Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்: சிவாஜிலிங்கம் மீது பாய்கிறது பயங்கரவாத சட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்: சிவாஜிலிங்கம் மீது பாய்கிறது பயங்கரவாத சட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடியமை மற்றும் விடுதலைப் புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அழைப்பாணையை நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணியளவில் வீதியால் சென்று கொண்டிருந்த சிவாஜிலிங்கத்தை வழிமறித்து பொலிஸார் வழங்கியுள்ளனர்.

அவருடன், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவா் கோ.கருணானந்தராசா மற்றும் நகரசபை உறுப்பினர் பொ.சிவஞானசுந்தரம் ஆகியோருக்கும் அழைப்பாணை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணையின் பிரகாரம் இம்மாதம் 31ஆம் திகதி சிவாஜிலிங்கம் உட்பட்ட மூவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவா் வே.பிரபாகரனின் பிறந்த நாளில் வல்வெட்டித்துறை தீருவிலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதற்கு சிவாஜிலிங்கம் முயற்சித்திருந்தார். எனினும் அப்போது பொலிஸார் அதனை தடுத்திருந்ததுடன், வழக்குப் பதிவு செய்வோம் எனவும் எச்சரித்திருந்தனர்.

இச்சம்பவம் இடம்பெற்று 4 மாதங்கள் கடந்திருக்கும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடைய ஒளிப்படம், பதாதைகள் மற்றும் பிறந்தநாள் கொண்டாடுவதற்கான கேக் ஆகியன வைத்திருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/புலிகளின்-தலைவரின்-பிறந்/

சிங்கள-பௌத்த இனமதவெறிப் பயங்கரவாதிகள் மீது இந்த சட்டங்கள் எப்போதும் பயன்படுத்தப்படுவதில்லை. பல கடத்தல் படுகொலைகளை செய்த மிலேச்ச பயங்கரவாதியான கோத்தபாய சனாதிபதி தேர்தலிலும் நிற்கும் சூழ்நிலை உள்ளது. இந்த அடிப்படையில் தமிழர்களுக்கு தமிழீழ தனிநாடு மட்டுமே குறைந்தபட்ச தீர்வாக அமைய முடியும்!

இது போலி வாக்குறுதிகளைக் கூறி தமிழர் வாக்குகளை பெற்றுவிட்டு சிங்கள-பௌத்த இனமதவெறியர்களுக்கு துணை நிற்கும் சம்மந்த-சுமந்திர-சேனாதிராச கும்பல்களுக்கு விளங்குவதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

என்னாது? தனிநாடு “குறைந்த பட்சதீர்வா”?

தெய்வமே அப்ப தாங்கள் விரும்பும் அதிக பட்ச தீர்வுதான் யாதோ? அமரிக்காவை எமது தனிநாட்டோட இணைக்க கேப்பமா? அல்லது ரஸ்யாவையும் சேர்த்தா?

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இந்தாள் வெளியாளைதான் திரியிதாக்கும் .

1 hour ago, goshan_che said:

அமரிக்காவை எமது தனிநாட்டோட இணைக்க கேப்பமா? அல்லது ரஸ்யாவையும் சேர்த்தா?

இப்படியான மாறாட்ட சிந்தனைகள் விசைப்பலகை வித்தகர்கள் சிலருக்கு அவ்வப்போது ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல! இவற்றை யாரும் பெரிதுபடுத்துவதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, போல் said:

சிங்கள-பௌத்த இனமதவெறிப் பயங்கரவாதிகள் மீது இந்த சட்டங்கள் எப்போதும் பயன்படுத்தப்படுவதில்லை. பல கடத்தல் படுகொலைகளை செய்த மிலேச்ச பயங்கரவாதியான கோத்தபாய சனாதிபதி தேர்தலிலும் நிற்கும் சூழ்நிலை உள்ளது. இந்த அடிப்படையில் தமிழர்களுக்கு தமிழீழ தனிநாடு மட்டுமே குறைந்தபட்ச தீர்வாக அமைய முடியும்!

இது போலி வாக்குறுதிகளைக் கூறி தமிழர் வாக்குகளை பெற்றுவிட்டு சிங்கள-பௌத்த இனமதவெறியர்களுக்கு துணை நிற்கும் சம்மந்த-சுமந்திர-சேனாதிராச கும்பல்களுக்கு விளங்குவதில்லை!

சம கால புவி - அரசியல் நிலவரங்களை கருத்தில் கொண்டால் , இலங்கை எனும் நிலப்பரப்பினுள் ஒன்றுக்கு மேற்பட்ட இறையாண்மை தத்துவமுடைய அரசாங்கங்கள் அமைவதை உலக பெரும் சக்திகள் ஆதரிக்கப் போவதில்லை என்பது தெளிவு।   எமது காய் நகர்த்தல்கள் இதனை அடிப்படையாக கொண்டிருத்தல் நலம்

  • கருத்துக்கள உறவுகள்

வேறொன்றும் ஞாபகம் வருகிறது । யாழ் பல்கலை மாணவர் விடுதலை தொடர்பாக கதைக்கச் சென்றவர்களிடம் அவர்கள் கேட்ட கேள்வி "சோதனைக்கு வருகிறோம் என்று சொல்லி விட்டுத் தானே வந்தோம் , பிரச்சினைக்குரிய  பொருட்களை அப்புறப்படுத்தியிருக்க முடியாதா" என்று.

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி - அவன் தான் - துரதிர்ஷ்டவசமாக - சட்டங்களை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.