Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் வானூர்திகளை இலங்கை விமானப் படை விமானங்களால் வழி மறித்து தாக்கமுடியாது: முன்னாள் தளபதி குணதிலக்க.

Featured Replies

புலிகளின் வானூர்திகளை இலங்கை விமானப் படை விமானங்களால் வழி மறித்து தாக்கமுடியாது: முன்னாள் தளபதி ஹரி குணதிலக்க.

சிறிலங்கா வான்படையிடம் உள்ள கிபீர் மற்றும் மிக் ரக வானூர்திகளினால் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளை இடைமறித்து தாக்கமுடியாது என்று சிறிலங்கா வான்படையின் முன்னாள் தளபதி ஹரி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

"ஹிந்துஸ்தான் ரைம்ஸ்" ஏட்டுக்கு அவர் தெரிவித்துள்ள கருத்து விவரம்:

மரங்களை அழிக்க அவற்றின் கீழ்ப்புறத்தை வெட்டுவது போல புலிகளின் வானூர்திகளை தரையில் வைத்து அழிக்க வேண்டும்.

கிபீர்களாலும் மிக்குகளாலும் விடுதலைப் புலிகளின் வானூர்திகளை இடைமறித்து தாக்கமுடியாது. அந்த வசதிகள் அவற்றுக்கு கிடையாது. ஆனால் அவற்றால் குண்டுகளைப் போடமுடியும். விடுதலைப் புலிகளின் வானூர்திகளின் தரிப்பிடங்களை அறிந்தால் அவற்றின் மீது கிபிர் மற்றும் மிக் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தலாம். இதுவே இருக்கின்ற ஒரேவழி. ஆனால் அது கூட இலகுவான விடயம் அல்ல.

அவர்கள் வலுவான காப்பு செய்யப்பட்ட நிலக்கீழ் தரிப்பிடங்களில்தான் வானூர்திகளை நிறுத்துகின்றனர்.

சிறிலங்கா வான்படையிடம் தொலைவில் உள்ளவற்றை துல்லியமாக வேவு பார்க்கும் வானூர்திகள் இருக்கின்றன.

வேவு வானூர்திகளால் 8 ஆயிரம் அடி உயரத்திலிருந்தே ஒரு ஊர்தியின் இலக்கத்தகட்டின் இலக்கத்தை பார்க்கமுடியும். விடுதலைப் புலிகளின் வானூர்திகள் வரும்போது வானூர்தி எதிர்ப்பு பீரங்கிகள் கட்டுநாயக்க முதல் இரத்மலானை வரையான 50 கிலோமீற்றர் வரையான பகுதிகளில் இருந்து தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துகின்றன.

ஆனால் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் தாங்கள் தெரிவு செய்த சிறிய பரப்புளவுகொண்ட இலக்குகளை தாக்கிவிட்டு போகின்றன

நிலத்துக்கு கீழ் வானூர்திகள் நிறுத்தப்படுவதால் பதுங்கு குழிகளை துளைத்துத் தாக்கும் குண்டுகளைப் போடவேண்டும்.

ஆனால் அதிலும் சரியான இலக்குக்கு வீசப்படுவது என்பது உறுதியானதல்ல என்றார் ஹரி குணதிலக்க.

கொழும்பின் பிரபல படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் கூறுகையில், சிறிய வானூர்திகளை பாதுகாப்பது இலகு. அவற்றை வெறும் கிரவல் தரைகளில் 400 முதல் 500 மீற்றர்கள் வரையான ஓடுபாதைகளை ஏறவும் இறங்கவும் பயன்படுத்தமுடியும் என்றார்.

