Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சைவ சமயத்துக்கு தலைமைப்பீடம் அவசியம்

Featured Replies

33 minutes ago, Maruthankerny said:

அதையும்தாண்டி  சமூகம் மதத்தால் நன்மை அடைகிறது என்று இருந்தால் எழுதுங்கள் 
அது பற்றி விவாதிப்போம். 

இவை பற்றி இங்கும், யாழில் வேறு பல திரிகளிலும் போதிய அளவு விளக்கி விவாதித்தாயிற்று. அரைச்ச மாவை அரைச்சு, மீண்டும் மீண்டும் அரைச்சாச்சு. 

எனவே, மேலும் உங்களுக்கு மதத்தின் நன்மைகள் பற்றிய விளக்கம் தேவையென்றால் உங்கள் சுய தேடலை மேற்கொள்ளுங்கள். இன்றைய இணைய உலகில் பல resources உள்ளன. உங்களைச் சுற்றியுள்ளவர்களை, உங்களது பெற்றோரை, உறவுகளை, நண்பர்களைக் கேளுங்கள்.

ஒரு நாளில் யாழில் எழுதும் விடயமல்ல இது. நல்லதைத் தேடுவதில் உங்கள் நேரத்தைச் செலவழியுங்கள். இங்கு வீண் விவாதம் செய்ய நேரம் இருக்காது.

யாழில் இன்னும் பல விடயங்கள் உள்ளன. மீண்டும் மீண்டும் மதம் பற்றி இங்கு விவாதித்து நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை. 

நன்றி 😊

2 minutes ago, மல்லிகை வாசம் said:

யாழில் இன்னும் பல விடயங்கள் உள்ளன. மீண்டும் மீண்டும் மதம் பற்றி இங்கு விவாதித்து நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை. 

நன்றி 😊

நானும் நீங்கள் கூறியதைத்தான் கூறுகிறேன். இந்த உலகில் பல நல்ல விடயங்கள் உள்ளன. அவை விடுத்து மதங்களோடு  நேரத்தை விரயமாக்குவது.  அறிவீனம். நல்ல விடயங்கோடு நேரத்தை செலவிடுங்கள். 

4 minutes ago, tulpen said:

நானும் நீங்கள் கூறியதைத்தான் கூறுகிறேன். இந்த உலகில் பல நல்ல விடயங்கள் உள்ளன. அவை விடுத்து மதங்களோடு  நேரத்தை விரயமாக்குவது.  அறிவீனம். நல்ல விடயங்கோடு நேரத்தை செலவிடுங்கள். 

ருல்பென், நான் இங்கு விவாதம் செய்வதை விட வேறு நல்ல வழிகளில் நேரத்தைச் செலவிடலாம் என்று சொன்னதை, உங்களுக்கு வசதியாகத் திரித்துள்ளீர்கள். உங்களது இந்தக் கருத்துத் திரிப்புகளை முன்னர் பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.

நல்ல விடங்கள் மதத்தின் நல்ல அம்சங்களில் யாழுக்கு வெளியே கவனம் செலுத்துவதாகவும் இருக்கலாம் என்பது உங்களுக்குப் புரியவா போகிறது? 

இவ்வாறான கருத்துத் திரிப்புக்களால் தான் இத் திரி திசை மாறிச் செல்கிறது.

நன்றி

வணக்கம்

7 minutes ago, மல்லிகை வாசம் said:

நல்ல விசயங்கள் மதங்களுக்கு வெளியே தான் இருக்கிறது . அதை தான் குறிப்பிட்டேன். 

2 hours ago, மல்லிகை வாசம் said:

மீண்டும் இவை இந்து மதத்தின் குறைபாடு அல்ல; ஆதிக்க வெறியர்களின் தவறே!

