Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா நடத்திய தாக்குதலில்: ஐ.எஸ். தலைவர் கொலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Baghdadi.jpg

அமெரிக்கா நடத்திய தாக்குதலில்: ஐ.எஸ். தலைவர் கொலை!

சிரியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.எஸ். தலைவரான அபுபக்கர் அல்-பாக்தாதியை குறிவைத்து சிறப்பு நடவடிக்கை நடத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த நடவடிக்கைக்காக கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பே அனுமதி வழங்கியிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாக்குதலின் போதே அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://athavannews.com/isis-leader-abu-bakir-albaghdadi-killed-by-us-airstrike/

################    ##############   ################   ###############

Iran.jpg

ஐ.எஸ். தலைவர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது ஈரான்!

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் சிரியாவில் உள்ள வட்டாரங்களால் தகவல் கிடைத்துள்ளது என ஈரான் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து இரு ஈரானிய அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர்.

“பாக்தாதியின் மரணம் குறித்து ஈரானுக்கு சிரிய அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது”, என களத்தில் இருந்து பெற்றுக்கொண்ட  அதிகாரி  ஒருவர் கூறினார்.

இரண்டாவது ஈரானிய அதிகாரி பாக்தாதி உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளை மளிகையில் இன்று காலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு ஒன்றினை வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/iran-was-informed-of-is-leader-baghdadis-death/

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் உயிரிழப்பு – அமெரிக்கா அறிவிப்பு

October 27, 2019

 

isis.jpg?resize=800%2C450

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல்-பாக்தாதி, சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க படையினரால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது அவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை உறுதிசெய்துகொள்வதற்காக மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் உறுதியானதா என கேள்வி எழுந்துள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் இதை சூசகமாக குறிப்பிட்டுள்ளார். அதில் சற்று நேரத்துக்கு முன்னர் மிகப்பெரிய காரியம் ஒன்று நடந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் டிரம்ப், முழுமையான தகவல் கிடைத்தவுடன் அபுபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்ட விபரத்தை அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. #ஐ.எஸ்.  #தலைவர் #உயிரிழப்பு #அமெரிக்கா  #அபூபக்கர்அல்பாக்தாதி  #சிரியா

reump.jpg?zoom=3&resize=335%2C191

 

 

 

http://globaltamilnews.net/2019/132373/

உலகம் இன்று கொஞ்சம் நிம்மதியாக உள்ளது. 

ஆனாலும் இன்னும் சில காலத்தின் பின்னர் இன்னொருவர் உருவாக்கப்படுவார்.  

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ampanai said:

உலகம் இன்று கொஞ்சம் நிம்மதியாக உள்ளது. 

ஆனாலும் இன்னும் சில காலத்தின் பின்னர் இன்னொருவர் உருவாக்கப்படுவார்.  

ஐ.எஸ் அமைப்பை உருவாக்கியதே அமெரிக்கா என்றுதானே கூறுகின்றார்கள்.

அல்காயிதா அமைப்பின் ஒரு பிரிந்த ஒரு அமைப்பு இருந்த பகுதியில் இவர் கொல்லப்பட்டுள்ளார். 
இந்த அமைப்பும் ஐ.எஸ்.உம் அண்மையில் சண்டை பிடித்து இருந்தனர். அந்த இடத்தில் ஐ.எஸ். தலைவர் அடைக்கலம் புகுந்து இருந்துள்ளார். இவரை அந்த அல்காயிதா அமைப்பின் பிரிவு காட்டிக்கொடுத்துள்ளதாகவும் அறியப்படுகின்றது. 

One of Baghdadi’s top aides was key to his capture: Iraq security officials

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு படுகொலையை கொல்லப்பட்ட ஐ.எஸ். தலைவர் கொண்டாடி இருந்தார். ஆனாலும், அவரின் கட்டுப்பாட்டில் ஐ.எஸ். இல்லை என நம்பப்படுகின்றது. 

ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்ட பின்னரும் அந்த அமைப்பு பல வேறு வடிவங்களில் தொடர்கின்றது.

