Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது தாயக உறவுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு # 6 : புதுமையான விவசாய முறைகள்.

Featured Replies

பல்லடுக்கு விவசாயம் 


அதிகரிக்கும் மக்கள்தொகை, நீர் மற்றும் நிலபற்றாக்குறை; கிருமிநாசினிகளால் வரும் நோய்கள் என பல சவால்கள் உள்ள நிலையில், புதுமையான இலாபகரமான விவசாய முறைகளை கண்டு அறிவது அத்தியாவசியமாகின்றது. 

வறண்ட இஸ்ரேலில் வேர்களுக்கு மட்டுமே நீரை சொட்டு சொட்டாக வடிய விடுகின்றார்கள். இதன் மூலம் மிகவும் வரண்ட நிலங்களை கூட செழிப்புள்ள நிலமாக மாற்றி வருகின்றனர். 

அதைவிட வழமை போன்று நிலத்தில் பயிரிடாமல் ஒரு மூடிய இடத்துக்குள் காய்கறிகளை வளர்க்கலாம். இது வேர்டடிக்கல், அதாவது ஒன்றின் மேல் ஒன்றாக பயிர்களை வளர்க்கும் முறை.= பல்லடுக்கு விவசாயம். அடுக்குமாடி குடியிருப்பு போன்றது. 

இதில் வளர்ப்பவர் அந்த இடத்தில் வெப்பம், பயிருக்கு தேவையான தண்ணீர் அளவு என்பனவற்றை கட்டுப்படுத்துவதுடன் தேவையற்ற கிருமிநாசினிகளையும் தவிர்க்கின்னறனர்.   

கீழே உள்ள காணொளியில் காணலாம், எமது தாய் மொழியில்... 

இதில் எவ்வாறு வர்த்தக ரீதியாக இதனை சாதிக்கலாம் என விளக்கப்படுகின்றது. 

 

இந்த கட்டிட விவசாய வளர்ப்புமுறையானது எந்தெந்த வகையான பயிர்களை வளர்க்கலாம் மற்றும் அதன் செயன்முறை பற்றி இந்த காணொளியில் தமிழில் பார்க்கலாம் 

 

 

  • தொடங்கியவர்

சொட்டு நீர் (அமைக்கும் முறை)

வழமையான வாய்க்கால் முறையாக இல்லாமல், சொட்டு நீர் வழியாக நீர்ப்பாசனம் செய்யும் பொழுது நீரை சேமிக்கலாம். இவ்வாறு பல மிகவும் வறண்ட நிலங்களில் மரங்களை, பயிர்களை வளர்க்கலாம். 

இது பற்றி தமிழக உறவு ஒருவரின் காணொளியை காணலாம். 

 

மேலே கூறப்பட்ட உபகரணங்கள் கிடைப்பது எல்லாருக்கும் வசதியாக இருக்காது.
அவ்வாறான நிலைமையில் பழைய பிளாஸ்ட்டிக் போத்தல்களை பாவித்து வடிவமைக்கும் முறையை இந்த காணொளியில் காணலாம். 

 

 

அதேவேளை விசிறல் முறை மூலம் கூட சில பயிர்களுக்கு நீரை பாய்ச்சலாம். இந்த ஒளிப்பதிவில் அதை எவ்வாறு இஸ்ரேல் நாட்டில் செய்கிறார்கள் என பார்க்கலாம். 

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மண்ணில்லா விவசாயம் : 

 

  • தொடங்கியவர்

எதிர்கால விவசாய பண்ணைகள் 

 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பிரயோசனமான பதிவுகள்.......உங்களது பதிவுகள் அனைத்தும் இந்த இணையத்தை இன்னொரு லெவலுக்கு கொண்டு செல்கின்றது அம்பனை தொடர்ந்து இணையுங்கள்.....நான் கூட எனது சிறிய பால்கனியில் பிளாஸ்ட்டிக் போத்தில் மூலம் சொட்டு நீர் விட்டு கணக்க பயிர்கள் செய்கின்றேன்.சும்மா பொழுது போக்காகவும் அதே நேரத்தில் அப்பப்ப  எமக்குத் தேவையான சில பயிர்களையும் பறித்து கொள்கின்றோம்........!  👍

  • கருத்துக்கள உறவுகள்

நீர் முகாமைத்துவம், விவசாயம் என்று உங்கள் பதிவுகள் நன்றாகவே உள்ளது, நான் தொடர்ந்து வாசிக்கிறேன். இப்பிடியான பதிவுகள் எழுதுபவர்கள்  குறை, தொடருங்கள் 

  • தொடங்கியவர்

ஒரே மாமரத்தில் 100 வகையான மாங்காய்கள் உள்ளன. இந்த மாமரத்தை வளர்ப்பவர் உத்தர பிரதேசத்திலுள்ள மலிகாபாத்தில் வசிக்கும் கலிமுல்லா கான்.

பல்வேறு வகையான மாமரங்களை ஒரு மாமரத்தில் ஒட்டச்செய்து, தனித்தன்மையான பரிசோதனை செய்து 300-க்கு அதிகமான விருதுகளை வென்றுள்ள கலிமுல்லா கானின் கதையை விவரிக்கும் காணொளி.

https://www.bbc.com/tamil/india-48515767

 

 

  • தொடங்கியவர்

செடியின் வேருக்குத் தண்ணீர் குளுக்கோஸ்!

தன்னுடைய பள்ளியில் உள்ள மாணவர்களை ஒன்றிணைத்து முதலில் செடியை நட்டு, புதிய முறையில் அதற்கு தண்ணீர் கொடுப்பதை பார்த்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தாங்களாகவே முன்வந்து அந்த தண்ணீர் பாட்டில்களில் தண்ணீரை ஊற்றிவிட்டுச் செல்கின்றனர்.