ஆதிக்க வெறியர்களை பேணிப்பாதுகாப்பது  மதங்களே. இந்து மதம் இன்னும்  சற்று அதிகமாகவே. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மல்லிகை வாசம் said:

மீண்டும் மீண்டும் கூறிவிட்டேன். அது மதத்தின் தவறல்ல. அவர்கள் செய்வது போல் செய்வது தான் எனது வழியுமல்ல. அவரது செயல்கள் உங்களைப் பாதித்தால் நேருக்கு நேராகச் சென்று அவர்களிடம் இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டியது தானே? எதற்காக உண்மையான followersஇடம் இந்தக் கேள்வி??

இது மதங்களையும் தாண்டி சிந்திக்க வேண்டிய சமூகப்பிரச்சினைகள். இதில் உள்ள அரசியல் சிக்கலானது. மதத்தை இதற்குள் இழுக்காதீர்கள். மேலும் முதல் பந்தியில் எழுதியதே இதற்கான பதிலும்.

உங்கள் எழுத்துக்களை வாசிக்க எனக்கு சிரிப்பு வருகிறது ........
இந்த மத பிரச்சனனையை விளங்காது தனி விடயமாக எடுத்து சிலர் 
அதீத கோபம் அடைந்ததாலும் .... திரியை பூட்டு திற  என்று மட்டு உறுத்தினருக்கு 
அறிவுரைபோல ஆதிக்கம் செய்வதாலும் ....
என்னால் அப்படி ஒரு நிலை வேண்டாம் என்று அடக்கி கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது.

நீங்கள் சொல்வதெல்லாம் 
சிங்கள பௌத்த இனவாதிகள் சொல்வதெல்லாம் சிங்கள மக்களின் நண்மைக்கே 
சொல்கிறார்கள்.ஆனால் இராணுவமும் போலீஸும்தான் தமிழர்களை கொல்கிறது என்றுதான் நீங்கள் மறைமுகமாக எழுதுகிறீர்கள். 

பௌத்த வெறி என்பது ஒரு சிறுபான்மை இனத்தையே கொலைவெறி ஆடி 
கிழித்து துப்பி எறிந்து இருக்கிறது.

70 வீதமான மக்கள் வரை மூளைச்சலவை செய்து மக்களுக்கு  பயத்தை உண்டாக்கி
மக்களை சிந்திக்க விடாது விலங்கிலும் கீழான நிலையில் மதம்தான் இருக்கிறது.
இந்த அருவெறுப்பில் இருந்து வெளியேறாத எந்த சமூகமும் இந்த உலகில் முன்னேறவில்லை 

சமூகத்தின் 70 வீதத்துக்கே மேலான மக்கள் மதத்தால் கீழ்நிலையில் இருக்கும்போது 
எந்த சமூக விழிப்புணர்வும் சமூக பிரச்சனைகளை தீர்க்கப்போவதில்லை.
தன்னை நம்பாது  ... தான் கெட்டுப்போனதுக்கு தனது சொந்த சோம்பேறித்தனமே காரணம் 
என்று அறியாது ..... கண்ணுக்கே தெரியாது பல மில்லியன் மைல்களுக்கு  அப்பால் இருக்கும்  சனி காரணம் 
என்று திரியும் லூசு கூட்டம் சமூகத்தில் உள்ளவரை ...... இதை தாண்டி சிந்துக்கும் எந்த சமூக விழிப்புணர்வும் 
சமூகத்தில் மாற்றம் உண்டுபண்ணியதில்லை.
மனிதரை மூடர்கள் ஆக்கும் மதங்களை களையெடுப்பதுதான் முதல் படி. 

மதமங்களே பொய் எனும்போது ..
யாரை நீங்கள் உண்மையான பக்தர் என்கிறீர்கள்? 
புத்தனை பின்பற்றுவது என்றால் ..... பௌத்தர்கள் எல்லோரும் காட்டுக்குதான் செல்ல வேண்டும் ஞானம் தேடி .... எத்தனை பேர் போகிறார்கள்?