கொழும்பின் மற்றொரு ஆய்வாளர் தெரிவிக்கையில், புலிகளின் வானூர்திகள் தொடர்பான பிரதான பிரச்சினை இந்த வானூர்திகள் தொடர்பான எந்த ஒரு புலனாய்வுத்தகவலும் படைத்தரப்புக்கு கிட்டவிலை என்பதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் விமான ஓடுபாதையான இரணமடு மீது சிறிலங்கா வான்படை தொடர் தாக்குதலை நடத்தி வருகின்ற போதும் எதனையும் அவர்களால் செய்ய முடியவில்லை என்று கொழும்பின் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் "ஹிந்துஸ்தான் ரைம்ஸ்" தனது செய்திக்கட்டுரையில் தெரிவித்துள்ளது

-Puthinam-

Edited by யாழ்வினோ

மிகவும் பலகீனமானவர்கள் இலங்கை ராணுவத்தினர்

மிகவும் பலகீனமானவர்கள் இலங்கை ராணுவத்தினர்

ஆமாம் அவர்களிற்க்கு பயிற்ச்சி வழங்குவது உங்கள் இராணுவம்தானே அதே போலதானே இவர்களும் இருப்பார்கள் :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்தச் சவால்களையும் முறியடிப்பார்கள் எங்கள் படைகள். ஏனெனில் எங்கள் தலைவன் 'செயலால் வளர்ந்த பின்பே பேசத்தொடங்க வேண்டும் என்கின்ற கொள்கை உடையவர்"!! நாம் உரிமைக்காகப் போராடுகின்றோம்! எந்த சக்தியாலும் எங்கள் மன உறுதிகளை அழிக்கமுடியாது!.

ஆமாம் அவர்களிற்க்கு பயிற்ச்சி வழங்குவது உங்கள் இராணுவம்தானே அதே போலதானே இவர்களும் இருப்பார்கள் :rolleyes:

வானவில், என்ன இருந்தாலும் இப்பிடி சபையில உண்மைகளைப் போட்டுடைக்கக்கூடாது. :P :lol::D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் வானூர்திகளை இலங்கை விமானப் படை விமானங்களால் வழி மறித்து தாக்கமுடியாது: முன்னாள் தளபதி குணதிலக்க.

மறிச்சடிக்குறதுக்கு இதென்னப்பா கிளித்தட்டு விளையாட்டே???? B)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் பலகீனமானவர்கள் இலங்கை ராணுவத்தினர்

அடி செருப்பாலை உந்தவிசயம் இவ்வளவு காலமும் ஒரு சனத்துக்கும் தெரியாமல் போச்சப்பா :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் பலகீனமானவர்கள் இலங்கை ராணுவத்தினர்

சந்தோசம்.. போயிட்டு வாங்கோ..

இவ்வளவு காலமும் பொறுமை காத்து களைத்தாயிற்று. களத்திலும் சரி வெளியில் இருக்கும் அரசியல்வாதியாயினும் சரி அல்லது எத்தனை லட்சம் பேர் ஊடகங்களில் எழுதி கிழிக்கினம், ஏன் எனக்குகூடத்தான்....... இலங்கையில் தமிழரின் பிரச்சனையை தீர்க்கும் வரையும் எவர் ஆட்சிக்கு வந்தாலும் நிம்மதி கிடைக்காது. கெட்டித்தனமிருந்தால் சுருட்டலாம். சிலவேளை இடையில் போக வேண்டிவந்தால் ஒத்தை ரூபா கூட வராது. ஆகவே தயவு செய்து எங்களின் பிரச்சனையை தீருங்கள். எங்களுக்கும் இந்த இயந்திர வாழ்க்கை வெறுத்தே போய்விட்டது. நாங்கள் எமது சொர்க்கபுரியில் கிணற்றிலே அள்ளி குளித்து வெந்தயக் குழம்புடனாயினும் ஒருவேளை சாப்பிட்டு வெறுமையான நிலத்தில் படுத்துறங்க வேண்டும். சிங்கள அரசியல்வாதிகளே! ஏகாதிபத்தியவாதிகளே! அவர்களின் அடிவருடிகளே! தமிழனாய் பிறந்து சிங்களவனுக்கு $$$ கொடுக்கும் சாண்பிள்ளைகளே! ஒரு நிமிடம் எம்மண்ணுக்காக சிந்தியுங்கள். இதை ஏனெழுதியிருக்கிறேன் தெரியுமா? புதியபார்வையாளர்கள் வருகை அதிகமாகியுள்ளது. அத்துடன் எதிரி துரோகி இப்படியானவர்கள் கூட வந்த ுபோயிருக்கிறார்கள். முடிந்தளவுக்கு உபதேசம் செய்யலாம், யாரும் பண்ணாடையாக இருப்பதை வெறுக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த "சொரி பொணத்திலக்கே" சொல்ல வர்றது இதுதேன்...

