Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலைஞனே தெளிவுபடுத்துங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வலைஞன் அவர்களே நீங்கள் புதிய கள நிபந்தனைகளில் உரையாடலின்போது நீ அவன் அவள் அவன் என்ற சொற்களை பாவிக்க கூடாது என்று கூறியிருக்கின்றீர்கள். நல்லவிடயம் வரவேற்கின்றேன்.

ஆனால் நீர் உமது உமக்கு உம்முடைய என்ற சொற்களையும் பாவிக்கவேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அவை மரியாதையற்ற சொற்களா?

இந்த சொற்கள் பெரியவர்கள் சிறியவர்களை மரியாதையாக விளிப்பதான சொற்கள் நீங்கள் இதை தெரிந்துகொண்டுதான் தடைசெய்கின்றீர்களா?

அவைபற்றி விளங்கிக்கொண்டு அவற்றின் தடைகளை நீக்குவது உங்கள் பதவிக்கு பெருமையாக இருக்கும் என நம்புகின்றேன்.

நீங்கள் கோபப்படாமல் என் கேள்வியில் இருக்கும் நியாயத்தை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள் என நினைக்கின்றேன்.

சந்தேகங்களுடன் களத்தில் கருத்தெழுதிக்கொண்டிருந்தால

  • கருத்துக்கள உறவுகள்

உங்களால் கூறப்பட்ட இந்தச் சொற்கள் எழுத்துப் பாவனையில் பாவிப்பது ஒரு கௌரவக்குறைப்பு மாதிரித்தான் புலன்படுகின்றது.

எனது கருத்துப்படி இவை நீக்கியதில் பெரிதாக பாதிப்பில்லைத்தானே?

வியாசன் உங்கள் கருத்துப்படி பார்த்தால் எனது ஆசிரியர் எனக்கு தவறாக கற்பித்துள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நீர் - நீ,

உமது - உனது,

உமக்கு - உனக்கு

என்றுதான் நான் கற்றுள்ளேன்

நீவீர் - நீங்கள்,

உங்கள் - உங்கள்,

உங்களுக்கு - உங்களுக்கு

எனக்குத் தெரிந்ததை, நான் கற்றதைக் கூறினேன் அவ்வளவுதான்.

நானும் இவ்வளவு நாளும் இப்படித்தான் நினைச்சன். சந்தேகத்தில் இப்ப அம்மாவிடம் இதைக் கேட்டன் , நீங்க சொன்னமாதிரி தான் சொன்னாங்க..... :lol: வியாசன் அண்ணாக்கு எப்படி இது தெரியாமல் போச்சு. <_<

  • கருத்துக்கள உறவுகள்

வியாசன் உங்க சந்தேகம் நியாயமானது தான்.

நீர் உமது உமக்கு உம்முடைய என்ற சொற்கள் மரியாதைக்குறிய சொற்களாய் இருந்தாலும்,

பொதுப்படையாக உரையாடும் போது, அல்லது வானொலி நிகழ்ச்சியின் போது கூட நீர், உமது, உம்முடைய சொற்கள் பாவனையில் தவிர்க்கப்பட்டவையாக இருக்கின்றது. அதனைக் கருத்திற் கொண்டு தானாக்கும் யாழ்களத்திலும் தடைசெய்திருக்கிறார்கள் எண்டு நினைக்கிறன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் தவறாக புரிந்து கொள்கின்றீர்கள்

உ+ம்- திருவிளையாடல் படத்தில் தருமியின் உரையாடலை மனதில் மறுபடியும் கொண்டு வந்து பாருங்கள். நக்கீரனுடன் சிவன் உரையாடும் உரையாடலை மனதில் கொண்டு வந்து பாருங்கள் அப்படியானால் அவை மரியாதை குறைவான சொற்களா?

நீங்கள் ஒருவிடயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும் நான் குறிப்பிட்டது போல் பெரியவர்கள் சிறியவர்களை விளிக்கும்போது (மரியாதையாக ) நீங்கள் என்று கூறுவதில்லை. நீர் என்றுதான் கூறுவார்கள்.

