Jump to content

வேடிக்கையாக தொடங்கிய தீய பழக்கம்!


Recommended Posts

சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்று

சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்றாகும்.மதுப் பாவனை என்பது சம்பந்தப்பட்ட தனிமனிதனை மட்டும் பாதிப்பதில்லை. அவரது குடும்பம், சமூகம், நாடு என்றெல்லாம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

மதுப் பழக்கம் முதலில் சாதாரண பழக்கமாகத்தான் ஆரம்பிக்கும். முதலில் பியர் என்று சமாதானம் கூறிக்கொண்டுதான் இந்தப் பழக்கம் ஆரம்பிக்கும். ஆரம்பிக்கும் போதே யாரும் முழு போத்தல் மதுவையும் குடிப்பதில்லை, குடிக்கவும் முடியாது. சில மாதங்கள் அல்லது வருடங்களில் மூளையில் அல்கேஹால் சில இரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதன் காரணமாக, சாதாரண போதையைத் தருவதற்குக் கூட அதிக அளவு மது தேவைப்படும். இதனால்தான் ஆரம்பித்துச் சில வருடங்களில் போத்தல் கணக்கில் குடிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் குடியை விட முடியாத அளவுக்கு மனநோயாளியாகவே மாறி விடுகிறார்கள்.

குடிப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதற்கு பல்வேறு காரணங்கள் கூறுகிறார்கள்.கூலி வேலைக்குச் செல்பவர்கள் தங்கள் உடல் வலியைப் போக்குவதற்குக் குடிப்பதாகவும், இளம் வயதினரைக் கேட்டால் நண்பர்கள் கட்டாயப்படுத்துவதால் அல்லது மகிழ்ச்சியான மனோநிலையில் இருந்தால் குடிப்பதாகவும், சிலர் கவலையை மறக்கக் குடிப்பதாகவும் காரணம் சொல்வார்கள். இப்படிப்பட்ட பல்வேறு சாக்குப்போக்குகள்தான் நாளடைவில் குடியைத் தொடர்வதற்குக் காரணமாகி விடுவதுண்டு.

காதல் தோல்வி, குடும்பத்தில் பிரச்சினை, வேலையின்மை, குடிப்பது ஓர் நாகரிகம், மனஅழுத்தம், கடன் சுமை என்றெல்லாம் பலவித காரணங்கள் கூறுவார்கள்.

ஆனால் இவை எதுவும் உண்மைக் காரணமல்ல. தன்னை நியாயப்படுத்தி, அடுத்தவர் தன்னில் பரிதாபப்படும்படி காரணத்தைக் கூறி, குடிப்பதை நியாயப்படுத்தி, குடியைத் தொடர்வதற்காகக் கூறப்படும் ஒரு காரணங்கள் இவை.

விருந்துகளில் குடித்தல் நாகரிகம் என்று சொல்லிக் குடிக்காதவர்களையும் குடிக்க வைப்பவர்கள் உள்ளனர். பின்னர் அவர்களில் பலர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர்.

நண்பர்களின் வற்புறுத்தல், தன்னுடைய தனிப்பட்ட ஆர்வம் இதில் என்ன இருக்கின்றது என்கின்ற எண்ணம் போன்றவற்றினால் இப்பழக்கத்திற்கு பலர் ஆளாகி விடுகின்றனர். சிலர் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிக்க சரியான வழி தெரியாமல், அதிலிருந்து தற்காலிகமாக விடுபட, மயக்க நிலையை அடைய வைக்கின்ற இந்த மதுப் பழக்கத்தினை நாடுகின்றனர்.

மனப்பதற்றம், மனஅழுத்தம் உடையவர்கள்,உறக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் கூட மதுப் பழக்கத்திற்கு ஆளாகின்றனர். வருடக்கணக்கில் சிலர் அளவுக்கு அதிகமாக குடிப்பர்.தமக்கு ஒன்றும் செய்யவில்லை எனத் தவறாக நினைத்து குடிப்பழக்கத்தினைத் தொடர்கின்றனர்.

Fea01.jpg?itok=BhPm1JvP

முன்னொரு காலத்தில் அதிகமாக மது அருந்தும் நாடாக ரஷ்யா கருதப்பட்டது. மதுவுக்கு பெயர் போன நாடாகவும் ரஷ்யா திகழ்ந்தது. ஆனால், 2003ஆம் ஆண்டில் இருந்து 2016ஆம் ஆண்டு வரை அங்கு மது அருந்தும் பழக்கம் 43% குறைந்து விட்டதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.

அந்நாட்டு அரசு எடுத்த மது கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை குறித்த உந்துதல்களே இதற்குக் காரணம்.மதுப் பழக்கம் குறைந்ததற்கு ஏற்ப ரஷ்ய மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

ரஷ்யாவில் 2003ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை மது அருந்துவதும் அதனால் உயிரிழப்பதும் குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருக்கிறது. 2018இல் ரஷ்ய ஆண்களின் சராசரி ஆயுள் 68 ஆகவும், பெண்களின் சராசரி வயது 78 ஆகவும் வரலாற்றில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது.ஆகவே மதுவின் தீங்கு இப்போது புரிகிறதல்லவா?

