Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கில் தெரு ஓவியங்கள் வரைவதற்கு ஒரு காரணம் இருக்கின்றது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: one or more people, people standing and outdoor
Shalin Stalin is in Jaffna.
 
தெற்கில் தெரு ஓவியங்கள் வரைவதற்கு ஒரு காரணம் இருக்கின்றது.

தெற்கின் இன அழிப்பை, வன்முறையை வெள்ளையடிக்கும் ஒரு propaganda தான் இந்த street arts. தெற்கில் வரையப்படும் ஓவியங்கள் இதனை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டவர்களை, இனங்களுக்கு எதிரான குற்றங்களை, இன வாதத்தை promotion செய்து தங்கள் குற்றங்களை உருமறைக்கும் ஒரு மறைமுக திட்டம் தான் இந்த தெரு ஓவியங்கள்.

ஆனால் வடக்கில் ஓவியங்கள் வரையும் போது நாங்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

போராடும் இனங்கள் தங்கள் கலைகளை வெளிப்படுத்தும் போது அதில் தனித்துவங்கள் பேணப்பட வேண்டும். தெற்கின் propaganda விற்குள் கரைந்துவிட கூடாது.

தெற்கில் வரையப்படும் ஓவியங்களுக்கு ஒரு தேவை இருக்கின்றது.

குற்றங்களை மறைத்தல், குற்றவாளிகளை தேசிய பற்றாளர்களாக உருவமைத்தல்.

ஆனால் வடக்கில் வரையப்படும் ஓவியங்கள் வடக்கின் அழகை மட்டும் வெளிக்காட்டினால் அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் அடிபட்டு போகும். மாறாக அழகோடு வடக்கின் துன்பத்தையும், வரலாற்றையும், விடுதலை வேட்கையையும் வெளிக்காட்ட வேண்டும்.

இந்த இரு தேசங்களுக்கடையிலான வித்தியாசத்தை தெரு ஓவியங்களை வரையும் எங்கள் இளைஞர்கள் விளங்கி கொள்ள வேண்டும். அப்போது தான் சுற்றுலாக்கு வருபவர்கள் இரு தேசங்களிக்கிடையிலான வேறுபாட்டையும் விழங்கி கொள்வார்கள்.

வடக்கின் அழகினையும் வரையுங்கள் அத்தோடு வடக்கின் கண்ணீரையும், வடக்கின் எழுச்சியையும் வரையுங்கள்.

தற்போது உலகில் #modernart பிரபல்யம் அடைகின்றது அதனூடாக எங்கள் விடுதலைப் போரையும், கண்ணீரையும், வரலாற்றையும் ஆபத்தில்லாமல் கூறிவிட முடியும். இந்த modern art இல் கவனம் செலுத்துங்கள்.

தமிழ் உயிர் எழுத்துக்கள்
மாவீரர் கல்லறைகள்
காணாமல் போனார்
அரசியல் கைதிகள்
வரலாற்று இடங்கள்
இயற்கை சார்ந்த இடங்கள் (உ+ம்: வவுனியா வெடுக்குநாறி மலை)
யுத்தத்தின் பின்னரான தமிழர்களின் மீண்டெளல்
யுத்தம்
யாழ்ப்பாணத்தின் தீவுகள்
கல்வியலாளர்கள் (உ+ம்: பேராசிரியர் கைலசபதி போன்றோர்)
விளையாட்டு வீர வீராங்கனைகள்
மதிப்பளிக்கப்பட வேண்டியவர்கள் (மட்டக்களப்பில் தற்கொலை குண்டுதாரியை தடுத்து பல உயிர்களை காப்பாற்றியவர்)

ஆகியவை தொடர்பிலும் கவனம் செலுத்துங்கள்.
கலை என்பது வெறுமனே அழகை மட்டும் கூறுவதில்லை. கலையால் என்னும் ஊடகத்தால் தான் தங்கள் போராட்டங்களை பல்வேறு இனங்கள் இந்த உலகத்திற்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

கலைகளால் போராடுவோம்!