வணக்கம் கறுப்பி அனிதா மற்றும் தூயா தங்கைகளை காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

தம்பி விசயன்

இது வந்து ஒரு சிக்கலான விடயம்

நீர் - நீ,

உமது - உனது,

உமக்கு - உனக்கு

இந்த 3 மே தமிழ் பாவிப்பது குறைவு மரியாதையான சொல்லாக

உதரணத்துக்கு ஒருவருக்கு மரியாதை கொடுக்க விருப்பம் இல்லை என்றால் ' நீர் உமது உமக்கு' என்று நாம் கொடுக்கிறோம் அதே போல அடக்குமுறை சிந்தனையோடு பேசுபவர்களும் இந்த 3 சொற்களை பாவிப்பார்கள்( அடக்குமூறை எனபது சாதி அடிபடையில் மட்டும் இல்லை ஆண் பெண் என்பது போல பெரியவர் சிறியவர் என்ற முறையிலும்)

என்ன அறிவு வடிவேலுக்கு நிச்ச்யம் டக்க்டர் பட்டம் கொடுக்கலாம் ஆனால் தயவு செய்து மருத்துவர்[மாட்டு டாக்குத்தர் என நினைக்க போறாங்கள்] என்ற உங்கள் பட்டத்தை கலாநிதி என மாற்றுங்கள்

வேந்தரால் எனக்கு அழிக்கப்பட்ட அதிகாரத்துக்கு அமைய வடிவேல் அவர்களுக்கு கலாநிதி பட்டத்தை ஈழவன்85 பல்கலைகழகம்[ஈழவன்85 ஒரு பல்கலை கழகம் நம்புங்கப்பா:lol:]வழ்ங்குவதில் பெருமை அடைகின்றது

தம்பி விசயன்

இது வந்து ஒரு சிக்கலான விடயம்

நீர் - நீ,

உமது - உனது,

உமக்கு - உனக்கு

இந்த 3 மே தமிழ் பாவிப்பது குறைவு மரியாதையான சொல்லாக

உதரணத்துக்கு ஒருவருக்கு மரியாதை கொடுக்க விருப்பம் இல்லை என்றால் ' நீர் உமது உமக்கு' என்று நாம் கொடுக்கிறோம் அதே போல அடக்குமுறை சிந்தனையோடு பேசுபவர்களும் இந்த 3 சொற்களை பாவிப்பார்கள்( அடக்குமூறை எனபது சாதி அடிபடையில் மட்டும் இல்லை ஆண் பெண் என்பது போல பெரியவர் சிறியவர் என்ற முறையிலும்)

ஜயா வடிவேலு..இப்படியான வார்த்தைகளற் அல்லது சொற்கள் வெறுமனே அடக்கு முறைக்க மட்டும் பயன் படுத்தவில்லை மாறாக

நேர் எதிரே கூடலுக்கும் ஊடலுக்கும். குழவுதலுக்கும். பாவிக்கப் படுகிறது. முற்காலம் தொட்டு

இக்காலம் வரை. ஆனால் தற்காலத்தில் இவை அதிகரித்து காணப்படுவதை கண்கூடு பார்க்க முடிகிறது.

இது காதலர்களிடம். மற்றும் நட்ப்புக்கள் இடையில் பெரிதும் காணப்படுகிறது.

ஆனால் இவ்வாறான சொற்பதத்தை திட்டமிட்டு இதற்கு தான் பயன் படுத்துகிறார்கள் என்ற அகந்தை பேச்சை மாற்றுங்கள்...

