Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பிராமணர் அல்லாதோர் படுத்து புரண்டால் பாவம் தீரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

பெரியாரை ஏக வசனத்தில் திட்டும் போது, 

பிராமணர்கள் தமிழ் குடிகள் ஆனால் பெரியார் தமிழ் விரோதி என்று கூறும் தலைவர்களை தலையில் காவித் திரியும் போது,

ஒருகணம் யோசியுங்கள் உறவுகளே,

பெரியார் மட்டும் இல்லை என்றால், இப்போ நீங்கள் எல்லாம் ஐயர் வீட்டு மலசலகூடத்தில் பிரண்டு உறுண்டு கொண்டிருப்பீர்கள்.

பிகு: இலங்கையில் இன்றும் இவர்களை வைக்க வேண்டிய இடத்தில்தான் வைத்திருக்கிறோம். வெளிநாட்டில்தான் அவர்களை மதிக்கும் ஒரு முட்டாள்தனமான போக்கு உருவாகிறது.

கோசான்... "தமிழ் காட்டு மொழி"  என்று சொல்லிய பெரியாரை எனக்குப் பிடிக்காது.
ஆனால்... தமிழ்நாட்டில், பிராமணீயத்தை கொஞ்சம் அடக்கி வைத்ததில் பெரியாரை  பாராட்டலாம்.

2 hours ago, Sasi_varnam said:

ஏண்டா அம்பி "நாத்து" ... நோக்கே நன்னா இருக்கோ ..
கனடாவை பத்தி புட்டு புட்டு வைக்கிறாய்... அபிஸ்டு... அபிஸ்ட்டு 
அந்த பெருமாள் கோவிக்கப்போனானோ இல்லையோ ...
 நோக்கு கால பலன் சரியில்லை அம்பி...

 

2 hours ago, goshan_che said:

 வர்ணம்வாழ்,

அபச்சாரம், அபச்சாரம் இவாளாண்ட பேசுறதே தீட்டுன்னு பெரியவா சொல்லி இருகாரோன்னோ. 

பகாவான் அவா, அவாக்கு அளந்து வச்சிருக்கான்.  நம்மவா எல்லாம் பிராமணாளா பிறந்தது பகாவன் சித்தம்.

இவாளுக்கு அந்த ப்ரதார்ப்தம் இல்ல. நம்ம இலைல உருளணும்னு அவா தலைல எழுதி இருகோன்னோ.

கோசான்... உங்களுக்கு  வடமாகாணத்தின் சிறு ஊரிலிருந்து, 
வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை நுவரெலியா மட்டும் வடிவாக தெரிகின்றது.

அதற்கு மேலால்.. ஐயர்  ஆத்து பாசையும், நேக்காக ... பேசறேள்.
இது எல்லாம்... எப்படி உங்களுக்கு சாத்தியப்  படுதுன்னு..  
எனக்கு, ஆச்சரியமாய் இருக்கு(டா) அம்பி. :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கோசான்... "தமிழ் காட்டு மொழி"  என்று சொல்லிய பெரியாரை எனக்குப் பிடிக்காது.
ஆனால்... தமிழ்நாட்டில், பிராமணீயத்தை கொஞ்சம் அடக்கி வைத்ததில் பெரியாரை  பாராட்டலாம்.

 

கோசான்... உங்களுக்கு  வடமாகாணத்தின் சிறு ஊரிலிருந்து, 
வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை நுவரெலியா மட்டும் வடிவாக தெரிகின்றது.

அதற்கு மேலால்.. ஐயர்  ஆத்து பாசையும், நேக்காக ... பேசறேள்.
இது எல்லாம்... எப்படி உங்களுக்கு சாத்தியப்  படுதுன்னு..  
எனக்கு, ஆச்சரியமாய் இருக்கு(டா) அம்பி. :grin:

நன்றி அண்ணா,

ஒரு ஊரோடியின் மகனாக பிறந்ததால் சில  ஊர்கள் பரிச்சயம். அவ்வளவுதான்.

பெரியார் தமிழ் சீர்திருத்த படாமல் இருப்பதை குறித்தே அதை காடுமிராண்டி மொழி என்றார். காட்டு மிராண்டி காலத்தில் இருந்ததை போலவே இராமல் மொழியை சீர்திருத்தி செம்மை செய்யுங்கள் எனும் தொனியில் சொன்ன கூற்றை, வேணும் எண்டே, பார்பனரும், மறைமுக பார்பன அடிவருடிகளும் திரித்து, பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றான் என்கிறனர்.

