Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க ஒருதரப்பினர் முயற்சி : மங்கள

Featured Replies

சர்வதேச பயங்கரவாதம் இலங்கையில் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், தமது அரசியல் தேவைகளுக்காக இனங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்தி பயங்கரவாத நிலையை தோற்றுவிக்க, சில மோசடி அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

நிதியமைச்சில் இன்று (30) நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய நிதியமைச்சர் மங்கள சமரவீர

''உலக நாடுகளும் ஐ.எஸ். பயங்கரவாதத்தை எதிர்கொண்டுள்ளன. இலங்கையும் அண்மையில் எதிர்கொண்டது. ஆனால் இலங்கையில் சர்வதேச பயங்கரவாதம் குறுகிய காலத்திற்குள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளத. எனினும், இலங்கையில் இன்னுமொரு பயங்கரவாதத்திற்கு குரூர அரசியல் நோக்கம் கொண்ட ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர். இனவாத பிரச்சினையை ஏற்படுத்தி, இரு தரப்பினருக்கிடையே மோதலை உண்டு பண்ணில் அதில் பயனடைய முயற்சிக்கின்றனர். இதற்கு எதிராக இலங்கையர்கள் அணி திரள வேண்டும். 83ஆம் ஆண்டு நடந்த கறுப்பு ஜூலை கலவரத்தின் பின்னரே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பக்கம் தள்ளப்பட்டனர்.

முஸ்லிம் மக்களையும் இ ந்தச் சந்தர்ப்பத்தில் அவ்வாறான நிலைக்கு தள்ளிவிடக் கூடாது. முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் இடையூறுகள் அவர்களை அடிப்படை வாதத்திற்குள் தள்ளிவிடக் கூடும். அதில் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். இலங்கையில் உள்ள 99.9 வீதமான முஸ்லிம்களுக்கும் இதற்கு எவ்வித தொடர்பும் கிடையாது. ஆனால், இன்றைய நிலையில், முஸ்லிம் மக்கள் வெளியே செல்லும்போது அவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாக அறியக்கிடைக்கிறது. அவ்வாறு செய்ய வேண்டாம் என நாம் கேட்டுக்கொள்கிறோம். நான் ஒரு மதத்தையோ, இனத்தையோ நேசிப்பதற்கு மேலாக இலங்கையை நேசிக்கிறேன். அதனால் இதனைக் கூறுகிறேன். நாமே தீவிரவாதிகளை உருவாக்குகிறோம். அதனால் அனைத்துத் தரப்பினரம் ஆபத்தில் இருக்கிறோம்.

48ஆம் ஆண்டு காலப்பகுதியில் தெற்காசியாவில் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கை இருந்தது. ஆனால் 70 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், தெற்காசியாவில் பின்தள்ளப்பட்ட நாடாக இலங்கை மாற்றமடைந்துள்ளது. இன, மத, குல ரீதியாக வேறுபட்டுள்ளதே இதற்குக் காரணமாகும். எனவே, இன, மத, குல ரீதியாக பிரிவினையை ஏற்படுத்தி, நாட்டை நாசப்படுத்தி, தமது குறுகிய இலக்கை அடைவதற்கு சில அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.'' என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


https://newsline.lk/news/6689-2019-05-30-12-13-02

Edited by Kashni

ஆம், " 48ஆம் ஆண்டு காலப்பகுதியில் தெற்காசியாவில் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கை இருந்தது. ஆனால் 70 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், தெற்காசியாவில் பின்தள்ளப்பட்ட நாடாக இலங்கை மாற்றமடைந்துள்ளது. இதற்குக் காரணம்,"

இன்று ஒரு பின்தங்கிய நாடாக மாறிவருகின்றது. காரணம் என்ன என்பது மங்களவுக்கும் தெரியும்,

தெரிந்தவர்கள், பதவியில் இருக்க, பதவியை தக்கவைக்க சிறுபான்மை இனத்தை பந்தாடுவதும், அரசியலுக்காக நாட்டை ஒரு 'அரச' பயங்கரவாதத்தை வளர்ப்பதும் இந்த 70 ஆண்டு கால சாதனை. 

இந்த விடயத்தில் இரண்டு சிங்கள பெரும்பான்மை கட்சிகளும் ஒற்றுமையாக தொடர்ந்து இருக்கும் வரை விடிவு இல்லை.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.