Jump to content

‘ஐ.என்.எஸ் விராட்’ கப்பலை உடைப்பதற்கு எதிர்ப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.jpg

‘ஐ.என்.எஸ் விராட்’ கப்பலை உடைப்பதற்கு எதிர்ப்பு!

இந்திய கடற்படையின் ‘ஐ.என்.எஸ் விராட்’ என்ற கப்பலை உடைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஹெச்.எம்.எஸ் ஹெர்ம்ஸ் என்ற கப்பல், கடந்த 1959ஆம் ஆண்டு பிரித்தானிய ரோயல் நேவியில் பணியில் சேர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1982ஆம் ஆண்டு பாக்லாந்து தீவுகளுக்காக ஆர்ஜெண்டினாவுடன் பிரித்தானியா போரிட்டபோது, இந்த கப்பல் முக்கிய பங்காற்றியது.

பிரித்தானிய இளவரசர் சார்லஸ் இந்த கப்பலில் ஹெலிகாப்டர் விமானியாக பணியற்றியுள்ளார். பிரித்தானியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலாக இருந்த இந்தக் கப்பல், கடந்த 1985ஆம் ஆண்டு கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றது. அதன் பின்னர், 1987ஆம் ஆண்டு பழுதுகள் நீக்கப்பட்டு இந்தியாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஐ.என்.எஸ் விராட் என்று பெயரிடப்பட்டு இந்திய கடற்படையில் இந்தக் கப்பல் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் இந்த கப்பலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அருங்காட்சியகமாக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது.

கடந்த திங்கட்கிழமை இந்திய பிரதமர் மோடி, விராட் கப்பலை உடைக்க முடிவு செய்திருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்காக கடற்படையுடன் விவாதித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், விராட் கப்பலை உடைக்கக் கூடாது என்றும், அதனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், பிரித்தானியாவைச் சேர்ந்த ஆன்டி ட்ரீஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இவர் இந்த கப்பலில் ஏர்மேனாக பணி புரிந்து வந்துள்ளார்.

விராட் கப்பலை உடைப்பதற்கு பதிலாக தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதற்காக 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை தரத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/ஐ-என்-எஸ்-விராட்-கப்பலை-உட/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.