இன் பின்னர் உ டனடியாகவும் அரச பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டதை இது ஒத்ததே.

    உண்மையில் உலக ஒழுங்கில் மேற்கொள்ளப்படும் சகல நிகழ்வுகளுமே கைவிட்டு எண்ணக்கூடிய சில செல்வாக்கு மிக்கவர்களினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது.

    இவற்றிற்கு ஏதுவான கருவிகளாக இனம்,  மொழி , மதம் , தேசப்பற்று என்று தங்களுக்கு வசதியான முறையில் வளைத்துக் கொண்டு காரியமாற்றுவதற்காக இவர்கள் வைத்திருக்கிறார்கள்.  (எங்கள் பக்கத்து ஊர் ராஜபக்சவும் இந்தளவிற்கு உயர்ந்து விட்டார் என்பது ஒரு பெருமைக்குரிய விடயமாக இருக்கக் கூடும்)

    எவருக்குமே ஒரு விலை உண்டு என்பது இவர்களின் செயற்பாட்டின் அடிப்படை. இதனை விளங்காத அப்பாவி மக்கள் இவர்களின் நன்மைக்காக கொத்துக் கொத்தாக செத்துக்  கொண்டிருக்கின்றார்கள்.

    இன்றைய திகதியில் பரிதவித்து உயிர் துறக்கப்பட்ட அந்த குழந்தைகள் பெரியோர் உட்பட்ட 250  பேரினை நினைத்து மிகுந்த துயரமாக உணர்கிறேன்.  மரணத்தின் வாசலுக்கு சென்று மீண்ட பல அனுபவங்கள்,  அப்படி மீளக் கிடைக்காமல் அந்த கோட்டைத் தாண்டி அப்பால் கொண்டு செல்லப்பட்டவர்களுக்கு சாட்சியாக மாத்திரமே பல சந்தர்ப்பங்களில் இருந்த ஒருவனின் எண்ணக் கருதுகோள்கள் இவை

    ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ  கண்ணா …..

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுக்கொன்று முரணான சர்வதேச சக்திகளான இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, ரஷ்சியா அனைத்தையும் ஒன்றிணைத்து ஒப்பற்ற தியாகமும் வரலாறு காணாத வீரமும் கொண்ட விடுதலை புலிகளை அழித்து முடித்த கோத்தபாய அதி சிறந்த திறமைசாலி. அமெரிக்க பிரஜையான இவரின் மறைக்கப்பட்ட சொத்துகளை கண்டு பிடித்து ஒரு சதம் கூட வரியாக பெற அமெரிக்காவால் முடியவில்லை. ஏப்பிரல் 19 அமெரிக்க தூதரகத்தில் பாஸ்போட்டை கொடுத்து இனி நான் உங்கள் பிரஜை இல்லை என்று சத்திய பிரமாணம் எடுத்தார். ஏப்பிரல் 22 கிறீஸ்தவர்களும் அமெரிக்கரும் ஐரோப்பியரும் முஸ்லிம்களால் கொல்லப் படுகிறார்கள். இவர்கள் அனைவரும் பௌத்த தீவிரவாதியான கோத்தபாயவால் வெறுக்க படுபவர்கள்.   கொன்றவர்கள் கோத்தபாயவால் பாதுகாத்து வளர்க்கப் பட்டவர்கள் என்று மேல் மாகாண முதல் அமைச்சர் அசாத் சாலி சொல்லி இருக்கிறார். உலகத்துக்கு என்ன செய்தியை இது சொல்கிறது?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

