Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் புனானையில் தமிழர்களுக்கு இப்படி நடந்திருக்குமா? தேரர் ஆதங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு அவர்களின் சொந்த நிலம் இல்லாமல் போயிருக்குமா? கிழக்கு இழக்கப்பட்டிருக்குமா? எதிர்காலத்தில் நாட்டில் சுபீட்சம் ஏற்படுத்த மீண்டும் பிரபாகரன்தான் வர வேண்டுமா என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

நான் கடந்த முப்பது வருடங்களில் யுத்தத்தை நன்கு அறிந்த பிக்கு, நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் நான் இங்கு இருந்தேன், அப்போது நான் வாகரை, கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளுக்குச் சென்றுள்ளேன்.

அந்த பகுதிகளுக்குச் சென்ற நான் விகாரைகளைப் புணரமைப்பதற்காக விடுதலைப் புலிகளிடம் இருந்து பல உதவிகளைப் பெற்றுள்ளேன். அதன்போது என்னை எவரும் விரல் நீட்டி பேசியதில்லை. எனக்கு அச்சுறுத்தல் விடுத்ததில்லை.

தற்போது உள்ள அரசியல் தலைமைகள், தமிழ் தலைமைகள் உள்ளிட்ட பலர் என்மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

யுத்தக்காலத்தில் கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த 2000 சிங்களம் மற்றும் தமிழ் மக்களுக்கு இதுவரை காணிகள் கிடைக்கவில்லை. அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவற்கை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக பல முறை ஆட்சியாளர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டேன். அப்போது தமிழ் மக்களின் தலைமைகள் என சொல்லிக்கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகள் இது இனத்துவேசம் என என்மீது குற்றம் சுமத்தினர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான புனானை பிரதேசத்தில் மூவினங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதற்கான திறந்தவெளி பல்கலைக்கழகம் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் அமைக்கப்படுகின்றது.

தமிழ் மக்களுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலப்பரப்பை தமிழ் மக்களுக்கு வழங்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எவ்வாறு அரசாங்கம் அனுமதி கொடுத்தது.

தமிழர்களின் பிரதிநிதி என கூறும் வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் இதனை நிறுத்த முடியுமா?

புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இந்த புனானையில் கட்டடம் கட்டப்பட்டிருக்குமா? கிழக்கு பறிபோயிருக்குமா?

எதிர்காலத்தில் நாட்டில் சுபீட்சம் நிலவுவதற்கு எதிர்காலத்தில் பிரபாகரனே மீண்டும் வரவேண்டுமா என எண்ணத் தோன்றுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/community/01/213629?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

19 minutes ago, பெருமாள் said:

நான் கடந்த முப்பது வருடங்களில் யுத்தத்தை நன்கு அறிந்த பிக்கு, நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் நான் இங்கு இருந்தேன், அப்போது நான் வாகரை, கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளுக்குச் சென்றுள்ளேன்.

அந்த பகுதிகளுக்குச் சென்ற நான் விகாரைகளைப் புணரமைப்பதற்காக விடுதலைப் புலிகளிடம் இருந்து பல உதவிகளைப் பெற்றுள்ளேன். அதன்போது என்னை எவரும் விரல் நீட்டி பேசியதில்லை. எனக்கு அச்சுறுத்தல் விடுத்ததில்லை.

இதையெல்லாத்தையும் அப்பவே சொல்லியிருக்கலாமே......எல்லாரும் புலிகளை பயங்கரவாதிகள் என முடி சூட்டேக்கை ஏன் வாயை மூடிக்கொண்டு இருந்தனீங்கள்.
அப்பன் இல்லாவிட்டால் தான் உப்பின் அருமை தெரியுமாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பெருமாள் said:

புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இந்த புனானையில் கட்டடம் கட்டப்பட்டிருக்குமா? கிழக்கு பறிபோயிருக்குமா?

ஒண்டு கிழக்குக்கு விடிவு தருகிறன் எண்டுதானே குறுக்காலை அறுத்துக்கொண்டு போனது அதென்ன செய்யுது என்று தெரியவில்லை சிலவேளை இந்த நேர்த்தியான குண்டு வெடிப்புகளுக்கும் ஆளுக்கும் சம்பந்தம் இருக்கலாம்  😂 அண்ணனை குறை சொன்னது யார் என்று ஒராள் வரப்போறா இங்கு .

மாறி மாறி புலம்புவதில் கில்லாடி இந்த பிக்கர்!

வரலாற்றில் இருந்து ஒரு பாடம் !

1915 ஆம் ஆண்டு இலங்கை யில் சிங்கள – முஸ்லிம் இனக் கலவரம் ஒன்று ஏற்பட்டது. உடனடியாக பிரித்தானிய ஆளுநரால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அத்துடன் அந்த இனக் கலவரத்திற்கு காரணமானவர்களை கைது செய்யவும் கட்டளையிடப்பட்டது.

இவர்களை கைது செய்த பிரித்தானிய அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. அவர்களை பிரித்தானியாவில் சிறை யில் அடைத்தது. அத்துடன் இனக் கலவரத்திற்கு முக்கிய காரணமாக இருந்ததாகக் குற்றம் சாட்டி அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இனக் கலவரத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றம் பாரிய குற்றம் என்ற போதும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை விரும்பாத சேர் பொன்னம்பலம் இராமநாதன், பிரித்தானிய அரசை எதிர்த்து சிங்கள அரச தலைவர்களின் உயிரைக் காப்பாற்றும் முகமாக மீட்புப் போராட் டம் செய்து, அவர்களை மீட்டவர் என்பது இலங்கை அரசியல் வரலாற்று நிகழ்வாகும்.

பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் போராட்டத்தினால் உயிர் மீண்டு வந்த சிங்கள அரசியலாளர்கள், அவரை தங்கள் தோள்களில் சுமந்து காலிமுகத் திடலில் ஊர்வலம் சென்றனர்.

இன்று, சிங்களம் அவரை யார் என கேட்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.