மது உணர்வூட்டும் பொருள் அல்ல. உணர்வை, உடலை அழிக்கும் ஒரு நச்சுப் பொருள். மது அருந்துவதால் சுதந்திர உணர்வு தோன்றுவதாகவும், அதிக சக்தி கிடைப்பதாகவும், களைப்பு நீங்குவதாகவும் பலர் நினைக்கின்றார்கள். இளமைப் பருவத்தை விட பிற்காலத்தில் மதுவினால் பாதிப்புகள் ஏராளம். மது நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுவதால் மது குடித்தவுடன், சிறிது நேரத்திற்கு உற்சாகம் பிறக்கிறது. மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் நாளடைவில் எல்லா நோய்களையும் கொடுத்து சிறிது சிறிதாக நம்மை அழிக்கிறது.இதுதான் உண்மை.

மதுவின் தீமைகளை உணர்ந்த உலக சுகாதார நிறுவனம் 'மது நீண்ட நாளைய நலக்கேடு என்றும், தீய செயல்' என்றும் கூறுகிறது. மது உடல் நலத்தைக் கெடுப்பதோடு சமுதாயச் சீர்கேடுகளையும் ஏற்படுத்துகிறது.

மதுபானம் இளைஞர் சமூகத்தை அழித்து வருகின்றது. கட்டுக்கோப்பான உடலை வைத்திருக்க வேண்டிய இளமைப் பருவத்தில் நரம்பு தளர்ந்து, உடல் சோர்ந்து போய்க் கிடக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது? தனி நபரின் உடல், மனம் இரண்டையும் சிதைப்பதுடன், சமூகத்திற்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கின்றது மதுபானம். இந்தப் பழக்கத்திலிருந்து மீளவே முடியாது என்ற சூழலில் தற்கொலை செய்து கொண்டோரும் உள்ளனர்.

வேடிக்கை விளையாட்டாக மகிழ்ச்சியாகத் தொடங்கிய மதுப் பழக்கம் மெல்ல மெல்லப் பழகி அடிமைத்தனமாகி விடுகிறது. இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மது இல்லாமல் இருக்க முடியாது. உடலில் ஏற்படுகின்ற இரசாயன மாற்றத்தினால் மதுபானம் உபயோகிக்கின்ற அளவும் கூடி விடுகிறது. இதனால் எப்பொழுதும் மது உபயோகிப்பது குறித்தே அவர்கள் சிந்தித்துக் கொண்டிருப்பர்.மதுவினால் பல குடும்பங்கள் சின்னாபின்னமாகிச் சீரழிந்து போனதை நாம் அறிவோம்.எனவே கேடு தரும் மதுப்பழக்கத்தை நாடாமல் இருப்பதே நன்மை தரும்.

 

http://www.thinakaran.lk/2019/10/03/கட்டுரைகள்/41369/வேடிக்ைகயாக-தொடங்கிய-தீய-பழக்கம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதன்முறையாக தமிழகத்தில் 10 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக! தமிழ்நாட்டில் முதன்முறையாக 10 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில், பாஜக 10 சதவீத வாக்குகளை முதல் முறையாக பெற்றுள்ளது. அதன்படி, இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 10.21 சதவீத வாக்குகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1385958
    • 210 நபர்களின் நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கம்-அரசாங்கம் நடவடிக்கை! பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் கட்டளைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் உள்ளிட்ட 15 தீவிரவாத அமைப்புக்களுக்கும் அவற்றடன் தொடர்புடைய 210 பேரினது நிதி, ஏனைய நிதிச் சொத்துக்களை முடக்கி குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்குவிதிகளின் கீழ், இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், விடுதலைப் புலிகள் அமைப்பு (LTTE), தமிழர் புனர்வாழ்வு அமைப்பு (Tamils Rehabilitation Organisation – TRO), உலக தமிழர் இயக்கம் (WTM), நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE), உலக தமிழர் நிவாரண நிதியம் (WTRF), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) ஆகிய புலம்பெயர் அமைப்புக்கள் முடக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியின் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், HQ Group, தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) , ஜமாதே மிலாதே இப்ராஹீம் (JMI), விலயாத் அஸ் செய்லானி (WAS), கனேடியன் தமிழ் தேசிய பேரவை (NCCT), தமிழ் இளைஞர் அமைப்பு (TYO), டருள் அதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் (SLISM), Save the Pearls போன்ற அமைப்புகளும் முடக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1385906
    • இன்று இப்படித்தான் மக்கள் பலர் சென்று கொண்டிருக்கிறார்கள்........பணத்தை மையப்புள்ளியாக வைத்து சுழலும் இவ்வுலகில் மக்கள் பெரும்பாலும் இப்படித்தான் வாழ்வார்கள்......!  😴
    • கேரளா திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபி( பா ஜ க ) வெற்றி 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.