Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லியின் வாயு மாசுபாட்டால் கொழும்பிலும் பாதிப்பு

Featured Replies

டெல்லியின் வாயு மாசுபாட்டால் கொழும்பிலும் பாதிப்பு
Editorial   / 2019 நவம்பர் 06 , பி.ப. 01:15 - 0      - 18
கொழும்பு நகரின் வாயு மாசுபாடு சாதாரண நிலையை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் டெல்லி நகரத்தில்  வாயு மாசுபாடு அதிகரித்ததன் காரணமாக கொழும்பில் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக  தேசிய கட்டிட ஆராச்சி நிறுவனத்தின் சுற்றுச்சூழல் ஆய்வுகள் துறையின் மூத்த ஆய்வாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் டெல்லி நகரத்தில்  வாயு மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில் அந்த நகரை அண்மித்த பகுதிகளில் பொதுமக்களின் சுகாதாரம் தொடர்பான அவசரகால நிலையை பிரகடனப்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு சுவாச பிரச்சினைகள் உள்ளவர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/டலலயன-வய-மசபடடல-கழமபலம-பதபப/175-240749

 

டெல்லி காற்று மாசு: 'கருவில் இருக்கும் சிசுவையும் காற்று மாசு பாதிக்கும்' - தப்பிக்க என்ன வழி?

காற்று மாசுபாடு அபாயகரமான அளவை எட்டிய மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால், கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஆபத்து இருக்கும் என்றும் தொடர்ந்து மாசுபட்ட சூழல் நீடித்தால் குழந்தையின் வளர்ச்சி தடைபடும் வாய்ப்புள்ளது என்றும் தமிழக அரசின் நெஞ்சக மருத்துவ நிலைய இயக்குனர் மகிழ்மாறன் தெரிவிக்கிறார்.

சென்னையிலும் சமீப நாட்களில் வழக்கத்துக்கும் அதிகமான அளவு காற்று மாசு உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. சென்னையில் பனிக்காலம் தொடங்கியுள்ளதால், காற்றில் உள்ள மாசை உண்டாக்கும் துகள்கள் கலையாமல், மாசை அதிகரிக்கச் செய்கின்றன என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சில ஊடங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

டெல்லியில் நிலவிவரும் மாசுபாடு ஏற்கனவே நோயாளியாக இருப்பவர்களை மேலும் மோசமாக பாதிக்கும் என்றாலும், கருவில் இருக்கும் குழந்தைக்கு இந்த மாசுபாடு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார் மகிழ்மாறன்.

டெல்லியில் பொது சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நகரத்தில் வசிப்பது ஒரு 'கேஸ் சேம்பரில்' இருப்பதுபோல உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிடுகிறார்கள். அந்த நகரத்தில் உள்ள குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்கிறார் மருத்துவர் மகிழ்மாறன்.

''குழந்தைகளுக்கு உறுப்புகள் முழுமையாக வளர்ச்சி பெறாமல் இருக்கும். தாய் சுவாசிப்பதில் இருந்து தனக்கான காற்றை கருவில் உள்ள குழந்தை எடுத்துக்கொள்ளும். அந்த காற்றில் மாசுபாடு அதிகம் இருந்தால்,அந்த குழந்தைக்கு கிடைக்கும் ஆக்சிஜனின் அளவு குறையும். இதனால், பிறக்கும் குழந்தையின், அளவு சிறியதாக இருக்க வாய்ப்புள்ளது. அந்த குழந்தையின் வளர்ச்சி தடைபடும்,''என்கிறார் அவர்.

 

முகமூடி அணிந்துகொள்வதாலோ, காற்றை சுத்தப்படுத்தும் இயந்திரத்தை வீட்டில் வைத்துக்கொள்வதாலோ காற்று மாசுபாட்டில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்ற கருத்து நிலவுவது பற்றி கேட்டபோது, ''முகமூடி அணிந்துகொள்வது, வீட்டில் சுத்திகரிப்பு இயந்திரம் வைத்துக்கொள்வது எல்லாம் இரண்டாம் கட்ட உதவியாகத்தான் இருக்கும். முடிந்தவரை வெளியில் அதிகம் செல்லாமல் இருப்பது நல்லது. இயந்திரம் மூலம் முழுமையாக தூய்மையான காற்றை பெறமுடியுமா என்பது சந்தேகம்தான். அந்த இயந்திரம் எவ்வளவு கொள்ளளவு காற்றை சுத்தப்படுத்திக் கொடுக்கும், அது வீட்டு அறையின் அளவுக்கு பொருத்தமானதா என்பதைப் பார்க்கவேண்டும். ஆனாலும்கூட, இயந்திரம் தீர்வல்ல,''என்கிறார் மருத்துவர் மகிழ்மாறன்.