இலங்கைப்படை வானூர்திகளை வான்புலிகளால் வழிமறித்து

மூஞ்சி தெரிக்க போடு போடுன்னு போட முடியும்...

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் வானூர்திகளை இடைமறித்து தாக்க முடியாது தரையில் வைத்து அழிப்பதுதான் படையினருக்குள்ள ஒரே வழி

[02 - May - 2007]

* முன்னாள் விமானப்படை தளபதி கூறுகிறார்

விமானப்படையின் கிபிர் மற்றும் மிக் விமானங்களினால் விடுதலைப் புலிகளின் வானூர்திகளை இடைமறித்துத் தாக்க முடியாது என்றும் அவற்றை தரையில் வைத்து அழிப்பதே ஒரே வழியென்றும் விமானப்படையின் முன்னாள் தளபதி எயார் மார்ஷல் ஹரி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் `ஹிந்துஸ்தான் ரைம்ஸ்' பத்திரிகைக்கே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்;

மரங்களை அழிக்க அவற்றின் கீழ்ப்புறத்தை வெட்டுவதுபோல புலிகளின் வானூர்திகளைத் தரையில் வைத்து அழிக்க வேண்டும்.

கிபிர்களாலும் மிக்குகளாலும் விடுதலைப் புலிகளின் வானூர்திகளை இடைமறித்துத் தாக்க முடியாது. அந்த வசதிகள் அவற்றுக்கு கிடையாது. ஆனால் அவற்றால் குண்டுகளைப் போட முடியும்.

விடுதலைப் புலிகளின் வானூர்திகளின் தரிப்பிடங்களை அறிந்தால் அவற்றின்மீது கிபிர் மற்றும் மிக் விமானங்கள் குண்டுத் தாக்குதலை நடத்தலாம். இதுவே இருக்கின்ற ஒரே வழி. ஆனால் அது கூட இலகுவான விடயமல்ல.

அவர்கள் வலுவான காப்புச் செய்யப்பட்ட நிலக்கீழ்த் தரிப்பிடங்களில்தான் தங்களது வானூர்திகளை நிறுத்துகின்றனர். விமானப்படையிடம் தொலைவில் உள்ளவற்றை துல்லியமாக வேவு பார்க்கும் வானூர்திகள் இருக்கின்றன.

வேவு விமானங்களால் 8 ஆயிரம் அடி உயரத்திலிருந்தே ஒரு ஊர்தியின் இலக்கத் தகட்டின் இலக்கத்தைப் பார்க்க முடியும்.

விடுதலைப் புலிகளின் வானூர்திகள் வரும்போது விமான எதிர்ப்புப் பீரங்கிகள் கட்டுநாயக்க முதல் இரத்மலானை வரையான 50 கிலோமீற்றர் வரையான பகுதிகளிலிருந்து தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துகின்றன.

ஆனால், விடுதலைப் புலிகளின் வானூர்திகள் தாங்கள் தெரிவுசெய்த சிறிய பரப்பளவு கொண்ட இலக்குகளைத் தாக்கிவிட்டுப் போகின்றன.

நிலத்துக்குக் கீழ் வானூர்திகள் நிறுத்தப்படுவதால் பதுங்குகுழிகளைத் துளைத்துத் தாக்கும் குண்டுகளைப் போட வேண்டும். ஆனால் அதிலும் சரியான இலக்குக்கு வீசப்படுவது என்பது உறுதியானதல்ல என்றார் ஹரி குணதிலக்க.

