Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தேர்தல்களும் சம்பந்தரும் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தேர்தல்களும் சம்பந்தரும்

- வ.ஐ.ச.ஜெயபாலன்

இலங்கையில் யார் அடுத்த ஜனாதிபதி என்கிற விவாதங்கள் சூடுபிடித்திருக்கிறது. இந்த சமயத்தில் சம்பந்தர் டெல்கி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சம்பந்தரை எதிர்க்கிற பலர் தெரிந்தோ தெரியாமலோ தமிழர்களின் வாக்குகளை மகிந்தவுக்கு எதிராக போய்விடாமல் தடுக்கிற பணியையே செய்கின்றனர். அவர்களுள் ஒருவரான முன்னைநாள் வடக்கு முதல் அமைச்சர் விக்னேஸ்வரன் சுதந்திரக் கட்ச்சி தன்னை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு கேட்டுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார். எதிரிகளதும் அதிதீவிர வாதிகளும் சம்பந்தரை விழுத்துவது என்கிற ஒரே நோக்கத்தோடு வேலை செய்கிறார்கள். இந்த தருணத்தில் சம்பந்தரின் டெல்கிப் பயணம் பிரபல விவாதப் பொருளாகியுள்ளது. இன்று இலங்கை தமிழருக்கு அணுக்கக்கூடியதாக இந்தியாவும் அமரிக்க-மேற்க்கு நாடுகள் அணியும் மட்டுமே  உள்ளது. ஏனைய உலக சக்திகள் எதிர் நிலையில் உள்ளன. இதுதான் நிலவும் சர்வதேச அரசியல் சூழல். முதல் எதிரியை தவிர்த்து வேறு நிரந்தரமான எதிரிகள் இல்லை. நிரந்தரமானது தமிழரின் நலன்கள் மட்டுமே.   என்பதையே என்றும் வலியுறுத்தி வருகிறேன். முதல் எதிரி மகிந்த அணிதான். இன்றைய சூழலில் இது தொடர்பான தெளிவு சம்பந்தருக்கு மட்டுமே இருக்கிறது.

இன்று நாம் எதிர் நோக்குவது அரசியல் இராஜதந்திர ம் பற்றிய சிக்கலாகும். வரலாறு முழுவதும் எங்கள் தோல்விகள் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.

 இது. 2ம் உலக யுத்தத்தின்பின் தம்மை அழித்த நாடு என அமரிக்காவை ஜப்பானும் ஜெர்மனியும் புறக்கணிக்காமைக்கு என்ன காரணம்? ஜெர்மனிக்கும் ஜப்பானுக்கும் தெரிவு அமரிக்காவா சோவியத் யூனியனா என்றே அமைந்தது.  தங்கள் முதலாளித்துவ ஜனநாயக அமைப்பை காபாற்றுவது முக்கியமாக இருந்தது. மேலதிகமாக உலக யுத்ததின்போது ஜெர்மனி மற்றும் ஜப்பானின் பிரதேசங்களை சோவியத யூனியன் கைப்பற்றியிருந்தது.  எதிர்விமர்சனங்கள் இருந்தும் தமது அமைப்பைக் காப்பாற்றி யுத்த அழிவுகளில் இருந்து மேம்படுவதற்க்கு இருந்த சாத்தியமான  தெரிவு அமரிக்காவே என்கிற முடிவை மேற்படி நாடுகள் எடுத்தன. இத்தகைய இஅசதந்திர சிக்கல்களை உலக நாடுகள் அடிக்கடி எதிர்கொள்ளவே செய்கின்றன. வரலாற்றில் இத்தகைய இராஜதந்திரச் சிக்கல்கள் ஏற்பட்ட சந்தர்பங்களில் எடுக்கப்பட்ட பிழையான முடிவுகளே பெரும் தோல்விகளுக்கு வழிவகுத்துள்ளது. 

இன்று நாம் மீண்டும் இராஜதந்திர சிக்கல் ஒன்றுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. . நமது அணி இந்தியா அமரிக்கா மேற்குலகமென சம்பந்தர் தெரிவு செய்தமைக்கும் அதுதான் காரணம். அவர் அத்தகைய ஒரு முடிவை எடுத்தமை சர்யானதே. இல்லாவிட்டால் வடகிழக்கு இன்னும் இராணுவ சப்பாத்துக்களின்கீழ் சோமாலியாவாகி இருக்கும்.

