Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஸ்டி கேட்டவர்கள் இப்பொழுது சமுர்த்தி கேட்டு திரிகிறார்கள்!

Featured Replies

Image

சமஸ்டி கேட்டவர்கள் இப்பொழுது சமுர்த்தி கேட்டு திரிகிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் மூன்று முப்பது மணியளவில் இடம்பெற்ற வாராந்தப் பத்திரிக்கை வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இன்னும் நான்கு மாதத்தில் இன்னுமொரு ஜனாதிபதி தேர்தலை சந்திக்க இருக்கின்றோம். நாம் ஜனாதிபதி பிரதமர் எமக்கு அரசியல் தீர்விற்கு உதவுவார்கள் என்று நம்பி இருந்தோம் ஆனால் நான்கு ஆண்டுகளை கடந்துவிட்ட போதும் எதுவும் நடக்கவில்லை.

ஜனதிபதி தேர்தல் ஒன்றை எதிர்நோக்க இருக்கின்றோம். அதற்காக மக்கள் வரிப்பணத்தில் நடைமுறைப்படுத்தப் படுகின்ற சமுர்த்தி கம்பரேலிய போன்ற திட்டங்களை சிலர் காவித் திரிகின்றார்கள் சமஸ்டி கேட்டவர்கள் இபொழுது சமுர்த்தி கேட்டு திரிகின்றார்கள். அதன விட முன்னைய அரசாங்கத்தோடு இணைந்து இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுத்த டக்லஸ் தேவானதா போன்றவர்களை விமர்சித்தவர்கள் இன்று அதனையே செய்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.

இவ் பத்திரிக்கை வெளியீட்டு நிகழ்வில் பிரத விருந்தினராக மாவை சேனாதிராஜா சிறப்பு விருந்தினராக சி.சிறிதரன் தவிசாளர்களான வேழமாலிதன்,சுரேன் , வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான குருகுலராஜா தவநாதன் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

https://www.ibctamil.com/srilanka/80/121895

தமிழீழ விடுதலை போராட்டத்தை அழிக்க எதையும் பெற யாருடனும் எந்த உறவிற்கு தயார் என்ற கொள்கையில் செயல்பட்டது சிங்களம்.  இன்று அதன் ஒரு விளைவான பொருளாதார தாக்கத்தை அனுபவித்துவருகின்றது. இந்த பொருளாதார உதவி என்ற பெயரில் புகுந்த நாடுகளில் இஸ்லாமிய நாடுகளும் அடங்கும். அந்த திறந்த கொள்கையை பயன்டுத்தி தம்மை வளர்த்தவர்களில் சில முஸ்லீம் தலைவர்க்ளும் அடங்குவார்கள்.  

இலங்கைக்குக் கடன் வழங்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் ஒருங்கிணைக்கப்பட்டமுஸ்லிம் நாடுகள் இருக்கின்றன. 

  • பதுளை -  செங்கலடி நெடுஞ்சாலைக்கு 2,000 கோடி ரூபாய் வழங்கும் நாடு சவூதி
  • கிழக்குப் பல்கலைக்கழக அபிவிருத்திக்கு 200 கோடி ரூபாய் பண உதவி செய்வது குவைத் அரசாங்கம். 
  • ஈரான் இலங்கைக்கு ஆறு மாத கால கடனுக்குக் கோடான கோடி எரிபொருளைக் கொடுக்கிறது.

இலங்கையில் முஸ்லிம்களுக்கான நெருக்கடி தொடர்ந்தால், எரிபொருள் வழங்கலை 23 சதவீதமாகக் குறைக்க வேண்டி ஏற்படும் என்கிறது ஈரான். அவ்வாறு நிகழ்ந்தால் ஒரு லீற்றர் பெற்றோல், இலங்கையில் 450 ரூபாயாகும். நாட்டின் விலைவாசி என்னவாகும்? மக்கள், குறிப்பாக சிங்கள மக்கள் வீதிகளில் இறங்கிவிடுவார்கள்.  

இலங்கையின் பொருளாதார இராணுவ அரசியல் எங்கு செல்லும் என எதிர்வு கூறுவது கடினம், ஆனால், இன்றும் தமிழ்  அரசியல்வாதிகளுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்.... 

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ampanai said:

இலங்கையில் முஸ்லிம்களுக்கான நெருக்கடி தொடர்ந்தால், எரிபொருள் வழங்கலை 23 சதவீதமாகக் குறைக்க வேண்டி ஏற்படும் என்கிறது ஈரான். அவ்வாறு நிகழ்ந்தால் ஒரு லீற்றர் பெற்றோல், இலங்கையில் 450 ரூபாயாகும். நாட்டின் விலைவாசி என்னவாகும்? மக்கள், குறிப்பாக சிங்கள மக்கள் வீதிகளில் இறங்கிவிடுவார்கள்.  

இப்படி நடக்கும் என நம்பமுடியாது! நடந்தால்....!! அமெரிக்கா, ஐரோப்பா, அவைகளின் நேசநாடுகளோடு இந்தியாவும், இவற்றிற்குப் போட்டியாக சீனாவும் வழங்கும் எண்ணையில் சிறீலங்கா மூழ்கிக் குளித்து நீச்சலடிக்கும் காட்சிகளையும் எதிர்பார்க்கலாம். 😆

  • 3 weeks later...
On 6/13/2019 at 6:58 AM, போல் said:

அதற்காக மக்கள் வரிப்பணத்தில் நடைமுறைப்படுத்தப் படுகின்ற சமுர்த்தி கம்பரேலிய போன்ற திட்டங்களை சிலர் காவித் திரிகின்றார்கள் சமஸ்டி கேட்டவர்கள் இபொழுது சமுர்த்தி கேட்டு திரிகின்றார்கள். அதன விட முன்னைய அரசாங்கத்தோடு இணைந்து இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுத்த டக்லஸ் தேவானதா போன்றவர்களை விமர்சித்தவர்கள் இன்று அதனையே செய்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.

இப்பிடி தமிழ் கூத்தமைப்பின்ட தோலை உரித்துக்காட்டினால் அவங்க எப்பிடி அடுத்த தேர்தல்ல மக்களை ஏமாத்தி வெல்லுறது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.