பெரியார் தமிழ்மொழியை காட்டுமிராண்டி மொழி என்றார். தமிழை பெரியாருக்கு பிடிக்காது. தமிழைப் பிடிக்காமல்தான் திராவிடம் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார் என்றெல்லாம் தொடர்ந்து தந்தை பெரியாருக்கு எதிராக பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

தமிழ்நாட்டில் பிறந்து, தமிழிலிலேயே சிந்தித்து, தமிழிலேயே எழுதி, தமிழிலேயே பேசி, சாக்கடைப் புழுக்களாய் ஒடுக்கப்பட்டு கிடந்த தமிழர்களின் மான உணர்ச்சியை தட்டி எழுப்பி மனிதர்களாக மாற்ற பாடுபட்டவர் தந்தை பெரியார்.


 

periyar




பார்ப்பனர்கள் எதையெல்லாம் நீதியென்று சொல்லி, மனிதர்களை ஒடுக்கி ஆண்டார்களோ, அதையெல்லாம் உடைத்து நொறுக்க தமிழையே பயன்படுத்தினார் பெரியார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு கொண்ட தமிழ்மொழி, அதன் தொன்மைக்கு ஏற்றபடி தன்னை எளிமைப்படுத்தியதா என்ற கேள்வியைத்தான் பெரியார் முன்வைத்தார். குறிப்பாக தமிழ்மொழியின் அதிகப்படியான எழுத்துக்களையும், பயனற்ற எழுத்துக்களையும் அவர் விமர்சனம் செய்தார்.

ஒரு மொழி கற்பதற்கு எளிதாக இருக்க வேண்டும். உலகம் முழுவதுமுள்ள மற்ற மொழிகளில் இருந்து புதிய வார்த்தைகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் பெரியார் விரும்பினார். எந்த ஒரு புரட்சிகர சிந்தனையாளரும் இதைத்தான் செய்வார்கள். பழமை விரும்பிகள்தான் மொழியை புனிதம் என்ற சிமிழுக்குள் அடைத்துவைக்க விரும்புவார்கள்.

ஆங்கிலம் இன்றுவரை 26 எழுத்துக்களில் இயங்குகிறது. கணக்கற்ற உலக மொழிகளில் இருந்து புதிய வார்த்தைகளை தனக்குள் வாங்கிக் கொள்கிறது. பெரியாரும் இத்தகைய சீர்திருத்தங்களைத்தான் விரும்பினார்.

அவரளவில், மிகத் துணிச்சலாக தமிழ்மொழியின் எழுத்துக்களை தனது வசதிக்காக மாற்றி அமைத்தார். அன்றைக்கு அவர் மாற்றி அமைத்த எழுத்துச் சீர்திருத்தத்தை அவருடைய பிறந்தநாள் நூற்றாண்டில் அரசாங்கமே ஏற்கும் நிலை உருவானது.

பெரியாரை தமிழ்மொழிக்கு எதிரியாக சித்தரிக்க நினைப்பவர்கள் நிச்சயமாக பைத்தியக்காரர்களாகத்தான் இருக்க வேண்டும். பெரியார் தமிழில் 120 புத்தகங்களை எழுதியிருக்கிறார். அந்த புத்தகங்களில் அவர் வெளிப்படுத்திய புரட்சிகர சிந்தனைகளைப் போல அவருக்கு முன்னும் அவருக்கு பின்னும் யாரேனும் வெளிப்படுத்தி இருக்கிறார்களா?

 

tamil slaves




மனிதகுலத்தின் அத்தனை பிரச்சனைகளையும் அவர் ஆய்வுக்கு உட்படுத்தி தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு பிரச்சனையின் மூலத்தையும் அவர் கண்டறிந்து தனது தீர்வைச் சொல்லியிருக்கிறார்.

விதவை மணம் குறித்து யாரும் யோசிக்கவே முடியாத ஒரு காலகட்டத்தில் அவர் விதவைத் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார். வேத மந்திரங்களின் அர்த்தத்தை அறிந்துகொள்ளக்கூட விரும்பாத காலகட்டத்தில் பார்ப்பனர்கள் பயன்படுத்தும் வேத மந்திரங்களின் அசிங்கமான ஆபாசமான அர்த்தங்களை தமிழர்களுக்கு அம்பலப்படுத்தியவர் தந்தை பெரியார்.

பெண்களை அடிமைகளாக கருதிய காலகட்டத்தில் அவர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தியவர் பெரியார். அவர் அளவுக்கு பெண்களுக்காக சிந்தித்த தலைவர்கள் இந்தியாவில் யாருமே இல்லை என்று கூறலாம். பெண்கள் தங்களுடைய நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக கூந்தலை கிராப் வெட்டிக் கொள்ளலாம் என்பதுமுதல், அளவாக பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுவரை அவர்களுடைய உடல்நலத்தில் அக்கறை செலுத்தினார்.