இன்று பிரச்சினை சம்பந்தர் இந்திய மேற்க்குலக முகாம்களை தெரிவு செய்தமையல்ல. பிரச்சினை இலங்கை அரசியலில் தொடர்பாக இந்தியா அமரிக்கா நட்ப்பு அணிக்குள்  இடம்பெறும் பனிப்போர்தான். இரு அணிகளையும் ஆதரிக்கும் நாம் இரு அணிகளின் பனிபோருக்குள் அகப்படாமல் தப்பிப்பது எப்படி? இந்திய அமரிக்க அணிகள் எங்களுக்கும் வாய்ப்புள்ள ஒரு பொது முடிவுக்கு  வருவதை உறுதிப்படுத்துவது அவசியமாகும். அந்த முதிற்சி குறைந்த பட்ச்சமாவது சம்பந்தருக்கு உள்ளது என்று நம்புகிறேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, poet said:

நமது அணி இந்தியா அமரிக்கா மேற்குலகமென சம்பந்தர் தெரிவு செய்தமைக்கும் அதுதான் காரணம்

சம்பந்தர் ஐயா அலசி ஆராயந்து ஒன்றும் தெரிவு செய்யவில்லை. தனது மருத்துவ தேவைக்காக இந்தியாவுக்கு செல்வதற்கும், பிள்ளைகள், உறவினர்கள் நண்பர்களை மேற்கு நாடுகளில் காண்பதற்கும் உள்ள சொந்தத் தேவையால் இந்தியாவும், மேற்குநாடுகளும் சொல்வதைச் செய்கின்றார். இந்த நாடுகள் கோத்தாவை ஆதரி என்று சொன்னால் மறுக்காமல் தமிழர்களை கோத்தாவை ஆதரிக்கவும் கேட்பார். ஏற்கனவே இராணுவத் தளபதியாக இருந்து தமிழர்களை அழித்த பொன்சேகாவை ஆதரிக்கக் கேட்டவர்தானே! 

அத்தோடு கிழக்கு மாகாணசபையில் கூடிய உறுப்பினர்கள் இருந்தும் பெருந்தன்மையைக் காட்ட முஸ்லிம் முதலமைச்சருக்கு வழிவிட்டு கிழக்குத் தமிழரை காணிகளை இழக்கவும், அபிவிருத்தியில் பின்தங்கவும் சம்பந்தரின் “ராஜதந்திரம்” நன்றாகவே உதவியது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் எதிரியை விழுத்தும் முயற்சியில் ஏனைய எதிரிகளை ஆதரித்தல் என்பது இராச தந்திரத்தின் முதல் பாடம். சில சமயங்களில் முதல் எதிரியை ஏனைய எதிரிகளின் பட்டியலுக்கு இறக்கி விடும் தவறுகள் நடந்துவிடுவதுண்டு.  அது நிகழாமல் பார்க்க வேண்டியது அவசியம். யுத்ததின்போது இயக்கம் பிரேமதாசவை ஆதரித்தது பற்றிய விடயம் பிரேமதாச முதல் எதியா இல்லையா என எதிர்கால அரசியல் மாணவர்களின் விவாதப் பொருளாக இருக்கும். மகிந்தவா பொன்சேகாவா முதல் எதிரி என்ற கேழ்வி குழந்தைகளும் பதில் சொல்லக்கூடிய கேழ்வியல்லவா? மேலும் சர்வதேச சமூகத்துக்கு இணங்கி யுத்தத்தில் நசிந்து சிதைந்திருந்த மக்களை ஒரு அணியாக்கி வாக்களிக்க வைத்ததன்மூலம்  ’தமிழர் அஞ்சி சரணாகதியாகவில்லை ஓரணியாக கட்டுபட்டு நிற்கிறார்கள்’ என்பதை உலகளாவ உணர்த்தியமை முக்கியமாகும். விவாதம் வேண்டாம். புரிந்துகொள்ள முயற்சிப்போம்

6 hours ago, கிருபன் said:

இந்த நாடுகள் கோத்தாவை ஆதரி என்று சொன்னால் மறுக்காமல் தமிழர்களை கோத்தாவை ஆதரிக்கவும் கேட்பார்.