குறிப்பு: உங்கள் ஆரம்ப முயற்சியை குறை கூறுவதாக நினைக்காதீர்கள், ஓவியங்கள் பலம் வாய்ந்தவை அவை கண்ணீரை வெளிக்காட்டவும் கூடியன, கண்ணீரை மறுக்கவும் கூடியன அதனால் தான் அதனை உங்களிடம் கூறியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

குறிப்பு: உங்கள் ஆரம்ப முயற்சியை குறை கூறுவதாக நினைக்காதீர்கள், ஓவியங்கள் பலம் வாய்ந்தவை அவை கண்ணீரை வெளிக்காட்டவும் கூடியன, கண்ணீரை மறுக்கவும் கூடியன அதனால் தான் அதனை உங்களிடம் கூறியுள்ளேன்.

மக்களின் மனநிலை அதாவது சிங்கள மக்களின் மனநிலையென்பது எத்தனை ஆண்டுகள் ஏன் யுகங்கள் போனாலும் மாறாது அப்படி மாறும் என நினைத்திருந்தால் சஜித் வென்று இருப்பார் உதாரணத்துக்கு ஜனாதிபதி தேர்தலில் .

மாற்றம் என்பது இதுதான் நம்ம கோவில் கோபுரங்களில் வர்ணம் பூசுவது போல்தான் சாமிகள் அழகாக இருக்கும் கோபுரங்களும் அழகாக இருக்கும் இருக்கும் கும்பிடும் மக்களும் கும்பிடுவார்கள் ஆனால் கொஞ்ச காலத்தின் பிறகு வர்ணம் மங்கிடும்

  • கருத்துக்கள உறவுகள்
On 12/17/2019 at 11:31 AM, nunavilan said:

ஆனால் வடக்கில் வரையப்படும் ஓவியங்கள் வடக்கின் அழகை மட்டும் வெளிக்காட்டினால் அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் அடிபட்டு போகும். மாறாக அழகோடு வடக்கின் துன்பத்தையும், வரலாற்றையும், விடுதலை வேட்கையையும் வெளிக்காட்ட வேண்டும்.

இந்த இரு தேசங்களுக்கடையிலான வித்தியாசத்தை தெரு ஓவியங்களை வரையும் எங்கள் இளைஞர்கள் விளங்கி கொள்ள வேண்டும். அப்போது தான் சுற்றுலாக்கு வருபவர்கள் இரு தேசங்களிக்கிடையிலான வேறுபாட்டையும் விழங்கி கொள்வார்கள்.

வடக்கின் அழகினையும் வரையுங்கள் அத்தோடு வடக்கின் கண்ணீரையும், வடக்கின் எழுச்சியையும் வரையுங்கள்.

தற்போது உலகில் #modernart பிரபல்யம் அடைகின்றது அதனூடாக எங்கள் விடுதலைப் போரையும், கண்ணீரையும், வரலாற்றையும் ஆபத்தில்லாமல் கூறிவிட முடியும். இந்த modern art இல் கவனம் செலுத்துங்கள்.

தமிழ் உயிர் எழுத்துக்கள்
மாவீரர் கல்லறைகள்
காணாமல் போனார்
அரசியல் கைதிகள்
வரலாற்று இடங்கள்
இயற்கை சார்ந்த இடங்கள் (உ+ம்: வவுனியா வெடுக்குநாறி மலை)
யுத்தத்தின் பின்னரான தமிழர்களின் மீண்டெளல்
யுத்தம்
யாழ்ப்பாணத்தின் தீவுகள்
கல்வியலாளர்கள் (உ+ம்: பேராசிரியர் கைலசபதி போன்றோர்)
விளையாட்டு வீர வீராங்கனைகள்
மதிப்பளிக்கப்பட வேண்டியவர்கள் (மட்டக்களப்பில் தற்கொலை குண்டுதாரியை தடுத்து பல உயிர்களை காப்பாற்றியவர்)

ஆகியவை தொடர்பிலும் கவனம் செலுத்துங்கள்.
கலை என்பது வெறுமனே அழகை மட்டும் கூறுவதில்லை. கலையால் என்னும் ஊடகத்தால் தான் தங்கள் போராட்டங்களை பல்வேறு இனங்கள் இந்த உலகத்திற்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

கலைகளால் போராடுவோம்!