படிப்பிலும், உத்தியோகத்திலும் ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று துணிச்சலாக சொன்னவர் பெரியார். ஒவ்வொருவரும் தனது தாய், சகோதரி, மகளுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை, மனைவிக்கும் கொடுக்க வேண்டும் என்றார். வரதட்சனைக் கொடுமை குறித்து தீர்க்கமான கருத்துகளை சொல்லி, அதை தீர்க்க, பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுத்தால் போதும் என்றார்.

1938 ஆம் ஆண்டிலேயே மகளிர் மாநாட்டை கூட்டி, தொடக்கப்பள்ளி வகுப்புகள் அனைத்திற்கும் பெண்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார் தந்தை பெரியார்.

அந்தத் தீர்மானத்தை 1989 ஆம் ஆண்டு சட்டமாக்கியவர் கலைஞர். அதே ஆண்டு, பெண்களுக்கும் பெற்றோர் சொத்தில் உரிமை உண்டு என்ற சட்டத்தையும் நிறைவேற்றினார் கலைஞர்.

தமிழும், தமிழர்களும் புரட்சிகர மாற்றங்களுக்கு உட்பட வேண்டும் என்று பெரியார் பாடுபட்டிருக்கிறார். ஆனால், பழைய பஞ்சாங்கங்களாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு அவரை அப்போதும் புரியவில்லை. இப்போதும் புரியவில்லை.

பெரியார் தமிழுக்கு எதிரி என்று கட்டமைக்க விரும்புகிறவர்கள், கோவில்களில் தமிழை அர்ச்சனை மொழியாக்க வேண்டும் என்று போராடியதையும், தமிழர்கள் அனைவரும் சாதி வேறுபாடின்றி ஆலயங்களில் அர்ச்சகர்களாக பணிபுரியும் உரிமை வேண்டும் என்று வலியுறுத்தியதையும் வசதியாக மறைத்துவிடுவார்கள். அங்குதான் பார்ப்பனர்களின் தந்திரம் அடங்கியிருக்கிறது.

பெரியார் தமிழுக்கு விரோதி என்றால் அவர் வேறு எந்த மொழிக்கு ஆதரவாக இருந்தார் என்று சொல்ல வேண்டும் அல்லவா? அதைச் சொல்ல மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க ராஜாஜி மேற்கொண்ட முதல் முயற்சியை 1935களிலேயே எதிர்த்து போராட்டம் நடத்தியவர் தந்தை பெரியார். அதாவது, தமிழுக்கு ஆதரவாகவும் இந்திக்கு எதிராகவும் நடந்த முதல் போராட்டத்தை நடத்தியவர் பெரியார். இன்னும் சொல்லப்போனால், தமிழர்களிடம் தமிழ்மொழிப் பற்றை பற்ற வைத்தவர் தந்தை பெரியார்.

நன்றி: ஆதனூர் சோழன்

https://www.nakkheeran.in/special-articles/special-article/periyar-anti-tamil 

 

  • கருத்துக்கள உறவுகள்

கோசான்... இதனையும், ஒருக்கால் பாருங்களேன்.

17 hours ago, தமிழ் சிறி said:

கோசான்... இதனையும், ஒருக்கால் பாருங்களேன்.

தமிழ் சிறீ , பெரியாரை பற்றி வரலாற்று ரீதியில் ஆதாரத்தோடு கோசான் எழுதிய பதிவுக்கு பதிலாக  நீங்களும் வரலாற்று ஆதாரத்தோடு காணோளி இணைத்துள்ளீர்கள் என்று பார்த்த எனக்கு ஏமாற்றம். யாரோ ஒரு இயக்குனரால் நாடகப்பாணியில்  உருவாக்கபட்ட அவதூறு காணோளி இது. எந்த ஆதாரமும் இல்லை. உண்மையில் பெரியார் என்ற அந்த மனிதரை  பற்றி அறிய வேண்டுமானால் 20 ம் நூற்றாண்டின் இந்திய வரலாற்றை படிக்க வேண்டும். அதன் பின்னர் அவர் மீது எந்த விமர்சங்களையும் ஆதார பூர்வமாக வைக்கலாம். அதை விடுத்து தேர்தல் பிரச்சார மேடைகளில்  அரைகுறைகளால் கூறப்படும் அவதூறுகளை ஆதாரமாக கொள்ள கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

கோசான்... "தமிழ் காட்டு மொழி"  என்று சொல்லிய பெரியாரை எனக்குப் பிடிக்காது.
ஆனால்... தமிழ்நாட்டில், பிராமணீயத்தை கொஞ்சம் அடக்கி வைத்ததில் பெரியாரை  பாராட்டலாம்.