இதென்னவோ உண்மை தான். 😀

6 hours ago, கிருபன் said:

அத்தோடு கிழக்கு மாகாணசபையில் கூடிய உறுப்பினர்கள் இருந்தும் பெருந்தன்மையைக் காட்ட முஸ்லிம் முதலமைச்சருக்கு வழிவிட்டு கிழக்குத் தமிழரை காணிகளை இழக்கவும், அபிவிருத்தியில் பின்தங்கவும் சம்பந்தரின் “ராஜதந்திரம்” நன்றாகவே உதவியது.

பொயட் அவர்கள் முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்ததை சம்பந்தனின் சாணக்கிய அரசியல் என கருதுபவர். 😎

7 hours ago, poet said:

சம்பந்தரை எதிர்க்கிற பலர் தெரிந்தோ தெரியாமலோ தமிழர்களின் வாக்குகளை மகிந்தவுக்கு எதிராக போய்விடாமல் தடுக்கிற பணியையே செய்கின்றனர். அவர்களுள் ஒருவரான முன்னைநாள் வடக்கு முதல் அமைச்சர் விக்னேஸ்வரன் சுதந்திரக் கட்ச்சி தன்னை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு கேட்டுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார். எதிரிகளதும் அதிதீவிர வாதிகளும் சம்பந்தரை விழுத்துவது என்கிற ஒரே நோக்கத்தோடு வேலை செய்கிறார்கள்.

விக்னேஸ்வரன் சுதந்திரக்கட்சியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக  இதுவரை கூறவில்லை.

இப்படியும் ஒரு செய்தி வந்திருக்கிறது.

தமிழர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தவித நன்மையும் கிடைக்க போவதில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், எந்த ஒரு தமிழனும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://yarl.com/forum3/topic/230994-எந்த-ஒரு-தமிழனும்-கோட்டாபய-ராஜபக்ஷவுக்கு-வாக்களிக்கக்கூடாது-விக்னேஸ்வரன்-கூறியதாக-வாசுதேவ-தகவல்/ 

Edited by Lara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் Lara. இப்பதிவு எழுதும்போது அவர் தன்னை அழைக்கிறார்கள் என்கிற முதல் அறிக்கையை எவ்வித கருத்துமின்றி வெளியிட்டிருந்தார். பின்னர் நீங்கள் கூறும் அறிக்கை வந்தது. 

On 8/17/2019 at 12:56 AM, poet said:

முதல் எதிரியை தவிர்த்து வேறு நிரந்தரமான எதிரிகள் இல்லை. நிரந்தரமானது தமிழரின் நலன்கள் மட்டுமே.   என்பதையே என்றும் வலியுறுத்தி வருகிறேன். முதல் எதிரி மகிந்த அணிதான். இன்றைய சூழலில் இது தொடர்பான தெளிவு சம்பந்தருக்கு மட்டுமே இருக்கிறது.

" நிரந்தரமானது தமிழரின் நலன்கள் மட்டுமே " - என்பதை பல தமிழ் கட்சிகள் வெளிப்படையாக கூறும் ஒரு கருத்து. அதைக்கூறித்தான் ஆகவேண்டும். 

அவ்வாறு கூறும் கட்சிகளை சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு அரவணைத்து தமது குடைக்குள் கொண்டுவர  தவறி உள்ளது.  அதனால், ஒட்டுமொத்த தமிழர் தரப்பும் பலவீனமாக உள்ளது.

முதல் எதிரி மகிந்த அணிதான் என்றும் அது தொடர்பான தெளிவு சம்பந்தருக்கு மட்டுமே இருக்கிறது என்றால், நாளை சம்பந்தரையும் மீறி மகிந்த அணி ஆட்சியை பிடித்துவிட்டால் சம்பந்தரால் அதற்கு என்ன மாற்று வழி? என்பதையும் அவர் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு என்றாலும் தெளிவு படுத்தி இருக்க வேண்டும்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ampanai said:

" நிரந்தரமானது தமிழரின் நலன்கள் மட்டுமே " - 

அவ்வாறு கூறும் கட்சிகளை சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு அரவணைத்து தமது குடைக்குள் கொண்டுவர  தவறி உள்ளது.  அதனால், ஒட்டுமொத்த தமிழர் தரப்பும் பலவீனமாக உள்ளது.