செடியின் வேருக்குத் தண்ணீர் குளுக்கோஸ்! - அரசுப்பள்ளி ஆசிரியரின் அசத்தல் ஐடியா

மரம் நட்டால் மழை பெய்யும்… மரம் இல்லையேல் உயிர்கள் இல்லை… இப்படியான வாசகங்களைக் கேட்டுவிட்டு நகர்ந்து செல்பவர்களே அதிகம். அதிலும், சிலர் மரக் கன்றுகளை நடுகிறார்கள். அதிலும் வெகு சிலரே நடப்பட்ட மரக் கன்றுகள் பெரிய மரமாகும் வரை தினம் தினம் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கிறார்கள். அதிலும், இந்தக் கோடைக்காலத்தில் தினமும் செடிக்குத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கும் அப்படியான வெகுசில அரிய மனிதர்களில் ஒருவர்தான் தேனியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் பெருஞ்சித்திரன்.

தண்ணீர் ட்யூப்

பொதுமக்கள், அரசு ஊழியர்கள், அதிகாரிகள் என எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் தேனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் திட்டச்சாலையின் இரு புறமும் செடிகளை நட்டுப் பராமரித்து வருகிறார் பெருஞ்சித்திரன். வழக்கமாகச் செடிக்கு தண்ணீர் ஊற்றும் முறையிலிருந்து மாறுபடும் பெருஞ்சித்திரன், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் குளுக்கோஸ் டியூப்களை எடுத்துவந்து பாட்டில்களுடன் இணைத்து, அதன் மறு முனையைச் செடியின் வேர் பகுதியில் செலுத்திவிடுகிறார். கிட்டத்தட்டச் சொட்டுநீர் பாசனம்போல மெல்லச் செடிக்குத் தண்ணீர் சென்றுகொண்டேயிருக்கும். ஒரு முறை நிரப்பினால், மூன்று நாள்களுக்கு செடிக்குத் தண்ணீர் சென்றுகொண்டேயிருக்கும்.

தண்ணீர் ட்யூப்

தன்னுடைய பள்ளியில் உள்ள மாணவர்களை ஒன்றிணைத்து முதலில் செடியை நட்டு, புதிய முறையில் அதற்குத் தண்ணீர் கொடுத்து வந்தார். அதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தாங்களாகவே முன்வந்து அந்தப் பாட்டில்களில் தண்ணீரை ஊற்றிவிட்டுச் செல்கின்றனர்.

”என் பள்ளியில் பயிலும் மாணவர்கள், தன்னார்வலர்களை இணைத்து நீரோ என்ற இயற்கையைப் பாதுகாக்கும் அமைப்பு ஒன்றை ஆரம்பித்திருக்கிறேன். இயற்கையின் நண்பர்கள் என மாணவர்களை மட்டும் வைத்து ஓர் அமைப்பையும் செயல்படுத்திக்  கொண்டிருக்கிறோம். அரசுப் பள்ளி ஆசிரியருக்கு இவையெல்லாம் வேலையா என ஆரம்பத்தில் நிறைய பேர் என்னைக் கிண்டல் செய்தார்கள். அவர்களுக்கெல்லாம் இந்தக் கோடை நல்ல பாடம் கற்றுக்கொடுத்திருக்கும். மரங்கள் இல்லாமல் தேனியின் பல பகுதி மிகுந்த சிரமத்தைச் சந்தித்தது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கொண்டார்கள். அதிலும் புதிய பேருந்துநிலையத்திலிருந்து கலெக்டர் அலுவலகம் வரையிலான சாலையில் ஒரு மரம்கூட இல்லை.

பெருஞ்சித்திரன்

பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் வர வேண்டுமென்றால்கூட வெயிலில்தான் நடந்துவர வேண்டும். அப்படியான ஒரு சூழலை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் சாலையில் இரு புறமும் மரங்கள் நட்டோம். தேனியின் பல பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு தினமும் தண்ணீர் ஊற்றிப் பராமரித்து மரமாக மாற்றியிருக்கிறோம். அந்த வகையில், இந்தத் திட்டச்சாலையை எப்படியாவது பசுமைச் சாலையாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் முதலில் ஆரம்பித்தோம். சற்று வித்தியாசமாகச் செய்ய வேண்டும். அதில், பொதுமக்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்பதற்காக, மனித உடலுக்கு குளுக்கோஸ் ஏற்றுவதுபோல செடிக்குத் தண்ணீர் கொடுக்கும் முறையைப் பயன்படுத்தி சொட்டுநீர்ப் பாசனம்போல தண்ணீர் கொடுக்க முயற்சி செய்தோம். முதலில் இது வொர்க்கவுட் ஆகுமா என்றெல்லாம் தெரியாது. முயற்சி செய்து பார்த்தோம். சரியாக வேலை செய்தது. இதைப் பார்த்த பலரும், எங்களோடு சேர்ந்துகொண்டு, தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் இல்லையென்றால் அவர்களாகவே தண்ணீர் ஊற்றிவிட்டுச் செல்கிறார்கள். ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார் புன்னகையோடு.