 

முகமூடி அணிபவர்கள் முகத்தின் அளவுக்கு ஏற்றவாறு அணிகிறார்களா, அதனை தூய்மையாக வைத்திருக்கிறார்களா என்பது முக்கியம் என்கிறார். ''குறைந்தபட்சம் சத்தான உணவுகளை, காய்கறிகளை எடுத்துக்கொள்ளவேண்டும். காரட், முட்டைகோஸ் போல வண்ணமான காய்கறிகள், ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்து நிறைந்த காய்கறிகளை எடுத்துக்கொள்ளவேண்டும். வெளியிடங்களுக்குச் செல்வதை குறைப்பது போன்றவற்றை செய்யலாம். அடுத்த ஆண்டாவது இந்த மாசுபாடு ஏற்படுவதை தடுப்பது மட்டும்தான் ஒரே தீர்வு,''என்கிறார் மகிழ்மாறன்.

காற்றில் தூசியின் அளவானது 100குள் இருந்தால், பிரச்சனை இல்லை என்றும் 100 முதல் 200ஆக இருந்தால், குழந்தைகள், வயதானவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும் என்றும் அவர் கூறுகிறார். ''தற்போது டெல்லியில் மாசுபாட்டின் அளவு 400கும் மேலாக உள்ளது என்பது மோசமான அளவு. அதனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த மாசுபட்ட காற்றில் உள்ள தூசியை தொடர்ந்து சுவாசித்தால், நோயாளியாக இல்லாதவர்களுக்கு கூட, நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதற்கு அதிகவாய்ப்பு உள்ளது. ஆஸ்துமா நோயாளிகள் மிகவும் சிரமப்படுவார்கள், வயதானவர்களின் உடல் உறுப்புக்கள் ஏற்கனவே சத்து குறைந்திருக்கும் என்பதால், இந்த ஆபத்தான அளவு அவர்களுக்கு மேலும் உடல் நலக் குறைவை ஏற்படுத்தும்,'' என்கிறார் மகிழ்மாறன்.

https://www.bbc.com/tamil/india-50292836

  • தொடங்கியவர்

டெல்லியை தொடர்ந்து சென்னையிலும் காற்று மாசு அதிகரிப்பு: மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்..அச்சத்தில் சென்னைவாசிகள்

அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அறுவடைக்கு பின் மீதமுள்ள பயிர்களின் அடிப்பகுதி, வேரை மறுமுறை எரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் அங்கு ஒவ்வொரு ஆண்டும் அறுவடை காலத்தின்போது, காற்று  மாசு ஏற்படுகிறது. இப்படி எரிப்பதை தவிர்க்கும்படி பஞ்சாப், அரியானா மாநில அரசுகளை டெல்லி அரசு கேட்டுக்கொண்டது. ஆனாலும் அறுவடைக்குபின், காய்ந்த பயிர்களின் அடிப்பகுதியை எரிப்பது தொடர்ந்து வருகின்றன. இதனால் நவம்பர்  8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு டெல்லி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், காற்றுமாசு விவகாரம் தொடர்பாக பஞ்சாப், அரியானா தலைமை செயலாளர்கள், டிஜிபிக்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது, பயிர்க்கழிவுகள் எரிப்பைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 6-ம் தேதி நேரில் ஆஜராகி  விளக்கமளிக்க, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச தலைமைச் செயலாளருக்கு சம்மன் அனுப்ப நீதிபதிகள் ஆணையிட்டனர்.

இதற்கிடையே, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதள பக்கத்தில் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதை நேற்று உறுதிப்படுத்தியது. அதே நேரத்தில் சென்னையில் 150க்குகீழ் என்ற நிலையில் இருந்த காற்று மாசின் அளவு  அதிகரித்து, தற்போது சென்னையில் அதிகபட்சமாக 201 முதல் 168 வரை உள்ளது. சென்னையின் வழக்கமான காற்றுமாசின் அளவு 0-150 என்ற அளவில் இருந்தது. இந்நிலையில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.  இந்நிலையில், சென்னையில் பரவலாக காற்று மாசு மோசமான அளவுக்கு அதிகரித்துவிட்டதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. மூச்சுத் திணறல் ஏற்படும் அளவுக்கு காற்றில் கலந்துள்ள மாசுத்துகள் 224 பிபிஎம்  ஆக அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=538956

  • தொடங்கியவர்

காற்று மாசுக்கு பாகிஸ்தானும் சீனாவும்தான் காரணம் : பாஜக நிர்வாகி பேச்சு

டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபட்டு வருகிறது. இதற்கு பாகிஸ்தானும் சீனாவும் காரணம் என்று உத்திர பிரதேச பாஜக மூத்த தலைவர் வினித் அகர்வால் ஸ்ரதா புகார் கூறியுள்ளார். 