கோத்தபாயவின் ருத்திர தாண்டவத்தை பார்த்து நடுநடுங்கிப்போய்  டிரம்ப் வெள்ளை மாளிகை பங்கருக்குள் ஒளிந்துகொண்டார் . சீனா, ரஷிய இந்தியப்பெருங்கடலில் கோத்தபாயவினால் ஏற்படப்போகும் அரசியல் சூறாவளியை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் வயிற்றால் கழிந்து கொண்டிருக்கிறார்கள். யப்பான் பிரதமர் கோத்தபாயவினால் தனக்கு  வரப்போகும் பொருளாதார போட்டியை எப்பிடி சமாளிப்பது என்று தெரியாமல்   தற்கொலை செய்துகொள்ள யோசிக்கிறார் . உப்பிடி பெருசு பெருசா எடுத்து விடுங்கோ யூட் 
கோத்தாவின் கப்பாசிட்டிக்கு ஏத்தமாதிரி , வாங்கின கடனுக்கு வாழ்நாள் பூரா வட்டி கட்டியே சாகப்போகும்  சூம்பிப்போன நாட்டிற்கு ஜனாதிபதியாகி உலகத்தையே ஆட்டுவிக்கப்போறார் 
கொஞ்சம் காசு பார்த்த சுற்றுலாத்துறையும் புட்டுக்கிச்சு , ஆசியாயாவின் பிச்சைக்காரர்களுக்கெல்லாம் தலைவராகி வேணுமென்றால் புது திருவோட்டுடன் நாடு நாடாக பிச்சை எடுத்து திரியட்டும் ,
பதவி பறிபோகாமலிருக்க வேணுமென்றால் உள்ளூர் சிங்கள மோடையனுகளை கொஞ்சம் உருவேற்றி சின்ன சின்ன கலவரங்கள் செய்து சந்தோஷப்படலாம்   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

. உலகத்துக்கு என்ன செய்தியை இது சொல்கிறது?

9/11 க்குப் பிறகு உலகுக்கு ஒரு வித்தியாசமான வலிமையான செய்தியைத் தான் 22/04 சொல்லி நிற்கின்றது அதனுடைய முழு தாற்பரியமும் வரு நாட்களில் தெரியவரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

 , வாங்கின கடனுக்கு வாழ்நாள் பூரா வட்டி கட்டியே சாகப்போகும்  சூம்பிப்போன நாட்டிற்கு ஜனாதிபதியாகி உலகத்தையே ஆட்டுவிக்கப்போறார் 
கொஞ்சம் காசு பார்த்த சுற்றுலாத்துறையும் புட்டுக்கிச்சு , ஆசியாயாவின் பிச்சைக்காரர்களுக்கெல்லாம் தலைவராகி வேணுமென்றால் புது திருவோட்டுடன் நாடு நாடாக பிச்சை எடுத்து திரியட்டும் ,
 
No.

Name

Net worth (USD)

Age

Nationality

Source(s) of wealth

1

Jeff Bezos

$131 billion 

55

 United States

Amazon

2

Bill Gates

$96.5 billion 

63

 United States

Microsoft

3

Warren Buffett

$82.5 billion 

88

 United States

Berkshire Hathaway

4

Bernard Arnault

$76 billion 

70

 France

LVMH

5

Carlos Slim

$64 billion 

79

 Mexico

América Móvil, Grupo Carso

6

Amancio Ortega

$62.7 billion 

82

 Spain

Inditex, Zara

7

Larry Ellison

$62.5 billion 

74

 United States

Oracle Corporation

8

Mark Zuckerberg

$62.3 billion 

34

 United States

Facebook

9

Michael Bloomberg

$55.5 billion 

77

 United States

Bloomberg L.P.

10

Larry Page

$50.8 billion 

45

 United States

Alphabet Inc.