மரங்களுக்குத் தண்ணீர் செல்லும் வழி

கொடிக்கால், நாவல், புங்கை, வேம்பு, வாதமரம் உள்ளிட்ட 10 வகையான மரக்கன்றுகளை இந்தச் சாலையில் நடப்பட்டு நன்கு வளர்ந்துவரும் நிலையில், புதிய பேருந்து நிலையத்திலிருந்து தேனி வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் சாலையில் மரங்கள் நடும் பணியில் தீவிரம் காட்டிவருகின்றனர் பெருஞ்சித்திரனும் அவரின் மாணவர்களும்.

https://www.vikatan.com/news/miscellaneous/159488-this-government-school-teacher-feeds-water-glucose-to-the-plants.html?fbclid=IwAR2_d9DzsUroSfspVgQUvfcaXdExCHherFdOwZHQdiKxW0XgUzB7u5q4ozo

 

  • தொடங்கியவர்

தமிழர் பாரம்பரிய உணவு விதைகளை உலகின் முதன்மை நிறுவனங்களுக்கு இழந்து வரும் நிலையில் இவர்களின் முயற்சி எதிர்கால இனத்தின் உணவாயு பாதுகாப்பை உறுதிசெய்ய உதவும் 

===================================

பாரம்பர்ய நெல் ரகங்களுக்குப் புத்துயிர் அளித்திடும் வகையில், ஆண்டுதோறும் நெல் திருவிழாவை நடத்திவந்தார் `நெல்' ஜெயராமன். இவரின் மறைவுக்குப் பிறகு இந்த ஆண்டு நெல் திருவிழாவை நடத்தியிருக்கிறார் அவர் மனைவி சித்ரா ஜெயராமன். நெல் திருவிழா மற்றும் கணவரின் நினைவுகளைப் பகிர்கிறார் சித்ரா.

'நெல்' ஜெயராமன் மனைவி

``இப்போ நடந்து முடிந்தது, 13-வது வருட நெல் திருவிழா. ஒவ்வொரு வருஷமும் இந்தத் திருவிழாவை நடத்த என் கணவர் மேற்கொண்ட முயற்சிகள் பலருக்கும் தெரியும். ஆனா, அவர் இல்லாம நடக்கிற முதல் திருவிழா இது. அதனால, இந்த வருட திருவிழாவுல என் கணவரின் இழப்பை அதிகளவில் உணர்ந்தோம். என் கணவர் இறந்து ஆறு மாதம்தான் ஆகுது. அவர் இறப்பினால் உண்டான வேதனையிலிருந்து இன்னும் நாங்க முழுமையா மீண்டு வரலை. எனவே, இந்த வருஷ திருவிழாவை நடத்துறதில் எங்களுக்கு நிறைய தயக்கம் இருந்துச்சு. ஆனா, அவர் தொடங்கிய இந்தத் திருவிழாவை தொடர்ந்து நடத்தணும்; கணவரின் உழைப்புக்கு அர்த்தம் சேர்க்கணும்னு நினைச்சோம்.

'நெல்' ஜெயராமன்

எனவே, என் கணவரின் அண்ணன், அவர் மகன் மற்றும் நண்பர்கள் பலரும் உதவ முன்வந்தாங்க. அதனால திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், கடந்த சனி மற்றும் ஞாயிறுகளில் இந்த வருஷ திருவிழாவைச் சிறப்புடன் நடத்தினோம். அதில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகிட்டாங்க. வழக்கம்போல ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகிட்டு, பாரம்பர்ய விதைகளை வாங்கிட்டுப்போனாங்க. போன வருஷம் விதை வாங்கிட்டுப்போனவங்க, அதை மறு உற்பத்தி செய்து இந்த வருஷம் இரு மடங்கா திருப்பிக்கொடுத்தாங்க. திருவிழாவின் இரண்டாம் நாள், பாரம்பர்ய உணவுத் திருவிழாவையும் நல்ல முறையில் செய்தோம். 

'நெல்' ஜெயராமன்

நெல் திருவிழா நல்லபடியா முடிஞ்சது. ஆனா, விழாவில் கலந்துகிட்ட தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் விவசாயிகள் எல்லோரும் என் கணவரின் மறைவு குறித்து மனதளவில் மிகவும் வருத்தப்பட்டாங்க. தற்போது 174 வகை பாரம்பர்ய நெல் வகைகள் எங்ககிட்ட இருக்கு. அவற்றை இன்னும் கணிசமாக உயர்த்துவதுடன், புதிய வகை நெல் ரகங்களைக் கண்டறியவும் அதிக முயற்சிகளை எடுத்துகிட்டிருக்கிறோம். எனவே, ஒவ்வொரு விதை நெல்லிலும் என் கணவர் வாழ்வார்" என்று உற்சாகமாகக் கூறும் சித்ராவின் குரல், கணவரின் நினைவுகள் குறித்து கேட்டதும் லேசாகிறது. 

``அவரின் இழப்பை என் ஒவ்வொரு செயல்பாட்டிலும் உணர்கிறேன். அதை வார்த்தைகளில் விவரிக்கத் தெரியலை. என் கணவரின் உடல்நிலை சரியில்லைனு செய்தி வெளியானதும், சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், விவசாயிகள்னு பலரும் அவரின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ முன்வந்தாங்க. அவங்க எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி! அது ஒரு பக்கம் மகிழ்ச்சியா இருந்துச்சு. அதேசமயம் நாங்க பிறருக்கு உதவி செய்யணும்னு நினைச்ச நிலையில, எங்களுக்கு மத்தவங்க உதவும் நிலைக்கு உள்ளாகிட்டோமேனு மனசுக்குள்ள வருத்தம் அதிகமாகிடுச்சு. அவர் சிகிச்சை பெற்றுவந்த காலங்கள் ரொம்பவே வலி நிறைந்ததா இருந்துச்சு. அவர் குணமாகி வந்துடுவார்னு உறுதியா நம்பினேன். ஆனா, இயற்கையின் தீர்ப்பை ஏத்துக்கிட்டுதானே ஆகணும். 