 

தவறு  சிறி

அதை  ஊதி

பெருதாக்கி

இன்றைய  அவர்களது வளர்ச்சிக்கு  வித்திட்டதில்  பெரியாரின்  பங்கு  முக்கியமானது

(யாழில்  சிலர்  எழுதும் பாங்கு  போல)

 

  • கருத்துக்கள உறவுகள்

வருத்தப்படாத வாலிப சங்கத் தலைவர் பெரியார் அவர்கள்..

72 வயதில் ஏன் தனது வளர்ப்பு மகளைத் 
திருமணம் செய்து கொண்டார்.. என்ற கேள்விக்கு திராவிடக் குஞ்சுகள் தந்த 
விளக்கம் கீழே சமர்ப்பணம்..

விளக்கம் ஒன்னு : திராவிட கழகத்துக்கு சொத்து கொடுப்பதற்காக அவர் மணியம்மையை திருமணம் செய்து கொண்டார்..

நானு ; சரி, கழகத்தின் உரிமையாளர் யார்..?

அது பெரியார் தான்.. தன் கழகத்திற்கு தான் சொத்து எழுதி வைக்க எந்த சட்டமும் தடை விதிக்க வில்லையே..?

சரி தடையென்றே வைத்துகொள்வோம்..

கழகத்தை வேறு யாரு பெயரிலாவது மாற்றி சொத்துக்களை குறைந்த தொகைக்கு அவரிடமே விற்று கழகத்திற்கு சேர்த்திருக்கலாமே..?

அவர் வயதிற்கு ஏற்றார் போல் 
வேறு யாரையும் திருமணம் செய்திருக்கலாமே..?

சரி, அவர் காலத்தில் பெண்களுக்கான திருமண வயது 15 ..அப்படி இருக்க 
ஏன் 27 வயதுவரை தான் வளர்த்த மகளை திருமணம் செய்து கொடுக்கவில்லை..முன்னாடியே பிளான் பண்ணிட்டாரா.. தானே கட்டிகொள்வேன் என்று..

மேலும் அவர் தன் கடைசி காலத்தில் அந்தத்திருமணம் செய்யவில்லையே.. 
திருமணத்திற்கு பிறகு வளர்ப்பு மகளோடு இருபது ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்.. அப்படியென்றால்.. 
இது திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் தானே..

சரி அதை விடுங்கள்.. அது அவரது வளர்ப்பு மகளின் விருப்பம்..

இப்போது மோடி உலகை சுற்றுவதை போல அப்போது பெரியார் உலகம் சுற்றி வந்தவர்.. உலகத்தலைவர்கள் கூட பெரியாரை அழைத்ததுண்டு.. 
ஏன் அழைக்கப்பட்டார்.. ? 
அந்த வெள்ளக்கார உலகத்தலைவர்களுக்கும் இவருக்கும் என்னத்தொடர்பு.. ?
இப்படி உலகை சுற்றி வருவதற்கு அவ்வளவு பணம் ஏது..?

சுதந்திர போராட்டத்தின் போது காமராஜர், முத்துராமலிங்கர்,கக்கன்,வாஞ்சிநாதன்,சிதம்பரம்பிள்ளை என்று அனைவருமே
சிறைவாசம் கண்டவர்கள்..

ஐயா காமராஜர்,முத்துராமலிங்கர் சிறையிலிருந்து வெளிவரும் போது

அவர்கள் தன் திருமண வயதை கடந்துவிட்டதால் திருமணமே செய்யவில்லை..

அவர்கள் நினைத்திருந்தால் 20 வயது பெண்ணைக்கூட திருமணம் செய்திருக்கலாம்.. அவர்கள் அப்படி செய்யவில்லை.. அதுதான் தமிழனின் அறம்..

கழகத்திற்கு சொத்து சேர்ந்த பிறகு ஏன் 
மணியம்மைக்கு வேறொருத் திருமணம் 
செய்து வைக்கவில்லை..

தி.கு : அது பெரியாரின் தவறல்ல 
அப்போது இருந்த சட்ட சிக்கலால் தான் அப்படி செய்தார்..

அது என்ன சட்ட சிக்கல் ..?

அது இரத்த உறவு இல்லாதவர்களுக்கு 
சொத்து கொடுக்க முடியாது..