கீதையை நம்புவான் என்றால் 
கருமம் செய் பலனை எதிர்பாராதே என்று சொல்கிறது 
எத்தனை பேர் அப்படி வெளிக்கிட்டு விட்டார்கள்?

9 hours ago, மல்லிகை வாசம் said:

இவை பற்றி இங்கும், யாழில் வேறு பல திரிகளிலும் போதிய அளவு விளக்கி விவாதித்தாயிற்று. அரைச்ச மாவை அரைச்சு, மீண்டும் மீண்டும் அரைச்சாச்சு. 

எனவே, மேலும் உங்களுக்கு மதத்தின் நன்மைகள் பற்றிய விளக்கம் தேவையென்றால் உங்கள் சுய தேடலை மேற்கொள்ளுங்கள். இன்றைய இணைய உலகில் பல resources உள்ளன. உங்களைச் சுற்றியுள்ளவர்களை, உங்களது பெற்றோரை, உறவுகளை, நண்பர்களைக் கேளுங்கள்.

ஒரு நாளில் யாழில் எழுதும் விடயமல்ல இது. நல்லதைத் தேடுவதில் உங்கள் நேரத்தைச் செலவழியுங்கள். இங்கு வீண் விவாதம் செய்ய நேரம் இருக்காது.

யாழில் இன்னும் பல விடயங்கள் உள்ளன. மீண்டும் மீண்டும் மதம் பற்றி இங்கு விவாதித்து நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை. 

நன்றி 😊

நீங்கள் புதிதாக ஒன்றும் விளக்க வேண்டாம் 
அதை ஒருக்கால் இங்கு வெட்டி ஓட்டுங்கள் அது பற்றி விவாதிப்போம்.
என்ன விளக்கம் இருக்கிறது என்று பின்பு பார்ப்போம் 
 
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மல்லிகை வாசம் said:

ருல்பென், நான் இங்கு விவாதம் செய்வதை விட வேறு நல்ல வழிகளில் நேரத்தைச் செலவிடலாம் என்று சொன்னதை, உங்களுக்கு வசதியாகத் திரித்துள்ளீர்கள். உங்களது இந்தக் கருத்துத் திரிப்புகளை முன்னர் பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.

நல்ல விடங்கள் மதத்தின் நல்ல அம்சங்களில் யாழுக்கு வெளியே கவனம் செலுத்துவதாகவும் இருக்கலாம் என்பது உங்களுக்குப் புரியவா போகிறது? 

இவ்வாறான கருத்துத் திரிப்புக்களால் தான் இத் திரி திசை மாறிச் செல்கிறது.

நன்றி

வணக்கம்

திரி சரியான திசையில்தான் போகிறது 
முதலில் சைவ மதம் என்றால் என்ன? என்று எழுதுங்கள் 
பின்பு அது அங்கு இருக்கிறது என்று எழுதுங்கள்?
சைவ மதத்துக்கும் .... இப்போதிருக்கும் இந்து மதத்துக்கும் 
ஏதும் வேறுபாடு இருப்பின் அதை எழுதுங்கள் .....

பின்பு இல்லாத டைனோசருக்கு பாதுகாப்பு வேண்டி 
சங்கம் அமைத்து தலைமை பீடம் தேவையா?இல்லையா?
என்று யோக்சிக்க முடியும்
 
-----------------------------------------------------------------------------------------------------------

திரி சரியான திசையில்தான் போகிறது 
முதலில் சைவ மதம் என்றால் என்ன? என்று எழுதுங்கள் 
பின்பு அது எங்கு  இருக்கிறது என்று எழுதுங்கள்?
சைவ மதத்துக்கும் .... இப்போதிருக்கும் இந்து மதத்துக்கும் 
ஏதும் வேறுபாடு இருப்பின் அதை எழுதுங்கள் .....