'நெல்' ஜெயராமன்

என் கணவரின் வாழ்க்கை வரலாறு, பன்னிரண்டாம் வகுப்பு தாவரவியல் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கு. அதனால எங்களுக்கு மகிழ்ச்சி. அதற்காகவும், என் கணவரின் மருத்துவச் செலவுக்கு உதவியதுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திச்சு நன்றி சொன்னேன். நான் அங்கன்வாடி பணியாளர். அந்த வேலையுடன், என் கணவர் வழியில் இயற்கை விவசாய முன்னேற்றத்துக்கு வேலை செய்யணும். நஞ்சில்லா உணவு மற்றும் இயற்கை விவசாயம் பத்தி இன்னும் நிறைய விழிப்புணர்வு கொடுக்கணும். இதை இளைய தலைமுறை இளைஞர்கள் மற்றும் மாணவர்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்க்கணும். அதுக்கான முயற்சிகளை நான் மேற்கொள்ள இருக்கிறேன். இயற்கை விவசாயத்தைக் கைவிடமாட்டேன்" என்கிறார் உறுதியான நம்பிக்கையுடன். 

https://www.vikatan.com/news/tamilnadu/159582-nel-jayaraman-wife-talks-about-her-husbands-memories.html?fbclid=IwAR39ZmE3xQqFcFxqsSS4wkeDYObMjJ6QKX4I0GIQ6vWvYFNyYRMALXaQcO4

  • 1 month later...
  • தொடங்கியவர்

 

 

கொல்கத்தா இளைஞரின் இயற்கையோடு இயைந்த வாழ்க்கைமுறை

கொல்கத்தாவை சேர்ந்த ஹர்ஷ் வலச்சா, நிதி ஆலோசகராக இருந்தவர். கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய இந்திய நகரங்களிலும் பின்பு அமெரிக்காவிலும் நிதி ஆலோசகராக பணிபுரிந்த ஹர்ஷ் இப்பொழுது தற்சார்பு வளங்குன்றா வாழ்க்கை முறையினை பின்பற்றும் விவசாயியாக வாழ்ந்து வருகிறார்.

மனிதர்கள் தமக்கு தேவையான உணவு, உறைவிடம், தண்ணீர், மின்சாரம் அனைத்தையும் தாமே உற்பத்தி செய்துகொள்வதும், இயற்கையோடு இயைந்த தற்சார்பு வாழ்க்கை முறையும்தான். இயற்கையை சுரண்டாத வளங்குன்றா வாழ்க்கை முறைக்கு அடித்தளம் என்கிறார் ஹர்ஷ்.

https://www.bbc.com/tamil/india-49039878

 

 

நகர வாழ்க்கை வேண்டாம் - தமிழக மேற்கு தொடர்ச்சிமலையில் இயற்கை வாழ்வியலுக்கு திரும்பிய கொல்கத்தா இளைஞர்

வறண்ட நிலம் பசுமையாக மாறியது எப்படி?

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலம் இப்படி இல்லை என்றும் கூறும் ஹர்ஷ் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த அந்த நிலத்தின் புகைப்படத்தினை காட்டினார். நேரில் பார்ப்பதற்கு பசுமை நிறைந்து காணப்படும் அந்த இடமானது புகைப்படத்தில் நேர் மாறாக இருந்தது.

முன்பு இந்த நிலம் மண் இறுகி வறண்டு, கற்களும் சிறு பாறைகளும் இருந்த குன்றாகத்தான் இருந்தது. இந்த இடத்தினை பார்க்கும்போது மூன்று ஆண்டுகளில் இதை பசுமையாக மாற்ற முடியுமென்ற நம்பிக்கை கூட எனக்கு இல்லை. நமக்கு வயது இருக்கிறது, காலம் அதிகமானாலும் பரவாயில்லை. மேலும் அன்பும் அக்கறையுமிருந்தால் எதை வேண்டுமானாலும் மாற்றலாம். நிலத்தை மாற்ற முடியாதா என்ற எண்ணத்தில்தான் வேலையைத் தொடங்கினேன். ஆனால், இயற்கை நாம் நினைப்பதுபோல இல்லை. நாம் அன்பு செலுத்த தொடங்கியவுடன் பதிலுக்கு அது பேரன்பை செலுத்துமென்பது எனக்கு பிறகுதான் புரிந்தது. இரண்டு வருடங்களில் இந்த இடம் முழுவதுமாக மாற ஆரம்பித்து விட்டது என்று அவர் விவரிக்கிறார்.

ஆங்காங்கு மரங்கள்

அதிக பொருட்செலவு செய்து பெரும் இயந்திரங்களை கொண்டு வந்து இந்த நிலத்தினை சீர் செய்யவில்லை. நானும் நண்பர்கள் சிலரும் இணைந்து நிலத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளை உருவாக்கினோம். நிறைய குழிகள், அகழிகள், வரப்புகளை வெட்டினோம். மழைநீர் வழிந்தோடி விடாமல் இந்த நிலத்தில் தங்குவதற்கான அனைத்து வழிகளையும் செய்தோம். நிலத்தில் தண்ணீரை சேகரிக்கத் தொடங்கியவுடன் பசுமை துளிர்க்க ஆரம்பித்தது. புற்களும், புதர்ச் செடிகளும் வளரத்தொடங்கின.