குறிப்பு: உங்கள் ஆரம்ப முயற்சியை குறை கூறுவதாக நினைக்காதீர்கள், ஓவியங்கள் பலம் வாய்ந்தவை அவை கண்ணீரை வெளிக்காட்டவும் கூடியன, கண்ணீரை மறுக்கவும் கூடியன அதனால் தான் அதனை உங்களிடம் கூறியுள்ளேன்

ஓவியங்கள் பலம் வாய்ந்தவை... உண்மைதான்.ஓவியங்கள், புகைப்படங்கள் கூறும் கதைகள் எத்தனை.  நல்லதொரு முயற்சி. 

ஆனால் மழைக்காலத்தில் தொடங்கியதால் சிரமங்களை எதிர்கொள்வதாக நான் கேள்விப்பட்டேன். 

இங்கே கூறுவது போல வடக்கு, கிழக்கு அழகினை, கலைகளை கூற வேண்டும்.

வடக்கில் உள்ள பாடசாலைகள் கூட இதை முன் உதாரணமாக எடுத்து செய்தால் நன்று. இதயங்களும் அம்புக்குறிகளும் தகாத வார்த்தைகளும் சுவர்களை ஆக்கிரமிக்காமல்   வரலாறை மீட்டும் ஓவியங்கள் வரையப்பட்டால் நல்லதுதானே. பழைய மாணவ சங்கங்கள் அனுப்பும் நிதியை  தேவைக்ககு அதிகமாக கட்டடங்கள் கட்டியே அழிக்காமல் இந்த ஓவியங்களை வரையவும் பாராமரிக்கவும் வேறு பயனுள்ள விஷயங்களுக்கும் உபயோகப்படுத்தினால் நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். ஆனால், கொழும்பில் வரையப்படும் சுவரோவியங்களைப் பார்த்தீர்களா? சிங்கள மொழியும், அதன் கலாசாரமும், இவையிரண்டும் பெளத்தத்தோடு எப்படிப் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதைக் காட்டும் முகமாகவே பெரும்பாலான ஓவியங்கள் வரையப்படுகின்றன. ஒரு ஓவியத்தில் 2009 யுத்தவெற்றியும், அருகில் தமிழ்த் தாய் ஒருவரைச் சுமந்துவரும் துப்பாக்கி ஏந்திய சிங்களச் சிப்பாயும் வரையப்பட்டிருக்கிறது.

சிங்களவரின் மனநிலை மாறப்போவதில்லை. எம்மையும் அது மாவீரர் நினைவுகளையோ, தமிழர் சரித்திரத்தையோ மீட்க விடப்போவதில்லை. 

பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மக்கள் 2009ல் போராட்ட சாத்தியங்கள் யாவும்  நிர்மூலமானபின்னரும் புயலில் தீபத்தைக் காப்பாற்றுவதுபோல தேசிய இனத்தன்மையை காப்பாற்றிகொண்டு மெல்ல மெல்ல நிமிர்ந்து வருகின்றனர்.  வரலாற்றின் முள்வேலி களூடாக ஊர்ந்து வெளியேறி மெல்ல நிமிர்கிற எங்கள் மக்களிடம் நிமிர்வது பற்றி நாம் சொல்லவேண்டுமா?  சாத்தியமான வழிகளில் அவர்கள் மெதுவாகவும் நுட்பமாகவும் நிமிர்ந்தே வருகிறார்கள். மீண்டும் பாதுகாப்பு நெருக்கடிகள் அதிகரித்துவரும் காலகட்டத்தில் அவர்கள் எதை வரைந்தாலும் “மீண்டும் நிமிர்கிற மிடுக்கு” நிச்சயம் இலைமறை காயாக இருக்கும். அதானால் நாம் செய்யக்கூடியது உதவுகிறதுதான்.   

  • கருத்துக்கள உறவுகள்
On 12/18/2019 at 6:38 PM, பிரபா சிதம்பரநாதன் said:

ஓவியங்கள் பலம் வாய்ந்தவை... உண்மைதான்.ஓவியங்கள், புகைப்படங்கள் கூறும் கதைகள் எத்தனை.  நல்லதொரு முயற்சி. 

ஆனால் மழைக்காலத்தில் தொடங்கியதால் சிரமங்களை எதிர்கொள்வதாக நான் கேள்விப்பட்டேன். 