ஒபமாவும் ( பின்லாடன்) ட்ரம்பும் (ஐ.எஸ். தலைவர்)    

Presidents Donald Trump and Barack Obama in the Situation Room during the raids that killed Abu Bakr al Baghdadi and Osama bin Laden (Shealah Craighead/Pete Souza/AP)

 

View image on Twitter

 

400px-Obama_and_Biden_await_updates_on_bin_Laden.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பக்தாதி கொலை டிரம்ப் அறிவிப்பு: ரஸ்யா, துருக்கி, ஈரானுக்கும் நன்றி தெரிவிப்பு

image_d511eaec73

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதிக்கு எதிராக வடமேற்கு சிரியாவில் அமெரிக்கா நடத்திய ராணுவ தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையிலிருந்து நேற்று மாலை உரையாற்றிய அவர், கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்காவின் சிறப்பு படைகள் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் பாக்தாதி, தான் தரித்திருந்த ஆயுதங்களை வெடிக்கச் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்த கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டுவெடிப்பு தாக்குதலுக்கும் ஐ.எஸ் அமைப்பே பொறுப்பேற்றிருந்தது.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரை தேடி ரஸ்யா, சிரியா, துருக்கி மற்றும் ஈராக் ஆகிய நாடுகளினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.   (மு)

http://www.dailyceylon.com/191375/

 

ஐஎஸ் அமைப்பினால் கொல்லப்பட்ட பெண்ணின் பெயரில் முன்னெடுக்கப்பட்ட பக்தாதிக்கு எதிரான நடவடிக்கை

ஐஎஸ் அமைப்பின் தலைவரிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு 2015 இல் அந்த அமைப்பினால் கொலை செய்யப்பட்ட பெண் மனிதாபிமான பணியாளரின் பெயரை சூட்டியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த பெண் மனிதாபிமான பணியாளர் கைய்லா மியுல்லர் ஐஎஸ் அமைப்பிடம்   அனுபவித்த சித்திரவதைகளிற்காக பக்தாதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு கைய்லா மியுல்லர்  என்ற பெயரிட்டதாக  அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் இதனை அறிந்துகொள்ளவேண்டும்,ஈவிரக்கமற்ற விதத்தில் கொல்லப்பட்ட அமெரிக்கர்களிற்கும் ஏனையவர்களிற்கும் நீதி வழங்கப்பட்டுள்ளது, ஜனாதிபதி இதனையே சுட்டிக்காட்டினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

kayla-mueller2.jpg

அமெரிக்காவை சேர்ந்த கைலா மியுல்லர் அலெப்போவில் உள்ள எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் மருத்துவமனைக்கு செல்வதற்காக துருக்கியை கடந்து சிரியாவிற்குள் நுழைந்தவேளை ஐஎஸ் அமைப்பினரிடம் சிக்கினார்.

அவரை 18 மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஐஎஸ் அமைப்பினர் 2015 இல் அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்பதை அறிவித்தனர்.

தனது மகளின் மரணத்திற்கு அல்பக்தாதியே காரணம் என கையிலா மியுல்லரின் தந்தை தெரிவித்துள்ளார்.

எனது மகளை பல சிறைகளில் வைத்திருந்தனர், தனிமைசிறைகளில் வைத்திருந்தனர்,அவர் சித்திரவதை செய்யப்பட்டார்,அச்சுறுத்தப்பட்டார் இறுதியில் பக்தாதியாலேயே அவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார் என தந்தை தெரிவித்துள்ளார்.

கைய்லா மியுல்லரின் உடல் மீடகப்படாமலேயே உள்ளது.

carl_muee.jpg

நான் எனது மகள் எங்கிருக்கின்றாள் அவளிற்கு என்ன நடந்தது என்ற உண்மையை அறிய விரும்புகின்றேன் என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

யாரோ ஒருவருக்கு தெரிந்திருக்கும் யாரோ ஒருவர் விடைகளை வழங்குவார் என நான் பிரார்த்திக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த நடவடிக்கையை டிரம்ப் தனது மகளிற்கு அர்ப்பணித்துள்ளதது தங்கள் மனதை தொட்டுள்ளதாக கார்ல்மியுல்லர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா டிரம்ப்போல தீர்க்கமாக செயற்பட்டிருந்தால் எனது மகள் காப்பாற்றப்பட்டிருப்பாள் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/67742