மழை நீர் சேகரிப்பு முறைகளை தொடங்கியவுடன் சிறிது சிறிதாக நிலத்தடிநீர் மட்டம் உயரத் தொடங்கியது. இந்த இடத்திற்கு வந்தபோது தண்ணீருக்கு குழாய் கிணறு போட முடியுமா என்று பார்த்தபோது 800 அடிக்கும் கீழே துளையிட வேண்டியது இருக்கும் என்றனர். இப்பொழுது 150 அடியில் தண்ணீர் இருக்கின்றது. இது நடைமுறையில் சாத்தியமில்லை என்று பலரும் விவாதிக்கலாம். ஆனால் நான் தண்ணீருக்காக இந்த பூமியை அதிக தூரம் வெட்டி காயப்படுத்த வேண்டியதில்லை என்பது எனக்கு மன நிறைவாய் இருக்கிறது என்கிறார்.

எனினும் இவர் தற்போது 200 அடிக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்துதான் நீரெடுக்கிறார்.

மண்வளமானதாக உருவானது எப்படி?

முன்பு மண் மிகவும் இறுகி இருந்தது. மண்ணை இளக செய்து வளமான மண்ணாக மாற்ற பல வேலைகளை செய்தோம்.

சுமார் 400 சிறிய குழிகளைத் தோண்டி அதில் முதலில் மழைநீரை சேமித்தோம். பின்பு அதில் அவரை போன்ற பருப்புவகை தாவரங்களைப் பயிரிட்டோம் .

அவை மண்ணில் நைட்ரஜனை நிலை நிறுத்தக் கூடியவை. பின்பு அந்தக் குழிகளில் உதிர்ந்த இலை தழைகளை நிரப்பி பின்பு கரையான்களை விட்டோம்.

சில வாரங்களில் அவை அனைத்தும் மண்ணோடு மண்ணாகத் தொடங்கின. ஈரப்பதம் இல்லாமல் இறுக்கிக் கிடந்த மண் இப்பொழுது எப்படி இருக்கிறது பாருங்கள் என கை நிறைய மண்ணை அள்ளி காட்டினார் ஹர்ஷ்.

உணவுக் காடு

"நீர் கிடைத்த பிறகு, மண் பண்பட்ட பிறகு உணவு உற்பத்தி தொடங்கினேன். 500 வகையான மரங்களையும், காய்கறி பழத் தோட்டங்களையும் உருவாக்கினேன்.

மழைநீர் சேகரிப்பு Image captionமழைநீர் சேகரிப்பு அமைப்பு

அதுவும் இந்த மண்ணுக்கு உரிய மரங்களை தேடித் தேடி நட்டு வருகிறேன்" என்கிறார்.

இந்த நிலத்திற்கு உரிய மரங்கள்தான் இங்கு வாழும் உயிரினங்களுக்கும் நல்லது, நிலத்திற்கும் நல்லது என்று கூறிய அவர், தனக்கு தேவையான மின்சாரத்தை சூரிய மின் தகடுகளை பொருத்தி எடுத்துக்கொள்வதாகவும், அந்த மின்சாரமே அனைத்துத் தேவைகளுக்கும் போதுமானதாக இருக்கிறது என்றும் கூறுகிறார்.

சிறுகக் கட்டி...

ஹர்ஷ் தனக்கான வீட்டை மிகச் சிறிதாக நிலத்திலேயே கட்டியுள்ளார். மேலும், இந்த வீட்டை கட்டுவதற்கு பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் ஏற்கனவே பயன்படுத்திய பொருட்களும் மறுசுழற்சி பொருட்களும்தான் என்கிறார் அவர்.

தனக்கான வீட்டை அருகிலுள்ள பழங்குடியினர் உதவியுடன் தானே கட்டிக்கொண்ட ஹர்ஷ், வீடு கட்ட 50 ஆயிரம் ரூபாய் தான் செலவானது என்கிறார்.

மழைக்காலங்களில் எரிவாயு பயன்படுத்தி சமைத்துக் கொள்கிறார். பிற நேரங்களில் பயன்படுத்த விறகு அடுப்பை பயன்படுத்தி வருகிறார்.

உணவுக் கழிவுகளை மட்கச் செய்து உரமாக பயன்படுத்துகிறார். எந்த வித வேதிப்பொருட்களும் பயன்படுத்தாதால் வீட்டில் இருந்து வெளியேறும் தண்ணீர் அனைத்தும் செடிகளுக்கு சென்று சேர்ந்து விடுகிறது.

கை கழுவும் தண்ணீர் விழுகின்ற இடத்தில் சிறு செடிகளை நாட்டு வைத்துள்ளார். குளிப்பதற்கான தண்ணீரையும் அளந்துதான் பயன்படுத்துகிறார் ஹர்ஷ்.

ஹர்ஷ் வீட்டில் பிளாஸ்டிக் கவர்கள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் கேன்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

"பிளாஸ்டிக் முழுவதும் அழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இப்பொழுது தூக்கி எறிகின்ற நெகிழி பொருட்களை கொண்டு ஏதாவது செய்ய முடியுமா என்று சிந்திப்பதும் அவசியம் தான்.

பிளாஸ்டிக் செங்கற்களை பயன்படுத்தி சின்ன சின்ன அறைகளை கட்டிக் கொள்ளலாம் குறைந்த பட்சம் அவற்றை தேவையில்லை என மண்ணில் எறிவதற்கான காலத்தினை அதிகப்படுத்தலாம் என்பதற்காக இதை முயற்சி செய்கிறேன்" என்றார்.

https://www.bbc.com/tamil/india-48982367

  • தொடங்கியவர்

தமிழ் நிலம், தமிழ் பண்ணை, மரக்காடு உணவுக்காடு : பழ மரங்களையும் வணிக மரங்களையும் ஒன்றாக வளர்க்கும் பண்ணை.