ஓஓஓ அப்போம்.. பெண் புள்ளைய தத்தெடுத்து வளர்க்கிற அப்பனெல்லாம்.. அந்த பிள்ளைக்கு சொத்து கொடுக்க அந்த ப்புள்ளையவே 
கட்டிக்கனும்னு சொல்லவரீங்க.. 
அப்படித்தானே..?

பெரியார் தான் பெரிய பெண்ணிய போராளியாச்சே அவர் ஏன் அந்த 
சட்டத்தை எதிர்த்து போராடல.. ?

வளர்ப்பு மகளை திருமணம் செய்தவர் 
சட்ட சிக்கலுக்காக செய்தாரென்றால் 
அந்த திருமணத்தை பெயரளவில் 
சாதாரணமாக செய்திருக்கலாமே 
ஏன் பிரம்மாண்டமாக செய்தார்..?
அவரது நோக்கமென்ன இந்த சமூகத்தை 
சீரளிப்பது தானே..?

வளர்ப்பு மகள் என்பதற்கு என்ன ஆதாரம்..

அப்பா என்று அழைத்த பெண்ணை,
மகளென அறிமுகப்படுத்திய மகளை 
இப்படி திருமணம் செய்தது தகுமா 
என்று திராவிட நாடு பத்திரிக்கையில் 
கேள்விக் கேட்டாரே அறிஞர் அண்ணா 
அவரிடம் போய் கேள் ஆதாரம்..


பெரியாரிடமிருந்து நல்லதை மட்டும் 
எடுத்துக்கொள்ளுங்கள் 
மற்றதை விட்டுவிடுங்கள்..
ஓஓஓ.. அதாவது நீங்க பாலையும்,விசத்தையும் சேர்த்து வைச்சிருப்பீங்க.. 
நாங்க பாலை மட்டும் எடுத்துக்கனும் 
அப்படிதானே சார்..

அப்படியே அவர் தமிழ் நாட்டின் எந்த கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்றார் என்பதை சொல்லிவிட்டு போகவும்..

பார்ப்பனர்களை எதிர்த்த பெரியார்.. 
எதுக்கு இராஜிக்கு 
தேர்தல் பிரச்சாரம் செய்தார் 
என்பதையும் சொல்லிவிட்டு போகவும்..

தமிழ்நாடுத் தமிழருக்கே என்று சொன்ன பெரியார் எதுக்காக தெலுங்கு கருணாவுக்கு தேர்தல்பிரச்சாரம் செய்தார் என்பதையும் 
சொல்லிவிட்டு போகவும்..

ஏதோ பெரியாரின் தத்துவங்கள்னு சொல்வீங்களே 
அப்படி வள்ளுவன் சொல்லாத எதை இவர் சொல்லிவிட்டார்..

சுதந்திரப்போராட்டத்தில் தமிழ்நாட்டின் அநேக முன்னணித்தலைவர்கள் சிறைவாசம் கண்டபோது.. சொறியார் 
எங்கே போயிருந்தார்..?

-முத்துக்குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

விசர்க் கூட்டம். கோவம் தான் வருது இதுகளைப்பார்க்க.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி, விசுகு,

1.பெரியார் மணியம்மையை திருமணம் செய்தார் என்பது உண்மையே, அதை பெரியார் செய்திருக்க வேண்டாம் என்பதே என் எண்ணமும். ஆனால் அது ஒரு தனி மனிதனின் பிழை. அதற்க்காக அவர் அரசியலை குறை சொல்ல முடியாது. 

தவிர மணியம்மை அவரின் வளர்ப்பு மகள் அல்ல. அவருடன் பலகாலம் இளவயது முதல் கூடவே இருந்த, மகள் அல்ல பேத்தி வயதுப் பெண். அண்ணா தனது அரசியலுக்காக எழுதியதால் மணியம்மை வளர்பு மகள் என்றாகாது.

இது எமக்கு முகசுளிப்பானதே. ஆனால் இதை வைத்து அவரின் அரசியலை எடை போடலாமா?

அப்போ பெரியார் மணியம்மையை திருமணம் ஏன் செய்தார்? ஏதோ தவறு நடந்து இருக்கலாம், தன் பொறுப்பை உணர்ந்து திருமணம் செய்திருக்கலாம் என்பது என் ஊகம். அந்த நேர்மையும், நெஞ்சுரமும் அவரிடம் இருந்தது. பெரியார் விரும்பி இருந்தால் அவரை “வைத்து” இருந்திருக்கலாம் அல்லவா? நம் யாருக்கும் இந்த விடயம் தெரியாமலே போய் இருக்கும் அல்லவா? சாதி வெறியன் முத்துராமலிங்கன் ஊருக்கு ஒருத்தியை வைத்திருந்தது போல? ஆனால் அதை அவர் செய்யவில்லை. அதுதான் பெரியாரின் மாண்பு.