Edited by vanni mainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

- எழுத்துத் தமிழ் பேச்சுத் தமிழ்

ஒருமை பன்மை ஒருமை பன்மை

தன்மை நான் நாங்கள் நான் நாங்கள், நாங்க

முன்னிலை நீ நீங்கள் நீ நீங்கள், நீங்க

- - நீர் நீர்

படர்க்கை ஆண்பால் (அ.சுட்டு) இவன் - இவன் இவங்கள்

ஆண்பால் (சே.சுட்டு) அவன் - அவன் அவங்கள்

ஆண்பால் (மு.சுட்டு) - - உவன் உவங்கள்

பெண்பால் (அ.சுட்டு) இவள் - இவள் இவளவை

பெண்பால் (சே.சுட்டு) அவள் - அவள் அவளவை

பெண்பால் (மு.ச்சுட்டு) - - உவள் உவளவை

பலர்பால் (அ.சுட்டு) - இவர்கள் - இவையள்

பலர்பால் (சே.சுட்டு) - அவர்கள் - அவையள்

பலர்பால் (மு.ச்சுட்டு) - - - உவையள்

அஃறிணை (அ.சுட்டு) இது இவை இது இதுகள்

அஃறிணை (சே.சுட்டு) அது அவை அது அதுகள்

அஃறிணை (மு.சுட்டு) - - உது உதுகள்

இதுதான் இலக்கணவிதி, இதில் நீர் என்பது இலக்கணபடி பன்மையாகவும் வருகிறது, மரியாதைக்காக ஒருவனை நீங்கள் என இலக்கணப்பிழையாக எழுதச்சொல்லும் நீங்கள். இலக்கணப்படி பன்மையாக வரும் நீர் என்ற சொல்லை தவிர்கசொல்லுவது எந்தவகையில் நியாயம், ஈழத்தில் சில பிரதேசங்களில் நீர் என்ற சொற்பதமே பாவிக்கப்படுகிறது இதை யாரும் மரியாதை குறைவான சொல்லாக பார்ப்பதிலை, யாழ்களத்துக்காக எமது சுயத்தை நாம் இழப்பதா?

ஆதாரம் விக்கிபீடியா

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%....AE.B3.E0.AF.8D

Edited by சித்தன்

ஜயா வடிவேலு..இப்படியான வார்த்தைகளற் அல்லது சொற்கள் வெறுமனே அடக்கு முறைக்க மட்டும் பயன் படுத்தவில்லை மாறாக

நேர் எதிரே கூடலுக்கும் ஊடலுக்கும். குழவுதலுக்கும். பாவிக்கப் படுகிறது. முற்காலம் தொட்டு

இக்காலம் வரை. ஆனால் தற்காலத்தில் இவை அதிகரித்து காணப்படுவதை கண்கூடு பார்க்க முடிகிறது.

இது காதலர்களிடம். மற்றும் நட்ப்புக்கள் இடையில் பெரிதும் காணப்படுகிறது.

ஆனால் இவ்வாறான சொற்பதத்தை திட்டமிட்டு இதற்கு தான் பயன் படுத்துகிறார்கள் என்ற அகந்தை பேச்சை மாற்றுங்கள்...

திருவாளர் இனப்பெருக்க ஆய்வாளரும் மற்றும் காமக்காய்வளரும் ஆனா எங்கள் வன்னி மைந்தனே

கதலர்கலிடம் காமம் வெறியேறினால் இதைவிடவும் அழைப்பார்கள் அதுவும் அண்ணனுக்கு வெறி என்று அண்ணிக்கு காதல் சொல்லி கொடுக்கும் கயவர்களும் காமத்தை காதலெ ன்ர புனிதபாலால் கழுவி தான் ஆசையாக திர்த்தம் கொடுக்கிறார்கள்

காமம் இல்லாத காதலில் ஒருமை என்பதில் இல்லை ஆனா காமபசி திர்க்க காதலிக்கும் காதலர்கள் ஒருமையில் கொஞ்சுவார்கள் தாகத்தொடு இருப்பதால் :P

துலைச்சுது போ!! இண்டைக்கு வலைஞன் "நீ, அவன், அவள், ..." பான்ட் பண்ணீட்டார்!!! நாளைக்கு யா...பாடி வந்து "நான்" என்று எழுதினால் கத்தியைப் போடப் போறார்!!!! உந்த வருத்தம் முத்திச்சுதோ, யாழில் இருக்கிற தமிழ்ச் சொல்லெலாத்துக்கும், உந்த சம்பளமற்ற கூட்டம் முழு சென்ஸஸிப் போட்டுடும்!!!! யாரைச் சொல்லி அழுவது????? ;)

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் உங்கள் போன்றன மிகவும் மரியாதைக்குரிய சொற்களாகவே பாவிக்கப்பட்டு வருகின்றன. அதை இக்களத்திலும் தீவிரமாக நடைமுறைப்படுத்துதல் வரவேற்கத்தக்கது.

இரட்டை அர்த்தம் தொனிக்கத் தக்க நீர் உமது உன் போன்றவற்றை தவிர்த்து சிக்கல்களை சீண்டல்களை தொடர்வதை நிறுத்துவதை கள நிர்வாகம் தீவிரமாக தொடர வேண்டும். நீங்கள் உங்கள் என்று எழுதுவதில் யாருக்கும் பிரச்சனை இருக்க வாய்ப்பில்லை. ஆனால் நீர் உமது உனது உம் போன்றவை தரக்குறைவாக நோக்கப்படவும் பாவிக்கப்படவும் வாய்ப்பதிகம். பலர் அப்படிப் பாவிப்பதை நங்கே அவதானித்துதான் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது என்றே கருத வேண்டி உள்ளது.