இங்கே கூறுவது போல வடக்கு, கிழக்கு அழகினை, கலைகளை கூற வேண்டும்.

வடக்கில் உள்ள பாடசாலைகள் கூட இதை முன் உதாரணமாக எடுத்து செய்தால் நன்று. இதயங்களும் அம்புக்குறிகளும் தகாத வார்த்தைகளும் சுவர்களை ஆக்கிரமிக்காமல்   வரலாறை மீட்டும் ஓவியங்கள் வரையப்பட்டால் நல்லதுதானே. பழைய மாணவ சங்கங்கள் அனுப்பும் நிதியை  தேவைக்ககு அதிகமாக கட்டடங்கள் கட்டியே அழிக்காமல் இந்த ஓவியங்களை வரையவும் பாராமரிக்கவும் வேறு பயனுள்ள விஷயங்களுக்கும் உபயோகப்படுத்தினால் நல்லது. 

ஓவியங்களை ரசிக்கவும் அவை சொல்வதை சிந்திக்கவும் சிங்கள மக்கள் தயார் இல்லை காரணம் இது பெளத்த இலங்கை அதை விட்டு வெளியில் வரமாட்டார்கள் 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 12/29/2019 at 7:31 AM, தனிக்காட்டு ராஜா said:

ஓவியங்களை ரசிக்கவும் அவை சொல்வதை சிந்திக்கவும் சிங்கள மக்கள் தயார் இல்லை காரணம் இது பெளத்த இலங்கை அதை விட்டு வெளியில் வரமாட்டார்கள் 

தெற்கில் வரையப்படும் ஓவியங்களை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை, ஏனெனில் அவற்றை எங்களால் ஒன்றும் செய்யமுடியாது.

ஆனால் வடக்கில் வரையப்படும் ஓவியங்களைப்பற்றி, அவை எப்படி இருக்கவேண்டும் என ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. 

அரசியல் அலசலில் நிலாந்தன் என்பவரின் ஒரு கட்டுரை “ யாழ்ப்பாணத்தின் புதிய சுவரோவியங்கள்” தலைப்பில் உள்ளது. கட்டுரையில் இந்த முயற்சியும், அதில் ஈடுபடுபவர்களின் எண்ணங்கள் பற்றியும், சில ஊர்களில் மக்கள் ஒன்றாக கூடி கூட்டு தீர்மானத்தின் அடிப்படையில் ஒவியங்கள் பற்றி முடிவு எடுப்பதையும் கூறப்பட்டுள்ளது. நல்லதொரு எடுத்துக்காட்டு. 

சில முயற்சிகளின் பலன்களை உடனடியாக எதிர்பார்க்கமுடியாது ஆனால் ஏதோ ஒரு வகையில் அது தாக்கத்தை ஏற்படுத்தும்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அண்மையில் கழிவு ஒயில் வீசப்பட்டுள்ளது சில ஓவியங்களுக்கு  இதுதான் அதன் தாக்கமாக இருக்குமோ என்ன??

  • கருத்துக்கள உறவுகள்
On 1/19/2020 at 3:37 AM, தனிக்காட்டு ராஜா said:

அண்மையில் கழிவு ஒயில் வீசப்பட்டுள்ளது சில ஓவியங்களுக்கு  இதுதான் அதன் தாக்கமாக இருக்குமோ என்ன??

என்னைப்பொறுத்தவரையில் இந்த விஷயத்தில் இன்னமும் எங்களது சமூகம் இன்னமும் முன்னேறவில்லை என்பதே இதன் அர்த்தம். 

இதனாலேயே நாங்கள் எடுக்கும் முயற்சிகள் இடையிலேயே கலைவதற்கும் இந்த மனநிலையே காரணம்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

என்னைப்பொறுத்தவரையில் இந்த விஷயத்தில் இன்னமும் எங்களது சமூகம் இன்னமும் முன்னேறவில்லை என்பதே இதன் அர்த்தம். 

இதனாலேயே நாங்கள் எடுக்கும் முயற்சிகள் இடையிலேயே கலைவதற்கும் இந்த மனநிலையே காரணம்

இருக்கலாம் சமூகம் என்பது என்பதில் எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள் அப்படி ஒரே சிந்தனைய்ல் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.