தன் மீது பெரும் பழி விழும் என்று தெரிந்தும் பெரியார் இதை செய்தார் - இந்த சமூகத்தை சீரழிக்க இப்படியா ஒருவர் தன் தலை மீதே மண்ணை அள்ளி கொட்டுவார்?

2.பெரியார் வாக்கு அரசியல் செய்யவில்லை. மணல் மாபியாக்களுடன் ஊழல் செய்து கிடைத்த பணத்தை செலவு செய்யவில்லை. தன் சொந்த சொத்தையும், ஊர் ஊராக அவர் சென்று ஏழை பாழைகளிடம் உண்டியல் குலுக்கி சேர்த்த சொத்தையுமே அரசியலுக்கு பயன்படுத்தினார். 

ஒவ்வொரு பைசாவையும் யோசித்து செலவழித்தார். ஒரு முறை received with thanks என்று அண்ணா ரெலிகிராம் எழுத, அதை வெட்டி received என்று மட்டும் எழுது, 2 சொல்லுகுரிய பணம் மிச்சம் என்றாராம். அந்தளவுக்கு அமைப்பின் பணத்தை கட்டிக்காத்தவர். 

அந்த அமைப்பின் பணத்தில், ஒரு யாசகனை போல் வெளிநாடுகளில் தெரிந்தவர்கள் வீடுகளில் தங்கியே பெரியார் தலைவர்களை சந்தித்தார். அவரின் மாண்பு பெரிய தலைவர்களை அவரை சந்திக்க வைத்தது. 

3. ராஜாஜி ஆதரவு - இதை பெரியார் செய்யும் சூழல் மற்றும் பெரியாரின் குணம் இரெண்டையும் நீங்கள் விளங்கி கொள்ள வேண்டும். இதை உங்களுக்கு ஒரு சிறு உதாரணம் மூலம் விளங்கப் படுத்தலாம். 1989 இல் பிரபாகரன்-பிரேமதாசாவுடன் இணைந்து இந்தியாவை வெளியேற்றினாரே? அப்படி ஒரு நகர்வுதான் இது. அதற்காக பிரபா சிங்கள-பெளத்த சித்தாந்ததை ஏற்று கொண்டார் என்பது எப்படி சிறுபிள்ளைத்தனமானதோ அப்படித்தான் பெரியார், ராஜாஜியை ஆதரித்ததால், அவர் ஒரு பிராமண அபிமானி என்பதும்.

4. கருநாநியை தெலுங்கர் என்பது - 600 வருடங்களுக்கு முன் அவர் மூதாதைகள் ஆந்திராவில் இருந்து வந்தார்கள் என்ற அடிப்படையில். இந்த காரணதுக்காக கருணாநிதியை தமிழன் இல்லை என்று சொல்ல பெரியார் ஒன்றும் இனத்துவேசி இல்லை.

5. சுதந்திர நாளை கரி நாளாக அறிவித்து கொண்டாடியும் காட்டியவர் பெரியார். சுதந்திர இந்தியா என்ற போர்வையில் வெள்ளைகாரர் கையில் இருந்த அதிகாரம் பிராமண கொள்ளைகாரர் கைக்கு போவதில் பெரியாருக்கு உடன்பாடில்லை எனவேதான் அவர் சுதந்திரத்துக்கு போராடவில்லை. இந்த மாதிரியான சுதந்திரம் வேண்டாம் என்று எதிர்த்தார்.

 

https://www.vikatan.com/news/others/8504.html 

பெரியார் தமிழர் பகைவரா?



Last Updated Date: 7 JUNE 2012 3:37PM

 

 

- ஜூனியர் விகடனில் இருந்து..

மிழர்களுக்காகப் போராடுவதாகச் சொல்பவர்கள் சமீப காலமாக, பெரியாரைப் புறக்கணிப்பதும் எதிரியாகச் சித்திரிப்பதும் தொடர் கிறது. இந்தப்பட்டியலில் புதுவரவு, சீமான் நடத்தும் 'நாம்தமிழர் கட்சி’. கோவையில் கடந்த 18-ம் தேதி அந்தக் கட்சி வெளியிட்ட கொள்கை ஆவணத்தின் சில பகுதிகள் பெரியாருக்கு எதிரானவை. 'பெரியார் படத்தை இனி நாம் பயன்படுத்தக் கூடாது’ என்ற அளவுக்கு தீவிரம். இதற்கு, பெரியாருடன் நெருங்கிப் பழகியவரும் மார்க்ஸியப் பெரியாரிய பொதுஉடமைக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளருமான பெரியவர் வே.ஆனைமுத்துவின் பதில் என்ன? 

''நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணத்தில் '1938-ல் சென்னை மாகாண முதல்வரான ராஜாஜி, பாடத் திட்டத்தில் இந்தியைப் புகுத்தினார். அதை எதிர்த்து நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள் ஆகியோரின் தலைமையில் தமிழ்நாடு தமிழருக்கே என்று தமிழர்கள் திரண்டனர். அந்நேரத்தில் அவர்களை ஆதரிப்பதுபோல வந்த பெரியார், தமிழர்களை அடிமைப்படுத்தும் திட்டத்தின்கீழ் திராவிட நாடு முழக் கத்தை முன்னெடுத்தார்..’ என்று கூறப்பட்டுள்ளது. அதுகுறித்த உங்களது விளக்கம் என்ன..?''

p43.jpg

 

''வரலாற்றை ஒழுங்காகப் படிக்காதவர் கூற்று இது! இந்தியாவில் அன்று இருந்த ஒன்பது மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சி நடந்தன. அதில் வங்காளம், பஞ்சாப், குஜராத், சென்னை போன்ற பெரும்பான்மையான மாகாணங்களில் இந்தி பேசுபவர்கள் இல்லை. அந்த மாகாணங்களில் ஆட்சி செய்பவர்கள் யாரும் இந்தியைப் புகுத்த நினைக்காதபோது ராஜாஜி மட்டும் சென்னை மாகாணத்தில் இந்தியைப் பாடத் திட்டத்தில் புகுத்தினார். தமிழ் அறிஞர்கள் அதை எதிர்த்தனர். அன்று இந்தியை எதிர்த்தவர்களைக் கருத்து ரீதியாக எதிர்த்தவர்கள், களப்பணி ஆற்றியவர்கள் என இரண்டாகப் பார்க்க வேண்டும். ஈழத்து சிவானந்த அடிகள்தான் ராஜாஜியின் அறிவிப்பை எதிர்த்து முதலில் அறிக்கை வெளியிட்டவர். திருச்சி தி.பொ. வேதாசலம், கி.ஆ.பெ. விசுவநாதம், சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள் என்று பலரும் இந்தியை எதிர்த்து எழுதினர். அவர்களைக்கொண்டு அப்போது திருச்சியில் நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர் பெரியார். அதாவது களப்பணி ஆற்றியவர் பெரியார்.

அதைத்தொடர்ந்து, இந்தி எதிர்ப்புப் போராட்டம் பெரியார் தலைமையில் தமிழ்நாட்டில் 20 மாதங்கள் நடந்தன. தினமும் இரண்டு பேர் சிறைக்குச் செல்வார்கள். அப்படியாக, 20 மாதங்களில் 1,230 பேர் சிறைக்குச் சென்றனர். பெரியாருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி, பெல்லாரி சிறைச்சாலையில் அடைத்தனர். அண்ணா உள்ளிட்ட பல தலைவர்கள் சிறை சென்றனர். சிறைக்கொடுமையில் இரண்டு தோழர்கள் இறந்துபோனார்கள். மக்கள் மனதில் அது பெரும்கொந்தளிப்பாக இருந்தது. இந்த நேரத்தில் ராஜாஜி, 'சோற்றுக்கு இல்லாதவர்களும் படிப்பறிவு இல்லாதவர்களும்தான் இந்தியை எதிர்த்துச் சிறைக்குப் போகிறார்கள்’ என்றார். அது, கொந்தளிப்பை மேலும் அதிகமாக்கியது. ஆறு மாதங்களில் சிறையில் இருந்து பெரியார் விடுதலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து திருச்சி முதல் சென்னை வரை  இந்தி எதிர்ப்புப் பேரணி நடத்தப்பட்டது. சென்னையில் பேரணியை நிறைவுசெய்து பேசிய பெரியார், 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கினார்.