வணிக மரங்கள் நீண்ட கால இலாபம் தரக்கூடியவை 
இயற்கையுடன் இணைந்த விவசாயம் 
இயற்கை பூச்சி விரட்டி 

 

 

  • 1 month later...
  • தொடங்கியவர்

இடைத்தரகர்களிடம் சிக்கித் தவிக்கப்போகும் விவசாயம்

அனுதினன் சுதந்திரநாதன் / 2019 செப்டெம்பர் 02 திங்கட்கிழமை, மு.ப. 11:42

 

இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் சகலவிதமான தொழில்முறையும் வணிகமயப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு, பாரம்பரியமான விவசாயமுறையும் விதிவிலக்கல்ல. விவசாய செயற்பாடுகள் காலகாலமாக பல்வேறு தொழில்நுட்பங்களின் அறிமுகத்தினால், வேறுபட்டவகையில் விருத்தியடைந்து வந்திருந்தாலும், அதன் வர்த்தக முறையில் தற்காலத்தில்தான் மிகப்பெரும் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த மாற்றங்கள் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகவிருந்தாலும், விவசாயத்துறையும் ஏனைய துறைகளைப்போல இடைத்தரகர்களிடம் சிக்கித்தவிக்கும் துறையாக மாறிவருகின்ற துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது.   

இலங்கை போன்ற நாடு விவசாயத்துறையில் தன்னிறைவையும், விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தில் தங்கியிருந்தும் வளர்ச்சிபெற்ற நாடாகும். தற்போதைய நிலையில், விவசாயத்தை சார்ந்திருந்த எமது பொருளாதாரம் மெல்ல மெல்ல சேவைகள் சார்ந்த துறை மூலமான வருமானத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமை ஏற்பட என்ன காரணம் என்பதையும், நாம் விவசாயம் சார்ந்த வருமானங்களை இழந்துகொண்டு செல்கின்றோமா?  அல்லது விவசாய வருமானங்கள் வேறுவடிவில் வேறுயாரிடமாவது செல்கிறதா? என்பதைப் பற்றிச் சிந்தித்து இருக்கிறோமா?  

இலங்கை போன்ற நாட்டில் விவசாயத்துறையில் நவீனமயப்படுத்தலும், வணிகமயப்படுத்தலும் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ளது. அத்துடன், விவசாயம் மூலம் கொள்ளை இலாபம் பெறுபவர்களாக விவசாயிகள் அல்லாமல், விநியோகஸ்தர்கள் இருப்பதனாலும் நமது விவசாயத்துறையில் வீழ்ச்சியும், வருமான இழப்பும் மிக அதிகமாகவுள்ளது. குறிப்பாக, இன்றைய நிலையில் இலங்கையில் விவசாயிகளாகவிருப்பவர்கள், தொடர்ந்தும் ஒரேவிதமான வாழ்க்கை தரத்ைதயே கொண்டிருக்கிறார்கள், ஆனால், விவசாயப் பொருள்களை விநியோகிக்கும், விற்பனை செய்யும், ஏற்றுமதி செய்யும் தனிநபர்கள், நிறுவனங்கள், பல்தேசிய நிறுவனங்களின் வளர்ச்சியையும், அதன் வருமானத்தையும் ஒருதடவை பரீட்சித்து பாருங்கள். அந்த இலாபங்கள் எதுவுமே, விவசாய உற்பத்திகளை மேற்கொள்ளுகின்ற விவசாயிகளுக்கு போய் சேராததன் விளைவாக, இன்றைய நிலையில் விவசாயம் ஒரு வறுமைத் தொழிலாகச் சித்தரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. விவசாயிகள் அனைவரும் பல்தேசிய நிறுவனங்களின் கூலித்தொழிலாளியாக அவர்களின் நிலங்களில் விவசாயிகளாக இருக்கிறார்கள். இந்தநிலையில், மாற்றம் ஏற்படவேண்டுமாயின், விவசாயம் செய்கின்றவர்கள் நேரடியாக இலாபம் பெறக்கூடியவர்களாக மாற்றம் பெறவேண்டுமாயின், அவர்களுக்கு இந்த நிலைமை தெள்ளத் தெளிவாக விளக்கப்படுத்தப்படுவது அவசியம்.  

விவசாய செயன்முறைகளையும், விவசாயம் சார் நடைமுறைகளையும் நவீனமயப்படுத்துவதென்பது தனியே உற்பத்திகளை அதிகரிக்க பாரிய இயந்திரங்களை பயன்படுத்துவதோ, புதிய புதிய கிருமிநாசினிகளை பயன்படுத்துவதோ என்றாகிவிடாது. மாறாக, விவசாயத்ைத  சூழலுடன் இணைந்ததாக முன்னேற்றம் செய்யக்கூடிய வகையிலான மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு முன்னேறுவதாக அமைய வேண்டும். பழமையான முறைகளை புதுமையுடன் இணைந்ததாக விவசாயத்தில் முன்னேறிக்கொண்டிருக்கும் மியன்மார், வியட்நாம் போன்ற தென்கிழக்காசிய நாடுகள் இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகவுள்ளது.  

இன்றையநிலையில், விவசாய பயிர்ச்செய்கையிலும், அதுசார் உற்பத்திகளிலும் உடலுக்கு ஆரோக்கியமான மூல உணவுகளுக்கு மிகப்பெரும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இதன்காரணமாக, இதற்கான சந்தை அதிகரித்துள்ளதுடன், அதற்காக அதிக விலையையும் மக்களை செலுத்த தயாராகவுள்ளார்கள். எனவே, இந்தச் சந்தை மாற்றங்களை உள்வாங்கி நமது விவசாய முறைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது.   