இதேநேரம் இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் கூறுகையில்;

சிறிய வானூர்திகளைப் பாதுகாப்பது இலகு. அவற்றை வெறும் கிரவல் தரைகளில் 400 முதல் 500 மீற்றர் வரையிலான ஓடுபாதைகளில் ஏறவும் இறங்கவும் பயன்படுத்த முடியும் என்றார்.

கொழும்பின் மற்றொரு ஆய்வாளர் தெரிவிக்கையில்;

புலிகளின் வானூர்திகள் தொடர்பான பிரதான பிரச்சினை இந்த வானூர்திகள் தொடர்பான எந்தவொரு புலனாய்வுத் தகவலும் படைத்தரப்புக்குக் கிட்டவில்லை என்பதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் விமான ஓடுபாதையான இரணைமடு மீது விமானப் படையினர் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்ற போதும் எதனையும் அவர்களால் செய்ய முடியவில்லையென்று அரசியல் நோக்கர்கள் தெரிவிப்பதாக `ஹிந்துஸ்தான் ரைம்ஸ்' தனது செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளது.

நன்றி - தினக்குரல்

புலிகளின் வானூர்திகளை இடைமறித்து தாக்க முடியாது தரையில் வைத்து அழிப்பதுதான் படையினருக்குள்ள ஒரே வழி

அதுசரி வானில் அழிக்க முடியாது தான் உண்மையை தளபதி ஒத்துக்கொள்கிறார். தரையில் வைத்து அழிப்பதா? யார் அதைச் செய்வார்கள் ? சிங்கள விமானப்படையா? :P :P :P :P நடக்கிற கதையா ஏதும் சொல்லுங்கோ தளபதியாரே

மோட்டு சிங்களவன் எட்டுறது சும்மாவா

www.tamil.2.ag

ஆமாம் அவர்களிற்க்கு பயிற்ச்சி வழங்குவது உங்கள் இராணுவம்தானே அதே போலதானே இவர்களும் இருப்பார்கள் :)

இலங்கையில் வான்புலிகள் இயகத்தினர் நடத்திய தாக்குதலை இந்திய அரசு இதுவரை கண்டித்து அறிக்கை விடவில்லை என்றும் அமெறிக்காவும் கண்டித்து அறிக்கை விடவில்லையென்றும் பத்திரிக்கையில் படித்து இருக்கிறோம்.

வானவில், என்ன இருந்தாலும் இப்பிடி சபையில உண்மைகளைப் போட்டுடைக்கக்கூடாது. :P :):rolleyes::)

ன்னிக்கவும் சபையில உண்மையச் சொன்னதுகு :(

இலங்கையில் வான்புலிகள் இயகத்தினர் நடத்திய தாக்குதலை இந்திய அரசு இதுவரை கண்டித்து அறிக்கை விடவில்லை என்றும் அமெறிக்காவும் கண்டித்து அறிக்கை விடவில்லையென்றும் பத்திரிக்கையில் படித்து இருக்கிறோம்.

பாவம் அறிக்கை விட பேப்பர் இல்லையாக்கும் :P

  • தொடங்கியவர்

வான் நோக்கி முன்னெச்சரிகை வேட்டுகள் தீர்க்கப்படும் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை: அரச ஊடகங்கள்.

வான்புலிகளின் தாக்குதல்களை முறியடிக்க விமான எதிர்ப்பு சாதனங்கள் முன்னெச்சரிக்கையாக இயங்கும் இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சிறீலங்கா அவித்துள்ளது. இன்று இந்த அறிவித்தலை சிறீலங்கா அரச வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதேநேரம் கொழும்பில் இன்று மாலை 5.30 மணியளவில் வான் புலிகளின் விமானங்கள் வந்துவிட்டது என வதந்தி பரவி கொழும்பு நகரில் பரபரப்பா செய்திகள் உலவியுள்ளன.

-Pathivu-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.