அந்தச் சூழலில் நடந்த நீதிக்கட்சிக் கமிட்டிக் கூட்டத்தில் ஆந்திர, கன்னட, ஒரிஸா மற்றும் கேரளத் தலைவர்கள், தமிழ்நாடு தமிழருக்கே என்றால் நாங்கள் எல்லாம் யார் என்று பெரியாரிடம் கேட்டனர். அதன்பிறகே 'திராவிட நாடு திராவிடருக்கே’ என்று அறிக்கை வெளியிட்டார். 1940-ல் திருவாரூரில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் தமிழில் ஒரு மணி நேரம் பேசிய பெரியார், தெலுங்கில் அரை மணி நேரம் பேச வேண்டியிருந்தது. அந்த மாநாட்டில் தெலுங்கர்கள் அந்த அளவுக்கு இடம் பெற்றிருந்ததே அதற்குக் காரணம். ஆக, அன்றைய சென்னை மாகாணம் தென்னிந்தியாவை உள்ளடக்கியதாக இருந்ததால், திராவிட நாட்டுக் கொள்கை இயல்பாக எழுந்த ஒன்றே. 40-களில் வெளிவந்த ஜி.டி. நாயுடுவின் 'இந்தி போர்முரசு’, ம.இளஞ்செழியனின் 'தமிழன் தொடுத்த போர்’ என்ற நூல்கள், பெரியாரின் இந்தி எதிர்ப்புப் போரை விரிவாக விளக்கும். எனவே, பெரியார்தான் 1938 போராட்டத்தில் களப்பணி ஆற்றியவர்!''

''தமிழை அறிவியல் அற்ற மொழி. அதை தமிழர் வாழ்வியலில் இருந்து தலை முழுகிவிடுவதே அறிவுடமை.. எனப் பெரியார் கூறியதையும் அந்தக் கொள்கை ஆவணத்தில் கண்டித்திருக்கிறார்கள். பெரியார் ஏன் அவ்வாறு கூறினார்?''

''தமிழில் அறிவியல் கலைச்சொற்கள் குறைவாக இருப்பதைத்தான் அவர் சொன்னார். 'சென்றுடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று பாரதி பாடினார். ஆனால், தமிழர்கள் அதைச் செய்யவில்லை. அது தமிழர்களின் குறைபாடே அன்றி, தமிழின் குறைபாடு அல்ல. மருத்துவ, பொறியியல், இயற்பியல், வேதியியல் நூல்கள் தமிழில் இன்னமும் வெளியாவது இல்லையே.. அறிவியல் அற்ற மொழி என்று, தமிழை அவர் சொன்னது அந்தப் பொருளில்தான்.

பன்னிருப் பாட்டியல் என்ற யாப்பெருங்கலக்காரிகை நூல் தமிழில் உண்டு. அதில், தமிழில் உள்ள 247 எழுத்துக்களில் எது பிராமண எழுத்து, எது சூத்திர எழுத்து, எது சத்திரிய எழுத்து என்றெல்லாம் உள்ளது. ஆங்கிலத்தில் அவன் என்பதற்கு லீமீ என்று ஒரு வார்த்தை உள்ளது. ஏழை, பணக்காரன்,பெரியவர், சிறியவர், கடவுள் எல்லாவற்றுக்கும் அதுதான். ஆனால் தமிழில் அவன், அவர், அவர்கள் என்று எழுது கிறோம், சொல்கிறோம். ஆக, எழுத்தில் வர்ணபேதம் உள்ளதை, புராணக் கட்டுக்கதைகள் மிகுந்திருப்பதைக் கண்டிப்பதற்காக தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று ஒரு கட்டத்தில் சொன்னார். தமிழ் மொழியின் பெருமையையும் பல சமயங்களில் பேசியிருக்கிறார். தமிழ் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்று பேசினார். நெடிய வாழ்க்கை வாழ்ந்து வெவ்வேறு போராட்டங்களைக் கண்டவர் பெரியார். வெவ்வேறு பிரச்னைகளின்போது அவர் கூறியதில் சில வார்த்தைகளை மட்டும் தனியாகப் பார்த்தால், பெரிய முரண்பாடு இருப்பதுபோலத் தெரியும். நாம் அவர் சொன்ன சூழலையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது அவசியம்.''

''ஈழத் தந்தை செல்வா, பெரியாரிடம் ஆதரவு கேட்டபோது, நானே அடிமை, இன்னொரு அடிமைக்கு உதவுவது எப்படி? எனவும் சிங்களர் களுக்குப் பணிந்து செல்லுமாறு கூறியதாகவும் நாம் தமிழர் அமைப்பு கண்டித்திருக்கிறதே..''

''22.2.72 அன்று செல்வா சென்னைக்கு வந்து பெரியாரைச் சந்தித்துப் பேசினார். 'ஒரு அடிமை இன்னொரு அடிமைக்காகப் போராட முடியாது. நீங்கள் அங்கு சென்று போராடுங்கள்’ என்றுதான் பெரியார் சொன்னார்... பணிந்து போய்விடுங்கள் என்று சொல்லவில்லை!''

    - தமிழ்மகன், படம்: ஜெ.வேங்கடராஜ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.