இது குறித்து மீரட்டின் பாஜக தலைவரான வினித் அகர்வால் கூறியதாவது;

“இந்தியாவை பார்த்து பாகிஸ்தானும் சீனாவும் அஞ்சுகிறது. பிரதமர் மோடியும் அமித் ஷாவும் ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் விரக்தி உருவாகியுள்ளது. அதனால் நம் நாட்டில் பாகிஸ்தான் நச்சு வாயுவை கசிய வைத்து டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் காற்றை மாசுபட வைக்கிறது. இது தெரியாமல் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த மாசுக்களுக்கு விவசாயிகள் எரிக்கும் வயல்வெளி காரணம் எனத் தவறாக எண்ணி வருகிறார். விவசாயி நம் நாட்டின் முதுகெலும்பாகும் அவர்களை குறை கூறக்கூடாது “ எனத் தெரிவித்துள்ளார். 

மகாபாரத கிருஷ்ணர் மற்றும் அர்ஜூனர் போல பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகிய இரு தலைவர்களும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க வல்லவர்கள் என்றும் பாஜக தலைவர் கூறினார். 

https://www.ndtv.com/tamil/pakistan-china-may-have-released-poisonous-gas-to-pollute-air-in-india-says-bjp-leader-read-it-2128122?pfrom=home-topstories

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ampanai said:

காற்று மாசுக்கு பாகிஸ்தானும் சீனாவும்தான் காரணம் : பாஜக நிர்வாகி பேச்சு

டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபட்டு வருகிறது. இதற்கு பாகிஸ்தானும் சீனாவும் காரணம் என்று உத்திர பிரதேச பாஜக மூத்த தலைவர் வினித் அகர்வால் ஸ்ரதா புகார் கூறியுள்ளார். 

இது குறித்து மீரட்டின் பாஜக தலைவரான வினித் அகர்வால் கூறியதாவது;

“இந்தியாவை பார்த்து பாகிஸ்தானும் சீனாவும் அஞ்சுகிறது. பிரதமர் மோடியும் அமித் ஷாவும் ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் விரக்தி உருவாகியுள்ளது. அதனால் நம் நாட்டில் பாகிஸ்தான் நச்சு வாயுவை கசிய வைத்து டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் காற்றை மாசுபட வைக்கிறது. இது தெரியாமல் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த மாசுக்களுக்கு விவசாயிகள் எரிக்கும் வயல்வெளி காரணம் எனத் தவறாக எண்ணி வருகிறார். விவசாயி நம் நாட்டின் முதுகெலும்பாகும் அவர்களை குறை கூறக்கூடாது “ எனத் தெரிவித்துள்ளார். 

மகாபாரத கிருஷ்ணர் மற்றும் அர்ஜூனர் போல பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகிய இரு தலைவர்களும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க வல்லவர்கள் என்றும் பாஜக தலைவர் கூறினார். 

https://www.ndtv.com/tamil/pakistan-china-may-have-released-poisonous-gas-to-pollute-air-in-india-says-bjp-leader-read-it-2128122?pfrom=home-topstories

ஒரு நாள்.....,
விடியும்....விடியும்...,
என்றிருந்தேன்.....!

என்றும் ...,
விடியாத தேசம் என...,
இன்றறிந்தேன்....!

  • தொடங்கியவர்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ampanai said:

காற்று மாசுக்கு பாகிஸ்தானும் சீனாவும்தான் காரணம் : பாஜக நிர்வாகி பேச்சு

 

2 hours ago, புங்கையூரன் said:

ஒரு நாள்.....,
விடியும்....விடியும்...,
என்றிருந்தேன்.....!

என்றும் ...,
விடியாத தேசம் என...,
இன்றறிந்தேன்....!

கையோடை... கைமாரிசு, என்ற மாதிரி.... 
அவங்களும்... இதுக்குள்ளை சீனாவையும், பாகிஸ்தானையும் இழுத்து விட்டால் தானே... 
தாங்களும் தப்பலாம். இந்திய அரசியலில்... இதெல்லாம்  சகஜமப்பா. :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.