பின்பு இல்லாத டைனோசருக்கு பாதுகாப்பு வேண்டி 
சங்கம் அமைத்து தலைமை பீடம் தேவையா?இல்லையா?
என்று யோக்சிக்க முடியும்

  • தொடங்கியவர்
On 8/18/2019 at 5:06 PM, ampanai said:

பெளத்த பீடங்களில் அரசியல்வாதிகள் எப்படி வளைந்து வந்தனம் செய்கிறார்களோ அதுபோல சைவத் தலைமைப்பீடங்களுக்கும் வருகின்ற அரசியல்வாதிகள் குந்தியிருந்து கும்பிடு போடுவர்கள். இது நிச்சயம் நடக்கும்.

தென்கிழக்கு ஆசியாவில் பண பலம் மிக்க குடும்பங்களில் இன்று ஒன்றாக  இராசபக்சே குடும்பம் உள்ளது. ஆம், இவர்கள் ஒன்றும் வால்மார்ட் (Walmart family) இல்லை கோச் (Koch Brothers) குடும்பங்களோ இல்லை. இவர்கள் எவ்வாறு இப்படி பணம் சேர்த்தார்கள் என்பது இல்லை இந்த தலைப்பின் கருத்தாடல்.   

எவ்வாறு ஒரு பல்லின பலமத இனங்களை கொண்ட நாட்டில் தமிழரின் ஏதிர்காலம் பற்றியது. 

தமிழினம் ஒரு பலமான அரசியல் தலைமையை கொண்டுள்ளதா?  இன்று இல்லை.  இனம் ஒரு பொருளாதார நிலையில் உள்ளதா? அதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா ? இல்லை 

அரசியல், இராணுவ, பொருளாதார பலம் என எதுவும் இல்லாத நிலையில் யாரும் ஒருவன் வரமாட்டானா என பெரும்பாலான தமிழர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். 

இல்லை, எமக்குள் என்ன பலம் இருக்கின்றது ? எதை வைத்து நாம் அழிவில் இருந்து மீளலாம் என சிந்திப்பது, இல்லை சிந்திப்பவர்களுக்கு ஆக்கபூர்வமான உதவிகளை, கருத்துக்களை முன்வைப்பது ஆரோக்கியமானது. 

அவ்வாறான சிந்தனைகளில் ஒன்று, தமிழர்கள் மதத்தை கையில் எடுப்பது. (அது சரி இல்லை தவறு என நான் இங்கு கூறவில்லை. அதுவும் ஒரு வழி என்றே கூறுகிறேன்.) 

சரி, மதவாதம் அழிவைத்தான் தரும் என உடனேயே முடித்தும் விடலாம். ஆனால், அவர்கள் அதற்கு ஒரு மாற்று வழியை திறந்துவிட உதவினால் நன்று. 

இல்லை, அதில் உள்ள அனுகூலங்கள் பிரதிகூலங்களை பார்க்கலாம்.  அதையே இந்த ஆக்கம் முன்வைக்கின்றது. 

புலம் பெயர்ந்து வாழும் எமக்கு  இவ்வாறான நகர்வு ஒரு பிற்போக்கான நகர்வாகவே தெரியும், நகர்வும் தான். ஆனால், முள்ளை முள்ளால் தான் எடுக்கவேண்டும் என்பவர்களுக்கு (தாயகத்தில் ) என்ன பதிலை முன்வைக்கலாம்?

DSC_7125a.jpghttp://www.sundaytimes.lk/190818/news/gota-on-his-knees-for-blessing-363799.html

Edited by ampanai

  • தொடங்கியவர்

சரி மதம் ஒரு திசை மாறக்கூடிய ஒரு விவாதப்பொருள். 

எங்கள் பலமான கல்விக்கு செல்வோம். ஒரு நடக்கும் திட்டத்தை எடுத்து அமுல்படுத்தலாம், அதன் மூலம் அடுத்த தலைமுறையை தாமாக சிந்தித்து தமது காலில் தமக்காக நிற்கும் சமூகமாக மாற்றலாமா? 

