Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிலாபத்தில் பதற்ற நிலை! பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்! உடன் வரும் வகையில் ஊடரங்கு சட்டம் அமுல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிலாப பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் நகர பகுதியில் மாத்திரம் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

தாக்குதல் சம்பவமொன்று நடைபெறப்போவதாக வெளியான செய்தி அடுத்து ஒன்று கூடிய இளைஞர்களால் பரபரப்பு நிலை ஏற்பட்டது.

பொலிஸ் நிலையம் அருகே வந்த இளைஞர், தாக்குதல் சம்பவம் தொடர்பான உண்மை நிலைய தெரியப்படுத்துமாறு பொலிஸாரிடம் கேட்டுள்ளனர்.

இதனால் அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து கடைகள் அனைத்தும் நகரத்தில் மூடப்பட்டன.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/security/01/214572?ref=breaking-news

5 hours ago, பெருமாள் said:

சிலாபம் நகர பகுதியில் மாத்திரம் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

நாளை காலை 6 மணி வரை என்றிருந்தது நாளை காலை 4 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.

Hasmar Hameed என்பவரது பதிவு தான் சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது என கூறுகிறார்கள்.

D6Womg4UYAAvfOp?format=jpg&name=900x900

 

  • கருத்துக்கள உறவுகள்

சமூக வலைத்தளத்தில் இனவாத கருத்தை வெளியிட்டமையினாலேயே சிலாபத்தில் பதற்றம் :

May 12, 2019

1 Min Read

unnamed-1.jpg?resize=800%2C450

சமூக வலைத்தளத்தில் இனவாத கருத்துக்களை பதிவிட்டமையினாலேயே சிலாபத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இன நல்லிணக்கத்தை சீரழிக்கும் வகையில் அவ்வாறு நடந்துகொண்ட நபரை கைது செய்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை தோற்றுவித்து அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் குறித்த நபர் கருத்தினை பதிவேற்றியமையால் சிலாபம் நகரில் பொதுமக்கள் மத்தியில் சிறு முறுகல் நிலை தோன்றியது.

இதனால் அப் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அங்கு சென்ற இராணுவத்தினரும்,காவல்துறையினரும் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து குறித்த முறுகல் நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் உடன் அமுலாகும் வகையில் நாளை காலை 6 மணி வரை குறித்த பகுதியில் காவல்துறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

silabam.jpg?resize=420%2C94

image1-3.png?resize=800%2C600image-5.png?resize=800%2C600

 #Socialmedia #racistopinion  #Chilaw #curfew

 

http://globaltamilnews.net/2019/121501/

சிங்களவன் உஷாரா தான் இருக்கான்!

சில சிங்களவர்கள் இவ்வாறு சமூகவலைத்தளங்களில் பகிர்கிறார்கள்.

D6TB3hTU0AA9tLp?format=png&name=900x900

சிலாபத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியவருக்கு விளக்கமறியல்

இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்தும் வண்ணம் முகப்புத்தகத்தில் பதிவொன்றை மேற்கொண்டு, சிலாபம் பகுதியில் நேற்றைய தினம் பதற்றத்தை ஏற்படுத்திய நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

chilaw.jpg

அப்துல் ஹமீத் மொஹம்மட் ஹஸ்மார் (வயது 38), சிலாபம் தேக்கவத்த பகுதியைச் சேர்ந்த மேற்படி நபர் இன்றைய தினம் சிலாபம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். 

இதன்போது குறித்த நபர் முகப்புத்தகத்தில் இட்ட பதிவின் காரணமாகவே நேற்றைய தினம் சிலாபம் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர். 

இதன் பின்னரே நீதிவான்  அவரை 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

http://www.virakesari.lk/article/55861

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.