அதுமட்டுமன்றி நீர் உமது என்பவை ஒருமைக்கும் விளிக்கக் கூடிய சொற்கள்..! அவற்றை நிச்சயம் தவிர்ப்பதால் குழப்பங்களும் குழப்படிகளும் தவிர்க்கப்படும். களமும் கருத்தாடலும் சுமுகமாக அமையும்..! :huh: :P

துலைச்சுது போ!! இண்டைக்கு வலைஞன் "நீ, அவன், அவள், ..." பான்ட் பண்ணீட்டார்!!! நாளைக்கு யா...பாடி வந்து "நான்" என்று எழுதினால் கத்தியைப் போடப் போறார்!!!! உந்த வருத்தம் முத்திச்சுதோ, யாழில் இருக்கிற தமிழ்ச் சொல்லெலாத்துக்கும், உந்த சம்பளமற்ற கூட்டம் முழு சென்ஸஸிப் போட்டுடும்!!!! யாரைச் சொல்லி அழுவது????? ;)

தம்பி நீர் நீ என்று எழுதுவதால் வந்த பிரச்ச்னையல்ல தானே அவர்கலும்ம் பொட தடா சட்டங்களை போட்டாவது யாழை நல்வழியில் கொண்டு செல்கிறார்கள்.

போக போக பிரச்சனைகள் குறை கண்டும் காணமவிடுவார்கள்

இப்ப என்ன உங்களுக்கு யாரையாவது நீ போட வாடா என்று கூப்பிடனுமா?

அண்ணாவை கூப்பிடு அது தான் உங்கள் ஆசை என்றால் கூப்பிட்டு போன்கோ என்ன வந்தது?

நான் வீட்டில் மனைவி கூப்பிடாலே திருப்பி பேசுவது இல்லை நீங்கள் கூப்ப்பிட்டால ஏதும் சொல்ல போறேன்?

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் உங்கள் போன்றன மிகவும் மரியாதைக்குரிய சொற்களாகவே பாவிக்கப்பட்டு வருகின்றன. அதை இக்களத்திலும் தீவிரமாக நடைமுறைப்படுத்துதல் வரவேற்கத்தக்கது.

இரட்டை அர்த்தம் தொனிக்கத் தக்க நீர் உமது உன் போன்றவற்றை தவிர்த்து சிக்கல்களை சீண்டல்களை தொடர்வதை நிறுத்துவதை கள நிர்வாகம் தீவிரமாக தொடர வேண்டும். நீங்கள் உங்கள் என்று எழுதுவதில் யாருக்கும் பிரச்சனை இருக்க வாய்ப்பில்லை. ஆனால் நீர் உமது உனது உம் போன்றவை தரக்குறைவாக நோக்கப்படவும் பாவிக்கப்படவும் வாய்ப்பதிகம். பலர் அப்படிப் பாவிப்பதை நங்கே அவதானித்துதான் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது என்றே கருத வேண்டி உள்ளது.

அதுமட்டுமன்றி நீர் உமது என்பவை ஒருமைக்கும் விளிக்கக் கூடிய சொற்கள்..! அவற்றை நிச்சயம் தவிர்ப்பதால் குழப்பங்களும் குழப்படிகளும் தவிர்க்கப்படும். களமும் கருத்தாடலும் சுமுகமாக அமையும்..! :icon_idea: :P

அதாவது தேவைப்படும் இடத்தில் இலக்கணப்பிழையை அனுமதிக்கலாம் என்கிறீர்கள், இந்த பிழையை அனுமதிக்கும் செயல் எல்லா தேவையான இடத்திலும் அனுமதிக்கப்படுமா? :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது தேவைப்படும் இடத்தில் இலக்கணப்பிழையை அனுமதிக்கலாம் என்கிறீர்கள், இந்த பிழையை அனுமதிக்கும் செயல் எல்லா தேவையான இடத்திலும் அனுமதிக்கப்படுமா? <_<:lol::lol:

எல்லா மொழிகளிலும் அவற்றின் சிறப்புக் கருதி அங்கீகரிக்கப்பட இலக்கண வழு அமைதிகள் உண்டு. தமிழிலும் உண்டு. அங்கீகரிக்கப்பட வழுவமைதிகள் மொழியின் சிறப்புக்கு அவசியம். மொழி மனிதர்களிடையே வெறும் தகவல்களை மட்டும் பரிமாறுவதில்லை உணர்வுகளையும் பரிமாறிக் கொள்ள உதவுவது..! :rolleyes:

நீங்கள், உங்கள் சரி இலக்கணவழு அமைதிகள்.