- சகல தமிழ் குழந்தைகளும் ஆரம்ப கல்வியை, அதாவது ஐந்தாம் வகுப்பு வரை படித்து முடிக்க வேண்டும் 
- அதற்கு என்ன தேவை ? என்ன செய்யலாம்? இவ்வரசு செய்யலாம்? ..... 

- இல்லை சகல பெண்களும் பத்தாம் வகுப்பு வரை கல்வி கற்று முடிக்க  என்ன செய்யலாம்? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

தென்கிழக்கு ஆசியாவில் பண பலம் மிக்க குடும்பங்களில் இன்று ஒன்றாக  இராசபக்சே குடும்பம் உள்ளது. ஆம், இவர்கள் ஒன்றும் வால்மார்ட் (Walmart family) இல்லை கோச் (Koch Brothers) குடும்பங்களோ இல்லை. இவர்கள் எவ்வாறு இப்படி பணம் சேர்த்தார்கள் என்பது இல்லை இந்த தலைப்பின் கருத்தாடல்.   

எவ்வாறு ஒரு பல்லின பலமத இனங்களை கொண்ட நாட்டில் தமிழரின் ஏதிர்காலம் பற்றியது. 

தமிழினம் ஒரு பலமான அரசியல் தலைமையை கொண்டுள்ளதா?  இன்று இல்லை.  இனம் ஒரு பொருளாதார நிலையில் உள்ளதா? அதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா ? இல்லை 

அரசியல், இராணுவ, பொருளாதார பலம் என எதுவும் இல்லாத நிலையில் யாரும் ஒருவன் வரமாட்டானா என பெரும்பாலான தமிழர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். 

இல்லை, எமக்குள் என்ன பலம் இருக்கின்றது ? எதை வைத்து நாம் அழிவில் இருந்து மீளலாம் என சிந்திப்பது, இல்லை சிந்திப்பவர்களுக்கு ஆக்கபூர்வமான உதவிகளை, கருத்துக்களை முன்வைப்பது ஆரோக்கியமானது. 

அவ்வாறான சிந்தனைகளில் ஒன்று, தமிழர்கள் மதத்தை கையில் எடுப்பது. (அது சரி இல்லை தவறு என நான் இங்கு கூறவில்லை. அதுவும் ஒரு வழி என்றே கூறுகிறேன்.) 

சரி, மதவாதம் அழிவைத்தான் தரும் என உடனேயே முடித்தும் விடலாம். ஆனால், அவர்கள் அதற்கு ஒரு மாற்று வழியை திறந்துவிட உதவினால் நன்று. 

இல்லை, அதில் உள்ள அனுகூலங்கள் பிரதிகூலங்களை பார்க்கலாம்.  அதையே இந்த ஆக்கம் முன்வைக்கின்றது. 

புலம் பெயர்ந்து வாழும் எமக்கு  இவ்வாறான நகர்வு ஒரு பிற்போக்கான நகர்வாகவே தெரியும், நகர்வும் தான். ஆனால், முள்ளை முள்ளால் தான் எடுக்கவேண்டும் என்பவர்களுக்கு (தாயகத்தில் ) என்ன பதிலை முன்வைக்கலாம்?

http://www.sundaytimes.lk/190818/news/gota-on-his-knees-for-blessing-363799.html

இப்பவே சரியான வரலாற்றை மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு சிறுபான்மை மதங்களை ஒதுக்கி விடும் சிந்தனை இருக்கிறது. இந்த நிலையில் மதத்தை தமிழ் தேசியத்தோடும் சேர்த்து விட்டால் ஒரு முப்பது ஆண்டுகளில் நாம் குஜராத் இருக்கும் நிலையில் இருப்போம்! பிறகு தீர்வு வந்தென்ன வராமல் விட்டென்ன?

