Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஞானசாரர் விடுதலையால் எனது குடும்பத்திற்கு ஆபத்து- பிரகீத் மனைவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுபலசேனாவின் பௌத்தமதகுரு ஞானசாரதேரரிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதன் காரணமாக  ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின்  குடும்பத்தவர்களின் உயிர்களிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என ஊடகவியலாளரின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு  எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை  குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரர் விடுதலைசெய்யப்பட்டுள்ளமையால் எனது குடும்பத்தவர்களின் உயிர்களிற்கு பாரதூரமான ஆபத்து ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் உரிய பாதுகாப்பை வழங்குமாறு பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஞானசார தேரர் சிறையிலிருக்கும்போதே அவரது ஆதரவாளர்கள் என்னை தூற்றி வந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் ஞானசாரர் விடுதலையான பின்னரும் சமூகஊடகங்களில் இது தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார்.

prageeth_santhiyaaa.jpg

அவரது ஆதரவாளர்கள் சட்டத்தை கையிலெடுக்க தயங்கமாட்டார்கள் என தெரிவித்துள்ள சந்தியா வரலாற்றில் இதற்கான ஆதாரங்கள் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/56679

சிறையிலிருந்து வந்தவருக்கு சிறப்பான விருந்துபசாரம்!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால விருந்தளித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் இந்த விருந்துபசார நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த விருந்துபசார நிகழ்வில் ஞானசார தேரர் உட்பட இன்னும் சில பெளத்த தேரர்களும் திலங்க சுமதிபாலவின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினருக்கு தேரர் ஆசி வழங்கியதுடன், கலந்துரையாடல் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நேற்று விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/120629

  • கருத்துக்கள உறவுகள்

ஞானசார தேரருக்கு,  பிரான்ஸில்....  ஒரு மனைவியும், இரண்டு பெண் பிள்ளைகளும் இருப்பதாக...
அவருடன் நெருங்கிப் பழகிய... சிங்களவர் ஒருவர் தெரிவித்து,  புகைப்படங்களுடன்.. 
வந்த செய்தியை,  முன்பு யாழ்.களத்தில் வாசித்து இருந்தேன்.

விடுதலையானதும் மைத்திரியை சந்தித்த தேரர் மற்றும் தாயார்!

பொதுமன்னிப்பில் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்ட ஞானசார தேரர் மற்றும் அவரது தாயார் நேற்றிரவு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். மைத்திரியை சந்தித்து ஞானசார தேரரும் அவரது தாயாரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் மாலை வெலிக்கட சிறைச்சாலையிலிருந்து ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலையாகிறார் என்ற செய்தி வெளியானதும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் தேரரின் ஆதரவாளர்கள் என பலர் சிறைச்சாலை முன்பாக கூடியிருந்தனர்.

ஆனால் தேரர் சிறைச்சாலையின் பின் கதவால் வெளியேறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/120610

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.