டொனால்ட் ட்ரம்பிற்கு பிரதமர் ரணில் பாராட்டு

தீவிரவாதத்திற்கு எதிராக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ ட்விற்றர் மற்றும் பேஸ்புக் கணக்கின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

https://www.thinakaran.lk/2019/10/28/உள்நாடு/42844/டொனால்ட்-ட்ரம்பிற்கு-பிரதமர்-ரணில்-பாராட்டு

 

தீவிரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வெற்றிகரமான நடவடிக்கைகளுக்கு எதிராக தனது பாராட்டுகளைத் தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை தாமே மேற்கொண்டதாக ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றிருந்ததோடு, அதன் மூலம் உலகம் முழுவதும் அச்சத்தையும், தீவிரவாதத்தையும் ஏற்படுத்தியிருந்தனர். ஆயினும் தீவிரவாதத்திற்கு எதிரான இவ்வாறான நடவடிக்கை மூலம், உலகம் பாதுகாப்பான இடமாக மாறியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி, சிரியாவில் அமெரிக்கா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை ஒன்றில் கொல்லப்பட்டதாக நேற்றையதினம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

is-leader-al-baghdadi-was-killed-by-american-troops.jpg

ஐ.எஸ். இன் தலைவர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் பக்தாதி கொல்லப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி செய்தார்.

வேவுத் தகவலின் அடிப்படையில், பக்தாதியின் இருப்பிடத்தை அறிந்த அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு படையினர் அவரைத் தேடிச் சென்று முடக்கினர்.

அமெரிக்க இராணுவத்தின் மோப்ப நாய்களால் விரட்டப்பட்டு, வெளியேறும் வழியில்லாத சுரங்கத்துக்குள் புகுந்த பக்தாதி தமது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்ததாக கூறப்பட்டது.

மேலும் பக்தாதியின் இழப்பு ஐ.எ.ஸ் பயங்கரவாத அமைப்பிற்கு பேரிடியாக அமையும் என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார்.

பக்தாதியின் மரணத்துக்குக் காரணமான துருப்பினருக்குத் தமது பாராட்டுகளைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 5 ஆண்டுகளாக சிரியா, ஈராக் பகுதிகளை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பல பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஐ-எஸ்-இன்-தலைவர்-அல்-பக்தா/

அல் பக்தாதியை துரத்திச்சென்ற நாயின் படத்தை வெளியிட்டார் டிரம்ப்

அல்பக்தாதியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட நாயின் படத்தினை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

பெல்ஜியன் மலினொய்ஸ் இனத்தை சேர்ந்த அந்த நாய் பக்தாதி தன்னை வெடிக்கவைத்த வேளை காயமடைந்துள்ளது.

நாயின் படத்தை வெளியிட்டுள்ளேன் ஆனால் அதன் பெயரை வெளியிடப்போவதில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் தலைவரை கண்டுபிடிப்பதற்கும்  கொல்வதற்கும் உதவிய அற்புதமான நாயின் படத்தை பகிரங்கப்படுத்த தீர்மானித்துள்ளோம் பெயரை வெளியிடவில்லை  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1732.jpg

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை பக்தாதியை கொல்லப்பட்டதை உறுதி செய்தவேளை குறிப்பிட்ட நாயை பாராட்டியிருந்ததுடன் அது பக்தாதியை அவர் தன்னை வெடிக்கவைக்கும் வரை துரத்திசென்றது என குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க இராணுவத்தினர் வழமையாக பெல்ஜியன் மலினொய்ஸ் இன நாய்களையே பயன்படுத்துவது வழமை.

இந்த வகை நாய்கள் படையினரை பாதுகாப்பது மற்றும் வழிநடத்துவதிலும், எதிரிகளையும் வெடிமருந்துகளையும் கண்டுபிடிப்பதிலும் திறமையானவை.

https://www.virakesari.lk/article/67788

பாக்தாதியை காட்டிக்கொடுத்த உளவாளிக்கு ரூ.177 கோடி பரிசு தொகை

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபு பக்கர் பாக்தாதியை கொல்ல உதவிய உளவாளிக்கு இந்திய மதிப்பில் 177 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்படவுள்ளது.