நீர் என்ன இலக்கணவழு அமைதியா? நீர் என்பது சரியான இலக்கணம் அல்லவா? இலக்கணவழு அமைதியை ஏற்கும் நீங்கள் சரியான இலக்கணத்தை மறுப்பது ஏன், நீர் என்பது ஈழாத்தின் சில வட்டார வழக்கு, யாழ்களம் என்பதால் யாழ்ப்பான பேச்சுவழக்குதான் அனுமதிக்கப்படுமா? இது யாழ்மேலாதிக்கம் இல்லையா? <_<:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள், உங்கள் சரி இலக்கணவழு அமைதிகள்.

நீர் என்ன இலக்கணவழு அமைதியா? நீர் என்பது சரியான இலக்கணம் அல்லவா? இலக்கணவழு அமைதியை ஏற்கும் நீங்கள் சரியான இலக்கணத்தை மறுப்பது ஏன், நீர் என்பது ஈழாத்தின் சில வட்டார வழக்கு, யாழ்களம் என்பதால் யாழ்ப்பான பேச்சுவழக்குதான் அனுமதிக்கப்படுமா? இது யாழ்மேலாதிக்கம் இல்லையா? :rolleyes:<_<

நீங்கள் நாங்கள் என்பது பன்மை விகுதிகளைக் கொண்டிருப்பினும் உயர்வுக்காக உயர்திணை ஒருமைக்கும் பயன்படுத்துகின்றனர். தமிழில் மட்டுமே (நாமறிந்தவரை) உயர்திணை அக்றிணை விகுதி வேறுபாடுகள் உண்டு. தமிழ் உயர்திணைக்கு ஒரு வடிவமும் அக்றிணைக்கு ஒரு வடிவமும் வழங்குதல் கூட மேலாதிக்கமா..??!

நீர், நீ என்பது உயர்திணை தாழ்வுச் சொல்லாக நோக்கப்படுவதால்.. அதை ஒருமைக்கு விளிக்க உபயோகிப்பதை உயர்வுநிலையில் வைத்து நோக்குவதில்லை.!

இந்தச் சொற்கள் எவையும் அக்றிணையைக் குறிக்கப் பயன்படுத்துவதில்லை. எனவேதான் உயர்திணைக்கு உயர்வுச் சொல்லாக நீங்கள் நாங்கள் பன்மை விகுதி கொண்டு ஒருமைக்கும் பன்மைக்கும் பாவிக்கின்றனர்..! அது வரவேற்கப்பட வேண்டியது. நீர் என்பதை உயர்திணை தாழ்வுச் சொல்லாக பன்மைக்கும் நீ என்பதை ஒருமைக்கும் பாவிக்கின்றனர்..!

மொழியின் கையாளல் மொழிக்கு சிறப்பையும் விளிப்போனை உயர்த்துவதாகவும் அமைவதால்.. உயர்திணை ஒருமையை குறிக்கவும் பன்மை விகுதி கொண்ட சொற்களான நீங்கள்.. உங்கள் போன்றவை பாவிக்கப்படுகின்றன. அது வழுவமைதிகளாக மொழியைச் சிறப்பிக்கின்றன. இதில் மேலாதிக்க எண்ணக்கருவைப் புகுத்துதல் தவறானது..! தமிழில் இலக்கண வழுவமைதிகள் போல ஆங்கிலத்திலும் உண்டு..! :P :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரர்களே உங்களுக்குள் இப்போது என்ன பிரச்சினை? அண்ணன் சொல்வதும் சரி தம்பி சொல்வதும் சரி.

ஆனால் ஊடகங்களில் பாவிக்கப்படும் சொற்களுக்கும் பேச்சுவழக்கத்தில் பாவிக்கும் சொற்களிற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

நீங்கள் குறிப்பிடும் சொற்களில் பிழையென்று எதுவுமில்லை ஆனால் விதிமுறையைத்தான் முக்கியமாக கவனிக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.