எமது மக்களின் அரசியல் , சமூக, பொருளாதார பிச்சனைகளுக்கு தீர்வுகாண மதத்தை கையில் எடுப்பது என்பது பாரிய பின்னடைவையே தரும். ஏற்கனவே பலவீனமாக உள்ள மக்களை மேலும் பலவீனமாக்கும் நடவடிக்கை இது. மக்களுக்கு தன்னம்பிக்கையையும் புத்துணர்வையும் ஊட்ட வேண்டுமேயன்றி மக்களை மேலும்  பலவீனப்படுத்தும் அச்சமூட்டும்  நடவடிக்கைகளில் ஈடுபடுதல்  கூடாது. 

தற்போதைய முதல் நடவடிக்கை கல்வி, பொருளாதாரத்தை பலப்படுத்துவதே. அதற்கு  புலம்பெயர் தாயக இணைப்பு திட்டங்களை சமூகத்தில் வலுவுள்ள, ஆற்றல் உள்ள கல்விச்சமூகத்தினர் மேற்கொள்ள வேண்டும். பழமையில்  ஊறிக்கிடக்காமல் உலகளாவிய ரீதியில் வீழ்ச்சியில்  இருந்து மீண்ட மக்களின் யுக்திகளை ஆராய்ந்து பார்தது அதில்  நடைமுறைச்சாத்தியமான திட்டங்களை முன்னெடுக்கலாம். நாம் உலக சமுதாயத்தில் ஒரு அங்கம். அந்த சமுதாயங்களுக்கு நிகராக எம்மை நகர்த்த வேண்டும் என்ற நோக்கம் பொதுவாக எல்லோருக்கும் இருக்கவேண்டும். 

கல்விச்சமூகம் என று நம்மை நாமே  கூறிக்கொண்டு மதத்தை  தலைமைத்துவத்துக்கு கொண்டுவரவேண்டும் என்று சொல்வதே எமக்கு முதல்  அவமானம். கல் தோன்றி மண் தோன்ற முன் தோன்றிய மூத்த குடி என்று  ஒலிவாங்கிகள் முன்  பறைசாற்றியே காலத்தை கடத்திய நாம் மீண்டும் கற்காலத்திற்கு செல்வதே தீர்வு என்று நினைக்கும்   மனோநிலை ஆரோக்கியமானதல்ல. 

  • தொடங்கியவர்

ஒரு ஊரில் நான்கு குடும்பங்கள் இருந்தன. நான்கும் நான்கு மதங்களை பின்பற்றி ஒற்றுமையாக  வாழ்ந்துவந்தன.

ஒரு குடும்பம் ஒப்பீட்டளவில் கல்வியில், பொருளாதாரத்தில் நாளடைவில் முன்னேறியது. அதே காலகட்டத்தில்,  ஒரு மதம் சார்ந்தவர்கள் குடிபெயர்ந்து பெரும்பான்மையானார்கள். கல்வியில் தரப்படுத்தலை அறிமுகப்படுத்தி, பொருளாதார ரீதியில் மற்றைய மதம் சார்ந்தவர்களை நசுக்கினர்.

நிலம், மொழி, மதம், பொருளாதாரம் என எல்லா வழிகளிலும் நசுக்கப்பட்டாலும் தங்கள் உயர்வான பண்புகளை அந்த ஒரு குடும்பம் இறுதி வரை பின்பற்றி... மறைந்து போனது.

டிஸ்கி #1 : நீ மகானாக அதை புரிந்து கொள்ளும் சமூகத்தில் தான் அவ்வாறு வாழமுடியும். இல்லாவிடில் நீ அவர்களுக்கு ஒரு மக்கனாக, வாழத்தெரியாதவனாக பார்க்கப்படுவாய் !

டிஸ்கி #2 : உனக்கு ஆங்கிலம் தெரிந்தது என்பது  பெருமையே. ஆனால், அதை எங்கே எவரிடம் எப்போது பேசவேண்டும் என்பது முக்கியம். ஆங்கிலம் தெரியாதவனிடம் அவன் ஒருநாள் என்னை  புரிந்து கொள்வான் என பேசி வாழ்வது என்பது புத்திசாலித்தனமானது அல்ல.    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.