உலகத்து பணக்காரர் வரிசை பத்தாவதாக இருப்பவர் 50 பில்லியன் தான்  வைத்திருக்கிறார். நம்மட ஆளுங்க 18 பில்லியன் வைத்திருக்கிறாங்க.  இதே லெவெலில போனா நம்மட ஆளுங்களும் முதல் பத்துக்குள்ள வந்துருவாங்க.  சூம்பினது நாடு தான் அவங்க நிச்சயமாக இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

கோத்தாவின் கப்பாசிட்டிக்கு ஏத்தமாதிரி , வாங்கின கடனுக்கு வாழ்நாள் பூரா வட்டி கட்டியே சாகப்போகும்  சூம்பிப்போன நாட்டிற்கு ஜனாதிபதியாகி உலகத்தையே ஆட்டுவிக்கப்போறார் 
கொஞ்சம் காசு பார்த்த சுற்றுலாத்துறையும் புட்டுக்கிச்சு , ஆசியாயாவின் பிச்சைக்காரர்களுக்கெல்லாம் தலைவராகி வேணுமென்றால் புது திருவோட்டுடன் நாடு நாடாக பிச்சை எடுத்து திரியட்டும் ,
பதவி பறிபோகாமலிருக்க வேணுமென்றால் உள்ளூர் சிங்கள மோடையனுகளை கொஞ்சம் உருவேற்றி சின்ன சின்ன கலவரங்கள் செய்து சந்தோஷப்படலாம்   

அப்படி கோத்தபாயவை எடை போட்டதால் தான் முள்ளிவாய்க்காலில் பேரழிவில் முடிந்தது. அதெப்படி “சிங்கள மோடையனுகள்” தமிழரை வெற்றி கொண்டார்கள்?

1 hour ago, சாமானியன் said:

9/11 க்குப் பிறகு உலகுக்கு ஒரு வித்தியாசமான வலிமையான செய்தியைத் தான் 22/04 சொல்லி நிற்கின்றது அதனுடைய முழு தாற்பரியமும் வரு நாட்களில் தெரியவரும்.

இன்னும் ஒரு இடி அமீன், கிம் யங் உன், சதாம் ஹு சைன், கடாபி உருவாகிறார்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

அப்படி கோத்தபாயவை எடை போட்டதால் தான் முள்ளிவாய்க்காலில் பேரழிவில் முடிந்தது. அதெப்படி “சிங்கள மோடையனுகள்” தமிழரை வெற்றி கொண்டார்கள்?

அதுவா மொத்த சனத்தொகையில் 70 % ஆக தமிழர்களும் இருந்திருந்தால் தெரிந்திருக்கும் எப்படி சிங்கள மோடையர்கள் வென்றிருப்பார்கள் என்று... 

2 hours ago, சாமானியன் said:

No.

Name

Net worth (USD)

Age

Nationality

Source(s) of wealth

1

Jeff Bezos

$131 billion 

55

 United States

Amazon

2

Bill Gates

$96.5 billion 

63

 United States

Microsoft

3

Warren Buffett

$82.5 billion 

88

 United States

Berkshire Hathaway

4

Bernard Arnault

$76 billion 

70

 France

LVMH

5

Carlos Slim

$64 billion 

79

 Mexico

América Móvil, Grupo Carso

6

Amancio Ortega

$62.7 billion 

82

 Spain

Inditex, Zara

7

Larry Ellison

$62.5 billion 

74

 United States

Oracle Corporation

8

Mark Zuckerberg

$62.3 billion 

34

 United States

Facebook

9

Michael Bloomberg

$55.5 billion 

77

 United States

Bloomberg L.P.

10

Larry Page

$50.8 billion 

45

 United States

Alphabet Inc.

உலகத்து பணக்காரர் வரிசை பத்தாவதாக இருப்பவர் 50 பில்லியன் தான்  வைத்திருக்கிறார். நம்மட ஆளுங்க 18 பில்லியன் வைத்திருக்கிறாங்க.  இதே லெவெலில போனா நம்மட ஆளுங்களும் முதல் பத்துக்குள்ள வந்துருவாங்க.  சூம்பினது நாடு தான் அவங்க நிச்சயமாக இல்லை.

நிச்சயமாக ஆட்டையை போட்ட  பணத்தை எடுத்து நாட்டை போஷிக்க போவதில்லையல்லோ   ...வறுகிய இடத்திலேயே கொட்டுமளவு நல்ல மனிசர்களில்லை பாருங்கோ. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.