சர்வதேச பயங்கரவாதியான பாக்தாதியின் தலைக்கு சுமார் 177 கோடி ரூபாய்(($25 million)) பரிசு தொகை அறிவித்து அமெரிக்கா தேடி வந்தது. இந்தநிலையில், சிரியாவில் பதுங்கியிருந்த பாக்தாதியை, கடந்த 26ம் தேதி அமெரிக்கா ராணுவம் சுற்றிவளைத்தபோது, உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்து பாக்தாதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ரகசிய உளவாளியாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் செயல்பட்டு வந்த ஒருவர் செயல்பட்டதாக கூறப்படுகிறது. பாக்தாதியின் நடமாட்டத்தை துல்லியமாக அதிகாரிகளுக்கு தெரிவித்த அவருக்கு 177 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரது உறவினர் ஒருவரை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு கொலை செய்ததற்கு பழிதீர்க்கவே பாக்தாதியை  காட்டிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

https://www.polimernews.com/dnews/86726/பாக்தாதியைகாட்டிக்கொடுத்தஉளவாளிக்கு-ரூ.177-கோடி-பரிசுதொகை

  • கருத்துக்கள உறவுகள்

 

 

அமேரிக்காவின் இராணுவ அமைப்பு வெளியிட்ட ஒளிப்பதிவு 

 

 

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தலைவனின் இருப்பிடத்தை கண்டறிந்த நாய்க்கு பதக்கம்

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் பாக்தாதியின் இருப்பிடத்தை அடையாளம் காட்டிய மோப்ப நாய்க்கு, பதக்கம் அணிவிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.


சிரியாவில் அமெரிக்க படைகள் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, சுரங்கத்திற்குள் தப்பி சென்ற பாக்தாதியை அமெரிக்க ராணுவத்தின் மோப்ப நாய் அடையாளம் காட்டியது. இந்நிலையில் பயங்கரவாதியை அழிக்கும் செயலுக்கு உதவிய மோப்ப நாயை கவுரவிக்கும் விதமாக, தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

வியாட்நாமில் அமெரிக்கா நடத்திய போரின்போது, சகவீரர்கள் 10 பேரை காப்பாற்றிய அமெரிக்க வீரர் ஜேம்ஸ் மெக்லோகனுக்கு Medal of Honor விருது வழங்கப்பட்டது. அந்த படத்தை ஃபோட்டோ ஷாப் செய்த டிரம்ப், மெக்லோகனுக்கு பதிலாக பக்தாதியை துரத்திய நாய் படத்தை வைத்து பதிவிட்டுள்ளார்.

https://www.polimernews.com/dnews/86901/ஐ.எஸ்-பயங்கரவாத-அமைப்புதலைவனின்-இருப்பிடத்தைகண்டறிந்த-நாய்க்கு-பதக்கம்

 

Just now, ampanai said:

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் பாக்தாதியின் இருப்பிடத்தை அடையாளம் காட்டிய மோப்ப நாய்க்கு, பதக்கம் அணிவிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

ஆனால், இது முன்னைய ஒரு திரிபு படுத்தப்பட்ட படம் என கூறப்படுகின்றது.  

EIJQLnVX0AEyJCu.jpg 

https://twitter.com/realDonaldTrump/status/1189601417469841409?ref_src=twsrc^tfw|twcamp^tweetembed&ref_url=https%3A%2F%2Fwww.foxnews.com%2Fmedia%2Ftrump-medal-of-honor-dog-baghdadi

https://www.foxnews.com/media/trump-medal-of-honor-dog-baghdadi

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ampanai said:

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தலைவனின் இருப்பிடத்தை கண்டறிந்த நாய்க்கு பதக்கம்

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் பாக்தாதியின் இருப்பிடத்தை அடையாளம் காட்டிய மோப்ப நாய்க்கு, பதக்கம் அணிவிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

இது ஒரு பொய் செய்தி https://www.nytimes.com/2019/10/30/us/politics/trump-dog.html

5 minutes ago, பெருமாள் said:

இது ஒரு பொய் செய்தி https://www.nytimes.com/2019/10/30/us/politics/trump-dog.html

 

யாழ் களத்தில் பொய்ச்செய்திகளுக்கு இடமில்லை 🙂 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ampanai said:

 

யாழ் களத்தில் பொய்ச்செய்திகளுக்கு இடமில்லை 🙂 

இங்கு சிலர் தாங்கள் எழுதும் கருத்தே பொய் என்று தெரிந்தும் எழுதுபவர்கள் உண்டு பாஸ் அதை பார்க்கையில் இதெல்லாம் ஜூ ஜுப்பி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.