 

விவசாயத்ைத வணிகமயப்படுத்தல் 

நமது விவசாயிகள் பயிர்ச்செய்கை நடைமுறைகள், உற்பத்திகள் என்பவற்றில் எவ்வளவுதான் முன்னேற்றகரமான விற்பனர்களாகவிருந்தாலும், தமது உற்பத்திகளை சந்தைப்படுத்த்துவதிலும், வணிகமயப்படுத்துவதிலும் தோற்றுப்போய் விடுகிறார்கள். இதுதான், விவசாய உற்பத்திகளை விநியோகம் செய்பவர்களுக்கும், பல்தேசிய நிறுவனங்களுக்குமுள்ள வாய்ப்பாகவுள்ளது. இதன் காரணமாகத்தான், ஒரு விவசாயின் தனது வாழ்க்கைதரத்ைத  எந்த நிலையிலும் முன்னேற்றிக்கொள்ள முடியாதநிலை காணப்படுகிறது.  

விவசாயத்ைத  வணிகமயப்படுத்துவதென்பது, வார்த்தைகளில் சொல்வதுபோல மிக எளிதான காரியமல்ல. விவசாயிகளை கிட்டவும் நெருங்கவிடாத வகையில், தனிநபர்களாலும், பலதேசிய கம்பனிகளாலும் உருவாக்கி வைக்கப்பட்டுள்ள வணிக வலைப்பின்னலை ஊடுருவி விவசாயம் செய்வோர் நேரடியாக வாடிக்கையாளர்களை அணுகும் வழிமுறை மிகவும் சிக்கலானது. ஆனால், இந்த வலைப்பின்னலை ஊடுருவிட்டால், இன்றைய நிலையில் விநியோகஸ்தர்களாகவுள்ள தனிநபர்களும், பல்தேசிய நிறுவனங்களும் உழைக்கும் கொள்ளை இலாபம் விவசாயினையே வந்து சேரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.  

உதாரணமாக, இலங்கையின் இயற்கை வேளாண்மை (Organic Agriculture) தொடர்பில் நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள், அதாவது, ஒரு பயிைர உற்பத்தி செய்வதற்கு பயன்படும், பதப்படுத்தும் மண் தொடங்கி, அதில் பயன்படுத்தும் உரம், முடிவுப்பொருள் வாடிக்கையாளரை சென்றடையும் வரை எந்தச் செயற்பாட்டிலும், செயற்கையான எந்தவொரு இரசாயனப் பயன்பாடு இல்லாதவகையில் பயிர்செய்கையை முன்னெடுப்பதாகும். இவ்வாறான பயிர்செய்கை முறையில் கிளிநொச்சியிலிருந்து பப்பாசி பழங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. சாதாரணமாக, இவ்வாறு இயற்கை முறைமை மூலமாக உற்பத்தி செய்யப்படும் பப்பாசி பழங்கள் கிலோகிராெமான்றுக்கு 50 ரூபாய் முதல் 80 ரூபாய்க்குள்  பயிர்செய்கை செய்பவர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் பழங்கள் உள்நாட்டு சந்தையில் குறிப்பாக கொழும்பில் மட்டும் கிலோ கிராம் 200 ரூபாய்க்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்போது குறைந்தது கிலோகிராம் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடைநடுவேயிருக்கும் இடைத்தரகர்களுக்கு உள்நாட்டில் கிலோகிராெமான்றுக்கு 100 ரூபாயும் ஏற்றுமதியில் கிலோகிராெமான்றுக்கு 300 ரூபாயும்  இலாபம் கிடைக்கிறது. ஆனால், அதனை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கிலோகிராெமான்றுக்கு 10 ரூபாய் இலாபம் கிடைப்பதே குதிரைக்கொம்பாகவிருக்கிறது.  

உற்பத்தியாளர்களுக்கு மேலே கூறியதுபோல, மிகச் சொற்பமான இலாபமும், விநியோகஸ்தங்களுக்கு கொள்ளை இலாபமும் கிடைப்பதற்கு மிகமுக்கிய காரணம், உற்பத்தியாளர்களுக்கு தனது பொருளுக்கான சந்தை தொடர்பிலும், தனது வாடிக்கையாளர் யாரென்பது தொடர்பிலான போதிய அறிவின்மையும், அதனை அறிகின்றபோது, தனது உற்பத்திகளை கொண்டுசேர்க்க ஏற்படும் மேலதிக வேலைப்பளு, செலவீனங்களை கருத்தில்கொண்டும் அந்த இடநேர்வை (Risk) எடுக்க துணியாமையும்தான் இதற்கான காரணமாகும். விவசாயம்சார் தொழில்முறையின் ஆதாரமாகவுள்ள உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு நலிவடைவதுடன், விவசாயம்சார் தொழில் முறையிலிருந்தும் வெளியேறுகின்றார்கள் அல்லது வெளியேற நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இந்தநிலையிலிருந்து மீண்டுவர விவசாய உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளை சந்தைக்கு கொண்டுசேர்க்கக் கூடிய மேலதிக அணுகுமுறையையும் தம்மிடத்தே கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது.  