 

நீங்கள் கூறுவதுபோல சம்பந்தர் பெரிய குடையை விரிக்க வேண்டும் என்பது முற்றிலும் உண்மை. சம்பந்தரின் இயலாமை அமைப்பு சார்ந்ததாகும். பெரிய குடை இல்லாவிட்டால் கிழக்கை நிச்சயம் இழந்துவிடுவோம்.

இலங்கை இந்தியா மற்றும் இயக்கம்  தொடர்பான நமது வரலாற்றின் இருண்ட பகுதிபற்றி நான்  சம்பந்தப்பட்ட அல்லது நான் கேழ்விபட்ட  சில விடயங்களை விரைவில் சொல்லியே ஆகவேண்டும் என்பதை உணர்கிறேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 8/17/2019 at 5:47 PM, Lara said:

இதென்னவோ உண்மை தான். 😀

பொயட் அவர்கள் முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்ததை சம்பந்தனின் சாணக்கிய அரசியல் என கருதுபவர். 😎

இது பல தளங்களை கொண்ட விடயம். சம்பந்தர் முன் கூட்டமைப்பு முதல்வரா முஸ்லிம் முதல்வரா என்கிற கேழ்வி இருக்கவில்லை. அவர் முன்னம் இருந்த கேழ்வி முஸ்லிம் முதல் அமைச்சரா மகிந்த அணி முதல் அமைச்சரா என்பதுதான். இது இலகுவான கேழ்வியல்ல. 

6 minutes ago, poet said:

நீங்கள் கூறுவதுபோல சம்பந்தர் பெரிய குடையை விரிக்க வேண்டும் என்பது முற்றிலும் உண்மை. சம்பந்தரின் இயலாமை அமைப்பு சார்ந்ததாகும். பெரிய குடை இல்லாவிட்டால் கிழக்கை நிச்சயம் இழந்துவிடுவோம்.

தலைமை என்பது பல குணாதிசயங்களை உள்ளடக்கியது.  ஆளுமை அதில் முக்கியம் பெறுகின்றது. மேலும், நேரம் : எந்த நேரத்தில் எதை செய்யவேண்டும் மற்றும் எதை செய்யக்கூடாது என்பது  அதைவிட முக்கியமாகின்றது. அடுத்து, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்திடும் தன்மை, தன்னை சுற்றி இருக்கும் ஆதரவாளர்கள் பற்றிய சரியான கணிப்பு என்பனவற்றையும் கூறலாம். 

சம்பந்தர் ஐயாவிடம் நிறைய அனுபவம் உள்ளது.  

ஆனால் மக்கள் எதிர்பார்ப்புக்கள் பல நிறைவேறாமலும் அநாதைகள் போன்ற உணர்வும் உள்ளது. தன்னால் முடியாவிட்டால், முடியாததை செய்யக்கூடிய அடுத்த தலைமுறை தலைவர்களை இனம்கண்டு  அவர்களுடன் சில காலம் பயணிக்க வேண்டும். அப்பொழுது தான் அரசியல் தலைமை பூரணமடையும்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முப்பது வருட போரில் இழந்தவற்றை ஒரு இனக்கொலையின் பின்னர் எதிரியிடமிருந்து இராஜதந்திர அழுத்தங்களால் மட்டும் பெறுவது என்பது இலகுவான கலையல்ல. இனக்கொலையின் கையறு நிலையில் ஆரம்பித்த எங்களிடம் அதற்கான வல்லவர்களோ வளங்களோ குறைவு. போராட்டத்தால் நிமிர்ந்த புலம்பெயர் சமூகத்தின் உண்மையான பங்களிப்பு குறைவு. புலம்பெய்ர்ந்த நாடுகளில் படுபாவிகளான கொள்ளையர் குடும்பங்களால் அமுக்கபட்ட குல நாசமென நம்பப்படுகிற  தமிழர் இரத்தமும் சாபங்களும் தோய்ந்த பணத்தை மீட்டு போரில் ஈடுபட்ட பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு ஏழைக் கிரமங்களுக்கு திருப்பிவிடுவதில் புலம்பெயர்ந்த தமிழர்கள் அமைப்பு ரீதியாக அக்கறை  காட்டவில்லை. அமைப்புக்குள்ளும் சம்பந்தர்போல செயல்படுகிறவர்களை அதிகம் காணமுடியவில்லை. இவற்றையெல்லாம் மறந்துவிட்டு  சம்பந்தரை மதிப்பீடு செய்ய முடியுமா?  

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.