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இயற்கை வேளாண்ைம  கூட கணினியின் உதவியுடன் செய்கின்ற அளவுக்கு முன்னேறி விட்டது. என்னதான் நாம் பழமையான, இயற்கை முறைகள் மாறாத வேளாண்மையை காரணம் காட்டி, தொழில்நுட்ப மாற்றங்களை உள்வாங்க மறுத்தாலும், உண்மையில் இயற்கை வேளாண்மைக்கு பாதகமல்லாதவகையில் மிகப்பெரும் நன்மையைத் தரக்கூடிய தொழில்நுட்பங்களை உள்வாங்க முயற்சிக்க வேண்டும் அல்லது பரீட்சார்த்த அடிப்படையில் பயன்படுத்தியாவது பார்க்க வேண்டியது அவசியமாகும். இதன்மூலமாக, பருவநிலைகளுக்கு ஏற்றவகையிலும் சரி, சந்தை கேள்விகளுக்கு ஏற்றவகையிலும் சரி, விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையிலும் சரி தமது விவசாய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.  

இதற்கு அடுத்ததாக, விவசாயம் சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் இன்றைய தலைமுறைக்கும், அதில் ஈடுபட தயாராகவுள்ள தலைமுறைக்குமிடையான இடைவெளியை குறைத்து ஒரு இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, விவசாய செயற்பாடுகளில் ஈடுபடும் இன்றைய தலைமுறையினர் விவசாய கல்வியல் செயற்பாடுகளை பார்க்கிலும், அனுபவரீதியாக தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். அதுபோல,எதிர்கால தலைமுறையினர் தொழில்நுட்பம் உட்பட ஏனையவற்றில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கிடையிலான இணக்கம் ஏற்படும்போது, அனுபவமும், புதிய நுட்பங்களும் இணைந்து மிகப்ெபரும் மாற்றத்துக்கு வித்திடுவதாக இருக்கும்.  

இவற்றுக்கு மேலதிகமாக, விவசாய கற்கை நெறிகளில், விவசாயம்சார் கற்கை நெறிகளை எவ்வாறு வணிகமயப்படுத்துவது என்பதனையும் உள்ளடக்க அவசியமாகிறது. காரணம், தனித்து விவசாய கற்கை நெறிகளை கற்பதன் மூலமாக, விவசாய உற்பத்திகளில் முன்னேற்றத்தை காணமுடியுமே தவிர, அதனை உற்பத்தி செய்ப்பவர்களுக்கு வணிகரீதியில் எவ்வித முன்னேற்றத்தையும் பெற்றுத்தர போவதில்லை. எனவே,ஒவ்வொரு விவசாயம் சார் உற்பத்திகளில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தமது உற்பத்திகளை எவ்வாறு இறுதி வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்க முடியும் என்கிற வழிமுறைகளை உள்ளடக்கிய புத்துருவாக்க கற்கைநெறிகளை உருவாக்குவது அவசியமாகிறது. இவ்வாறான கற்கைநெறிகள் வரும்போதுதான், விவசாயம் சார் உற்பத்திகள் பக்கமாக இளையோரையும் ஈர்த்திழுக்க முடியும்.  

பெரும்பாலான வணிகங்கள் தலைமுறை தலைமுறையாக பெற்றோர்களிடமிருந்து வாரிசுகளுக்கு கையளிக்கப்பட்டு, அவற்றின் பாரம்பரியமும், இலாபமும் அதிகரிக்கப்பட்டு கொண்டே வருகின்றன. ஆனால், விவசாயம்சார் உற்பத்திகளில் ஈடுபடுபவர்கள் தமது விவசாயத்தையும், துட்சார் தொழிலையும் தனது எதிர்கால தலைமுறையிடம் கையளிக்க தயங்கி நிற்பதுடன், இந்த தொழில் எப்பாடுபட்டாலும் தமது சந்ததியினரை வைத்தியராகவோ, கணக்காளராகவோ, அரச ஊழியர்களாகவோ கரை சேர்க்க எண்ணுகிறார்கள். இதற்கு காரணம், விவசாய உற்பத்திகள் மூலம் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கும் வருமானம் வருடம்தோறும் நலிவடைந்து கொண்டு போவதுடன், விவசாய உற்பத்திகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்ப்பதில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சவால்களும் காரணமாக உள்ளன. இந்தநிலையில் மாற்றம் ஏற்படவேண்டுமாயின், விவசாயம் சாரி உற்பத்திகளை சந்தைப்படுத்துவதிலும், விவசாயம் சார் உற்பத்திகள் விநியோக சங்கிலியானது பல்தேசிய கம்பெனிகளிடமோ அல்லது தனிநபர்களிடமோ சிக்கிக்கொள்ளாத வகையிலான ஏற்பாடுகளை செய்யவும் அரசு முன்வரவேண்டியது அவசியமாகிறது. இதன் மூலமாகத்தான், விவசாயத்தை வருமானம் தரும் உத்திரவாதத் தொழிலாக மாற்ற முடியும்.  

மேற்கூறிய அனைத்துமே,விவசாயம் சார் உற்பத்திகள் நாட்டில் வருமானம் தரும் தொழிலாக விவசாய உற்பத்திகளில் ஈடுபடுவர்களுக்கு இருக்கவேண்டும் என்பதை பரிந்துரை செய்யும் விடயங்களாகவே உள்ளது. உணவு என்பது அடிப்படையான தேவைகளில் ஒன்றாகவுள்ள நிலையில், அதற்காக எத்தகைய பெறுமதியையும் நாம் வழங்க தயாராகவுள்ளநிலையில், நாம் வழங்கும் எத்தகைய பெறுமதியும் அவ்வுணவை நமக்கு வழங்கும் உற்பத்தியாளர்களை சென்றடையாமல், அவர்களை வறுமை நிலைக்குள்ளேயே வைத்திருக்கும் நிலை நிச்சயமாக மாறவேண்டும்.     

http://www.tamilmirror.lk/business-analysis/இடைத்தரகர்களிடம்-சிக்கித்-தவிக்கப்போகும்-விவசாயம்/145-237726

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.